சனி, 21 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்

काणाद भंजनः

கணாதரென்னுமொருவராலே சொல்லப்பட்டது காணாதம், அதை பஞ்ஜநம் பண்ணினவர். அம்மதமாவது; பரமாணுக்கள் உபாதாநகாரணம், ஈச்வரன் நிமித்தகாரணம். அவனுமநுமாநஸித்தன். ஆகாசம் ஆத்மாக்கள், இதுகள் விபுக்கள் முன்னில்லாத த்ரவ்யமே உண்டாகிறது. மோட்சமென்பது பாஷாண கல்பம் என்று சொல்லுகை. அதை நிரவஸித்தபடி. அஸத்திரவ்யமுண்டாகாது. அப்படி சுருதி சொல்லவில்லை. ஈச்வரஸத்தைக்கு அநுமாநம் ப்ரமாண மாகாது; இதுகளெல்லாம் வேதம் முதலான ப்ரமாணவிருத்தமாகையால் உபயோமமற்றவை யென்று நிராகரித்தவரென்றபடி. இவ்வர்த்தத்தை "असद्दृष्टि '' என்று அருளிச் செய்தாரிறே.

अचिच्चैतन्यवादघ्नः

ப்ருதிவீ முதலான அசித்துக்களுக்கு ஒன்றோடொன்று சேர்க்கையினாலே அவைத்துக்கு கிண்வாதிகளுடைய மதசக்திபோல் சைதந்யமுண்டாகிறது. கிண்வமென்பது பாக்கு- வெற்றிலை சுண்ணாம்பு இம்மூன்றின் சேர்க்கை, இவை தனித்தனியே மதகரமல்லாதபோனாலும் சேர்க்கையால் அவை களுக்கு மதகரத்வமுண்டாகிறதென்பர்கள். ஜகத்துஸ்வபாவமாக விசித்திர மாயிருக்கும். இச்சரீரநாசந்தான் மோட்சம். அல்லது ஸ்திரீ ஸம்போகமே மோட்சம் என்று சொல்லுவர் சார்வாகர் அதை நிரஸித்தவர். எங்கனே யென்னில்:-- ப்ரக்ருதி முதலான ஸமுதாயத்தில் சைதந்யம் பிறக்கு மாகில் அவயவங்கள் தோறும் சைதந்யம் பரவவேணும். ஜகத்து சந்தரகம்போல் (அதாவது மயிற்தோகை போல், விசித்திரமென்றாலும் அது ஸ்வபாவமன்று. ரஸம் முதலானதுகளை சந்தரகத்திற் தடவுவதால் அப்படி விசித்திரமாகத் தோற்றுகிறது. சரீர நாசமே மோட்சமென்றால் அது அற்பமாயும் நிலை நில்லாததாயும் துக்கத்தை முதலிலும் நடுவிலும் முடிவிலுமுடைய தாகையாலும் நிகரில்லாத ஆனந்தமாகிற மோட்சமாகாது. இப்படிகளால் சார்வாக மதத்தைக் கண்டித்தவரென்றதாயிற்று.

क्षणिकाणुमतार्दनः

ஒன்றோடொன்று கூடினவும் கணப்பொழுதிருப்பவனுமான அணுக்களே ஜகத்து என்று சொல்லுகிற வைபாஷிகனென்ன, ஸௌத்ராந்திகனென்ன இவர்களுடைய மதத்தைக் கண்டித்தவர். அஃதெப்படியெனில், க்ஷணிகமாகில் ஒன்றோடொன்று கூடமாட்டாது. ஒரு வஸ்துவைக் கண்ணாற்பார்ப்பது என்று நினைப்பதற்குள்ளவே பார்ப்பவனும் கண் முதலியவைகளும் நாசமடைகிற படியால் காண்பதே ஸத்யமென்கிறது கூடாமையால் வைபாஷிக மதம் சரியன்று. இப்படி, அணுக்கூட்டமும் க்ஷணிகமாதலால் அறியக்கூடியதென்கிற அனுமாநம் சொல்லுகிற ஸௌத்ராந்திகனும் பரிஹாஸத்துக்குள்ளாகிறான். இப்படிகளால் கண்டித்தவரென்றதாயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக