
அடியேனைப் போன்ற ஈஸிசேர் (55+ வயதானவர்கள்) நபர்களில் பெரும் பாலோருக்கு ஒரு நினைப்பு. இந்தக்காலத்து இளைஞர்களுக்கு நம் சம்ப்ரதாய விஷயங்கள் ஒன்றும் தெரியாது, அவர்கள் மேல்நாட்டு நாகரீகங்களில் மூழ்கி, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், ஒழுக்கங்கள் இல்லாமல் வாழ்கிறவர்கள் என்றெல்லாம் புலம்புவது வாடிக்கை. அப்படிப் புலம்புபவர்களில் பலருக்கு அவர்கள் உத்யோகத்தில் இருக்கும்போது பாவம் சந்த்யாவந்தனம் பண்ணக் கூட நேரம் இல்லாமல் போயிருக்கும். ஓய்வு பெற்றபிறகுதான் போகும் வழிக்கு ஏதாவது செய்யத் தோன்றும். அப்போதுகூட தனக்கு ஏதாவது வேண்டித் தான் அவர்கள் பெருமாளை ஸேவிப்பார்களே ஒழிய, சம்ப்ரதாயம் பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல், அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் இருக்காது.
ஆனால் இவர்கள் நினைப்புக்கு மாறாக, இணைய வெளியில் உலவும்போது இளைஞர்களால் நடத்தப் படும் பல வலைகள் இன்றைய இளைஞர்கள், அதிலும் குறிப்பாக software துறையில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சம்ப்ரதாயத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார்கள், எவ்வளவு ஆழமாக அதைப் புரிந்து கொண்டுள்ளார்கள், எவ்வளவு ஆர்வத்துடன் தாங்கள் கற்றவற்றை அழகாக மற்றவர் மனம் லயிக்கும் வகையிலே அவற்றை இனிய தமிழிலே எழுதிவருகிறார்கள் என்பவற்றை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவ்வகையில் ஒன்று இந்த "கண்ணன் பாடல்கள்" ஒலி, ஒளி, பாடல் வரிவடிவம் என மிக அருமையாக உள்ளது.
http://kannansongs.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக