அவதாரிகை மேலுள்ள திருநாமங்களால் தயாளுவான ஹயக்ரீவனுடைய அனுக்ரஹத்தினாலுண்டான பல லாப விசேஷங்களைச் சொல்லுகிறார்.
(अधीतसाङ्ग सकल श्रुतिः) அதீத = அத்யநம் பண்ணப்பட்டிருக்கிற, ஸாங்க= அங்கங்களோடு கூடிய, ஸகலஶ்ருதி = ஸர்வ வேதங்களையுமுடையவர். அப்புள்ளாரிடத்தில் அங்கங்களோடு கூடிய ஸகல வேதங்களையும் ஓதினவரென்றபடி. இங்கு கேவலம் அத்யநமாத்ரத்துக்கு பலமுண்டா அர்த்த ஞானபர்யந்தமாக வேணுமா என்கிற பூர்வபக்ஷ ஸமாதானங்களை வேறு கிரந்தங்களிற் கண்டுகொள்வது.
(श्मृतिवित्) ஶ்ம்ருதி: ஸ்ம்ருதிகளை, वित् = அறிந்தவர்,
மநுஸ்ம்ருதிமுதலான பதினெட்டு ஸ்ம்ருதிகளுடையவும் உண்மையான பொருளை நன்றாகவறிந்தவர், அதாவது :- ஸ்ரீமந்நாராயணனே ஜகத் காரணம், அவனையே உபாஸிக்க வேண்டியது, அவனே உபாயமும் பலமும், பக்தி முதலியவைகள் வ்யாஜமாத்திரங்கள், வர்ணாச்ரம தர்மங்கள் பக்தி முதலியவைகளுக்கு ஸஹகாரிகள் என்கிறதை நன்றாகவறிந்தவரென்றபடி.
(अग्रणीः) ஸ்ம்ருதிகளினுடைய அர்த்தங்களை தான் அறிந்தது மாத்திரமன்றிக்கே அதுகளை அநுஷ்டானபர்யந்தமாக்கினவர்களில் முதன்மையானவர். ச்ரேஷ்டரென்றபடி. अग्रंनयतिति अग्रणीः என்கிற வ்யுத்பத்தியாலே சிஷ்யர்களை உத்தமமான ஸ்ம்ருதியில் சொன்னமார்க்கத்தில் நயிப்பிக்கிற வரென்றுமாம்.
(इतिहास पुराणज्ञ) இதிஹாஸ புராணங்களையறிந்தவர். இதிஹாஸமாவது = ஸ்ரீராமாயண மஹாபாரதம் முதலியவைகள் புராணமாவது = மாத்ஸயம் முதலி யவைகள் இதுகளையறிந்தவர். அறிகையாவது:- அவைகள் ஸ்ரீமந் நாராயணனையே ப்ரதிபாதிக்கிறதுகளென்றும், ராஜஸ புராணங்களில் ப்ரஹ்மாவையும், தாமஸங்களில் சிவனையும் ஸங்கீர்ணங்களில் ஸரஸ்வதி யையும் ப்ரதானமாக சொல்லியிருந்தாலும் ஸாத்விகானுகுணமாக அவைகள் ஸர்வ சப்தவாச்யத்வாதிகளாலும் அந்தர்யாமிபர்யந் தத்வாதி களாலும் ஸ்ரீமந்நாராயணனையே ப்ரதிபாதிக்கிறதுகள் என்று உணர்ந்த வரென்கை,
(सुकविः) இதிஹாஸ புராணத்தையறிந்தவர் மாத்திரமேயன்று, சோபநமான கவநம்பண்ணுமவர். கவிதைக்கு சோபநத்வமாவது ஸலக்ஷணமாகவும், ஆசுவாகவும், ரஸ்யமாகவும், அஸத்காவ்யம் போலன்றிக்கே பகவத்பர மாகவும் பண்ணுகை. இதர விஷயங்களைப்போலே பகவத் விஷயங்களை யும் விட்டு ஆசார்ய விஷயமாக கவிபாடுகையாலே மதுரகவியென்று பெயர் பெற்ற ஆழ்வாரைப்போலே இவரும் பகவத்பாதுகா விஷயமாக ஆயிரம் சுலோகம் பண்ணினமையால் ஸுகவியென்றபடி, இவருடைய கவிதா சாதுர்யங்கள் யாதவாப்யுதயகாவ்யத்திலும் காணலாம். ஸங்கல்ப ஸூர்யோதய நாடகத்திலும் "गौधवेदर्भ पांञाल” என்று தாமேயருளிச் செய்தாரிறே.
(तर्क तत्त्ववित्) तर्क = தர்க்க சாஸ்திரத்தினுடைய, तत्त्व = உண்மையை, वित् = அறிந்தவர், தர்க்க சாஸ்திரம் எவ்விஷயத்திலேயுபயோகமுள்ளதென்று அதினுடைய தத்வத்தையறிந்தவரென்றபடி, அதாவது வேதசாஸ்திரங்களின் உண்மைப்பொருளை ஸத்தர்க்கங்களாலேயுணர வேண்டுமதுவே. தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்ததெல் லாம் ஸாதிக்கலாமிறே.
(भाष्यकारः) பகவத்வ்யாஸ சிஷ்யரான ஜைமுனியாலே பண்ணப்பட்ட தர்ம மீமாம்ஸா ஸூத்ரத்துக்கு ப்ரதி பக்ஷத்தை நிரஸித்துக் கொண்டு ஸேச்வர மீமாம்ஸை யென்றும் ஓர் பாஷ்யத்தைப் பண்ணினதாலே பாஷ்யகார ரென்று ப்ரஸித்தி பெற்றவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக