ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்
சுலோக‌ம் 6
स्थिते मनसि विग्रहे गुणिनि धातुसाम्ये सति
       स्मरेदखिलदेहिनं य इह जातुचित् त्वामजं
|
तयैव खलु सन्धया तमथ दीर्घनिद्रावशं
       स्वयं विहितसंस्मृतिर्नयसि धाम नै:श्रेयसम्
|| .6.
ஸ்திதே மநஸி விக்ரஹே குணிநி தாதுஸாம்யே ஸதி
       
ஸ்மரேதகிலதேஹிநம் இஹ ஜாதுசித் த்வாமஜம் |
தயைவ லு ஸந்தயா தமத தீர்க்கநித்ராவஶம்
       
ஸ்வயம் விஹிதஸம்ஸ்ம்ரு̆திர்நயஸி தா நை:ஶ்ரேயஸம் || .6.
இஹ‌ -- இங்கே (கோயிலில், பூலோக‌த்தில், இவ்வாயுளில்), ய‌: -- எவ‌ன், ம‌ன‌ஸி -- ம‌ன‌தான‌து, ஸ்திதே -- ஒரு விஷ‌யத்தில் நிலைநிற்க‌ ச‌க்த‌மாயிருக்கும்போது, விக்ர‌ஹே -- ச‌ரீர‌ம், குணிணி -- ஸ்வ‌ஸ்த‌மாய் ந‌ல்வ‌ழியில் இருக்கும்போது, தாது ஸாம்யே ஸ‌தி -- தாதுக்க‌ள் ஸ‌மமாய் அரோகமாயிருக்கும்போது, த‌ம் -- அவ‌னை, த‌யைவ‌ ச‌ந்த‌யா -- அந்த‌ ஒரு நினைப்பைக் கொண்டே, ஸ்வ‌ய‌ம் -- நீராக‌வே, விஹித‌ஸ‌ம் ஸ்ம்ருதி -- அவ‌னை உம்மை ந‌ன்றாய் நினைக்க‌ச் செய்து, அகில‌ தேஹிந‌ம் -- ஸ‌ர்வ‌ ச‌ரீரியாயும், அஜ‌ம் -- பிற‌ப்ப‌ற்ற‌வ‌ருமான‌ த்வாம் -- உம்மை, ஜாதுசித் -- எப்பொழுதாவ‌து ஒரு த‌ட‌வை, ஸ்ம‌ரேத் -- ஸ்ம‌ரிப்பானோ (ஸ்ம‌ரித்திருப்பானாகில்), அத‌ -- பிற‌கு, தீர்க்க‌ நித்ராவ‌ச‌ம் -- நீண்ட‌ துக்க‌மான‌ ம‌ர‌ண‌த்திற்கு வ‌ச‌மாயிருக்கும்போது, நைஶ்ரேய‌ஸ‌ம் தாம‌ -- த‌ன‌க்கு மேற்ப‌ட்ட‌ ஶ்ரேய‌ஸ்ஸில்லாத‌ மோக்ஷ‌ம் என்னும் ஸ்தாநத்தை, ந‌ய‌ஸி -- சேர்ப்பிக்கிறீர்.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

மண்ணுலகில் எவனும்தன் மனம்நல்ல நிலைகொண்டு
மெய்தானும் திடமாக மேன்மையுடன் இருக்கையிலே,
நன்னிலையில் உடம்பிலுள நரம்பாதி தாதுக்கள்
நன்முறையில் இயங்கிவரும் நாட்களிலே என்றேனும்,
எண்ணற்ற பொருளனைத்தில் உட்புகுந்த ஆன்மாவாய்
ஏற்றமுடைப் பிறப்பிலியாம் உன்தன்னை ஒருமுறையே
எண்ணுவனேல், அந்நினைவை இறுதியிலே உண்டாக்கி
எட்டரிய முக்திதனை எய்திவிடச் செய்கின்றாய் ! 6.
ஸ்ரீ அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

        எல்லா ப‌ய‌ங்க‌ளும் தொலைய‌ "ஸ்ம‌ர‌தி வா" என்று உம்மை நினைத்தால் போதும் என்று முன்பு ஸாதித்தார். கோயிலில் வ‌ஸிக்கும் உம்முடைய‌ திருமேனியை ஒருக்கால் ந‌ன்று நினைத்திருந்தால் போதும் அந்திம‌ ஸ்ம்ருதியை உண்டாக்கி அவ‌னை மோக்ஷ‌ம் சேர்க்க‌. "க‌லு" என்று இந்த‌ விஷ‌ய‌த்தில் ப்ர‌மாண‌ ப்ர‌ஸித்தியைக் காட்டுகிறார். அத‌ற்காக‌ பெருமாள் திருவாக்கிலிருந்து வ‌ந்த‌ ப்ர‌மாண‌ வ‌ச‌ந‌ங்க‌ளின் ப‌த‌ங்க‌ளாலேயே சுலோக‌த்தை அமைத்து, பெருமாளுக்கு அவ‌ர் உக்தியையே நினைப்பூட்டுகிறார். "स्थिते मनसि सुस्वस्थे सरीरे सति यो नर: | धातुसाम्ये स्थिते स्मर्ता विश्वरूपं च ममजं | என்று தொட‌ங்கிய‌ சுலோக‌ங்க‌ள் பெருமாளாலேயே அருளிச் செய்ய‌ப் ப‌ட்ட‌வை. "உம்மை" என்ப‌த‌ற்கு இங்கே, கோயிலில் எழுந்த‌ருளியிருக்கும் அர‌ங்க‌னை என்று க‌ருத்து. "துப்புடையாரை" என்னும் பாசுர‌த்தில் "எய்ப்பென்னை வ‌ந்து ந‌லியும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்க‌மாட்டேன் அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அர‌ங்க‌த் த‌ர‌வ‌ணைப் ப‌ள்ளியானே" என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததை இங்கே நினைக்கிறார்.
        உம்மை ஸேவித்தாலல்ல‌வோ உம் ஸ்ம‌ர‌ண‌ம் அந்திம‌ கால‌த்தில் நேரும்? தேவ‌ரீர் எழுந்த‌ருளியிருந்தாலல்ல‌வோ எல்லாரையும் தேஹ‌வியோக‌ கால‌த்தில் ஸ்ம‌ர‌ண‌த்தை அநுக்ர‌ஹித்துக் காப்பாற்ற‌ முடியும்? தேவ‌ரீர் இங்கே எழுந்த‌ருளியிருந்தே எம்மை அங்கே அனுப்பிச் சேர்ப்பிக்க‌ வேணும். "ஸ்திதே குணிநி விக்ர‌ஹே" என்று "உம்முடைய‌ திருமேனி நிர‌பாய‌மாய் எழுந்த‌ருளியிருக்கையில்" என்றும் காட்டுவ‌தில் திருவுள்ள‌மாய் முத‌லில் "ஸ்திதே" என்கிறார். முன் சுலோக‌த்தில் "ப‌வ‌ந்த‌ம்" என்று தொட‌ங்கிய‌துபோல், இந்த‌க் க‌வ‌லையே நெஞ்சில் ஓடிக்கொண்டிருப்ப‌து ஓரொரு சுலோக‌த்திலும் தெரிகிற‌து. "அமில‌ தேஹிந‌ம் த்வாம்" -- கில‌த்திற்குப் பிர‌ஸ‌க்தியில்லாம‌ல், பூர்ண‌மான‌ திருமேனியுடைய‌ உம்மை. அகில‌ தேஹியான‌ உம்முடைய‌ திருமேனிக்குக் கில‌ம் ப்ர‌ஸ‌க்த‌மானால் எந்த‌ தேஹியின் தேஹ‌ம் நிற்கும்? அஷ‌ம் த்வாம்  --  பிற‌ந்த‌வ‌னுக்க‌ல்ல‌வா அபாய‌ம் த்ருவ‌ம் ! பிற‌வாத‌ தேவ‌ரீர் திருமேனிக்கு அபாய‌ம் வ‌ர‌ ஸ‌ஹிப்போமோ?

        உம்மை ஆச்ர‌யித்த‌வ‌னுக்கு ஒருக்கால் தேஹ‌வியோக‌ம் வ‌ருவ‌தை "ம‌ர‌ண‌ம்" என்று பேசோம். "தீர்க்க‌மான‌ நித்ரை" என்போம். ஒரு த‌ர‌ம் எக்கால‌த்திலோ உம்மை ஸ்ம‌ரித்ததை நினைத்துக்கொண்டே இருந்து அவ‌ன் தேஹ‌த்திற்கு அபாய‌ம் வ‌ருங்கால் அவ‌னுக்கு ஸ்ம‌ர‌ண‌த்தைக் கொடுத்து ர‌க்ஷிக்கும் த‌யாளுவாயிற்றே. நாங்க‌ள் இப்பொழுது க‌த‌றுவ‌தைத் திருவுள்ள‌த்தில் கொள்ளாம‌ல் திர‌ஸ்க‌ரிக்க‌லாமோ?? "உம் திருவுள்ள‌ம் ம‌ட்டும்தான் வேண்டும் எம் ம‌னோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌" என்று "ஸ்வ‌தீநிய‌த‌சேத‌நாசேத‌ந‌ம்" என்ப‌தால் வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்கிறார். ஒரு விரோதி த‌ன் கை கால்க‌ளை அசைக்க‌ முடியுமோ? "நான் அர்ச்சை, நான் ப‌ராதீந‌ன்" என்று நீர் பேச‌வொண்ணாது. "உம்முடைய‌ அப்பெரிய‌ வீட்டிற்கு எங்க‌ளைக் கொண்டுபோய்ச் சேர்க்க‌த்தானே நீர் இங்கே கோயில் கொண்டிருப்ப‌து" என்ப‌தைக் காட்ட‌ "ந‌ய‌ஸி தாம‌" "வீட்டுக்குக் கொண்டு போகிறாய்" என்கிறார். உம்மைய‌ல்லால் எம்மை வீடு சேர்ப்பார் ஆர்? (6) 

சனி, 13 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்


பாசுர‌ம் 5

भवन्तमिह य: स्वधीनियतचेतनाचेतनं
       पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा |
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितु:
       कदाचन कुतश्चन क्वचन तस्य न स्यात् भयम् || 
5  

வந்தமிஹ : ஸ்வதீநியதசேதநாசேதநம்
        
பநாயதி நமஸ்யதி ஸ்ம‌ரதி வக்தி பர்யேதி வா |
குணம் கமபி வேத்தி வா தவ குணேஶ கோபாயிது:
        
கதாசந குதஶ்சந க்வசந தஸ்ய ஸ்யாத் யம் ||  5  

குணேஶ -- குண‌ங்க‌ளுக்கு ஈச‌னே (உடைய‌வ‌னே), ஸ்வ‌தீ நிய‌த‌ சேத‌நாசேத‌ந‌ம் --த‌ன்னுடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தாலே நிய‌மிக்க‌ப்ப‌டும் சேத‌நா சேத‌நாத்ம‌க‌மான‌ உல‌க‌த்தை உடைய‌, ப‌வ‌ந்த‌ம் -- தேவ‌ரீரை, ய‌: -- எவ‌ன், ப‌நாய‌தி -- துதிக்கிறானோ, ந‌ம‌ஸ்ய‌தி -- ந‌ம‌ஸ்க‌ரிக்கிறானோ, ஸ்ம‌ர‌தி -- ஸ்ம‌ரிக்கிறானோ, வ‌க்தி -- பேர் சொல்லுகிறானோ, ப‌ர்யேதிவா -- ப்ர‌த‌க்ஷிண‌ம் செய்கிறானோ, கோபாயிது: -- ர‌க்ஷ‌க‌ரான‌, த‌வ‌ -- தேவ‌ரீருடைய‌, க‌மபி -- ஒரு, குண‌ம் -- குண‌த்தையாவ‌து, வேத்தி -- அறிகிறானோ (உபாஸிக்கிறானோ), த‌ஸ்ய‌ -- அவ‌னுக்கு, க‌தாச‌ந‌ -- எக்கால‌த்திலும், குத‌ஶ்ச‌ந‌ -- எங்கேயிருந்தும் (எக்கார‌ண‌த்தையிட்டும்), க்வ‌ச‌ந‌ -- எவ்விட‌த்திலும், ப‌ய‌ம் -- ப‌ய‌மென்ப‌து, ந‌ ஸ்யாத் -- உண்டாக‌ மாட்டாது.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

அருங்குணங்கள் நிறைந்ததிரு அரங்கம்வாழ் பெருமானே !
அறிவுடைய உயிரெல்லாம் அறிவற்ற பொருள்யாவும்
பெருமதியால் ஆள்கின்ற பெருமைதனை நீயுடையாய்!
பருவுலகில் எவனேலும் புகழ்ந்துன்னைத் துதித்தாலும்
சிறுவணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினைவலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒருகுணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன்தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம்தானே! 5.  

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         உம்மைத் துதி செய்ப‌வ‌னுக்கு எல்லா ப‌ய‌மும் போய்விடும். நீர் நிர‌பாய‌ராக‌ எழுந்த‌ருளியிருக்க‌ உம்மைத் துதி செய்ய‌க்கூட‌ வேண்டிய‌ தில்லை. ந‌ம‌ஸ்கார‌ம் செய்தால் போதும். ஸ்ம‌ரித்தாலும் திருநாம‌த்தை உச்ச‌ரித்தாலும் ஒரு ப்ர‌த‌க்ஷிண‌த்தைச் செய்தாலும் கூட‌ப் போதும். உம்முடைய‌ திருமேனி குஶ‌ல‌மாய் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும் என்ற‌ ஆசையையும் "ப‌வ‌ந்"நாக‌ இருக்கும்ப‌டியான‌ உம்மை என்று பொருள் கொள்ளுவ‌தையும் உத்தேசிக்கிறார். நீர் "ப‌வ‌ந்"நாக‌ (இருப்ப‌வ‌ராக‌) இருக்க‌ வேண்டும். ராம‌கிருஷ்ணாதி விப‌வ‌ங்க‌ள் போலே பூதத‌சையாகாம‌ல் நித்ய‌ -- ப‌வ‌ந்நாய் எழுந்த‌ருளியிருக்கும் பாக்கிய‌த்தை உல‌க‌ம் பெற‌வேணும். இஹ‌ப‌வ‌ந்த‌ம் -- இங்கேயே இருக்கிற‌ உம்மை. வைகுண்ட‌த்திலிருக்கிறோமே போதாதோ என்ன‌வொண்ணாது., இப்பூலோக‌ வைகுண்ட‌த்தில் இருக்க‌ வேண்டும். "வீற்றிருந்து ஏழுல‌கும் த‌னிக்கோல் செல்ல‌" என்ற‌ப‌டி இங்கே இருந்துகொண்டே சேத‌னாசேத‌னாத்ம‌க‌மான‌ உல‌க‌ங்க‌ளை எல்லாம் உம்முடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தால் நிய‌மிப்ப‌வ‌ர‌ல்ல‌வோ? இந்த‌ சுபாஶ்ர‌ய‌த் திருமேனியோடு கூடிய‌ உம்மை, "விப‌ந்ய‌வ‌:" என்று ப‌ர‌மப‌த‌ப் பெருமாளைத் துதிப்ப‌து போல‌ எவ‌ன் ப‌நாய‌தி துதிக்கிறானோ? பாட‌த் தெரியாதாயினும், துதிபாடும‌த்த‌னை சிர‌மப்ப‌ட‌ ஸௌக‌ர்ய‌மில்லையாயினும், (ந‌ம‌ஸ்யதி) ந‌ம‌ஸ்கார‌ம் செய்தாலும் போதுமே. ஸ்ம‌ர‌தி -- தூர‌த்திலிருந்து ஸ்ம‌ரித்தாலும் போதும், வ‌க்தி -- ஸ்ம‌ரிக்கும் புத்தி சிர‌மம் கூட‌ வேண்டாம். "ர‌ங்க‌ம்" என்று வாக்கினால் உச்ச‌ரித்தாலும் போதும். ப‌ர்யேதி வா -- கோவிலையோ, திருவீதிக‌ளையோ சுற்றி வ‌ந்தால் போதுமே. அப்ப‌டிச் சுற்றி வ‌ருவ‌து स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाण:"  (ஸ‌ தத்ர‌ ப‌ர்யேதி ஜ‌க்ஷ‌த் க்ரீட‌ந் ர‌மமாண‌:) என்ப‌து போல் ஆநந்தாநுப‌வ‌ மாயிருக்குமே.
         குண‌ங்க‌ளோடு கூடிய‌ உம்மை இவ்வ‌ள‌வு செய்ய‌வேண்டு மென்ப‌தும் இல்லை. உம்முடைய‌ ஒரு குண‌த்தை அறிந்தாலும் (உபாஸித்தாலும்) போதும். "க‌ம் அபி" என்ப‌தால் "வாய் ம‌ன‌திற்கு எட்டாத‌" என்று கொண்டு, "ஆநந்த‌: குண‌த்தை வாங்குவ‌து உசித‌ம். அந்த‌ குண‌த்தை உபாஸிப்ப‌வ‌ரைப் ப‌ற்றி ஸாக்ஷாத்தாக‌ आनन्दं ब्रह्मणो विद्वान् न पिभेयति कुतश्चन", न पिभेति कदाचन"  ("ஆநந்த‌ம் ப்ர‌ஹ்ம‌ணோ வித்வான் ந‌ பிபேதி குத‌ஶ்ச‌ந‌", "ந பிபேதி க‌தாச‌ந‌") என்று சுருதி பேசிற்று. "க‌தாச‌ந‌" "குத‌ஶ்ச‌ந‌" என்ப‌தோடு "க்வ‌ச‌ந‌" என்று சேர்த்து இங்கே ப‌ல‌த்தைப் ப‌டிக்கிறார்.  (5)     

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

ச்லோக‌ம் 4

मरुत्तरणिपावकत्रिदशनाथकालादय:
स्वकृत्यमधिकुर्वते त्वदपराधतो बिभ्यत: |
महत् किमपि वज्रमुध्यतमिवेति यत् श्रूयते
ततत्यनघ तद्भयं य इह तावक: स्तावक: ||
4.

மருத் - தரணி - பாவக -த்ரிதஶநாத - காலாத:
        
ஸ்வக்ரு̆த்யமதிகுர்வதே த்வதபராததோ பிப்யத: |
மஹத்கிமபி வஜ்ரம் உத்யதமிவேதி யத் ஶ்ரூயதே
        
ததத்யநக தத்யம் இஹ தாவக: ஸ்தாவக: || 4.


அந‌க‌ -- மாச‌ற்ற‌ பிர‌புவே!, ம‌ருத், த‌ர‌ணி, பாவ‌க‌, த்ரித‌ஶ‌நாத‌, காலாத‌ய‌: --- வாயு, சூர்ய‌ன், அக்னி, இந்திர‌ன், ய‌ம‌ன் முத‌லிய‌வ‌ர்க‌ள், த்வ‌ர‌ப‌ராதத‌: -- உம‌க்கு அப‌ராதிக‌ள் ஆகிவிடுவோமோ என்று, பிப்ய‌த‌ -- ப‌ய‌ந்து, ஸ்வ‌க்ருத்ய‌ம் -- த‌ங்க‌ள் வ்யாபார‌த்தை, அதிகுர்வ‌தே -- ந‌ட‌த்துகிறார்க‌ள், உத்ய‌த‌ம் -- ஓங்கின‌, ம‌ஹ‌த் -- பெரிய‌, கிமபி வ‌ஜ்ர‌மிவ‌ -- வ‌ர்ணிக்க‌ முடியாத‌ அத்த‌னை கொடிய‌ வ‌ஜ்ராயுத‌ம் போன்ற‌, ப‌ய‌ம் இதி -- ப‌ய‌ம் என்று, ய‌த்ஶ்ரூய‌தே -- எது சுருதியில் கேட்க‌ப் ப‌டுகிற‌தோ, தத் ப‌ய‌ம் -- அந்த‌ ப‌ய‌த்தை, ய‌: - எவ‌ன், இஹ‌ -- இங்கே, தாவ‌க‌: -- உன்னைத் துதிப்ப‌வ‌னோ, தாதி -- (அவ‌ன்) தாண்டுகிறான்.
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமியின் த‌மிழாக்க‌ம்
ஓங்கியதோர் வச்சிரம்போல் உயர்ந்தவுன்றன் தண்டனைக்கு
உறுமென்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வன்காலன் முதலாய
தேவரெலாம் தம்பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்ப்
பாங்குடனே மறைமுடிகள் பகர்கின்ற அச்சமதை,
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கிலாத அரங்கனுனைத் துதிசெய்து வழிபட்டால்
தாண்டியராய் நற்கதியைத் தாமடைவர் உறுதியன்றோ? 4.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
ப‌ய‌ம், ப‌ய‌ம் என்றும், ம‌ஹ‌த்தான‌ ப‌ய‌ம் என்றும், வ‌ஜ்ர‌ம் என்றும், இடி மேல் விழுவ‌தாக‌ ப‌ய‌முறுத்துவ‌து போல‌வும், மிக்க‌ ப‌ய‌த்தை ஆங்காங்கு பேசிக்கொண்டு வ‌ருகிறார். "என் விக்ர‌ஹ‌த்திற்கு வ‌ரும் அபாய‌த்தை வில‌க்கிக் கொள்ள‌ வேறு யாரையாவ‌து ப்ரார்த்திக்க‌லாகாதா?" "ஸாத்ய‌மில்லை. நானும் ம‌ற்றொருவ‌ரை யாசிக்க‌ மாட்டேன். உம்மைத்த‌விர‌ வேறு ப‌ய‌நிவ‌ர்த்த‌க‌ருமில்லை. உல‌க‌மே உம்மிட‌மிருந்து ப‌ய‌ந்து ந‌ட‌க்கிற‌து. ப‌ய‌த்தைக் கொடுக்கக்கூடிய‌ வாயு முத‌லிய‌ தேவ‌ர்க‌ளும் ம்ருத்யு வென்னும் தேவ‌னும் உம‌க்கு ந‌டுங்கி ந‌ட‌க்கிறார்க‌ள்." தைத்திரீய‌ சுருதியில் ஆநந்த‌ம‌ய‌ப் பொருளின் ஆநந்தத்தைப் ப‌ற்றி ஆநந்த‌மீமாம்ஸை செய்ய‌ப் போகும் அவ‌ஸ‌ர‌த்தில், அத‌ற்கு அடுத்த‌ முன்வாக்ய‌ம் "இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் வாயு வீசுகிறான். (உல‌க‌த்தைப் ப‌ரிசுத்த‌மாக்குகிறான்.) இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் சூரிய‌ன் உதிக்கிறான். இவ‌ரிட‌மிருந்து ப‌ய‌த்தால் அக்நியும் இந்திர‌னும் ம்ருத்யுவும் (நால்வ‌ரோடு) ஐந்தாவ‌தாக‌ ஓடுகிறார்க‌ள் " என்ற‌து.
பெருமாள் ர‌ங்க‌த்தில் "ர‌திம்க‌த‌:" "ஆநந்த‌பூர்ண‌ர்" என்ப‌தால் ர‌ங்க‌த்திற்கு "ர‌ங்க‌ம்" என்று பெய‌ர். ब्रह्मण कोशोऽसि (ப்ர‌ஹ்ம‌ண‌ கோஶோஸி) என்று ப்ர‌ண‌வ‌ம் ப்ர‌ஹ்ம‌த்திற்குக் கோச‌ம் (பெட்டி) என்ற‌து சுருதி. ப்ர‌ண‌வ‌ - விமாந‌ - கோச‌த்தில் காண‌ப்ப‌டும் ப்ர‌ஹ்மம் இப்பெருமாள். ப‌ய‌விஷ‌ய‌மான‌ தைத்திரீய‌ சுருதியை இப்பெருமாள் விஷ‌ய‌மாகக் கொள்கிறார். க‌ட‌சுருதியில் "எந்த‌ ஜ‌க‌த்ப்ராணனிட‌மிருந்து இவ்வுல‌க‌மெல்லாம் ஓங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ வ‌ஜ்ர‌த்தினிட‌மிருந்து ப‌ய‌ப்ப‌டுவ‌துபோல் ந‌டுங்கி ந‌ட‌க்கிற‌தோ, அந்த‌ இப்பிராண‌னை அறிந்த‌வ‌ர் அமிருத‌ராவர். இவ‌ர் ப‌ய‌த்தால் அக்நி த‌ன் வ்யாபார‌மான‌ த‌ப‌நத்தைச் செய்கிறான். ப‌ய‌த்தால் சூரிய‌ன் ஜ்வ‌லிக்கிறான். ப‌ய‌த்தால் இந்திர‌னும், வாயுவும், நால்வ‌ரோடு ஐந்தாம‌வ‌னாக‌ ம்ருத்யுவும் ஓடித் திரிகிறார்க‌ள்." என்று உள்ள‌து. இந்த‌ சுலோக‌த்தில் முன் பாதியில் தைத்திரீய‌ சுருதியையும், பின்பாதியில் க‌ட‌சுருதியின் பின்வாக்ய‌த்தையும், முன்பாதியில் க‌ட‌சுருதியின் முன்வாக்ய‌த்தையும் ஸ்வ‌ல்ப‌ வேறுபாட்டோடு அமைக்கிறார். சுருதியில் ப‌ய‌ம் ப‌ய‌ம் என்று திருப்பித் திருப்பிப் பேசுவ‌து போல‌, இத்துதியிலும் இம்ம‌ஹ‌த்தான‌ ப‌யாவ‌ஸ‌ர‌த்தில் பேசுகிறார். "க‌ம்ப‌நாத்" என்னும் சூத்திர‌த்தில் "அங்குஷ்ட‌மாத்ர‌மாக‌ ஹ்ருத‌ய‌ குஹையில் இருக்கும் பெருமாளுக்கு உல‌க‌ மெல்லாம் ந‌டுங்கி ந‌ட‌க்கிற‌து" என்று அழ‌காக‌ ஸூசிப்பித்தார். அப்ப‌டி உல‌க‌ம் ந‌டுங்கி ந‌ட‌ப்ப‌து ப்ர‌ஹ்ம‌த்திற்கு நிச்ச‌ய‌மான‌ அடையாள‌ம் (லிங்க‌ம்) என்றார். "என‌க்க‌ல்ல‌வோ அது அடையாள‌ம்" என்று ப்ர‌ஹ்லாதாழ்வானை ஹிர‌ண்ய‌ன் வெருட்டினான். "எவ‌ன் கோபிக்கும்போது மூன்று லோக‌ங்க‌ளும் அவ‌ற்றின் ஈச்வ‌ரர்க‌ளும் ந‌டுங்குகிறார்க‌ளோ (க‌ம்ப‌ந்தே) அந்த‌ என்னுடைய‌ ஆஜ்ஞையை எந்த‌ ப‌ல‌த்தைக்கொண்டு நீ மீறினாய்?" என்று கோப‌த்தோடு கேட்டான். அம்ம‌த‌யானைக்கு நீர் ஸிம்ஹ‌மானீர்." சுருதியின் பேச்சுத்தான் ஸ‌த்ய‌ம். அஸுர‌ன் பேச்சு ஸ‌த்ய‌மாகுமோ? சுருதி ஸூத்ர‌ங்க‌ளின் பேச்சை ந்ருஸிம்ஹ‌ப் பெருமாள் ஸ‌த்ய‌மாக்கினார். எம‌க்கு வ‌ந்திடும் ப‌ய‌த்தை நீர்தானே நிவ‌ர்த்திக்க‌ வேணும்!
காற்றைப்ப‌ற்றி சுருதி எடுத்த‌ "வாத‌:", "வாயு" என்ற‌ ச‌ப்த‌ங்க‌ளை எடுக்காம‌ல் "ம‌ருத்" என்று முத‌லில் வைத்ததில் ர‌ஸ‌முண்டு. "ம‌ருத்" என்ப‌து தேவ‌ர்க‌ளைப் பொதுவில் சொல்லும். "தேவ‌ர்" என்று பொதுப் பொருளையும் கொள்ள‌ வேணும். தேவ‌ர்க‌ளான‌ இவ‌ர்க‌ளும், நீர் யுத்தத்தில் ஜாத‌ரோஷ‌ரான‌ போது ந‌டுங்குவாரே; விரோதிக‌ளான‌ அஸுரர்க‌ள் ந‌டுங்க‌ வேண்டாவோ ? (ராமாய‌ண‌ ஸ‌ங்க்ஷேப‌ச் சுலோக‌த்தை நினைக்க‌ வேண்டும்)
ஸூர்ய‌னை "த‌ர‌ணி" என்பார். ஸ‌ம்ஸார‌ ப‌ய‌த்தைத் தாண்ட‌ அவ‌ருக்கு வேறு த‌ர‌ணி ( = ஓட‌ம்) வேண்டும். த‌ன் ப‌ய‌த்திற்குத் தான் த‌ர‌ணியாகார். நீர்தான் எல்லோருக்கும் ப‌ய‌த‌ர‌ண‌த்திற்கு (ப‌ய‌த்தைத் தாண்ட‌) த‌ர‌ணி. உம்மைத் துதிப்ப‌வ‌ன் ப‌ய‌த்தைத் த‌ர‌ண‌ம் செய்வான் என்று இங்கே க‌டைசி அடியில் பேசுகிறார்.
"பாவ‌க‌ன்" என்றால் ப‌ரிசுத்தி செய்ப‌வ‌ன். "பாவ‌ந‌ம்:" ப‌ரிசுத்தி செய்வ‌து. இவ‌னையும் பெருமாள் பாவ‌ந‌ம் செய்து அப‌ஹ‌த‌பாப்மாவாக்க‌ வேணும். இந்த‌ ர‌ஸ‌ங்க‌ளை வ்ய‌ஞ்ஜிப்பிக்க‌ச் சுருதி ப‌த‌ங்க‌ளை மாற்றின‌து. "இந்திர‌ன்" என்று சுருதி ப‌த‌ம். எல்லோருக்கும் மேற்ப‌ட்ட‌ ஈச்வ‌ர‌னைச் சொல்லும் ச‌ப்த‌ ச‌க்தியைக் குறைத்து ஒடித்து அவ‌னுக்கு அப்பெய‌ர். பெருமாளுக்குத்தான் அப்பெய‌ர் த‌கும். அதுபோல‌வே, இங்கே அவ‌ன் விஷ‌ய‌த்தில் "த்ரித‌ஶ‌நாத‌ன்" என்று பேசுகிறார். இதுவும் ச‌ப்த‌ ச‌க்தியைக் குறைத்துப் பேச்சு. "கால‌ன்" என்ப‌தால் "கால‌னுக்கும் கால‌னாகிய‌ கால‌கால‌ன் நீர்" என்ப‌து வ்ய‌ஞ்ஜ‌ந‌ம். தாங்க‌ள் செய்ய‌வேண்டிய‌ த‌ங்க‌ள் அதிகார‌க்ருத்ய‌த்தைச் செய்கிறார்க‌ள். எங்கே உம் ஆஜ்ஞையை மீறும் அப‌ராத‌ம் வ‌ருமோ என்று ந‌டுங்கிச் செய்கிறார்க‌ள்.
இதில் மிக்க‌ ர‌ஸ‌முண்டு. அத்வைதாசிரிய‌ராகிய‌ ஸுரேச்வ‌ரர் இந்த‌ ர‌ஸ‌த்தை தைத்திரீயோப‌நிஷ‌த்தில் ஸூசிப்பித்தார். ஸூரேச்வ‌ரருடைய‌ நைஷ்க‌ர்ம்ய‌ஸித்தியை ஸ்வாமி தத்வ‌டீகையில் உதாஹ‌ரித்தார். ஆநந்த‌ம‌ய‌னுடைய‌ எல்லைய‌ற்ற‌ ஆநந்தத்தைப் பேசுவ‌த‌ற்குமுன் க்ஷ‌ண‌த்தில் வாயு முத‌லிய‌ தேவ‌ர்க‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்கி ஸ்வ‌க்ருத்ய‌த்தைச் செய்கிறார்க‌ள் என்று சொல்லி ஆநந்த‌ம‌ய‌னுடைய‌ ஆநந்தத்திற்கு எல்லையில்லை என்று சொல்லி முடிக்கையில், இந்த‌ ப்ர‌ஹ்ம‌த்தின் எல்லைய‌ற்ற‌ ஆநந்தத் த‌ன்மையை அறிந்த‌வ‌ர் ஒன்றுக்கும் ப‌ய‌ப்ப‌டார்க‌ள் என்று முடித்தது. இப்ப‌டி ஆநந்த‌ம‌ய‌மான‌து ப்ர‌ஹ்மம் என்று அறிந்த‌வ‌ர் ப‌ய‌ப்ப‌டாம‌ல் ஸ‌ந்தோஷ‌மாய், ஆநந்த‌மாய், ஸ்வ‌ய‌ம்ப்ர‌யோஜ‌ந‌மாய், த‌ம் கைங்க‌ர்ய‌ங்க‌ளைச் செய்ய‌லாமே என்று சுருதியின் உட்க‌ருத்து. இதை ஸுரேச்வ‌ரர் ஸூசிப்பித்தார். ஸ்வாமிக்கும் இந்த‌ ர‌ஸ‌ம் திருவுள்ள‌ம். "ஸ்வ‌க்ருத்ய‌த்தை அதிக‌ரிப்ப‌தை ப‌ய‌ப்ப‌ட்டுக்கொண்டே செய்கிறார்க‌ள். ஆநந்த‌ப்ப‌ட்டுக்கொண்டே செய்ய‌லாமே! ப‌ய‌நிவ‌ர்த்த‌மும் ஆநந்த‌ம‌ய‌முமான‌ ப்ர‌ஹ்ம‌த்தினிட‌மிருந்து ஏன் ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும்?" என்று பா(भा)வ‌ம். அடுத்த‌ சுலோக‌த்திலும் உம்முடைய‌ ஆநந்தத் த‌ன்மை என்னும் ஓர் வ‌ர்ணிக்க‌முடியாத‌ குண‌த்தை அறிந்த‌வ‌னுக்கு ஒரு ப‌ய‌மும் இல்லை என்று இதைக் காட்டுகிறார். "கிமபி" என்ப‌தை ம‌ட்டும் இங்கே மூன்றாம‌டியால் சேர்த்தார். இப்போது நேர்ந்திருக்கும் ப‌ய‌ம் வாக்குக்கும் நினைப்புக்கும் ச‌க்ய‌ம‌ல்லாதது என்கிறார். எம் த‌லையில் இடி விழுந்தாலென்ன‌? அதனால் எம‌க்குத்தானே அபாய‌ம் வ‌ரும்; எம்முயிரான‌ உம‌க்க‌ல்ல‌வோ அபாய‌ம் இப்போது ப்ர‌ஸ‌க்த‌ம். எம்மை நீர் ர‌க்ஷிப்பீர். எம‌க்கு எம் ர‌க்ஷ‌ண‌விஷ‌ய‌மான‌ ப‌ய‌மில்லை. உம் திருமேனியை ர‌க்ஷிப்பாரார்? உம்மைத் த‌விர‌ வேறு ர‌க்ஷ‌க‌ர் இக்காசினியில் இல்லையே? "சுருதி ந‌ம் காதில் ஓதும் ப‌ய‌ம்" என்கிறார். சுருதி ஓத‌க் கேட்டிருக்கிறோம். இப்போது ம‌ஹ‌த்தான‌ ப‌ய‌த்தை நேரில் அனுப‌விக்கிறோம். உம்மைத் துதிப்ப‌வ‌ன் ப‌ய‌ங்க‌ளைத் தாண்டுவான். கோர‌ ஸ‌ம்ஸார‌ ப‌ய‌த்தைத் தாண்டுவான் என்று வேத‌ம் ஓதுகிற‌து. "த‌ர‌தி ஶோக‌ம் ஆத்ம‌வித்" "அத‌ ஸோऽப‌ய‌ம் க‌தோ ப‌வ‌தி" --तरति शोकमात्मवित्, अथ सोऽभयं गतो भवति | - நானும் உம்மைத் துதித்து இப்பெரும் ப‌ய‌த்தைத் தாண்ட‌ விரும்புகிறேன். அந‌க‌ -- மாச‌று சோதியே! துதிக்கும் நான் தேஹ‌வானாயிருந்தால் என்ன‌? என் துதி குற்ற‌முடைய‌தானாலென்ன‌? உன் அந‌க‌த்வ‌ம் போதாதோ? என்று திருவுள்ள‌ம் (4)











வியாழன், 11 ஆகஸ்ட், 2016

அபீதிஸ்த‌வ‌ம்


அபீதிஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 3

यदध्य मितबुद्धिना बहुलमोहभाज मया
गुणग्रथितकायवाङ्मनसवृत्तिवैचित्र्यत: ||
अतर्कितहिताहितक्रमविशेषमारभ्यते
तदप्युचितमर्चनं परिगृहाण रङ्गेश्वर || 3

யதத் மிதபுத்திநா ஹுள‌மோஹபா மயா
        
குணக்ரதித காயவாங்மநஸ வ்ரு̆த்தி வைசித்ர்யத: ||
அதர்கித ஹிதாஹித க்ரமவிஶேஷம் ஆரப்யதே
        
ததப்யுசிதம் அர்ச்சநம் பரிக்ரு̆ஹாண ரங்கேஶ்வர || 3

ர‌ங்கேஶ்வ‌ர‌ -- ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ரே! , அத்ய‌ -- இன்று, குண‌ -- முக்குண‌ங்க‌ளால், க்ர‌தித‌ --வ‌ரிந்து க‌ட்ட‌ப் ப‌ட்டிருக்கும், காய‌ வாங் ம‌ன‌ஸ‌ -- தேஹ‌ம், வாக்கு, ம‌ன‌சு, வ்ருத்தி -- இவ‌ற்றின் போக்குக‌ளின், வைசித்ர்ய‌த‌: -- வைசித்ர்ய‌த்தால், ப‌ஹுள‌ ரோஹ‌ பாஜா -- எத்த‌னையோ மோஹ‌த்தை அடைந்த‌, மித‌புத்திநா -- சிறிய‌ புத்தியையுடைய‌, ம‌யா -- என்னால், அத‌ர்க்கித‌ ஹிதாஹித‌ க்ர‌ம‌ விசேஷ‌ம் -- எது ந‌ல்ல‌ வ‌ழி எது த‌வ‌றான‌து என்று ஊஹித்துத் தெரிந்து கொள்ளாம‌ல், ய‌த் -- எது (எந்த‌ இந்தத் துதி), ஆர‌ப்ய‌தே -- ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌தோ, தத் அபி -- அதையும், உசித‌ம் -- த‌குதியான‌, அர்ச்ச‌ன‌ம் --பூஜையாக‌, ப‌ரிக்ருஹாண‌ .. ஏற்றுக்கொள்ள‌ வேணும்.
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமியின் த‌மிழாக்க‌ம்

அறிவுதனில் குறையுடையேன்! அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குணமாம் வன்கயிற்றால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச்சொல்லும் மனந்தனையும் உடையவனாய்
புரிகின்ற செயலெல்லாம் பலபலவாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இதுநன்று இதுதீது
என்றறியா அடியேனே இத்துதியைத் தொடங்குகிறேன்!
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழிபாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடிகொண்ட பெருந்தேவே! 3.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி விரிவுரை:

   ச‌ர‌ணாக‌தி பூர்ண‌மாயின் ப‌லிக்குமென்ப‌து திண்ண‌ம். பெருமாள் திருமேனியின் க்ஷேம‌த்திற்காக‌ச் செய்யும் ச‌ர‌ணாக‌தி ரூப‌மான‌ அர்ச்ச‌னை ஸ்துதி குறைவில்லாம‌ல் பூர்ண‌மாயிருக்க‌வேண்டுமே என்று அபார‌மான‌ க‌வ‌லை. எங்கே குறைவு வ‌ந்து ச‌ர‌ணாக‌தி அபூர்ண‌மாகி, கோரிய‌ ப‌ல‌ம் த‌வ‌றிவிடுமோ என்று ப‌ய‌ம். பெருமாளுடைய‌ த‌யாதி க‌ல்யாண‌ குண‌ங்க‌ளைப் பூர்ண‌மாய் நெஞ்சில் த‌ரிக்க‌ வேணும். என் அல்ப‌ விஷ‌ய‌மான‌ ம‌தி எங்கே? பெருமாளின் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளெங்கே? பெருமாளுடைய‌ த‌யை என்னும் குண‌ம் என் புத்தியில் நிர‌ம்பியிருக்க‌ வேண்டும் என்கிறார். அவ‌ர் த‌யை எல்லைய‌ற்ற‌து. என் புத்தி ப‌ரிமித‌மான‌து. அதுதான் சூந்ய‌மாக‌ இருக்கிற‌தோ? அவ்வித‌மிருந்தால் அதில் பெருமாள் த‌யை கொஞ்ச‌மேனும் புகுர‌லாம். புத்தி மித‌ம்; அதில் மோஹ‌த்திற்குக் க‌ண‌க்கில்லை என்கிறார். மிக்க‌ மோஹ‌த்தால் நிர‌ம்பின‌ சிறு புத்தியில் பெருமாள் அள‌வ‌ற்ற‌ பெரும் குண‌ம் புகுந்து நிற்க‌ இட‌மில்லையே. நிர‌ந்த‌ர‌மாக‌ப் பெருமாளைப் ப‌ஜிக்க‌ப் பெற‌வில்லை. மோஹ‌ ப‌ஜ‌நத்திற்குக் குறைவில்லை. அதிக‌ம் மோஹ‌த்தால் மூட‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌? குண‌ம். என்ன‌ குண‌ம்? ந‌ல்ல‌ குண‌மாயின் பெருமாள் குண‌ம் குடியேற‌ விரோத‌மில்லை. அவ‌ர் குண‌த்திற்கும் என் குண‌த்திற்கும் நாமம் ம‌ட்டும்தான் ஒன்று. என் தோஷ‌த்திற்கே என் குண‌ம் என்று பெய‌ர். முக்குண‌ப் பிர‌கிருதி என் குண‌ம். "தோஷ‌க்ருஹீத‌குணாம்" ( दोषगृहीतगुणाम् ) என்று ச்ருதி கீதை தொட‌க்க‌த்தில் சுக‌ர் "அஜை" என்னும் பிர‌கிருதிக்குத் த்ரிகுண‌ம் என்று பெய‌ர் ம‌ட்டுமே; தோஷ‌த்திற்கே குண‌ம் என்று பெய‌ர் க்ர‌ஹிக்க‌ப்ப‌டுகிற‌து என்று வேடிக்கையாய்க் காட்டினார். குண‌த்தால் என் உட‌ல‌ம், வாக்கு, ம‌ன‌ஸ் எல்லாம் விசித்திர‌மாய்க் க‌ட்ட‌ப்ப‌ட்டு, ஒன்றோடொன்று விசித்திர‌மாய்க் காடுபாய்கிற‌து. முன் ச்லோக‌த்தில் ப்ரார்த்தித்த‌ப‌டி பெருமாள் சுப‌விக்ர‌ஹ‌குணாதிக‌ள் புத்தியில் எப்ப‌டிப் புகுந்து நிர‌ம்பும்? இத்த‌னை விக்ந‌ங்க‌ள் உள‌வே. செய்யும் ச‌ர‌ணாக‌தியை ஓர் பாமாலையால் ஸ‌ம‌ர்ப்பிக்க‌ உத்தேச‌ம். பூமாலை போன்ற‌தான‌ பாமாலையாயிருப்ப‌து உசித‌ம். குண‌மென்னும் நாரில் விசித்திர‌மாய்த் தொடுக்க‌ப்ப‌ட்ட‌ புஷ்ப‌ மாலை போன்ற‌ ச‌ப்த‌ குண‌ங்க‌ளாலும் அர்த்த‌ குண‌ங்க‌ளாலும் *வைசித்ர்ய‌ம் என்னும் அல‌ங்கார‌ங்க‌ளாலும் ப‌ல‌ சித்ர‌ங்க‌ளாலும் க்ர‌தித‌மான‌ பாமாலையைக் கொண்டு தேவ‌ரீரை அர்ச்சிப்ப‌து உசித‌ம். "குண‌க்ர‌தித‌" என்ப‌தாலும், "வாங் ம‌நோவ்ருத்தி வைசித்ர்ய‌த‌:" என்ற‌தாலும் அர்ச்ச‌ந‌ம் இப்ப‌டி இருப்ப‌த‌ல்ல‌வோ உசித‌ம் என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம் செய்கிறார். அத‌ற்கு விரோத‌மாக‌ என் ச‌ரீர‌ம், வாக்கு, ம‌ன‌ம் எல்லாம் முக்குண‌ங்க‌ளாலும் விந்தையாகக் க‌ட்ட‌ப்ப‌ட்டு என‌க்கு ஸ்வாதீன‌மேயில்லாம‌ல் இருக்கிற‌தே என்கிறார். தேஹ‌மும் அசுசி, வாக்கும் ம‌ன‌மும் சுத்த‌மல்ல‌, இப்ப‌டி இருந்தும் "எது ஹித‌ம் உசித‌ம், எது அஹித‌ம், அநுசித‌ம்" என்று ஆலோசிக்காம‌லே ப‌ய‌ஸ‌ம்ப்ர‌ம‌த்தினாலே க்ர‌ம‌ விசேஷ‌மெல்லாம் த‌டுமாறி ஏதோ ப்ரார்த்த‌நாஸ்துதி பித‌ற்ற‌ ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌து. அதை உசித‌மான‌ அர்ச்ச‌ன‌மாகக் கொள்ள‌வேணும். "ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுகிற‌து" என்ப‌தால் ப‌ய‌பார‌வ‌ஶ்ய‌த்தால் ப‌லாத்க‌ரிக்க‌ப்ப‌ட்டு அதிஸ‌ம்ப்ர‌ம‌த்துட‌ன் ஆர‌ம்பிக்க‌ப் ப‌டுவ‌தை வ்ய‌ஞ்ஜ‌ந‌ம் செய்கிறார். "ர‌ங்கேஶ்வ‌ர‌" என்ப‌தாலும், "உசித‌ம் அர்ச்ச‌ந‌ம்" என்ப‌தாலும் "அர்ச்ச‌க‌ -- ப‌ராதீந‌ராக‌"க் கோயிலில் எழுந்த‌ருளியிருக்கும் க‌ருணையை அத்துதி விஷ‌ய‌த்திலும் ஆவிஷ்க‌ரிக்க‌ வேண்டும் என்று வ்ய‌ஞ்ஜ‌ன‌ம்.
      இங்கே காவ்ய‌க்ர‌த‌நத்திற்கும் ஒட்டும்ப‌டி, "குண‌, க்ர‌தித‌, காய‌, வாக், வ்ருத்தி, வைசித்ர்ய‌ம், உசித‌" ச‌ப்த‌ங்க‌ளின் பிர‌யோக‌த்தின் அழ‌கை காவ்ய‌ர‌ஸிக‌ர் ர‌ஸிக்க‌வேணும். "ரீதிராத்மா காவ்ய‌ஸ்ய‌" -- காய‌ம் என்ப‌து ரீதி. வ்ருத்தி என்ப‌து "வ்ருத்திபிர் ப‌ஹுவிதாபிராஶ்ரிதா" என்ப‌துபோல‌ காவ்ய‌ வ்ருத்தி.
    "எவ‌ன், எவ‌ன், அவ‌ன், அவ‌ன்" என்று பெரிய‌ பெருமாளின் ஏற்ற‌த்திற்கேற்ற‌ ல‌க்ஷ‌ண‌ங்க‌ளைக் காட்டி, த‌ன் ஸ்தோத்ர‌த்திற்கும், "எது, அது" என்று ப‌ரிஹாஸ‌மாய்த் தாழ்மையைக் காட்ட‌, ல‌க்ஷ‌ண‌ம் அமைக்கிறார். அப்பெருமானுக்கு இத்துதி. "ர‌ங்கேஶ்வ‌ர‌" -- எத்த‌னையோ அரும்பெரும் காவ்ய‌ங்க‌ள் உம் முன்னிலையில் அர‌ங்கேற்ற‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இது ஒரு த்ருஷ்டி ப‌ரிஹார‌ம். (3)






புதன், 10 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:


அபீதிஸ்த‌வ‌ம்
சுலோக‌ம் 2
दयासिसिरिताशया मनसि मे सदा जागृयु:
श्रिया ध्युषितवक्षस: श्रित्मरुद्वृधासैकता: |
जगद्दुरितघस्मरा जलधि डिम्भडम्भस्पृश:
सकृत्प्रणतरक्षण प्रथितसंविद: संविद: ||

யாஸிஸிரிதாஶயா மநஸி மே ஸதாஜாக்ருயு:
ஶ்ரியா த்யுஷிதவக்ஷஸ: ஶ்ரித்மருத்வ்ருதாஸைகதா: |
ஜகத்துரிதகஸ்மரா ஜலதிடிம்பம்பஸ்ப்ருஶ:
ஸக்ருத்ப்ரணதரக்ஷண ப்ரதிதஸம்வித₃: ஸம்வித₃: ||   2

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி:

கருணைதனின் பெருக்கெடுப்பால் குளிர்ந்திருக்கும் உளத்துடனும்
திருமகளே அகலாது திகழ்ந்துறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவிரியின் மணல்திட்டில் வீற்றிருந்து,
பார்வாழும் மக்கள்தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒருமுறையே அடிபணிய உற்றவரைக் காப்பதென
உலகறிய வாக்குதனை உறுதிசெய்யும் அரங்கன்தன்
திருமேனித் தோற்றங்கள் திரளாக எழுந்தெழுந்து
நிறைந்தெனது நெஞ்சினுளே நிலைத்திடட்டும் நித்தியமே! 2.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
த‌யா – க்ருபையால், ஶிஶிரித‌ – குளிர்ந்த‌, ஆஶ‌யா – திருவுள்ள‌த்தையுடைய‌வ‌ர் ம‌ய‌மாயும், ஶ்ரியா – பிராட்டியால் அத்யுஷித‌ – வாஸ‌ம் செய்ய‌ப்ப‌டும், வ‌க்ஷ‌ஸ‌: – திருமார்பு ம‌ய‌மாயும், ஶ்ரித‌ ம்ருத்வ்ருதாஸைக‌தா – காவேரி ம‌ண‌லில் ச‌ய‌னித்திருப்ப‌வ‌ர்ம‌ய‌மாயும், ஜ‌க‌த் – உல‌க‌த்தின், துரித‌ – பாப‌த்தையெல்லாம், க‌ஸ்ம‌ரா: – விழுங்கிவிடுப‌வ‌ர் ம‌ய‌மாயும், ஜ‌ல‌திடிம்ப‌ ட‌ம்ப‌ ஸ்ப்ருஶ‌: – குட்டி ஸ‌முத்ர‌ம் போன்ற‌வ‌ர் ம‌ய‌மாயும், ஸ‌க்ருத் – ஒரு த‌ட‌வை, ப்ர‌ண‌த‌ – ச‌ர‌ண‌ம‌டைந்த‌வ‌ரையும், ர‌க்ஷ‌ண‌ ப்ர‌தித‌ஸ‌ம்வித‌: – ர‌க்ஷிப்ப‌தாக‌ப் பிர‌ஸித்த‌மாக‌ ப்ர‌திக்ஞை செய்த‌வ‌ர் விஷ‌ய‌மாயும், ஸ‌ம்வித‌: – புத்திவ்ருத்திக‌ள், மே ம‌ந‌ஸி – என்னுடைய‌ ம‌ன‌தில், ஸ‌தா – எப்பொழுதும், ஜாக்ருயு: – ஜாக‌ரூக‌மாகக் குடி கொண்டிருக்க‌ வேண்டும்.

இந்த‌ ச‌ர‌ணாக‌தியை மிக‌வும் கெட்டியாய்ச் செய்ய‌வேணும். இந்த‌ ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌ம் உட‌னே த‌ப்பாம‌ல் கிடைக்க‌வேணும். ஸ‌முத்ர‌க்க‌ரையில் புளிநத்தில் (ம‌ண‌லில்) ந‌ட‌ந்த‌ விபீஷ‌ண‌ ச‌ர‌ணாக‌தி அவ‌ஸ‌ர‌த்தை நினைத்து, அத்தொடொக்க‌ப் பெருமாளுடைய‌ ர‌ங்க‌ச‌ய‌நத்திலுள்ள‌ அம்ச‌ங்க‌ளை ம‌ன‌தில் பாவ‌னை செய்கிறார். அங்கே க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல், இங்கே ஸ‌முத்ர‌ ப‌த்நியாகிய‌ காவேரியின் ம‌ண‌லில் ச‌ய‌ந‌ம். ப‌தியாகிய‌ ஸ‌முத்ர‌த்தைக் காட்டிலும் ப‌த்நிக‌ளான‌ ய‌முனை போன்ற‌ புண்ய‌நதிக‌ளுக்கு சுத்தி அதிக‌ம். “தூய‌பெருநீர் ய‌முனைத் துறைவ‌னை" "மருத் வ்ருதா" என்று காவேரிக்கு சுருதியில் திருநாமம். வேத‌ப் பிர‌ஸித்த‌மான‌ புண்ய‌நதி என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம். ப்ர‌ண‌வ‌ப் பெருமாள் வேத‌ப் பிர‌ஸித்த‌ நதியில் ச‌ய‌னித்தார். க‌ட‌ற்க‌ரையில் நீர்க்க‌ட‌லுக்கு எதிரில் ஓர் நீல‌ தேஜோ வெள்ள‌மாய் பெருமாள் ப்ர‌திஶ‌ய‌ன‌ம் செய்ததை நினைக்கிறார். இங்கே அர‌ங்க‌ன் ஓர் குட்டிக் க‌ட‌லாக‌ப் பிர‌காசிக்கிறார். “ப‌ச்சைமா க‌ட‌ல்போல் மேனி" என்று இங்கே ஒருவாறு அனுப‌வ‌ம். अर्णवतर्णकम् (அர்ண‌வ‌த‌ர்ண‌க‌ம்) என்றார் ஸ்ரீ ப‌ட்ட‌ர். ஆச்ரித‌ர்க‌ளின் பாப‌க்க‌ட‌லை அப்ப‌டியே உறிஞ்சி விடுவ‌தாக‌ ஸ‌ங்க‌ல்ப‌ம். உல‌க‌த்தின் பாப‌க்க‌ட‌லுக்கு எதிரியாக‌ இக்குட்டிக் க‌ட‌லின் ச‌ய‌ன‌ம். सकृदेव प्रपन्नाय ….. अभयं सर्वभूतेभ्यो ददामि एतद्व्रतं मम (ஸ‌க்ருதேவ‌ ப்ர‌ப‌ந்நாய‌ ………… அப‌ய‌ம் ஸ‌ர்வ‌பூத‌ப்யோததாமி ஏதத் வ்ர‌த‌ம் மம) என்று ப்ர‌திக்ஞை செய்த‌ அவ‌ஸ‌ர‌த்தையும் காட்டுகிறார். க‌ட‌ற்க‌ரையில் எல்லோரும் பார்க்கும்ப‌டி பிராட்டியின் ஸ‌ந்நிதாந‌ம் இல்லை. பிராட்டி அக்க‌ரையிலும் பெருமாள் இக்க‌ரையிலுமாக‌ இருந்த‌ அவ‌ஸ‌ர‌ம். ஆனால‌ பிரிந்திருந்த‌ பிராட்டியைச் சேர்த்து வைப்ப‌த‌ற்காக‌வே த‌ம்மை அங்கீக‌ரிக்கும்ப‌டி விபீஷ‌ண‌ன் பிரார்த்தித்தான் என்றும் சொல்லலாம். இருவ‌ரையும் சேர்த்துவைத்து இருவ‌ருயிரையும் காப்பாற்றி, தாமும் பிழைக்க‌ அங்கே ஆஶ்ர‌ய‌ண‌ம். “ப்ர‌தீய‌தாம் தாஶ‌ர‌தாய‌ மைதிலீ" என்று த‌ம்ப‌திக‌ளைக் கூட்ட‌வே அவ‌ர் ம‌நோர‌த‌ம். இங்கு இருவ‌ர் திருமேனியையும் காப்பாற்ற‌ ச‌ர‌ணாக‌தி. அங்கும் அது உண்டு. ஸ்ரீ உறையும் திருமார்பை உடைய‌வ‌ர். “பூம‌ன்னும் மாது உறை மார்ப‌ன்". பிராட்டி திருமார்பை ஆஶ்ர‌யித்திருப்ப‌தால்தான் ஹ்ருத‌ய‌ம் த‌யையினால் குளிர்ந்திருக்கிற‌து. பெருமாள் திருவுள்ள‌ம் சீத‌ள‌மான‌துதான். நாம்தான் அத‌ன் பிர‌யோஜ‌னத்தை அடையாம‌ல், அந்த்த் த‌யையைத் த‌கைகிறோம். “ஸ‌ம்வித்" என்னும் புத்திக‌ள் என் ம‌ன‌தில் தூங்காம‌ல் விழித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என்று பிரார்த்த‌னை. பெருமாள் தூங்குவ‌து போலிருந்தாலும் அவ‌ர் விஷ‌ய‌மான‌ என்னுடைய‌ பாவ‌னைக‌ள் தூங்காம‌ல் ஸ‌தா விழித்திருக்க‌ வேண்டும். பெருமாளுக்கு விசேஷ‌ண‌ங்க‌ளாகக் கூற‌ப்ப‌ட்ட‌தெல்லாம், ந‌ம்முடைய‌ பாவ‌னையில் ஆகார‌ங்க‌ளாகக் கூடி, ஸ‌மாநாதிக‌ர‌ண‌மாகின்ற‌ன‌. விஶிஷ்ட‌மான‌ ஸ‌ம்வித்துக‌ளே. நிர்விஶேஷ‌ நிராகார‌ புத்தி ய‌ல்ல‌. இந்த‌ விசேஷ‌ண‌ங்க‌ளையுடைய‌ பெருமாளால் உப‌ர‌க்த‌மான‌ புத்திக‌ள். திருக்காவேரியில் ப‌ள்ளிகொண்ட‌ பெருமாள் விஷ‌ய‌மான‌ பாவ‌னை என‌க்கு எப்போதும் இருக்க‌ வேண்டும் என்று ப்ரார்த்திப்ப‌தால், பாவ‌னைக்கு விஷ‌ய‌மான‌ பெருமாள் திருமேனியும் விசேஷ‌ண‌ங்க‌ளும் நித்ய‌மாய் நிர‌பாய‌மாயிருக்க‌ வேண்டும் என்று முக்கிய‌க் க‌ருத்து ஸூசித‌மாகிற‌து. இந்த‌ ம‌நோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ பெருமாள் க்ருபை செய்ய‌வேண்டும் என்று ஆசையை விள‌க்குகிறார். காய‌த்ரியில் சுப‌மான‌ புத்தி வ்ருத்திக‌ளின் ப்ர‌சோதநத்தின் ப்ரார்த்த‌னை போல் இங்கும் முன் ச்லோக‌த்தில் "அதீம‌ஹே" என்று பேசி, அடுத்தாற்போல் அங்கு போல‌ இங்கே **தீக‌ளாகிய‌ ஸ‌ம்வித்துக்க‌ளின் ஜாக‌ர‌ண‌த்தையும் பிரார்த்திக்கிறார். காய‌த்ரீ ஜ‌ப‌ம் எப்ப‌டி நித்ய‌மோ, அப்ப‌டியே ஸ்ரீர‌ங்க‌ஸ்ரீயின் வ்ருத்தியின் பிரார்த்த‌னையும் நித்ய‌ம். அத‌ற்கு லோப‌ம் வ‌ருவ‌தை ஸ‌ஹிக்க‌ மாட்டோம‌ல்ல‌வா?

(** நூலில் அச்சாகியிருப்ப‌து থীக‌ளாகிய‌ என்று. தீ என்ப‌த‌ற்கான‌ கிர‌ந்த‌ எழுத்து থী இது அச்சுப்பிழையா என்ப‌து விள‌ங்க‌வில்லை. )