ச்லோகம் 4
मरुत्तरणिपावकत्रिदशनाथकालादय:
स्वकृत्यमधिकुर्वते त्वदपराधतो बिभ्यत: |
महत् किमपि वज्रमुध्यतमिवेति यत् श्रूयते
ततत्यनघ तद्भयं य इह तावक: स्तावक: || 4.
ஓங்கியதோர் வச்சிரம்போல் உயர்ந்தவுன்றன் தண்டனைக்கு
உறுமென்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வன்காலன் முதலாய
தேவரெலாம் தம்பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்ப்
பாங்குடனே மறைமுடிகள் பகர்கின்ற அச்சமதை,
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கிலாத அரங்கனுனைத் துதிசெய்து வழிபட்டால்
தாண்டியராய் நற்கதியைத் தாமடைவர் உறுதியன்றோ? 4.
அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
मरुत्तरणिपावकत्रिदशनाथकालादय:
स्वकृत्यमधिकुर्वते त्वदपराधतो बिभ्यत: |
महत् किमपि वज्रमुध्यतमिवेति यत् श्रूयते
ततत्यनघ तद्भयं य इह तावक: स्तावक: || 4.
மருத் - தரணி - பாவக -த்ரித₃ஶநாத₂ - காலாத₃ய:
ஸ்வக்ரு̆த்யமதி₄குர்வதே த்வத₃பராத₄தோ பி₃ப்₄யத: |
மஹத்கிமபி வஜ்ரம் உத்₄யதமிவேதி யத் ஶ்ரூயதே
ததத்யநக₄ தத்₃ப₄யம் ய இஹ தாவக: ஸ்தாவக: || 4.
ஸ்வக்ரு̆த்யமதி₄குர்வதே த்வத₃பராத₄தோ பி₃ப்₄யத: |
மஹத்கிமபி வஜ்ரம் உத்₄யதமிவேதி யத் ஶ்ரூயதே
ததத்யநக₄ தத்₃ப₄யம் ய இஹ தாவக: ஸ்தாவக: || 4.
அநக -- மாசற்ற பிரபுவே!, மருத், தரணி, பாவக, த்ரிதஶநாத, காலாதய: --- வாயு, சூர்யன், அக்னி, இந்திரன், யமன் முதலியவர்கள், த்வரபராதத: -- உமக்கு அபராதிகள் ஆகிவிடுவோமோ என்று, பிப்யத -- பயந்து, ஸ்வக்ருத்யம் -- தங்கள் வ்யாபாரத்தை, அதிகுர்வதே -- நடத்துகிறார்கள், உத்யதம் -- ஓங்கின, மஹத் -- பெரிய, கிமபி வஜ்ரமிவ -- வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய வஜ்ராயுதம் போன்ற, பயம் இதி -- பயம் என்று, யத்ஶ்ரூயதே -- எது சுருதியில் கேட்கப் படுகிறதோ, தத் பயம் -- அந்த பயத்தை, ய: - எவன், இஹ -- இங்கே, தாவக: -- உன்னைத் துதிப்பவனோ, தாதி -- (அவன்) தாண்டுகிறான்.
அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமியின் தமிழாக்கம் ஓங்கியதோர் வச்சிரம்போல் உயர்ந்தவுன்றன் தண்டனைக்கு
உறுமென்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வன்காலன் முதலாய
தேவரெலாம் தம்பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்ப்
பாங்குடனே மறைமுடிகள் பகர்கின்ற அச்சமதை,
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கிலாத அரங்கனுனைத் துதிசெய்து வழிபட்டால்
தாண்டியராய் நற்கதியைத் தாமடைவர் உறுதியன்றோ? 4.
அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
பயம், பயம் என்றும், மஹத்தான பயம் என்றும், வஜ்ரம் என்றும், இடி மேல் விழுவதாக பயமுறுத்துவது போலவும், மிக்க பயத்தை ஆங்காங்கு பேசிக்கொண்டு வருகிறார். "என் விக்ரஹத்திற்கு வரும் அபாயத்தை விலக்கிக் கொள்ள வேறு யாரையாவது ப்ரார்த்திக்கலாகாதா?" "ஸாத்யமில்லை. நானும் மற்றொருவரை யாசிக்க மாட்டேன். உம்மைத்தவிர வேறு பயநிவர்த்தகருமில்லை. உலகமே உம்மிடமிருந்து பயந்து நடக்கிறது. பயத்தைக் கொடுக்கக்கூடிய வாயு முதலிய தேவர்களும் ம்ருத்யு வென்னும் தேவனும் உமக்கு நடுங்கி நடக்கிறார்கள்." தைத்திரீய சுருதியில் ஆநந்தமயப் பொருளின் ஆநந்தத்தைப் பற்றி ஆநந்தமீமாம்ஸை செய்யப் போகும் அவஸரத்தில், அதற்கு அடுத்த முன்வாக்யம் "இவரிடமிருந்து பயத்தால் வாயு வீசுகிறான். (உலகத்தைப் பரிசுத்தமாக்குகிறான்.) இவரிடமிருந்து பயத்தால் சூரியன் உதிக்கிறான். இவரிடமிருந்து பயத்தால் அக்நியும் இந்திரனும் ம்ருத்யுவும் (நால்வரோடு) ஐந்தாவதாக ஓடுகிறார்கள் " என்றது.
பெருமாள் ரங்கத்தில் "ரதிம்கத:" "ஆநந்தபூர்ணர்" என்பதால் ரங்கத்திற்கு "ரங்கம்" என்று பெயர். ब्रह्मण कोशोऽसि (ப்ரஹ்மண கோஶோஸி) என்று ப்ரணவம் ப்ரஹ்மத்திற்குக் கோசம் (பெட்டி) என்றது சுருதி. ப்ரணவ - விமாந - கோசத்தில் காணப்படும் ப்ரஹ்மம் இப்பெருமாள். பயவிஷயமான தைத்திரீய சுருதியை இப்பெருமாள் விஷயமாகக் கொள்கிறார். கடசுருதியில் "எந்த ஜகத்ப்ராணனிடமிருந்து இவ்வுலகமெல்லாம் ஓங்கப்பட்ட பயங்கரமான வஜ்ரத்தினிடமிருந்து பயப்படுவதுபோல் நடுங்கி நடக்கிறதோ, அந்த இப்பிராணனை அறிந்தவர் அமிருதராவர். இவர் பயத்தால் அக்நி தன் வ்யாபாரமான தபநத்தைச் செய்கிறான். பயத்தால் சூரியன் ஜ்வலிக்கிறான். பயத்தால் இந்திரனும், வாயுவும், நால்வரோடு ஐந்தாமவனாக ம்ருத்யுவும் ஓடித் திரிகிறார்கள்." என்று உள்ளது. இந்த சுலோகத்தில் முன் பாதியில் தைத்திரீய சுருதியையும், பின்பாதியில் கடசுருதியின் பின்வாக்யத்தையும், முன்பாதியில் கடசுருதியின் முன்வாக்யத்தையும் ஸ்வல்ப வேறுபாட்டோடு அமைக்கிறார். சுருதியில் பயம் பயம் என்று திருப்பித் திருப்பிப் பேசுவது போல, இத்துதியிலும் இம்மஹத்தான பயாவஸரத்தில் பேசுகிறார். "கம்பநாத்" என்னும் சூத்திரத்தில் "அங்குஷ்டமாத்ரமாக ஹ்ருதய குஹையில் இருக்கும் பெருமாளுக்கு உலக மெல்லாம் நடுங்கி நடக்கிறது" என்று அழகாக ஸூசிப்பித்தார். அப்படி உலகம் நடுங்கி நடப்பது ப்ரஹ்மத்திற்கு நிச்சயமான அடையாளம் (லிங்கம்) என்றார். "எனக்கல்லவோ அது அடையாளம்" என்று ப்ரஹ்லாதாழ்வானை ஹிரண்யன் வெருட்டினான். "எவன் கோபிக்கும்போது மூன்று லோகங்களும் அவற்றின் ஈச்வரர்களும் நடுங்குகிறார்களோ (கம்பந்தே) அந்த என்னுடைய ஆஜ்ஞையை எந்த பலத்தைக்கொண்டு நீ மீறினாய்?" என்று கோபத்தோடு கேட்டான். அம்மதயானைக்கு நீர் ஸிம்ஹமானீர்." சுருதியின் பேச்சுத்தான் ஸத்யம். அஸுரன் பேச்சு ஸத்யமாகுமோ? சுருதி ஸூத்ரங்களின் பேச்சை ந்ருஸிம்ஹப் பெருமாள் ஸத்யமாக்கினார். எமக்கு வந்திடும் பயத்தை நீர்தானே நிவர்த்திக்க வேணும்!
காற்றைப்பற்றி சுருதி எடுத்த "வாத:", "வாயு" என்ற சப்தங்களை எடுக்காமல் "மருத்" என்று முதலில் வைத்ததில் ரஸமுண்டு. "மருத்" என்பது தேவர்களைப் பொதுவில் சொல்லும். "தேவர்" என்று பொதுப் பொருளையும் கொள்ள வேணும். தேவர்களான இவர்களும், நீர் யுத்தத்தில் ஜாதரோஷரான போது நடுங்குவாரே; விரோதிகளான அஸுரர்கள் நடுங்க வேண்டாவோ ? (ராமாயண ஸங்க்ஷேபச் சுலோகத்தை நினைக்க வேண்டும்)
ஸூர்யனை "தரணி" என்பார். ஸம்ஸார பயத்தைத் தாண்ட அவருக்கு வேறு தரணி ( = ஓடம்) வேண்டும். தன் பயத்திற்குத் தான் தரணியாகார். நீர்தான் எல்லோருக்கும் பயதரணத்திற்கு (பயத்தைத் தாண்ட) தரணி. உம்மைத் துதிப்பவன் பயத்தைத் தரணம் செய்வான் என்று இங்கே கடைசி அடியில் பேசுகிறார்.
"பாவகன்" என்றால் பரிசுத்தி செய்பவன். "பாவநம்:" பரிசுத்தி செய்வது. இவனையும் பெருமாள் பாவநம் செய்து அபஹதபாப்மாவாக்க வேணும். இந்த ரஸங்களை வ்யஞ்ஜிப்பிக்கச் சுருதி பதங்களை மாற்றினது. "இந்திரன்" என்று சுருதி பதம். எல்லோருக்கும் மேற்பட்ட ஈச்வரனைச் சொல்லும் சப்த சக்தியைக் குறைத்து ஒடித்து அவனுக்கு அப்பெயர். பெருமாளுக்குத்தான் அப்பெயர் தகும். அதுபோலவே, இங்கே அவன் விஷயத்தில் "த்ரிதஶநாதன்" என்று பேசுகிறார். இதுவும் சப்த சக்தியைக் குறைத்துப் பேச்சு. "காலன்" என்பதால் "காலனுக்கும் காலனாகிய காலகாலன் நீர்" என்பது வ்யஞ்ஜநம். தாங்கள் செய்யவேண்டிய தங்கள் அதிகாரக்ருத்யத்தைச் செய்கிறார்கள். எங்கே உம் ஆஜ்ஞையை மீறும் அபராதம் வருமோ என்று நடுங்கிச் செய்கிறார்கள்.
