ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்
சுலோக‌ம் 6
स्थिते मनसि विग्रहे गुणिनि धातुसाम्ये सति
       स्मरेदखिलदेहिनं य इह जातुचित् त्वामजं
|
तयैव खलु सन्धया तमथ दीर्घनिद्रावशं
       स्वयं विहितसंस्मृतिर्नयसि धाम नै:श्रेयसम्
|| .6.
ஸ்திதே மநஸி விக்ரஹே குணிநி தாதுஸாம்யே ஸதி
       
ஸ்மரேதகிலதேஹிநம் இஹ ஜாதுசித் த்வாமஜம் |
தயைவ லு ஸந்தயா தமத தீர்க்கநித்ராவஶம்
       
ஸ்வயம் விஹிதஸம்ஸ்ம்ரு̆திர்நயஸி தா நை:ஶ்ரேயஸம் || .6.
இஹ‌ -- இங்கே (கோயிலில், பூலோக‌த்தில், இவ்வாயுளில்), ய‌: -- எவ‌ன், ம‌ன‌ஸி -- ம‌ன‌தான‌து, ஸ்திதே -- ஒரு விஷ‌யத்தில் நிலைநிற்க‌ ச‌க்த‌மாயிருக்கும்போது, விக்ர‌ஹே -- ச‌ரீர‌ம், குணிணி -- ஸ்வ‌ஸ்த‌மாய் ந‌ல்வ‌ழியில் இருக்கும்போது, தாது ஸாம்யே ஸ‌தி -- தாதுக்க‌ள் ஸ‌மமாய் அரோகமாயிருக்கும்போது, த‌ம் -- அவ‌னை, த‌யைவ‌ ச‌ந்த‌யா -- அந்த‌ ஒரு நினைப்பைக் கொண்டே, ஸ்வ‌ய‌ம் -- நீராக‌வே, விஹித‌ஸ‌ம் ஸ்ம்ருதி -- அவ‌னை உம்மை ந‌ன்றாய் நினைக்க‌ச் செய்து, அகில‌ தேஹிந‌ம் -- ஸ‌ர்வ‌ ச‌ரீரியாயும், அஜ‌ம் -- பிற‌ப்ப‌ற்ற‌வ‌ருமான‌ த்வாம் -- உம்மை, ஜாதுசித் -- எப்பொழுதாவ‌து ஒரு த‌ட‌வை, ஸ்ம‌ரேத் -- ஸ்ம‌ரிப்பானோ (ஸ்ம‌ரித்திருப்பானாகில்), அத‌ -- பிற‌கு, தீர்க்க‌ நித்ராவ‌ச‌ம் -- நீண்ட‌ துக்க‌மான‌ ம‌ர‌ண‌த்திற்கு வ‌ச‌மாயிருக்கும்போது, நைஶ்ரேய‌ஸ‌ம் தாம‌ -- த‌ன‌க்கு மேற்ப‌ட்ட‌ ஶ்ரேய‌ஸ்ஸில்லாத‌ மோக்ஷ‌ம் என்னும் ஸ்தாநத்தை, ந‌ய‌ஸி -- சேர்ப்பிக்கிறீர்.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

மண்ணுலகில் எவனும்தன் மனம்நல்ல நிலைகொண்டு
மெய்தானும் திடமாக மேன்மையுடன் இருக்கையிலே,
நன்னிலையில் உடம்பிலுள நரம்பாதி தாதுக்கள்
நன்முறையில் இயங்கிவரும் நாட்களிலே என்றேனும்,
எண்ணற்ற பொருளனைத்தில் உட்புகுந்த ஆன்மாவாய்
ஏற்றமுடைப் பிறப்பிலியாம் உன்தன்னை ஒருமுறையே
எண்ணுவனேல், அந்நினைவை இறுதியிலே உண்டாக்கி
எட்டரிய முக்திதனை எய்திவிடச் செய்கின்றாய் ! 6.
ஸ்ரீ அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

        எல்லா ப‌ய‌ங்க‌ளும் தொலைய‌ "ஸ்ம‌ர‌தி வா" என்று உம்மை நினைத்தால் போதும் என்று முன்பு ஸாதித்தார். கோயிலில் வ‌ஸிக்கும் உம்முடைய‌ திருமேனியை ஒருக்கால் ந‌ன்று நினைத்திருந்தால் போதும் அந்திம‌ ஸ்ம்ருதியை உண்டாக்கி அவ‌னை மோக்ஷ‌ம் சேர்க்க‌. "க‌லு" என்று இந்த‌ விஷ‌ய‌த்தில் ப்ர‌மாண‌ ப்ர‌ஸித்தியைக் காட்டுகிறார். அத‌ற்காக‌ பெருமாள் திருவாக்கிலிருந்து வ‌ந்த‌ ப்ர‌மாண‌ வ‌ச‌ந‌ங்க‌ளின் ப‌த‌ங்க‌ளாலேயே சுலோக‌த்தை அமைத்து, பெருமாளுக்கு அவ‌ர் உக்தியையே நினைப்பூட்டுகிறார். "स्थिते मनसि सुस्वस्थे सरीरे सति यो नर: | धातुसाम्ये स्थिते स्मर्ता विश्वरूपं च ममजं | என்று தொட‌ங்கிய‌ சுலோக‌ங்க‌ள் பெருமாளாலேயே அருளிச் செய்ய‌ப் ப‌ட்ட‌வை. "உம்மை" என்ப‌த‌ற்கு இங்கே, கோயிலில் எழுந்த‌ருளியிருக்கும் அர‌ங்க‌னை என்று க‌ருத்து. "துப்புடையாரை" என்னும் பாசுர‌த்தில் "எய்ப்பென்னை வ‌ந்து ந‌லியும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்க‌மாட்டேன் அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அர‌ங்க‌த் த‌ர‌வ‌ணைப் ப‌ள்ளியானே" என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததை இங்கே நினைக்கிறார்.
        உம்மை ஸேவித்தாலல்ல‌வோ உம் ஸ்ம‌ர‌ண‌ம் அந்திம‌ கால‌த்தில் நேரும்? தேவ‌ரீர் எழுந்த‌ருளியிருந்தாலல்ல‌வோ எல்லாரையும் தேஹ‌வியோக‌ கால‌த்தில் ஸ்ம‌ர‌ண‌த்தை அநுக்ர‌ஹித்துக் காப்பாற்ற‌ முடியும்? தேவ‌ரீர் இங்கே எழுந்த‌ருளியிருந்தே எம்மை அங்கே அனுப்பிச் சேர்ப்பிக்க‌ வேணும். "ஸ்திதே குணிநி விக்ர‌ஹே" என்று "உம்முடைய‌ திருமேனி நிர‌பாய‌மாய் எழுந்த‌ருளியிருக்கையில்" என்றும் காட்டுவ‌தில் திருவுள்ள‌மாய் முத‌லில் "ஸ்திதே" என்கிறார். முன் சுலோக‌த்தில் "ப‌வ‌ந்த‌ம்" என்று தொட‌ங்கிய‌துபோல், இந்த‌க் க‌வ‌லையே நெஞ்சில் ஓடிக்கொண்டிருப்ப‌து ஓரொரு சுலோக‌த்திலும் தெரிகிற‌து. "அமில‌ தேஹிந‌ம் த்வாம்" -- கில‌த்திற்குப் பிர‌ஸ‌க்தியில்லாம‌ல், பூர்ண‌மான‌ திருமேனியுடைய‌ உம்மை. அகில‌ தேஹியான‌ உம்முடைய‌ திருமேனிக்குக் கில‌ம் ப்ர‌ஸ‌க்த‌மானால் எந்த‌ தேஹியின் தேஹ‌ம் நிற்கும்? அஷ‌ம் த்வாம்  --  பிற‌ந்த‌வ‌னுக்க‌ல்ல‌வா அபாய‌ம் த்ருவ‌ம் ! பிற‌வாத‌ தேவ‌ரீர் திருமேனிக்கு அபாய‌ம் வ‌ர‌ ஸ‌ஹிப்போமோ?

        உம்மை ஆச்ர‌யித்த‌வ‌னுக்கு ஒருக்கால் தேஹ‌வியோக‌ம் வ‌ருவ‌தை "ம‌ர‌ண‌ம்" என்று பேசோம். "தீர்க்க‌மான‌ நித்ரை" என்போம். ஒரு த‌ர‌ம் எக்கால‌த்திலோ உம்மை ஸ்ம‌ரித்ததை நினைத்துக்கொண்டே இருந்து அவ‌ன் தேஹ‌த்திற்கு அபாய‌ம் வ‌ருங்கால் அவ‌னுக்கு ஸ்ம‌ர‌ண‌த்தைக் கொடுத்து ர‌க்ஷிக்கும் த‌யாளுவாயிற்றே. நாங்க‌ள் இப்பொழுது க‌த‌றுவ‌தைத் திருவுள்ள‌த்தில் கொள்ளாம‌ல் திர‌ஸ்க‌ரிக்க‌லாமோ?? "உம் திருவுள்ள‌ம் ம‌ட்டும்தான் வேண்டும் எம் ம‌னோர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌" என்று "ஸ்வ‌தீநிய‌த‌சேத‌நாசேத‌ந‌ம்" என்ப‌தால் வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்கிறார். ஒரு விரோதி த‌ன் கை கால்க‌ளை அசைக்க‌ முடியுமோ? "நான் அர்ச்சை, நான் ப‌ராதீந‌ன்" என்று நீர் பேச‌வொண்ணாது. "உம்முடைய‌ அப்பெரிய‌ வீட்டிற்கு எங்க‌ளைக் கொண்டுபோய்ச் சேர்க்க‌த்தானே நீர் இங்கே கோயில் கொண்டிருப்ப‌து" என்ப‌தைக் காட்ட‌ "ந‌ய‌ஸி தாம‌" "வீட்டுக்குக் கொண்டு போகிறாய்" என்கிறார். உம்மைய‌ல்லால் எம்மை வீடு சேர்ப்பார் ஆர்? (6) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக