श्रुतविद्यः
ஶ்ருதவித்ய: இருபது வயதுக்குள்ளே அப்புள்ளாரிடத்திலே நாநாவிதமான வித்யைகளையும் அப்யஸித்தவர்.
श्रावयिताः
ஶ்ராவயிதா: முப்பதுமுறை ஸ்ரீபாஷ்யம் முதலான கிரந்தங் களை ஸச்சிஷ்யர்களுக்கு உபதேசித்தவர். இவ்விஷயங் களை 'ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்' विंशत्यब्दे (விம்ஶத் யப்₃தே₃) என்று தாமேயருளிச் செய்தாரிறே.
श्रुतवालः
ஶ்ருதவால: "ஶ்ருத" என்று ச்ருதப்ரகாசிகா கிரந்தத்தைச் சொன்னபடி. அதை ஸங்கடகாலத்தில் காவேரி மணலில் கோபநம் பண்ணி பாலநம் பண்ணினவர். "ச்ருப்ரகாசிகா பூமௌ யேநாதௌ பரிரக்ஷிதா" என்று நைனாராசாரியர் அருளிச் செய்தார்.
श्रुतप्रदः
ஶ்ருதப்ரத: "ஶ்ருத" என்று ச்ருதப்ரகாசிகா, ச்ருதப்ரதீபிகா முதலான கிரந்தங்களைச் சொல்லி அதுகளை ஸச்சிஷ்யர் களுக்கு அருளிச் செய்தவர்.
श्रितः
ஶ்ரித: ரஹஸ்யம் முதலான வர்த்தங்களுக்காக ஸச்சிஷ்யர் களால் ஆச்ரயிக்கப்பட்டவர்.
पाण्डित्यदाता
பாண்டித்யதாதா -- பாண்டித்தியமாவது ஆசார்ய பகவத் பக்திகளாலேயே அடையக்கூடியதாய் பரப்ரம்ம விஷயக மான ஞானவிசேஷம். அதை ஆச்ரிதர்களுக்கு உண்டாக்கு மவர்.
कृतकृत्यः
க்ருதக்ருத்ய: செய்யவேண்டிய கார்யத்தைச் செய்து முடித்தவர். அதாவது முன்சொன்ன பாண்டித்யம் முதலான துகளை அக்காலத்திலுள்ளவர்களுக்கு மாத்திரமன்றிக்கே பின்னானார்க்குமுதவும்படி ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம்முதலான அனேகம் கிரந்தங்களை அருளிச் செய்தவரென்றபடி.
कृती
க்ருதீ -- அதனால் வேறு செய்யவேண்டிய காரியமில்லாமை யால் செய்து முடித்தவர், அல்லது உபகாரம் செய்யும் ஸ்வபாவமுடையவர் என்றபடி.
सुधी
ஸுதீ: சோபகையான புத்தியையுடையவர். அதாவது ப்ருஹஸ்பதி முதலானவர்களாலேயும் கலக்கவொண்ணாத தும், பரபக்ஷங்களை நிரஸிக்குமதான புத்திவிசேஷமுடைய வர் என்றபடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக