வியாழன், 2 ஜூலை, 2009

ந்யாஸ தசகம் 5




த்வச் சேஷத்வே ஸ்த்திரதியம்
த்வத்ப்ராப்த்யேக ப்ரயோஜநம்
நிஷித்த காம்ய ரஹிதம்
குரு மாம் நித்ய கிங்கரம். (5)


[(பகவானே !) மாம் -- அடைக்கலமான அடியேனை; த்வத் சேஷத்வே -- தேவரீருக்குச் சேஷ பூதமாயிருப்பதிலே ; ஸ்த்திரதியம் -- உறுதியான புத்தியை உடையவனாக ; குரு - செய்தருள வேண்டும்; த்வத் ப்ராப்தி ஏக ப்ரயோஜநம் -- தேவரீரை அடைதலே முக்கிய பலம் என்ற எண்ணம் உடையவனாகவும் குரு -- செய்தருளவேண்டும் ; நிஷித்த காம்ய ரஹிதம் -- சாஸ்த்ரங்களில் விலக்கப் பட்டவைகளான காம்ய கர்மங்களில் ஸம்பந்தம் அற்றவனாகவும், சாஸ்திரங்களில் நிஷித்தங்களான அற்ப பலத் தாசையினாலே சூந்யனாகவும் ; குரு -- செய்தருளுக; நித்ய கிங்கரம் -- எப்போதும் தாஸவ்ருத்தி செய்பவனாகவும் , இவ்வாறு நிலை நின்ற அடிமைக்காரனாகவும் ; குரு -- செய்தருள வேண்டும்.]

மேல் ஐந்து சுலோகங்களாலே உத்தரக்ருத்யத்தை பிரார்த்திக்கிறார். அவற்றில் முதல் மூன்று சுலோகங்களால் இங்கு இருக்கும் நாட்களில் ஒரு குற்றமும் இன்றிப் பண்ணும் உத்தரக்ருத்யம் பிரார்த்திக்கப் பெறுகிறது. இவ்வைந்தாவது சுலோகத்தில் சேஷத்வாநுஸந்தாந பூர்வமாக நித்ய கிங்கரத் தன்மையைப் பிரார்த்திக்கிறார்.

தேவரீருக்கே அடியேன் என்பதிலே திடமான ஞானத்தை உடையவனும், தேவரீரை அடைவது ஒன்றே பயனாகக் கொண்டவனும், விலக்கப் பட்ட கர்மங்களையும், காமிய கர்மங்களையும் விட்டவனும் ஆன அடியேனை நித்ய கிங்கரனாகச் செய்து கொள்ள வேண்டும்.

தேவரீரிடத்தில் சரணாகதி பண்ணி பரம் அற்றிருக்கிற அடியேனுக்குச் சேஷித்வம் ஒருக்காலும் தோற்றாமல் தேவரீருக்கே சேஷம் என்ற நல்ல புத்தியை நிலையாய் இருக்கும்படி செய்தருள வேண்டும். தேவரீரை அடைவதைத் தவிர இதர பயனில் ஆசையற்றவனாகவும் பண்ண வேண்டும். சாஸ்திரங்களில் தள்ளுண்ட கர்மங்களையும், பசுபுத்திராதி அற்ப பலன்களையும் விடும்படிக்கான புத்தியையும் தந்தருள வேண்டும். இப்படி எப்போதும் தேவரீரது கைங்கரியத்தில் ஈடுபட்டவனாகவும் பண்ணி யருளவேண்டும்.

த்வயத்தில் உத்தரகண்டத்தில் நான்காம் வேற்றுமையில் இஷ்டத்தையும், நமஸ்ஸில் அநிஷ்ட நிவ்ருத்தியையும் பிரார்த்திக்கிற முறையில் இங்கும் முதலில் இஷ்டப் பிரார்த்தனையையும், பிறகு அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனையையும் செய்து மேல் உத்தராவதி, மேல்எல்லை, இல்லாத நித்திய கைங்கர்ய ரூபமான பல பிரார்த்தனையையும் செய்ததாயிற்று.

நிஷித்த காம்யரஹிதம் -- பகவத் பக்தி, ஜ்ஞானம் இவற்றின் வளர்ச்சி, கைங்கர்யத்துக்கு உபயோகமானவை, ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸம்ருத்தி -- இவற்றைப் பகவானிடத்தில் பரமை காந்தியாகிய ப்ரபந்நன் யாசிக்கலாம் என்று பிரமாணம் இருப்பதால் இவை அநிஷித்த காம்யங் களாகும். இவைகட்குப் புறம்பான பசுபுத்திராதிகளை வேண்டுதல் நிஷித்தமாம். இது அடியேனுக்கு இல்லாமல் இருக்கும்படி கிருபை பண்ணவேண்டும். அன்றிக்கே நிஷித்தங்களும், காம்யங்களும் இல்லாதபடி செய்தருள வேண்டும். அதாவது -- சாஸ்திரங்களில் செய்யக் கூடா தன என்று விலக்கப் பெற்ற கார்யங்களைச் செய்வது முதலிய அபராதங்களைச் செய்யாதிருக் கும்படி கிருபை பண்ண வேண்டும். செய்யாவிட்டால் தோஷத்தைக் கொடுக்காதனவும், ஐஹிகம், ஆமுஷ்மிகம் என்று இருவகையான பயனையளிப்பனவுமான காம்ய கர்மங்களைச் செய்யாதவனாகவும் செய்தருள வேண்டும்.


தேவி பூஷண ஹேத்யதி
ஜுஷ்டஸ்ய பகவம் ஸ்தவ:
நித்யம் நிரபராதேஷு
கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம். (6)

(தொடரும்)

இந்தப் பாசுரத்துக்கு ப.ரெ. திருமலை ஐயங்கார் ஸ்வாமி அளித்துள்ள விளக்கம் விரிவுரையாய்
அமைந்துள்ளது. அதை முழுவதும் இட்டு முடிக்க 7 நாட்கள் ஆகலாம்.

From the next posting, I shall try to add an audio file which may help those who know to speak and understand Tamil but not able to read and write. (similar to podcast)

Sri Anbil Srinivasan Swamy has started his own blog totally devoted to Tamil kavithai. Those intersted may visit his blog http://anbilkavi.blogspot.com and your feed back through comments link at the bottom of the post will greatly encourage him.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக