வியாழன், 25 ஜூன், 2009

தமிழில் ஒரு தேடுபொறி (Search Engine)

தமிழிலேயே இணையத்தில் தேடுவதற்கு ஒரு புதிய தேடுதளத்தை திரு பழநி் கண்ணன் மின் தமிழில் அறிமுகப் படுத்தியுள்ளார். அவரது பதிவை இங்கே காணலாம்.

முத்தமிழ் வளர்த்தான் பாண்டியன், இன்று செந்தமிழ் வளர்க்கிறான் இந்த இணைய நண்பன் www.searchko.in

எனதினிய தமிழ் நேசம் கொண்ட வலை நண்பர்களுக்கு வணக்கம்...

கூகிள் உலகையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் ஒரு இணைய வலை அரசன். என்னதான் அரசன் என்றாலும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் சுவை தரும் தமிழில் கூகிளால் உயரத்தை எட்ட முடியவில்லை. நான் வலையில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது நான் கண்ட இந்த அற்புதமான ஒரு தமிழ் இணைய வலை அரசன் தான் www.searchko.in

இந்த தமிழ் இணைய வலையரசனின் சிறப்புகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

1. செந்தமிழில் இணைய வலையினை தேட, செந்தமிழில் ஒரு தேடல் இயந்திரம்.
அ. செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடல்.
ஆ. சங்க கால இலக்கியங்கள் தேடல்.

2. கூட்டாக தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கலாம்
அ. பல தமிழ் செய்தித்தாள்களை ஒரே இடத்தில் அதன் தலைப்புச் செய்திகளை
உடன்மாறும் செய்திகளாக வாசிக்கலாம்.

3. நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்
அ. நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (குறுகிய மற்றும்
விவரமான நிலவரங்களுடன் காணலாம்).
ஆ. கூடிய விரைவில் தமிழில் நேரடி ஆட்ட விமர்சனங்களை காண வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

4. அகராதி சேவை
அ. தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் புரிந்துகொள்ள, தமிழ்-ஆங்கில
அகராதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆ. ஆங்கிலம்-தமிழ் அகராதி அமைத்து தமிழ் புரிந்து கொள்ளும் இணைய
உலகத்தில், தமிழ்-ஆங்கில அகராதி மூலம் தமிழுக்கே பெருமை சேர்த்துள்ளது
இந்த இணையம்.

5. மார்கழி மாத இசைத்திருவிழா விவரங்கள் இசைப்பகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது .

6. அனைத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்து
பிழைத்திருத்தி இணைக்கப்பட்டுள்ளது.

7. ஆங்கில தட்டச்சுப் பலகையிலிருந்து தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும்
வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தட்டச்சுப் பலகை செயல்
உண்மைப்பலகையாக (virtual)உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் எண்ணம் கொண்ட உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிர
சாதமாக இருக்குமென்று, என் இனிய இணைய வலை நண்பர்களுக்கு இதை
சமர்ப்பிக்கின்றேன்.

இணைய தமிழ் வளர்ப்போம் .....
மென்பொருள் உலகில் தமிழுக்கு ஒரு இடம் ஒதுக்குவோம் ....

--
தங்கள் அன்பு நண்பன்
பழநி கண்ணன். க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக