அபீதிஸ்தவம்
சுலோகம் 3
यदध्य मितबुद्धिना बहुलमोहभाज मया
गुणग्रथितकायवाङ्मनसवृत्तिवैचित्र्यत: ||
अतर्कितहिताहितक्रमविशेषमारभ्यते
तदप्युचितमर्चनं परिगृहाण रङ्गेश्वर || 3
யத₃த்₄ய மிதபு₃த்₃தி₄நா ப₃ஹுளமோஹபா₄ஜ மயா
கு₃ணக்₃ரதி₂த காயவாங்மநஸ வ்ரு̆த்தி வைசித்ர்யத: ||
அதர்கித ஹிதாஹித க்ரமவிஶேஷம் ஆரப்₄யதே
தத₃ப்யுசிதம் அர்ச்சநம் பரிக்₃ரு̆ஹாண ரங்கே₃ஶ்வர || 3
கு₃ணக்₃ரதி₂த காயவாங்மநஸ வ்ரு̆த்தி வைசித்ர்யத: ||
அதர்கித ஹிதாஹித க்ரமவிஶேஷம் ஆரப்₄யதே
தத₃ப்யுசிதம் அர்ச்சநம் பரிக்₃ரு̆ஹாண ரங்கே₃ஶ்வர || 3
ரங்கேஶ்வர -- ஸ்ரீரங்கராஜரே! , அத்ய -- இன்று, குண -- முக்குணங்களால், க்ரதித --வரிந்து கட்டப் பட்டிருக்கும், காய வாங் மனஸ -- தேஹம், வாக்கு, மனசு, வ்ருத்தி -- இவற்றின் போக்குகளின், வைசித்ர்யத: -- வைசித்ர்யத்தால், பஹுள ரோஹ பாஜா -- எத்தனையோ மோஹத்தை அடைந்த, மிதபுத்திநா -- சிறிய புத்தியையுடைய, மயா -- என்னால், அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷம் -- எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்துத் தெரிந்து கொள்ளாமல், யத் -- எது (எந்த இந்தத் துதி), ஆரப்யதே -- ஆரம்பிக்கப் படுகிறதோ, தத் அபி -- அதையும், உசிதம் -- தகுதியான, அர்ச்சனம் --பூஜையாக, பரிக்ருஹாண .. ஏற்றுக்கொள்ள வேணும்.
அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமியின் தமிழாக்கம்அறிவுதனில் குறையுடையேன்! அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குணமாம் வன்கயிற்றால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச்சொல்லும் மனந்தனையும் உடையவனாய்
புரிகின்ற செயலெல்லாம் பலபலவாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இதுநன்று இதுதீது
என்றறியா அடியேனே இத்துதியைத் தொடங்குகிறேன்!
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழிபாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடிகொண்ட பெருந்தேவே! 3.
அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி விரிவுரை:
சரணாகதி பூர்ணமாயின் பலிக்குமென்பது திண்ணம். பெருமாள் திருமேனியின் க்ஷேமத்திற்காகச் செய்யும் சரணாகதி ரூபமான அர்ச்சனை ஸ்துதி குறைவில்லாமல் பூர்ணமாயிருக்கவேண்டுமே என்று அபாரமான கவலை. எங்கே குறைவு வந்து சரணாகதி அபூர்ணமாகி, கோரிய பலம் தவறிவிடுமோ என்று பயம். பெருமாளுடைய தயாதி கல்யாண குணங்களைப் பூர்ணமாய் நெஞ்சில் தரிக்க வேணும். என் அல்ப விஷயமான மதி எங்கே? பெருமாளின் எண்ணிறந்த கல்யாண குணங்களெங்கே? பெருமாளுடைய தயை என்னும் குணம் என் புத்தியில் நிரம்பியிருக்க வேண்டும் என்கிறார். அவர் தயை எல்லையற்றது. என் புத்தி பரிமிதமானது. அதுதான் சூந்யமாக இருக்கிறதோ? அவ்விதமிருந்தால் அதில் பெருமாள் தயை கொஞ்சமேனும் புகுரலாம். புத்தி மிதம்; அதில் மோஹத்திற்குக் கணக்கில்லை என்கிறார். மிக்க மோஹத்தால் நிரம்பின சிறு புத்தியில் பெருமாள் அளவற்ற பெரும் குணம் புகுந்து நிற்க இடமில்லையே. நிரந்தரமாகப் பெருமாளைப் பஜிக்கப் பெறவில்லை. மோஹ பஜநத்திற்குக் குறைவில்லை. அதிகம் மோஹத்தால் மூடப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன? குணம். என்ன குணம்? நல்ல குணமாயின் பெருமாள் குணம் குடியேற விரோதமில்லை. அவர் குணத்திற்கும் என் குணத்திற்கும் நாமம் மட்டும்தான் ஒன்று. என் தோஷத்திற்கே என் குணம் என்று பெயர். முக்குணப் பிரகிருதி என் குணம். "தோஷக்ருஹீதகுணாம்" ( दोषगृहीतगुणाम् ) என்று ச்ருதி கீதை தொடக்கத்தில் சுகர் "அஜை" என்னும் பிரகிருதிக்குத் த்ரிகுணம் என்று பெயர் மட்டுமே; தோஷத்திற்கே குணம் என்று பெயர் க்ரஹிக்கப்படுகிறது என்று வேடிக்கையாய்க் காட்டினார். குணத்தால் என் உடலம், வாக்கு, மனஸ் எல்லாம் விசித்திரமாய்க் கட்டப்பட்டு, ஒன்றோடொன்று விசித்திரமாய்க் காடுபாய்கிறது. முன் ச்லோகத்தில் ப்ரார்த்தித்தபடி பெருமாள் சுபவிக்ரஹகுணாதிகள் புத்தியில் எப்படிப் புகுந்து நிரம்பும்? இத்தனை விக்நங்கள் உளவே. செய்யும் சரணாகதியை ஓர் பாமாலையால் ஸமர்ப்பிக்க உத்தேசம். பூமாலை போன்றதான பாமாலையாயிருப்பது உசிதம். குணமென்னும் நாரில் விசித்திரமாய்த் தொடுக்கப்பட்ட புஷ்ப மாலை போன்ற சப்த குணங்களாலும் அர்த்த குணங்களாலும் *வைசித்ர்யம் என்னும் அலங்காரங்களாலும் பல சித்ரங்களாலும் க்ரதிதமான பாமாலையைக் கொண்டு தேவரீரை அர்ச்சிப்பது உசிதம். "குணக்ரதித" என்பதாலும், "வாங் மநோவ்ருத்தி வைசித்ர்யத:" என்றதாலும் அர்ச்சநம் இப்படி இருப்பதல்லவோ உசிதம் என்று வ்யஞ்ஜநம் செய்கிறார். அதற்கு விரோதமாக என் சரீரம், வாக்கு, மனம் எல்லாம் முக்குணங்களாலும் விந்தையாகக் கட்டப்பட்டு எனக்கு ஸ்வாதீனமேயில்லாமல் இருக்கிறதே என்கிறார். தேஹமும் அசுசி, வாக்கும் மனமும் சுத்தமல்ல, இப்படி இருந்தும் "எது ஹிதம் உசிதம், எது அஹிதம், அநுசிதம்" என்று ஆலோசிக்காமலே பயஸம்ப்ரமத்தினாலே க்ரம விசேஷமெல்லாம் தடுமாறி ஏதோ ப்ரார்த்தநாஸ்துதி பிதற்ற ஆரம்பிக்கப் படுகிறது. அதை உசிதமான அர்ச்சனமாகக் கொள்ளவேணும். "ஆரம்பிக்கப் படுகிறது" என்பதால் பயபாரவஶ்யத்தால் பலாத்கரிக்கப்பட்டு அதிஸம்ப்ரமத்துடன் ஆரம்பிக்கப் படுவதை வ்யஞ்ஜநம் செய்கிறார். "ரங்கேஶ்வர" என்பதாலும், "உசிதம் அர்ச்சநம்" என்பதாலும் "அர்ச்சக -- பராதீநராக"க் கோயிலில் எழுந்தருளியிருக்கும் கருணையை அத்துதி விஷயத்திலும் ஆவிஷ்கரிக்க வேண்டும் என்று வ்யஞ்ஜனம்.
இங்கே காவ்யக்ரதநத்திற்கும் ஒட்டும்படி, "குண, க்ரதித, காய, வாக், வ்ருத்தி, வைசித்ர்யம், உசித" சப்தங்களின் பிரயோகத்தின் அழகை காவ்யரஸிகர் ரஸிக்கவேணும். "ரீதிராத்மா காவ்யஸ்ய" -- காயம் என்பது ரீதி. வ்ருத்தி என்பது "வ்ருத்திபிர் பஹுவிதாபிராஶ்ரிதா" என்பதுபோல காவ்ய வ்ருத்தி.
"எவன், எவன், அவன், அவன்" என்று பெரிய பெருமாளின் ஏற்றத்திற்கேற்ற லக்ஷணங்களைக் காட்டி, தன் ஸ்தோத்ரத்திற்கும், "எது, அது" என்று பரிஹாஸமாய்த் தாழ்மையைக் காட்ட, லக்ஷணம் அமைக்கிறார். அப்பெருமானுக்கு இத்துதி. "ரங்கேஶ்வர" -- எத்தனையோ அரும்பெரும் காவ்யங்கள் உம் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. இது ஒரு த்ருஷ்டி பரிஹாரம். (3)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக