வெள்ளி, 2 ஏப்ரல், 2010

பங்குனி தேரும், தீர்த்தவாரியும்!

சேதுக்கரையில் தீர்த்தவாரியில் சில காட்சிகள்

 

DSCN1010வேத பாராயண கோஷ்டி --- தேரன்றும் தீர்த்தவாரியன்றும் வந்திருந்த சென்னை சேலையூர் ஸ்ரீ அஹோபில மட வேத பாடசாலை வித்யார்த்திகள்

 

DSCN1073

 

தீர்த்தவாரி திருமஞ்சனங்களுக்குப் பின் ஸ்ரீஜகன்னாதப் பெருமாள், ஸ்ரீ பட்டாபிராமன், சக்கரத்தாழ்வார்.

 

 

 

 

 

வீடியோ ஒருவேளை திறக்க மறுத்தால் இங்கே பார்க்கலாம்

தேர் வீடியோவில் கொட்டு சத்தம் கேட்டீர்களோ? அது பறைக் கொட்டு என எங்களால் அழைக்கப்படுகின்ற, இன்று நம்மால் ஒதுக்கி வைக்கப் படுகின்ற தாழ்ந்த குடி மக்கள் இசைக்கின்ற இசை. அறியாமையால் நாம்தான் அவர்களைத் தள்ளி வைக்கிறோம். ஆனால் எங்கள் பெருமாளோ அவர்களுக்கு மிக உயர்ந்த கௌரவத்தை அளித்திருக்கிறார் தெரியுமோ? ஆம். இந்தப் பறைக் கொட்டு இல்லையென்றால் அவர் தேர் நகராது. பக்கத்து கிராமத்திலிருந்து இவர்கள் வந்து இசைக்க ஆரம்பித்த பிறகே வடம் பிடிப்போம்.

அப்புறம் இன்னொன்றையும் கவனியுங்கள். தேர் இழுத்த மக்கள் மாலைகளோ, பரிவட்டங்களோ எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் வேண்டுவதெல்லாம், பெற்று மகிழ்ச்சி அடைவதெல்லாம் தேர் நிலைக்கு வந்தவுடன் பெருமாளிடமிருந்து தெளிக்கப் படும் தீர்த்தம் ஒன்றுதான். பெற்றவுடன் அவர்கள் அடையும் ஆனந்தத்தை கவனியுங்கள்.

அவ்வப்போது வாசு வாசு என்று குரல் கேட்கும் போது கட்டம் போட்ட சட்டையுடன் வாலிபர் ஒருவர் ஆடிக் கொண்டிருக்கிறாரே அவர் இந்த தேருக்காக வருடாவருடம் சிங்கப்பூரிலிருந்து வந்து விடுவார். எங்களூர் அர்ச்சகர் பிள்ளைதான். அங்கு பணி.

 

தீர்த்தவாரி முடிந்து சேதுக்கரை அனுமன் ஸந்நிதியில் நடந்த திருமஞ்ச்சனத்தின் நிறைவுப் பகுதி. வந்திருந்த ஸேவார்த்தி எடுத்த வீடியோ இங்கே!

மீண்டும் ஏப்ரல் 21ல் பட்டாபிராமனுக்கு ப்ரும்மோத்ஸவம் தொடங்குகிறது. இதே வாகனங்கள்! இதே வைபவங்கள்தான்! சந்திப்போம்!

10 கருத்துகள்:

  1. அருமையான வீடியோ! தேர் வடம் பிடித்து இழுக்கும் முதல் வரிசை பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், கொட்டு சத்தமாகட்டும், அர்ச்சகர் நீர் தெளிக்கும் போது மக்கள் உற்சாகம் ஆகட்டும்...அத்தனை சந்தோஷம், செம ஜாலி :))
    கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    பதிலளிநீக்கு
  2. சேலையூர் அஹோபில மட, வேத பாடசாலை மாணாக்கர்களுக்குச் சிறப்பு வந்தனங்கள்!
    இப்படி வெறுமனே ஏட்டுப் படிப்புடன் நின்று விடாது, திவ்ய தேசங்களுக்குச் சென்று விழாக் காலங்களில் ஓதுவது என்பது சிறப்புக் கைங்கர்யம்! வாழி வாழி!

    //இன்று நம்மால் ஒதுக்கி வைக்கப் படுகின்ற தாழ்ந்த குடி மக்கள் இசைக்கின்ற இசை. அறியாமையால் நாம்தான் அவர்களைத் தள்ளி வைக்கிறோம். ஆனால் எங்கள் பெருமாளோ அவர்களுக்கு மிக உயர்ந்த கௌரவத்தை அளித்திருக்கிறார்//

    பெருமாள், இராமவதார காலம் தொட்டு, இவர்களைப் போன்ற எளிய பக்தர்களையே அணைத்துக் கொள்கிறார்!

    மாலை, பரிவட்ட மவுசுகளுக்கு அலையாமல்...
    பெருமாள் திருப்பணிக்கு...
    ஊர் பார்க்க பறை கொட்டுவதோடு தம் கைங்கர்ய நிறைவு என்று...
    கைங்கர்யத் திருப்தி கொள்ளும் இவர்களை என்ன-ன்னு சொல்வது! வாழி வாழி!

    வாசு வாசு காட்சி முத்தாய்ப்பு! :)

    ரகுவீரதயாள் சுவாமி,
    புல்லாணிப் பெருவிழாவை அருமையாகத் தொகுத்துத் தந்தமைக்கு அடியார்கள் சார்பாகத் தங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்!
    எல்லாருக்கும் ஒரு இடத்தில் தான் திருவிழா!
    உங்களுக்கு மட்டும்...அங்கும் உற்சவம், இங்கும் உற்சவம்! :)

    அங்கும் வேலை பார்த்துக்கிட்டு, இங்கும் வந்து, நாங்களும் சேவிக்க வேணுமே என்று அயராது உழைத்திட்ட உங்களை வணங்கிக் கொள்கிறோம்!

    அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
    அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே!

    எனக்கு, சொந்த அளவில், எங்க வாழைப்பந்தல் கிராமத்து உற்சவம் - கஜேந்திர வரதன் - ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் விழாவைப் பார்த்தது போல் ஒரு திருப்தி! பகட்டுகள் இல்லாமல் கிராமோற்சவம், புல்லாணிப் பிரம்மோற்சவம்!

    பதிலளிநீக்கு
  3. பெருமாளின் close up போட்டோவும் அதனை தொடர்ந்து வீடியோ-வும் அற்புதம்.
    கோடான கோடி நன்றிகள் ஐயா தங்களுக்கு!

    ராம ராம கோதண்ட ராமா
    ராம ராம பட்டாபிராமா!

    சந்திப்போம் பட்டபிராமனை!

    பதிலளிநீக்கு
  4. வாழைப்பந்தலார் இரவில் உறங்குவதில்லை போலும்! அடியேன் பதிவிட்டது இந்திய நேரம் பகல் 11மணி அளவில். அப்படி என்றால் அங்கு அமெரிக்காவில் நள்ளிரவாயிருந்திருக்க வேண்டுமே! நான் இட்டது வெறும் குறிப்புகள் மட்டுமே. மடையில் காய்கறிகளை வாங்கிக் கொடுத்து விட்டு ஹாய்யாகப் பேப்பர் படிக்கும் கணவனைப் போன்று. அதை தெருவெலாம் மணக்க அருமையாக, சுவையாகத் தளிகைப் பண்ணி பக்குவமாகப் பரிமாறுகின்ற இல்லத்தரசியைப் போல, தங்களுடைய பின்னூட்டங்களால் செழுமைப் படுத்தினீர்கள். அனந்தகோடி நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
  5. கமலக்கண்ணி அம்மன் கோவிலார் இந்தியாவில் இருந்தால், முடியும்போது ஒரு தரம் வந்து விட்டுப் போகலாமே!

    பதிலளிநீக்கு
  6. கண்ணபிரான்,
    மடையைக் கடை எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆசைதான் ஐயா!
    அரங்கன் ஆணையிட்டால் அடியவன் அங்கே!

    பதிலளிநீக்கு
  8. தொடர்ந்து வந்து திருவிழா கொண்டாட்டங்களைக் கண்டேன் ஐயா! மிக்க நன்றி! அடியேன்1

    பதிலளிநீக்கு
  9. Excellent coverage of "THEERTHAVARI UTHSAVAM". I am delighted to see the same and express my thanks for having brought LORD JAGANNATH so near to us. Dasan
    J S Vasan.

    பதிலளிநீக்கு
  10. Swamin,
    this appreciation from you made me feel as if adiyen got an award from Rashtrapathi.

    பதிலளிநீக்கு