இதில் மிக்க ரஸமுண்டு. அத்வைதாசிரியராகிய ஸுரேச்வரர் இந்த ரஸத்தை தைத்திரீயோபநிஷத்தில் ஸூசிப்பித்தார். ஸூரேச்வரருடைய நைஷ்கர்ம்யஸித்தியை ஸ்வாமி தத்வடீகையில் உதாஹரித்தார். ஆநந்தமயனுடைய எல்லையற்ற ஆநந்தத்தைப் பேசுவதற்குமுன் க்ஷணத்தில் வாயு முதலிய தேவர்கள் பயந்து நடுங்கி ஸ்வக்ருத்யத்தைச் செய்கிறார்கள் என்று சொல்லி ஆநந்தமயனுடைய ஆநந்தத்திற்கு எல்லையில்லை என்று சொல்லி முடிக்கையில், இந்த ப்ரஹ்மத்தின் எல்லையற்ற ஆநந்தத் தன்மையை அறிந்தவர் ஒன்றுக்கும் பயப்படார்கள் என்று முடித்தது. இப்படி ஆநந்தமயமானது ப்ரஹ்மம் என்று அறிந்தவர் பயப்படாமல் ஸந்தோஷமாய், ஆநந்தமாய், ஸ்வயம்ப்ரயோஜநமாய், தம் கைங்கர்யங்களைச் செய்யலாமே என்று சுருதியின் உட்கருத்து. இதை ஸுரேச்வரர் ஸூசிப்பித்தார். ஸ்வாமிக்கும் இந்த ரஸம் திருவுள்ளம். "ஸ்வக்ருத்யத்தை அதிகரிப்பதை பயப்பட்டுக்கொண்டே செய்கிறார்கள். ஆநந்தப்பட்டுக்கொண்டே செய்யலாமே! பயநிவர்த்தமும் ஆநந்தமயமுமான ப்ரஹ்மத்தினிடமிருந்து ஏன் பயப்பட வேண்டும்?" என்று பா(भा)வம். அடுத்த சுலோகத்திலும் உம்முடைய ஆநந்தத் தன்மை என்னும் ஓர் வர்ணிக்கமுடியாத குணத்தை அறிந்தவனுக்கு ஒரு பயமும் இல்லை என்று இதைக் காட்டுகிறார். "கிமபி" என்பதை மட்டும் இங்கே மூன்றாமடியால் சேர்த்தார். இப்போது நேர்ந்திருக்கும் பயம் வாக்குக்கும் நினைப்புக்கும் சக்யமல்லாதது என்கிறார். எம் தலையில் இடி விழுந்தாலென்ன? அதனால் எமக்குத்தானே அபாயம் வரும்; எம்முயிரான உமக்கல்லவோ அபாயம் இப்போது ப்ரஸக்தம். எம்மை நீர் ரக்ஷிப்பீர். எமக்கு எம் ரக்ஷணவிஷயமான பயமில்லை. உம் திருமேனியை ரக்ஷிப்பாரார்? உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இக்காசினியில் இல்லையே? "சுருதி நம் காதில் ஓதும் பயம்" என்கிறார். சுருதி ஓதக் கேட்டிருக்கிறோம். இப்போது மஹத்தான பயத்தை நேரில் அனுபவிக்கிறோம். உம்மைத் துதிப்பவன் பயங்களைத் தாண்டுவான். கோர ஸம்ஸார பயத்தைத் தாண்டுவான் என்று வேதம் ஓதுகிறது. "தரதி ஶோகம் ஆத்மவித்" "அத ஸோऽபயம் கதோ பவதி" --तरति शोकमात्मवित्, अथ सोऽभयं गतो भवति | - நானும் உம்மைத் துதித்து இப்பெரும் பயத்தைத் தாண்ட விரும்புகிறேன். அநக -- மாசறு சோதியே! துதிக்கும் நான் தேஹவானாயிருந்தால் என்ன? என் துதி குற்றமுடையதானாலென்ன? உன் அநகத்வம் போதாதோ? என்று திருவுள்ளம் (4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக