திங்கள், 19 ஏப்ரல், 2010

மைக்ரோஸாஃப்ட் வேர்டை விட்டு மாறிட்டேன்!

Devvicky Word 
மைக்ரோஸாஃப்ட் தங்கள் மென்பொருள்களுக்கு அநியாய விலை வைத்துக் கொள்ளை அடிக்கிறது என்று நிறையப் பேர் குறை சொல்வது உண்டு. அதில் உண்மை இருக்கிறது என்றாலும், என்னைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் பல மடங்கு விலையை உயர்த்த வேண்டும் என்று வாதாடுகிற கட்சி! அப்படி அவர்கள் கொள்ளையோ கொள்ளை என்று விலை நிர்ணயம் பண்ணினால்தானே இன்னும் பல ஓப்பன் ஸோர்ஸ் இலவச மாற்று மென்பொருள்கள் நமக்குக் கிடைக்கும்! இப்போதே வேர்டா வேண்டவே வேண்டாம் என்று சொல்லி ஓப்பன் ஆபீஸ் பக்கம் பலர் போகத் தொடங்கி விட்டோம். ஆனாலும், இன்னும் சிலருக்கு "அதில் உள்ள எல்லாமுமே தேவையில்லை. இவர்களும் மைக்ரோஸாஃப்ட் போலவே அனாவசியமாக எல்லாவற்றையும் தரவிறக்கி நமது வன்தட்டை நிறைக்கிறார்களே, நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தும் வேர்டு/ அல்லது ரைட்டர் இவற்றை மட்டும் தரலாமே" என்ற வருத்தம் உண்டு. இலவசம்தான், என்றாலும் திறக்க நேரமாகிறதே என்ற குறையும் உண்டு. இதற்கெல்லாம் பதிலாக ஒரு  மென்பொருள் இன்று வலையில் உலவும்போது என் கண்ணில் பட்டது. Devvicky Word என்ற அந்த இலவச மென்பொருள் வெறும் 16 MBயில் MS WORDல் நாம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்கு வசதி செய்வதுடன், மேலும் பல வசதிகளையும் அளிக்கிறது. அதிலும், நம்மில் பலருக்கு PDF Editor பல நேரங்களில் தேவை. ஆனால் சந்தையில் கிடைப்பவையோ,  காசு கொடுத்து வாங்கினாலும் இலவசமானாலும் நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது. இதில் உங்களிடம் இருக்கும் பிடிஎப் கோப்பை நேரடியாகத் திறந்து வேண்டுகின்ற மாற்றங்களைச் செய்து நமக்கு வேண்டுகிற பைல் ஃபார்மட்டில் சேமிக்கவும் முடிகிறது.  www.devvicky.com தளத்திலிருந்து இதை இறக்கிப் பதிந்து உபயோகப் படுத்திப் பாருங்களேன்.
 ஏற்கனவே வந்த சில மென்பொருள்கள் போல் இல்லாமல் இது யுனிகோடையும் ஆதரிப்பதால் இந்திய மொழிகளில் எழுதுவோருக்கும், தமிழில் பாமினி, டாம், டாப், டிஸ்கி எழுத்துருக்களைக் கையாள்வோருக்கும் மிகப் பயன்படும். நான் இன்று தரவிறக்கி சோதித்துப் பார்த்ததில் உடனடியாகப் பண்ணிய வேலை MS Wordஐ uninstall செய்தது. இதுதான் .docx கோப்புகளைக் கூடத் திறக்கிறதே! பின் என்ன கவலை!

1 கருத்து:

  1. ஓ! அப்ப‌டியா? ஞாப‌க‌த்தில் வைத்துக்கொண்டு தேவைப்ப‌டும் நேர‌த்தில் உப‌யோகித்துக்கொள்கிறேன்.என்னிட‌மும் ஓப‌ன் ஆபீஸ் தான்.

    பதிலளிநீக்கு