தன்னினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார்
நினைவனைத்துத் தான்விளைத்தும் விலக்குநாத
னெந்நினைவை யிப்பவத்தி லின்று மாற்றி
யிணையடிக்கீ ழடைக்கலமென் றெம்மை வைத்து
முன்னினைவால் யாமுயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னே தோன்றி
நன்னினைவா னாமிசையுங்க கால மின்றோ
நாளையோஓ வென்றுநகை செய்கின் றானே.
---- (தேசிகமாலை, அதிகாரச்சுருக்கு 49)
[ஸர்வேச்வரன் ஸங்கல்பித்த விஷயத்தை எவரும் தடை செய்ய இயலாது. அவன், தன்னை அடையாத நாஸ்திகர்களுக்குச் சகலவித ஆசைகளையும் உண்டாக்கி அவர்கள் அந்தப் போகங்களை அடைய முடியாது தானே தடை செய்கின்றான். இத்தகைய எம்பெருமான் நம்மீது அருள்புரிந்து நமக்கு ஸம்ஸாரத்தில் உள்ள நசையைத் தீர்த்தான் ; தன் திருவடிகளின் கீழே நம்மைக் காக்க வேண்டிய வஸ்துவாகக் கொண்டான். முன்பு அகங்கார மமகாரங்களால் நமக்கு ஏற்பட்ட கர்மங்களால் தனக்கு உண்டான கோபம் தீர்ந்தான் ; நமக்கு மோக்ஷத்தை அளிக்க முற்பட்டுப் பல அவதாரங்களையும் செய்து நம்மோடு கலந்து பரிமாறினான். இப்படி யிருந்தும் இந்த அருமையை அறியாத நாம் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது 'இன்றைக்கு நாளைக்கு' என்று காலம் தாழ்த்துவதைக் கண்டு அவன் பரிஹஸிக்கின்றான். என்னே நம் அறியாமை ! 'நான் மோக்ஷம்கொடுப்பதற்கு விரைந்தாலும் சேதநன் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது 'இன்று ஆகட்டும், நாளை ஆகட்டும்' என்று காலம் தாழ்க்கின்றான். என்னே இவன் அறியாமை !' என்று பகவான் பரிஹஸிக்கின்றான் என்க] என்றும் ;
ஒன்றே புகலென் றுணர்ந்தவர் காட்டத் திருவருளா
லன்றே யடைக்கலங் கொண்டநம் மத்தி கிரித்திருமா
லின்றே யிசையி னிணையடி சேர்ப்ப ரினிப்பிறவோம்
நன்றே வருவதெல் லாநமக் குப்பர மொன்றிலதே.
(தேசிகமாலை அமிருதரஞ்சனி 18)
[ ஐம்பொருளையும் சரீராத்மபாவம் முதலிய ஸம்பந்தத்தையும் அறிந்த ஆசார்யர்கள் 'ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே உபாயம்' என்று உபதேசிக்க, அல்லது, எம்பெருமானே உபாயம் என்று அறிந்த ஆசார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை ஸமர்ப்பிக்க, பிரதி உபகாரத்தை எதிர்பாராத, சிறந்த அவனுடைய கிருபையினால், அப்பொழுதே ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய அத்திகிரி நாதனான பேரருளாளர், இப்பொழுதே முத்தியைப் பெற நாம் ஸம்மதித்தால் தம்முடைய இரண்டு திருவடிகளில் சேர்த்துக் கொள்வார். இனி மறுபடியும் இக்கர்ம பூமியில் பிறக்க மாட்டோம். இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும் இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே. இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றும் இல்லை.] என்றும் இந்ந்யாஸதசகவாசிரியர் தாமே கூறி யருளியுள்ளார்.
இப்பாசுரத்துக்கு நம் ஸ்வாமியே வியாக்கியானம் இட்டுள்ளார். அதிற்சில பங்க்திகள் தருவாம் இங்கு.
'நம்மத்திகிரித் திருமால்' என்றது --- 'வேகவத்யுத்தரேதீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம், வரதஸ் ஸர்வபூதாநாமத்யாபி பரித்ருச்யதே', 'நிகரில் புகழாயுலகு மூன்றுடையாயென்னை யாள்வானே' இத்யாதிகளிற்படியே ஆச்ரித ஸம்ரக்ஷணோப யுக்த ஸௌசீல்யஸ் ஸ்வாமித்வ விசிஷ்டனாய், நண்ணினவர்களுக்கு விண்ணுலகந்தர விரைந்து ரக்ஷாபேக்ஷாப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதா நோந்முகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.
'இன்றே யிசையிலிணையடி சேர்ப்பர்' என்றது -- 'க்வாஹ மத்யந்துர்புத்தி:க்வ சாத்ம ஹிதவீக்ஷணம், யத்தி தம் மம தேவேச ததாஜ்ஞாபய மாதவ, த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ்நே நாந்யா க்வாபி கதிர் மம, அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத்பதாம் புஜே.' இத்யாதிகள்படியே பரமபுருஷார்த்தைக நமஸ்காரமளவில் அப்போதே கொடுவுலகு காட்டாதே கொழுஞ்சோதி யுயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி. (ஸ்ரீமத்ரஹஸ்யரத்நாவளீ ஹ்ருதயம்)
இச்சுலோகத்தில் த்வய மந்திரத்தின் கிரமத்தை அநுஸரித்துச் சரணாகதி செய்ததின் பின் பலனைப் பிரார்த்திக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக