வெள்ளி, 23 அக்டோபர், 2026

 

𑌰𑌾𑌮𑌾𑌨𑍁𑌜 𑌦𑌯𑌾𑌪𑌾𑌤𑍍𑌰𑌂 𑌜𑍍𑌞𑌾𑌨 𑌨𑍍𑌙𑍍𑌵𑍈𑌰𑌾𑌗𑍍𑌯 𑌭𑍂𑌷𑌣𑌂|

𑌶𑍍𑌰𑍀𑌮𑌦𑍍𑌵𑍇𑌙𑍍𑌕𑌟𑌨𑌾𑌧𑌾𑌰𑍍𑌯 𑌂 𑌵𑌨𑍍𑌦𑍇 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤 𑌦𑍇𑌶𑌿𑌕𑌂||

ராமானுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம்|

ஶ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஶிகம்||


பதவுரை

𑌰𑌾𑌮𑌾𑌨𑍁𑌜 𑌦𑌯𑌾𑌪𑌾𑌤𑍍𑌰𑌂 -- கிடாம்பி அப்புள்ளாரென்கிற ராமானுஜருடைய தயைக்கு வைப்பிடமானவராயும்

𑌜𑍍𑌞𑌾𑌨𑌵𑍈𑌰𑌾𑌗𑍍𑌯𑌭𑍂𑌷𑌣𑌂 -- பரப்ரும்ம விஷயமான தெளிந்த அறிவென்ன, அதைக்காட்டிலும் வேறுபட்டவைகளில் வெறுப்பென்ன, இவைகளையே தமக்கு நகைகளாகக் கொண்டவராயும்,

𑌶𑍍𑌰𑍀𑌮𑌦𑍍𑌵𑍇𑌙𑍍𑌕𑌟𑌨𑌾𑌧𑌾𑌰𑍍𑌯𑌂 --அழிவில்லாத சம்பத்தோடு கூடின திருவேங்கடநாதனென்கிற பெயர் பூண்ட உத்தமராயுமுள்ள

𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤 𑌦𑍇𑌶𑌿𑌕𑌂 -- நிகமாந்த மஹாதேசிகனை

𑌵𑌨𑍍𑌦𑍇 -- ஸேவிக்கிறேன்.


𑌵𑌨𑍍𑌦𑍇 (வந்தே) என்று சொல்லுமிடங்களிலெல்லாம் நான் என்கிறதற்கு வாசகமான 𑌅𑌹𑌂 (அஹம்) என்கிறது இல்லாவிட்டால் 𑌅𑌹𑌂 (அஹம்) என்கிற பதத்தை வருவித்துக்கொண்டு அர்த்தம் சொல்லவேண்டும்.

𑌆𑌪𑌾𑌦 𑌚𑍂𑌡𑌮𑌨𑌪𑌾𑌯𑌿𑌨𑍀 𑌸𑌂𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑍇 (ஆபாதசூடமநபாயிநீ ஸம்ப்ரதாயே) என்கிறபடியுள்ள ஸத்ஸம்ப்ரதாயத்திலன்றோ 𑌆𑌨𑍍𑌤𑌰𑌹𑍁𑌦𑍃𑌷𑍍𑌟𑌿களால் (ஆந்தரகுத்ருஷ்டி) வரும் கலக்கம் தீர்த்தவுபகாரம் பற்றி அவ்வுபகாரம் செய்தமை குறிப்பிடப்படுகிறது. புறச்சமயிகள் செய்யும் மிறுக்குகள் தீர்ப்பது, எவர்க்கு மெளிதாயினபடி. 𑌰𑌾𑌕𑍍𑌷𑌸𑌾𑌃 𑌕𑌲𑌿𑌕𑌾𑌶𑍍𑌰𑌿𑌤𑍍𑌯 𑌜𑌾𑌯𑌨𑍍𑌤𑍇 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌯𑍋𑌨𑌿𑌷𑍁 (ராக்ஷஸ: கலிகாஶ்ரித்ய ஜாயந்தே ப்ரஹ்மயோநிஷு) என்கிறபடியே கலியின் பலங்கொண்டு அரக்கர்கள் ப்ராஹ்மணன் பிறக்குமிடத்தில் வந்து பிறப்பதே என்றே வயிறு பிடிக்க வேண்டியிருக்க, 𑌶𑍁𑌚𑍀𑌨𑌾𑌂 𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑌾𑌂 (ஶுசீநாம் ஶ்ரீமதாம்) என்றும் பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப் பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனைப் பயிலுந்திருவுடையார், என்றும் சொல்லுகிறபடியே, மிகவும் கொண்டாடத்தக்க ஶ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில், ஶ்ரீவைஷ்ணவ வேடத்தால் தங்கள் ரூபத்தை மறைத்துக்கொண்டு, 𑌆𑌨𑍍𑌤𑌰𑌕𑍁𑌦𑍃𑌷𑍍𑌟𑌿கள்(ஆந்தர குத்ருஷ்டிகள்) வந்து பிறந்தால் இந்த ஸத்ஸம்ப்ரதாயத்திற்கு எப்பொழுது என்ன தீங்கு எவ்வாறு வருமோ என்றஞ்சி, அதற்காகப் படவேண்டும்பாடு சொல்ல வேண்டாவே. அப்படியுள்ள பெரும்பாட்டைப் பட்டன்றோ நந்தேசிகனும், இஸ்ஸம்ப்ரதாயம் தழைத்தோங்கப் பேருதவி செய்திருப்பது! செய்தவுதவியும் சிறிதுகாலத்தோடு மறைந்துபோகாமே, செய்யதமிழ்மாலைகணாந்தெளியவோதித் தெளியாத மறைநிலங்கடெளிகின்றோ மே , என்றும், தந்தையென நின்றதனித் திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபனருளினாலே, என்றும், இப்புடைகளில் க்ரந்தங்களிலும், கல்வெட்டாய் ஏறவிட்டிருப்பது. ஆனதுபற்றி ஆன்ற தமிழ்மறை களனைத்துக்கும் வளர்த்த இதத் தாயாயினபடி. வளர்த்த இதத்தாய், இராமாநுசனில்லையோ என்னில், அதுவுமிங்கு அநுஸந்திக்கத் தட்டில்லையே. 𑌯𑌤𑍀𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌂𑌶𑌃 என்றும், நம்மிராமாநுசன் பொன்னடி என்றும், நமது ஆசார்யவதார ரஹஸ்யத்தின் சுவடறிந்த ரஸிகர்கள் அநுஸந்தித்துப் போருவது. இவ்விடத்தில் இராமாநுசனுடைய சரமதசையில் கலிபுருஷனோடு நேர்ந்த ஒரு ஸம்வாதமும் நினைக்கத்தக்கது.