சனி, 4 ஜூலை, 2009

கற்றாரைக் கற்றாரே





யதிகளின் சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் ஓரிரு தினங்களில் துவங்கப் போகிறது. சென்ற ஆண்டு திருப்புல்லாணியில் ஸங்கல்பம் மேற்கொண்ட போது அனுபவித்தவைகளை அடியேன் ஆயுள் முழுவதும் நினைந்து இன்புறப் போகிறேன். ஸ்ரீமத் ஆண்டவனிடம் எங்களூர் பெரியவர் ஸ்ரீ நாராயணமூர்த்தி பட்டாச்சார்யாரை அறிமுகம் செய்து வைக்கும் பாக்யம் கிடைத்தது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரை கணிக்க வல்ல ஆசார்ய ஸார்வ பௌமன் அவரது மேதமையை , வைகாநஸத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி யை அறிந்து மகிழ்ந்தார். அந்த இரண்டு மாதங்களிலே இங்கு வந்த பலருக்கு நினைவிருக்கும். ஆசார்யன் தினமும் காலையிலும் மாலையிலும் திருவீதி ப்ரதக்ஷிணம் வரும்போது பட்டாச்சார்யாரது அகத்தின் அருகில் சற்று நின்று அவரைக் குளிரக் கடாக்ஷித்தாகும்.
அவர்பால் கொண்ட அபிமாநத்தால், அவருக்கு திருக்குடந்தை ஆண்ட வன் திருநக்ஷத்திரத்தின் போது அவருக்கு விருது வழங்கி கௌரவித்தார். அதன் பின்னும் வேளுகுடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமியிடமும் இவரைப் பரிந்துரைத்து கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் மூலமாகவும் இவரை கௌரவிக்கச் செய்து திருப்புல் லாணிக்கே ஒரு பெரிய பெருமையைச் செய்து எங்களை மகிழ்வித்துள்ளார். எங்களிடையே இப்படி ஒரு மேதை இருக்கிறார் என்பது நாங்கள் அறியாதது. எங்களுக்கு ஏதாவது தெரிந்தால்தானே அடுத்தவருக்கு உள்ள தகுதிகள் பற்றி மதிப்பிட முடியும்? அதனால் தானே அன்றே சொன்னான் " கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்று .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக