செவ்வாய், 23 ஜூன், 2009

சரணாகதி


இங்கு இட்டுவரும் "ந்யாஸ தசகம்" இன்றைய தலைமுறை எளிதில் புரிந்து கொள்ள இயலாத கடின நடையில் உள்ளது, சற்று எளிமையாக இருந்தால் நல்லது என அடியேனுக்கு சில அஞ்சல்கள் வந்துள்ளன. இதை எளிமைப் படுத்துவது என்பது முடியாது மட்டுமல்ல, பழைய நூல்களை உள்ளது உள்ளபடி வலையில் ஏற்றவேண்டும் என்ற என் நோக்கத்துக்கும் மாறானது. ஆனால், சரணாகதி மேன்மை எல்லாருக்கும் புரியவேண்டும் ; அப்படிப் புரிந்து எல்லாரும் ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்று திரு ஆர். ஆர். ஸ்வாமி விடாமல் எழுதுகிறாரே! அவர் முயற்சிகளுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டுமே என்ற நினைப்புடன் என்னிடம் இருக்கும் புத்தகங்களை அலசிக் கொண்டிருந்தேன். எப்போதோ திருவல்லிக்கேணி நடைபாதையில் வாங்கிய ஒரு சிறு நூல் அகப்பட்டது. இன்றைய நிலையில் அனைவருக்கும் புரிகின்ற ஆங்கிலத்தில் ஸ்வாமி தேஜோமயானந்தா எழுதியுள்ள அந்த நூல் இங்கே . மூலைகளைப் பிடித்துப் புரட்டி படிக்கலாம். இதன் மூலம் ப.ரெ.திருமலை அய்யங்காரை இன்னும் ஆழமாக ரசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக