புதன், 10 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:


அபீதிஸ்த‌வ‌ம்
சுலோக‌ம் 2
दयासिसिरिताशया मनसि मे सदा जागृयु:
श्रिया ध्युषितवक्षस: श्रित्मरुद्वृधासैकता: |
जगद्दुरितघस्मरा जलधि डिम्भडम्भस्पृश:
सकृत्प्रणतरक्षण प्रथितसंविद: संविद: ||

யாஸிஸிரிதாஶயா மநஸி மே ஸதாஜாக்ருயு:
ஶ்ரியா த்யுஷிதவக்ஷஸ: ஶ்ரித்மருத்வ்ருதாஸைகதா: |
ஜகத்துரிதகஸ்மரா ஜலதிடிம்பம்பஸ்ப்ருஶ:
ஸக்ருத்ப்ரணதரக்ஷண ப்ரதிதஸம்வித₃: ஸம்வித₃: ||   2

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி:

கருணைதனின் பெருக்கெடுப்பால் குளிர்ந்திருக்கும் உளத்துடனும்
திருமகளே அகலாது திகழ்ந்துறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவிரியின் மணல்திட்டில் வீற்றிருந்து,
பார்வாழும் மக்கள்தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒருமுறையே அடிபணிய உற்றவரைக் காப்பதென
உலகறிய வாக்குதனை உறுதிசெய்யும் அரங்கன்தன்
திருமேனித் தோற்றங்கள் திரளாக எழுந்தெழுந்து
நிறைந்தெனது நெஞ்சினுளே நிலைத்திடட்டும் நித்தியமே! 2.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
த‌யா – க்ருபையால், ஶிஶிரித‌ – குளிர்ந்த‌, ஆஶ‌யா – திருவுள்ள‌த்தையுடைய‌வ‌ர் ம‌ய‌மாயும், ஶ்ரியா – பிராட்டியால் அத்யுஷித‌ – வாஸ‌ம் செய்ய‌ப்ப‌டும், வ‌க்ஷ‌ஸ‌: – திருமார்பு ம‌ய‌மாயும், ஶ்ரித‌ ம்ருத்வ்ருதாஸைக‌தா – காவேரி ம‌ண‌லில் ச‌ய‌னித்திருப்ப‌வ‌ர்ம‌ய‌மாயும், ஜ‌க‌த் – உல‌க‌த்தின், துரித‌ – பாப‌த்தையெல்லாம், க‌ஸ்ம‌ரா: – விழுங்கிவிடுப‌வ‌ர் ம‌ய‌மாயும், ஜ‌ல‌திடிம்ப‌ ட‌ம்ப‌ ஸ்ப்ருஶ‌: – குட்டி ஸ‌முத்ர‌ம் போன்ற‌வ‌ர் ம‌ய‌மாயும், ஸ‌க்ருத் – ஒரு த‌ட‌வை, ப்ர‌ண‌த‌ – ச‌ர‌ண‌ம‌டைந்த‌வ‌ரையும், ர‌க்ஷ‌ண‌ ப்ர‌தித‌ஸ‌ம்வித‌: – ர‌க்ஷிப்ப‌தாக‌ப் பிர‌ஸித்த‌மாக‌ ப்ர‌திக்ஞை செய்த‌வ‌ர் விஷ‌ய‌மாயும், ஸ‌ம்வித‌: – புத்திவ்ருத்திக‌ள், மே ம‌ந‌ஸி – என்னுடைய‌ ம‌ன‌தில், ஸ‌தா – எப்பொழுதும், ஜாக்ருயு: – ஜாக‌ரூக‌மாகக் குடி கொண்டிருக்க‌ வேண்டும்.

இந்த‌ ச‌ர‌ணாக‌தியை மிக‌வும் கெட்டியாய்ச் செய்ய‌வேணும். இந்த‌ ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌ம் உட‌னே த‌ப்பாம‌ல் கிடைக்க‌வேணும். ஸ‌முத்ர‌க்க‌ரையில் புளிநத்தில் (ம‌ண‌லில்) ந‌ட‌ந்த‌ விபீஷ‌ண‌ ச‌ர‌ணாக‌தி அவ‌ஸ‌ர‌த்தை நினைத்து, அத்தொடொக்க‌ப் பெருமாளுடைய‌ ர‌ங்க‌ச‌ய‌நத்திலுள்ள‌ அம்ச‌ங்க‌ளை ம‌ன‌தில் பாவ‌னை செய்கிறார். அங்கே க‌ட‌ற்க‌ரை ம‌ண‌ல், இங்கே ஸ‌முத்ர‌ ப‌த்நியாகிய‌ காவேரியின் ம‌ண‌லில் ச‌ய‌ந‌ம். ப‌தியாகிய‌ ஸ‌முத்ர‌த்தைக் காட்டிலும் ப‌த்நிக‌ளான‌ ய‌முனை போன்ற‌ புண்ய‌நதிக‌ளுக்கு சுத்தி அதிக‌ம். “தூய‌பெருநீர் ய‌முனைத் துறைவ‌னை" "மருத் வ்ருதா" என்று காவேரிக்கு சுருதியில் திருநாமம். வேத‌ப் பிர‌ஸித்த‌மான‌ புண்ய‌நதி என்று வ்ய‌ஞ்ஜ‌ந‌ம். ப்ர‌ண‌வ‌ப் பெருமாள் வேத‌ப் பிர‌ஸித்த‌ நதியில் ச‌ய‌னித்தார். க‌ட‌ற்க‌ரையில் நீர்க்க‌ட‌லுக்கு எதிரில் ஓர் நீல‌ தேஜோ வெள்ள‌மாய் பெருமாள் ப்ர‌திஶ‌ய‌ன‌ம் செய்ததை நினைக்கிறார். இங்கே அர‌ங்க‌ன் ஓர் குட்டிக் க‌ட‌லாக‌ப் பிர‌காசிக்கிறார். “ப‌ச்சைமா க‌ட‌ல்போல் மேனி" என்று இங்கே ஒருவாறு அனுப‌வ‌ம். अर्णवतर्णकम् (அர்ண‌வ‌த‌ர்ண‌க‌ம்) என்றார் ஸ்ரீ ப‌ட்ட‌ர். ஆச்ரித‌ர்க‌ளின் பாப‌க்க‌ட‌லை அப்ப‌டியே உறிஞ்சி விடுவ‌தாக‌ ஸ‌ங்க‌ல்ப‌ம். உல‌க‌த்தின் பாப‌க்க‌ட‌லுக்கு எதிரியாக‌ இக்குட்டிக் க‌ட‌லின் ச‌ய‌ன‌ம். सकृदेव प्रपन्नाय ….. अभयं सर्वभूतेभ्यो ददामि एतद्व्रतं मम (ஸ‌க்ருதேவ‌ ப்ர‌ப‌ந்நாய‌ ………… அப‌ய‌ம் ஸ‌ர்வ‌பூத‌ப்யோததாமி ஏதத் வ்ர‌த‌ம் மம) என்று ப்ர‌திக்ஞை செய்த‌ அவ‌ஸ‌ர‌த்தையும் காட்டுகிறார். க‌ட‌ற்க‌ரையில் எல்லோரும் பார்க்கும்ப‌டி பிராட்டியின் ஸ‌ந்நிதாந‌ம் இல்லை. பிராட்டி அக்க‌ரையிலும் பெருமாள் இக்க‌ரையிலுமாக‌ இருந்த‌ அவ‌ஸ‌ர‌ம். ஆனால‌ பிரிந்திருந்த‌ பிராட்டியைச் சேர்த்து வைப்ப‌த‌ற்காக‌வே த‌ம்மை அங்கீக‌ரிக்கும்ப‌டி விபீஷ‌ண‌ன் பிரார்த்தித்தான் என்றும் சொல்லலாம். இருவ‌ரையும் சேர்த்துவைத்து இருவ‌ருயிரையும் காப்பாற்றி, தாமும் பிழைக்க‌ அங்கே ஆஶ்ர‌ய‌ண‌ம். “ப்ர‌தீய‌தாம் தாஶ‌ர‌தாய‌ மைதிலீ" என்று த‌ம்ப‌திக‌ளைக் கூட்ட‌வே அவ‌ர் ம‌நோர‌த‌ம். இங்கு இருவ‌ர் திருமேனியையும் காப்பாற்ற‌ ச‌ர‌ணாக‌தி. அங்கும் அது உண்டு. ஸ்ரீ உறையும் திருமார்பை உடைய‌வ‌ர். “பூம‌ன்னும் மாது உறை மார்ப‌ன்". பிராட்டி திருமார்பை ஆஶ்ர‌யித்திருப்ப‌தால்தான் ஹ்ருத‌ய‌ம் த‌யையினால் குளிர்ந்திருக்கிற‌து. பெருமாள் திருவுள்ள‌ம் சீத‌ள‌மான‌துதான். நாம்தான் அத‌ன் பிர‌யோஜ‌னத்தை அடையாம‌ல், அந்த்த் த‌யையைத் த‌கைகிறோம். “ஸ‌ம்வித்" என்னும் புத்திக‌ள் என் ம‌ன‌தில் தூங்காம‌ல் விழித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என்று பிரார்த்த‌னை. பெருமாள் தூங்குவ‌து போலிருந்தாலும் அவ‌ர் விஷ‌ய‌மான‌ என்னுடைய‌ பாவ‌னைக‌ள் தூங்காம‌ல் ஸ‌தா விழித்திருக்க‌ வேண்டும். பெருமாளுக்கு விசேஷ‌ண‌ங்க‌ளாகக் கூற‌ப்ப‌ட்ட‌தெல்லாம், ந‌ம்முடைய‌ பாவ‌னையில் ஆகார‌ங்க‌ளாகக் கூடி, ஸ‌மாநாதிக‌ர‌ண‌மாகின்ற‌ன‌. விஶிஷ்ட‌மான‌ ஸ‌ம்வித்துக‌ளே. நிர்விஶேஷ‌ நிராகார‌ புத்தி ய‌ல்ல‌. இந்த‌ விசேஷ‌ண‌ங்க‌ளையுடைய‌ பெருமாளால் உப‌ர‌க்த‌மான‌ புத்திக‌ள். திருக்காவேரியில் ப‌ள்ளிகொண்ட‌ பெருமாள் விஷ‌ய‌மான‌ பாவ‌னை என‌க்கு எப்போதும் இருக்க‌ வேண்டும் என்று ப்ரார்த்திப்ப‌தால், பாவ‌னைக்கு விஷ‌ய‌மான‌ பெருமாள் திருமேனியும் விசேஷ‌ண‌ங்க‌ளும் நித்ய‌மாய் நிர‌பாய‌மாயிருக்க‌ வேண்டும் என்று முக்கிய‌க் க‌ருத்து ஸூசித‌மாகிற‌து. இந்த‌ ம‌நோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ பெருமாள் க்ருபை செய்ய‌வேண்டும் என்று ஆசையை விள‌க்குகிறார். காய‌த்ரியில் சுப‌மான‌ புத்தி வ்ருத்திக‌ளின் ப்ர‌சோதநத்தின் ப்ரார்த்த‌னை போல் இங்கும் முன் ச்லோக‌த்தில் "அதீம‌ஹே" என்று பேசி, அடுத்தாற்போல் அங்கு போல‌ இங்கே **தீக‌ளாகிய‌ ஸ‌ம்வித்துக்க‌ளின் ஜாக‌ர‌ண‌த்தையும் பிரார்த்திக்கிறார். காய‌த்ரீ ஜ‌ப‌ம் எப்ப‌டி நித்ய‌மோ, அப்ப‌டியே ஸ்ரீர‌ங்க‌ஸ்ரீயின் வ்ருத்தியின் பிரார்த்த‌னையும் நித்ய‌ம். அத‌ற்கு லோப‌ம் வ‌ருவ‌தை ஸ‌ஹிக்க‌ மாட்டோம‌ல்ல‌வா?

(** நூலில் அச்சாகியிருப்ப‌து থীக‌ளாகிய‌ என்று. தீ என்ப‌த‌ற்கான‌ கிர‌ந்த‌ எழுத்து থী இது அச்சுப்பிழையா என்ப‌து விள‌ங்க‌வில்லை. )







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக