மிக நீண்ட நாட்கள் கழித்து திரு கேசவ ஐயங்காரின் திருப்பாதுகமாலை 16வது பன்மணிப் பத்ததியை இங்கே கொடுத்துள்ளேன் ( This is a translation of "Sri Padhuka Sahasram " in Tamil by Sri Kesava Iyengar. 16th paththathi is here. The earlier 1 to 15 paththathis were already posted here)
16. பன்மணிப் பத்ததி
16. பன்மணிப் பத்ததி
531. வதன வாகு வூருதாள்
உதய மாகு வருணமால்
விதநி தான நிறமணி
பொதி மராடி தொழுவனே
532. விளர்ப சப்ப ரக்கிருள்
வளர்ம ணக்க ணத்தரி
தளிரு கணுக டருவரி
மிளிர்தி பாது! நீயுடன்.
533. ஆன்ற கண்ட நவதலம்
போன்ற வொன்ப தரதனம்
நான்ற பாது! மால்பதத்
தூன்று தோன்று பூவென.
534. உருகி வறியர் குறைகளுக்
கரியி னடிம லர்கலந்
துரிய முறுவ லுறுதிபா
தரத னார வவிர்தலில்.
535. கலவ னிறையு மணியொளி
நிலைம ராடி! நினதுமுன்
தலையி லலைத னறையறச்
சலனி னிலவு சரணமோ?
536. நீல மொத்து னித்திலச்
சீல மின்ன லேலுமே
மால டிக்க டித்திதி!
மாலை நீல மாமலர்.
537. ஒலிம ராடி! யொளிருமுன்
குலிக நீல குருகுவாள்
பொலியு மீசன் முடிநதிச்
சலச நீல குமுதமாம்.
538. வெண்மை கருமை செம்மைவில்
நண்ணு பாது! நாறுமண்
பண்ணு லீலை மாலடி
நண்ணு முக்கு ணத்ததோ?
539. விரித மால நீலநின்
தரள வாளி லரியெழிற்
பரவை யருகு பகவர்செல்
கரையொ ளிர்தி மரவடி!
540. கால மூவி லாநஞ்
சால பாது! வச்சிர
நீல மாமி ராப்பகற்
கேலு நின்க ணேசிறை.
541. பாது னீல நாலிவில்
சோதி பாத நோக்கு நீ
வீத ராகர் நோக்கிடுஞ்
சாத மைச்ச லாகையோ?
542. முத்து நீல மொத்துமின்
பத்தி ரைகி ருட்டினை
நத்த மாய னடிநிலாய்!
நித்த மேறு விசயநீ.
543. பன்னி றம்ப டர்நடை
துன்னு சாம முன்னொளி
முன்னு மீர டித்திரு
வின்ப னோம்பி ருக்குநீ.
544. வந்து தாழ்ந்த விந்திரற்
கெந்தை பாதி ங்கிநீ
தந்த சிந்து வாரமென்
றுந்து வாள்து ளங்குவாய்.
545. மரக தத்து மாமணி
அரி செறிந்த பாதுகாய்
வர சுகங்கள் வருநல
வரதன் சாலி மருதநீ.
546. மீத ரத்த நீலமுத்
தரத வச்செஞ் சாந்துசே
றாதி தாட்கி டும்பணிப்
பாது நீசைரந்திரி.
547. ஆகு பல்லு னாதவம்
வாகை மால்ம னைக்குமாம்
போகி சால மோகுவேள்
ஒகை நல்கு தோகையே?
548. பால ரக்கு மானிறக்
கோல வில்ப லோரலிற்
போல திட்டி கொட்டிலாய்
மால்ப தங்கள் காணவே.
549. நச்சி ருப்பை தூர்வையாம்
பச்சை யார நின்கதிர்
துச்சர் கோது கொய்யுனக்
குச்ச மாலை போலதே.
550. அப்பன் பாது னாதொளித்
துப்பு முத்து வச்சிரம்
துப்ப ருள்ள முச்சுடர்
செப்ப மல்கு செவ்வியோ?
551. தெரியடி நிலை! யிந் திரநீலம்
மருவுன தணிமா மணிமாழை
வரியணி நிறையரி யடிநளினம்
வருநறு மகரந்த வாரியென.
552. தனிமையி னளிபா தளியங்கற்
கினிதுன தரளங் கிளர்பவள
மினிலவ னறவில மேகிடவம்
மனைமகி ழிதழிளி யறிவிப்பாய்.
553. நடையரி வேடுவ னடவியிடை
இடுகவி நிருதர் சிரமணியும்
படிவரி வழுதம் மறிவடகத்
தடிநிலை! யுனைமுன் வனைகுவனோ?
554. அடிநிலை! யரிவின் னகைகவருன்
திடநவ மணியொளி விரவியுடன்
தொடுமெழி னடலைக் குறவனனி
முடியணி பருகத் தொடையலென.
555. தரவுமை யுடனொரு தனுவரனுக்
குரிதமை யுனதோ டுவமையென
அரியொடு சுடரணி மணியொளியில்
திருவடி நிலை! நீ யிலகுதியே?
556. மேவழ லொருமூன் றெரிநீங்கத்
தேவுன மணிவச் சிரநீலம்
பாவெரு மணமா மலர்நீலக்
காவென வடியார் நாடுவரே.
557. அரிவடி வழகுன தருநீலம்
தருமவ னடிவில் மணியுனதாம்
விரவிரு வளரொளி யிருமைமிகு
மொருமைய தணிபா துனதெனவே.
558. மோகுன தரிமுத் தொடுபதும
ராகநி ழல்பொழி மால்கழலில்
ஒகையி லணைமுடி யோருமறைத்
தோகையர் தலையணை யோகமுறும்.
559. தெளியுன தொளிநீ ரரிநீலம்
மிளிரொரு பெருமா மணியுனதக்
குளிநல விமல வெமுனையுமிழ்
வெளிமணி நிலையடி நிலை! நிகரும்.
560. திடநின தணிநித் திலநீலம்
அடிநிலை! பெருகுன் னருணிறைவில்
லடியவ ரறவே ரடிகழற்றி
விடுமிட ரிருவல் வினைத்தொடரோ?
561. சுடர்கரு ளரிபா துகை! மணிநின்
படருடு பதிமுத் தொடுபரவும்
படியது பகரும் பசுபதிமின்
முடியணி பிறையொடு கூடிருளே.
562. பருவம ருத்துத ரித்துமணி
வரிபல நிலவும் வளநீர்முத்
தருமையி லணையரி பதவுதயந்
தருமடி நிலை யோர் சலதரநீ
563. முத்தொடு மரகத மோதிடுமுன்
னுத்திற வொளிநீ ருளவாக்கும்
எத்தறு வாயிலு மேபடிதற்
கொத்தப கீரதி கூடுகடல்.
564. எழுமணி வெயிலில் லெமுனையெனத்
தழையணி தரளக் கிளரதனில்
மழைவண னடிமன் னிலை யொருகால்
தழுவது நதிதனை யேசுதியே!
565. கடிதிரு மலரின் மடிவதியும்
வடுமணி படிவத் தரிநீலம்
அடிநிலை! சுடர்செம் மணியொடுபொன்
னுடையணி திருமா றனைநிகரும்
566. மணிவண னடைகொண் முனமணிபா
தணவவ னடைபா வாடையென
அணியுற வரிபல் பலவேசெம்
மணிநித் திலவொளி பரவுதியே.
567. அரிமலி யசுரர் நலிவிரத
விரைவிலெ ழுன்கரு மணியாரம்
தருமிர வொடுசசி யவர்செருநர்
உரிமையர் விழியா முளரிகட்கே.
568. அடிநிலை! கருமா னடையிலரி
யொடுமணி முத்துன தொளிருமெழில்
திடவிரி யிருகா விரியருகே
யிடுசிதர் பசும்பு லீயலென.
569. சுரநதி யமுனை சோணையொளி
பெருகுன தரள மணிநீலத்
தொருவர நதிநீ தருமரியின்
திருவடி தனினின் மகிமைமிகும்.
570. அரிபத நகசந் திரிகைபரு
கருமையி லிந்திரை மருவுகரத்
திருபுற மணியிற் கெனவிரியப்
புரியளி பாது! ச கோரியென.
571. விரிகுடை யிலரா யிடுபணிவில்
அரியடி! பரவுன தமரர்முடிக்
கிருமணி பலநின் னிகழுநிறம்
தருவிரி சரணக் கவிகையென.
572. மரகத தரளந் தலமலராய்
அரிபத நிலை! மா மணிதளிராய்
அரிகழ லிணையிற் கனியெவையுந்
தருநல நிறைகற் பகலதைநீ.
573. மணிபல மிளிரும் மணிபாதுன்
துணியணி சரணம் முடியணங்
கணனுமை விளையா டறுமுகனே
றணிமயி லிணையே யறிவுறுவன்.
574. பகலிர வந்திக டருவருண
வகைமணி யொளிபா தொருமைதர
நகுதலி லுனைமறை யறையரியவ்
வகடித கடநா வலிதெளிவாம்.
575. அரியடி வரிநீ கடவாதே
தெரிவரி நிறமூன் றினிலுயிர்கள்
புரிவினை யத்திருள் சுத்தமதொத்
த ரிதரு பயனென் றடிநிறுவும்.
576. மணிபத நிலை! மா னவர்விழிகட்
கணியொளி தளிஞ் சனநயநன்
மணியொளி யெனமா மணிகிளருள்
மணிவண னிகரம் மணிமலியும்.
577. குலவொரு கலையங் குலையாநித்
திலநிழ லருகே யெழுனீலம்
கலைநிறை நிலவத் தமமணுகும்
நிலைதனை யரிதா ணிலைஸ நிகரும்.
578. துணியரி தழைவித் துருமமுறி
யிணைதர ளந்துண ரெனவரிதாள்
அணுகவ னுபவன நடையாட
வங்கொரு பூங்கா வணணுகெனநீ.
579. வளைமனை பணி யமரர் முடிமணிமின்
னினவுரு மகர நிகரமெழுந்
துனதர தனநீ ளொளிவெள்ளத்
தினையெதி ரடிநிலை! நீந்திடுமே.
580. அந்தர ளச்செம் மணிநீலச்
சுந்தர பாது! மு குந்தனதாம்
முந்தொரு மூன்றொளி யூன்றுநகத்
தந்தந லந்தரு நந்தகநீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக