திங்கள், 16 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ர சதம்

{மன்னிக்க வேண்டுகிறேன். என்னுடைய கவனக்குறைவால் தார்க்ஷ்ய தத்தஹர என்ற திருநாமத்துக்கு அடுத்து வரவேண்டிய இரு திருநாமங்கள் விடுபட்டுள்ளன. அதைச் சுட்டிக்காட்டிய அன்பருக்கு நன்றி.}

शुद्धः

प्रयोजनान्तर परत्वादि दोषाभावात् शुद्धः हयग्रीवाराधन योग्यतापादकसत्व शुद्धियोगाद्वा

சுத்த: ப்ரயோஜனாந்தராபேக்ஷை முதலான தோஷமில்லாமையினாலே பரிசுத்தர். ஹயக்ரீவனை உபாஸிக்கும்படியான சுத்தியை உடையவரென்றுமாம்.

प्रसादित हयाननः

विशुद्ध विज्ञान स्वरूपो विज्ञानदानबद्धदीक्षः दयानिधिस्सर्व लोक शरण्ये हयाननः प्रसादितोये नसः प्रसादित हयाननः हयग्रीव प्रसादा देवतत्वज्ञानावाप्तिरित्युक्तं हयग्रीव सुत्तौ, “अकंपनीयान्यवनीति भेदैरलंकृषीरन् हृदयंमदीयं | ङ्काकळङ्कापगमोज्वलानि तत्वानि सम्यंचितवप्रसादान्इति

(ப்ரஸாதித ஹயநந : ) ப்ரஸாதித = சந்தோஷிப்பிக்கப்பட்ட, ஹயாநந: ஹயக்ரீவரை உடையவர். ஹயக்ரீவர் இவருக்கு ப்ரத்யக்ஷமாய் நேரில் வார்த்தை அருளிச் செய்தார் என்கிறது ஸர்வஜனங்களுக்கும் தெரிந்த விஷயமன்றோ! 

இனி நேற்றைய தொடர்ச்சி

भयहर:--  வேதங்களுக்கு கபந்தமீமாம்ஸகரென்று சொல்லப்படுமவர்கள் வழியில் முள்ளிடுவது போல் துரர்த்தம் பண்ணினமையால் அதில் நடக்கக்கூசினவர்கள் போல்வருக்கு மீமாம்ஸா பாதுகைபென்னும் க்ரந்தத்தையருளிச் செய்து பயத்தைப் போக்கினமையால் பயஹர என்றபடி.

 (सुधाशी) அமிருத்தைச்  சாப்பிடுகிறவர், வேதாந்தமாகிற  பாற்கடல் நின்றும் ஸ்ரீவேத வ்யாராலே எடுக்கப்பட்டதும், பாஷ்யகாரராலே கொண்டுவந்து கொடுக்கப் பட்டதுமான ஸ்ரீபாஷ்யமென்னும் அமிருதத்தை எப்பொழுதும் பாநம் பண்ணுவதுபோல் ஆவர்த்தி செய்தவராகையாலே ஸுதாசீயென்ற படி, "यतिप्रवरभार तीरसभरेण  निर्विष्टं  यतिशार्वभौमवचसां" இது முதலானதுகளாலே தாமேயருளிச் செய்தாரிறே.

(दुग्धराशिकृत्)   பால் பெருக்குப்போலுள்ள அதிகரணஸாராவளியென்னும் க்ரந்தத்தை யருளிச் செய்தவரென்றபடி, ஸ்ரீபாஷ்யாமிருதபானம்பண்ணி அது உள்ளடங்காமல் வெளிவந்ததுபோலுள்ளது அதிகரணசாராவளி. இவ்வர்த்தத்தை स्रग्धरादुग्धराशि” என்று தாமேயருளிச்செய்தார்.  

प्रधानप्रतितंत्रज्ञ – ப்ரதானப்ரதிதந்த்ரத்தை அறிந்தவர், ப்ரதிதந்தரமென்பது  குடியாய் அவ்வவ் ஸித்தாந்திகளுக்கே அஸாதாரணமான வர்த்தத்தைச் சொல்லும்,  இங்கு வேதாந்திகளுக்கு அஸாதாரணமான ப்ரதிதந்தாமாவது சேதாசேதங்களுக்கு மீச்வரனுக்கு முண்டான சரீர சரீரி பாவ ஸம்பந்தமும், அப்ராகிருத சுத்தஸத்வமயமான ஸ்தாநவிசேஷ நித்யஸூரி முதலியவைகளின் அப்யுபகமாதிகளும். அதில் ப்ரதாநமாவது ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் சரீராத்மபாவம், இத்தாலிது ப்ரதிதந்தரஸாரம் என்றதாயிற்று. இங்கு அசேத இலட்சணமும், அதன் பேதங்களும், சேத இலட்சணமும், அதின் பேதங்களும் ஈச்வர இலட்சணமும், தத்வாந்த பேதங்களும், சரீரசரீரி இலட்சணமும் இது முதலாக வறியவேண்டுமவைகள் பலவுள. அவைகளையெழுதில் பெருகுமாதலால் மூலத்தில் சொல்லப் பட்டவைகளைப் பல ஞானிகள் பக்கல் கேட்டுணர்வது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக