மீண்டும் மதுரகவி ! நாரதீயம் என ஒரு நூல் அவர் இயற்றியது. சனக முனிவரிடம் நாரதர் கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல் சில புராண இதிஹாசங்களை நெஞ்சையள்ளும் கவிகளால் மதுரகவி ஆக்கியுள்ளார். நூலுக்கு ஒரு மதிப்பீடு. நூலைப் போன்றே அருமையாக உள்ளது. அனேகமாக அடுத்த வாரத்திலிருந்து 'நாரதீயத்'திலிருந்து வாமனாவதாரம் என்னும் பகுதியை இங்கோ அல்லது அடியேனது வேறு வலைப் பக்கங்களிலோ தினம் கொஞ்சமாக (அதற்கு திரு கம்பன் என்ற ராமன் எழுதியுள்ள உரையுடன்) இடலாம் என எண்ணியுள்ளேன். அதற்கும் ஒரு முன்னோட்டம் போல் நாரதீயத்துக்கு ...... எழுதியுள்ள ஆய்வினை இங்கு pdf ஆக இணைத்துள்ளேன். கீழே உள்ள சுட்டியில் க்ளிக்கி அதை ரசிக்கலாம். ஆய்வு செய்தவர்
ஆமத்தூர் சுதர்ஸன வெங்கட்ராம சுந்தரராஜ அப்பன் ஸ்ரீநிவாசன் (ஒருவர்தான். அடியேன் குமாரனுக்கு குடும்பத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்த அவனுக்கு நான் வைத்த பெயரே இப்போது கே.பாலசந்தரின் 'இருகோடுகள்' தத்துவப்படி இவர் பெயரினால் சுருக்கமாகி விட்டது. என்னது ! பையன் பேர் என்னவா ? இப்போ அவன் தோளுக்கு மிஞ்சினவன். அவனிடம்தான் கேட்கவேண்டும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக