சனி, 13 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்


பாசுர‌ம் 5

भवन्तमिह य: स्वधीनियतचेतनाचेतनं
       पनायति नमस्यति स्मरति वक्ति पर्येति वा |
गुणं कमपि वेत्ति वा तव गुणेश गोपायितु:
       कदाचन कुतश्चन क्वचन तस्य न स्यात् भयम् || 
5  

வந்தமிஹ : ஸ்வதீநியதசேதநாசேதநம்
        
பநாயதி நமஸ்யதி ஸ்ம‌ரதி வக்தி பர்யேதி வா |
குணம் கமபி வேத்தி வா தவ குணேஶ கோபாயிது:
        
கதாசந குதஶ்சந க்வசந தஸ்ய ஸ்யாத் யம் ||  5  

குணேஶ -- குண‌ங்க‌ளுக்கு ஈச‌னே (உடைய‌வ‌னே), ஸ்வ‌தீ நிய‌த‌ சேத‌நாசேத‌ந‌ம் --த‌ன்னுடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தாலே நிய‌மிக்க‌ப்ப‌டும் சேத‌நா சேத‌நாத்ம‌க‌மான‌ உல‌க‌த்தை உடைய‌, ப‌வ‌ந்த‌ம் -- தேவ‌ரீரை, ய‌: -- எவ‌ன், ப‌நாய‌தி -- துதிக்கிறானோ, ந‌ம‌ஸ்ய‌தி -- ந‌ம‌ஸ்க‌ரிக்கிறானோ, ஸ்ம‌ர‌தி -- ஸ்ம‌ரிக்கிறானோ, வ‌க்தி -- பேர் சொல்லுகிறானோ, ப‌ர்யேதிவா -- ப்ர‌த‌க்ஷிண‌ம் செய்கிறானோ, கோபாயிது: -- ர‌க்ஷ‌க‌ரான‌, த‌வ‌ -- தேவ‌ரீருடைய‌, க‌மபி -- ஒரு, குண‌ம் -- குண‌த்தையாவ‌து, வேத்தி -- அறிகிறானோ (உபாஸிக்கிறானோ), த‌ஸ்ய‌ -- அவ‌னுக்கு, க‌தாச‌ந‌ -- எக்கால‌த்திலும், குத‌ஶ்ச‌ந‌ -- எங்கேயிருந்தும் (எக்கார‌ண‌த்தையிட்டும்), க்வ‌ச‌ந‌ -- எவ்விட‌த்திலும், ப‌ய‌ம் -- ப‌ய‌மென்ப‌து, ந‌ ஸ்யாத் -- உண்டாக‌ மாட்டாது.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

அருங்குணங்கள் நிறைந்ததிரு அரங்கம்வாழ் பெருமானே !
அறிவுடைய உயிரெல்லாம் அறிவற்ற பொருள்யாவும்
பெருமதியால் ஆள்கின்ற பெருமைதனை நீயுடையாய்!
பருவுலகில் எவனேலும் புகழ்ந்துன்னைத் துதித்தாலும்
சிறுவணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினைவலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒருகுணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன்தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம்தானே! 5.  

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         உம்மைத் துதி செய்ப‌வ‌னுக்கு எல்லா ப‌ய‌மும் போய்விடும். நீர் நிர‌பாய‌ராக‌ எழுந்த‌ருளியிருக்க‌ உம்மைத் துதி செய்ய‌க்கூட‌ வேண்டிய‌ தில்லை. ந‌ம‌ஸ்கார‌ம் செய்தால் போதும். ஸ்ம‌ரித்தாலும் திருநாம‌த்தை உச்ச‌ரித்தாலும் ஒரு ப்ர‌த‌க்ஷிண‌த்தைச் செய்தாலும் கூட‌ப் போதும். உம்முடைய‌ திருமேனி குஶ‌ல‌மாய் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும் என்ற‌ ஆசையையும் "ப‌வ‌ந்"நாக‌ இருக்கும்ப‌டியான‌ உம்மை என்று பொருள் கொள்ளுவ‌தையும் உத்தேசிக்கிறார். நீர் "ப‌வ‌ந்"நாக‌ (இருப்ப‌வ‌ராக‌) இருக்க‌ வேண்டும். ராம‌கிருஷ்ணாதி விப‌வ‌ங்க‌ள் போலே பூதத‌சையாகாம‌ல் நித்ய‌ -- ப‌வ‌ந்நாய் எழுந்த‌ருளியிருக்கும் பாக்கிய‌த்தை உல‌க‌ம் பெற‌வேணும். இஹ‌ப‌வ‌ந்த‌ம் -- இங்கேயே இருக்கிற‌ உம்மை. வைகுண்ட‌த்திலிருக்கிறோமே போதாதோ என்ன‌வொண்ணாது., இப்பூலோக‌ வைகுண்ட‌த்தில் இருக்க‌ வேண்டும். "வீற்றிருந்து ஏழுல‌கும் த‌னிக்கோல் செல்ல‌" என்ற‌ப‌டி இங்கே இருந்துகொண்டே சேத‌னாசேத‌னாத்ம‌க‌மான‌ உல‌க‌ங்க‌ளை எல்லாம் உம்முடைய‌ ஸ‌ங்க‌ல்ப‌ மாத்ர‌த்தால் நிய‌மிப்ப‌வ‌ர‌ல்ல‌வோ? இந்த‌ சுபாஶ்ர‌ய‌த் திருமேனியோடு கூடிய‌ உம்மை, "விப‌ந்ய‌வ‌:" என்று ப‌ர‌மப‌த‌ப் பெருமாளைத் துதிப்ப‌து போல‌ எவ‌ன் ப‌நாய‌தி துதிக்கிறானோ? பாட‌த் தெரியாதாயினும், துதிபாடும‌த்த‌னை சிர‌மப்ப‌ட‌ ஸௌக‌ர்ய‌மில்லையாயினும், (ந‌ம‌ஸ்யதி) ந‌ம‌ஸ்கார‌ம் செய்தாலும் போதுமே. ஸ்ம‌ர‌தி -- தூர‌த்திலிருந்து ஸ்ம‌ரித்தாலும் போதும், வ‌க்தி -- ஸ்ம‌ரிக்கும் புத்தி சிர‌மம் கூட‌ வேண்டாம். "ர‌ங்க‌ம்" என்று வாக்கினால் உச்ச‌ரித்தாலும் போதும். ப‌ர்யேதி வா -- கோவிலையோ, திருவீதிக‌ளையோ சுற்றி வ‌ந்தால் போதுமே. அப்ப‌டிச் சுற்றி வ‌ருவ‌து स तत्र पर्येति जक्षत्क्रीडन् रममाण:"  (ஸ‌ தத்ர‌ ப‌ர்யேதி ஜ‌க்ஷ‌த் க்ரீட‌ந் ர‌மமாண‌:) என்ப‌து போல் ஆநந்தாநுப‌வ‌ மாயிருக்குமே.
         குண‌ங்க‌ளோடு கூடிய‌ உம்மை இவ்வ‌ள‌வு செய்ய‌வேண்டு மென்ப‌தும் இல்லை. உம்முடைய‌ ஒரு குண‌த்தை அறிந்தாலும் (உபாஸித்தாலும்) போதும். "க‌ம் அபி" என்ப‌தால் "வாய் ம‌ன‌திற்கு எட்டாத‌" என்று கொண்டு, "ஆநந்த‌: குண‌த்தை வாங்குவ‌து உசித‌ம். அந்த‌ குண‌த்தை உபாஸிப்ப‌வ‌ரைப் ப‌ற்றி ஸாக்ஷாத்தாக‌ आनन्दं ब्रह्मणो विद्वान् न पिभेयति कुतश्चन", न पिभेति कदाचन"  ("ஆநந்த‌ம் ப்ர‌ஹ்ம‌ணோ வித்வான் ந‌ பிபேதி குத‌ஶ்ச‌ந‌", "ந பிபேதி க‌தாச‌ந‌") என்று சுருதி பேசிற்று. "க‌தாச‌ந‌" "குத‌ஶ்ச‌ந‌" என்ப‌தோடு "க்வ‌ச‌ந‌" என்று சேர்த்து இங்கே ப‌ல‌த்தைப் ப‌டிக்கிறார்.  (5)     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக