சனி, 27 ஆகஸ்ட், 2011

மறுபடியும் ஞாபகப் படுத்துகிறேன்.

சில நாட்களுக்கு முன்னே இங்கு எழுதியதை, யாஹு குழுமங்களில் அறிவித்ததை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். வரும் செப்டம்பர் 1ம் நாள் இரண்டு அழகியசிங்கர்களும் ஸ்ரீ ஆதி ஸேதுவுக்கு எழுந்தருளி ஸேது ஸ்நாநம் செய்யவிருக்கிறார்கள். ஏற்கனவே இதை அறிந்து திட்டமிட்டு வரப் போகிறவர்களுக்கு அடியேனது ஸ்வாகதம். P1010684போன 2010 ஏப்ரல் 5ம் நாள் இரண்டு அழகியசிங்கர்களுடனும் ஸ்நாநம் செய்யக் கொடுத்துவைத்தவர்கள் அந்தக் காட்சியை இங்கு க்ளிக் செய்து அனுபவிக்கலாம். http://thiruppul.blogspot.com/2010/04/blog-post_07.html

P1010692சென்ற முறை தவறவிட்டவர்கள் இந்த முறை அவஸ்யம் வரவேண்டும் என்ற காரணத்தாலே விடுமுறை நாளாகப் பார்த்து ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸேது ஸ்நாந நாளைத் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். அவஸ்யம் வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

   P1010696

 போன வருடம் இப்படிக் கூடியதெல்லாம் ஒரு கூட்டமா! இந்த முறை பாருங்கள் இன்னொரு ஆடி அமாவாசையோ என்று திருப்புல்லாணிக் காரர்கள் ஆச்சரியப்படும் அளவில் வந்து குவியப் போகிறோம் என்று நீங்களெல்லாம் தயாராயிருப்பீர்கள் என்றும் தெரியும். இப்படி போட்டோ, வீடியோவெல்லாம் போட்டு அழைத்து விட்டு ஆச்ரமத்தில் தங்க இடம் கேட்டால் இடம் இல்லை என்று சொல்கிறீர்களே என்று சிலர் பல்லைக் கடிக்கும் ஓசை கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆசாரிய பக்தி முக்கியம்! அவருடன் ஸ்நாநம் செய்யும் பாக்யம் மிக மிக முக்கியம்! அதனால் தங்க இடம் இல்லை என்றால் என்ன! வேறு என்ன சிரமங்கள் எதிர்வந்தாலும் என்ன! என்று நீங்களெல்லாம் வந்து நிறைந்து ஆசார்யர்கள் மனதை மகிழ்விப்பீர்கள்தானே! ரயில், பஸ் இவைகளில் இடமில்லையானாலும், வான் Van  பிடித்தாவது வந்து கூடியிருந்து மனம் குளிர மாட்டீர்களா என்ன! ஸேதுவைக் கண்ணாலே பார்த்தாலே கிடைக்கும் புண்ணியங்களை ஆதி சேஷனும் கூற முடியாதாம். அதில் நாம் தனியாகத் தீர்த்தமாடினால் சகல பாபங்களும் நிவர்த்தியாகும் என்று ஆசார்யர்கள் எல்லாரும் அருளியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஸேதுவில் ஆசார்யர்களுடன் ஸ்நாநம் செய்தால் கிடைக்கப் போகும் நன்மைகளை, புண்யங்களை யாரால் சொல்ல முடியும்? தவறவிடுவீர்களா என்ன?  பயணத்துக்கு ரெடியாயாச்சா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக