சனி, 21 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்

निरस्तसांख्यः

                  ஸாங்கியமதத்தை நிராகரித்தவர். ஸாங்க்யமென்பது கபிலமதம். அஃதெப்படியென்னில் , பிரகிருதியென்றும் புருஷனென்றும் இரண்டு தத்வ மேயுளது. பிரகிருதியாவது அறிவில்லாததாய், பிறர்க்கே உபயோகமுள்ளதாய், அறியக்கூடியதாயிருக்கும். புருஷன் பிரகிருதிக்கு நியமனம் பண்ணுமவன், அனுபவிக்குமவன், பார்த்துக்கொண்டு இருக்குமவன், எப்பொழுதும் மாறுத லில்லாதவன், ஞானத்தையே ஸ்வரூபமாகவுடையவன். இப்படிக்கொத்த பிரகிருதிக்கும், புருஷனுக்கும் கூட்டுறவினால் ஒன்றுக்கொன்று பிரம முண்டாகிறது. அதனால் ஸ்ருஷ்டி முதலானதுகள் உண்டாகிறது. இப்படியவன் மதம். அதில் கண்டனமென்னென்னால் புருஷன் ஞானமாத்திர ஸ்வரூப னாகில் போக்தாவாகக் கூடாது. அசேதநையான பிரகிருதிக்கு மோக்ஷ ஸாதன அனுஷ்டானம் கூடாது. நிர்குணனான புருஷனுக்கும், அசேதநையான பிரகிருதிக்கும் ஒன்றுக்கொன்று ப்ரமமுண்டாகக் கூடாது. ஆகையால் இம்மதம் கண்டிக்கப்பட்டது. இதன் விரிவுகளை ஸர்வார்த்தஸித்தி ஸங்கல்ப ஸூர்யோதயம் முதலானதுகளில் பரக்கக் கண்டுகொள்வது

प्रत्युक्तयोगः 

योगः யோகாசார மதமென்றபடி. அதில் பிரகிருதியே உபாதாந காரணம். ஈச்வரன் நிமித்த காரணன். இவ்வீச்வரத்வம் ப்ரதிபிம்பதுல்யம் என்று சொல்லப்படுகின்றது. அதைக் கண்டித்தவர். எங்கனேயென்னில், நானே  பஹுவாக ஆகிறேன் என்று ஈச்வரன் சொன்னமையினால் பிரகிருதி உபாதான காரணமாகாது. மூன்று காரணமுமீச்வரனே. இம்மதத்தைச் சொன்ன ஹிரண்யகர்ப்ப னும் கர்மவச்யனாகையாலே ப்ரமிக்கக்கூடும். அவன் சொன்ன புராணம்போல யோக ஸ்மிருதியும் ப்ரமமூலம். இது முதலானதுகளாலே கண்டித்தவர் என்றபடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக