ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

अभीतिस्तव:

அபீதி ஸ்தவம்



சுலோகம்  23

दितिप्रभवदेहभिद्दहनसोमसूर्यात्मकं
            तमःप्रमथनं प्रभो समुदितास्त्रबृन्दं स्वतः ।
स्ववृत्तिवशवर्तितत्रिदशवृत्ति चक्रं पुनः
            प्रवर्तयत् धाम्नि ते महति धर्मचक्रस्थितिम् ॥

தி³திப்ரபவதே³ஹபித்³³ஹநஸோமஸூர்யாத்மகம்
        
தம:ப்ரமத²நம் ப்ரபோஸமுதி³தாஸ்த்ரப³்ருந்த³ம் ஸ்வத: | ஸ்வவ்ருத்திவஶவர்திதத்ரித³ஶவ்ருத்தி சக்ரம் புந:
          
ப்ரவர்தயத் தாம்நி தே மஹதி ர்மசக்ரஸ்தி²திம் ||

       ப்ரபோ -- ப்ரபுவே! திதி ப்ரபவதே ஹபித் -- திதியின் ஸந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிளப்பதும்; தஹந ஸோம ஸூர்யாத்மகம் -- அக்னி, சந்த்ரன், சூர்யன் முதலியவற்றைத் தன்னுள்ளடக்கிக் கொண்டு; ஸ்வத -- தானாகவே; ஸமுதித அஸ்த்ர ப்ருந்தம் -- எல்லா அஸ்திரங்களின் ஸமூஹமும் தன்னிடமிருந்து வெளிப்படும் மஹிமையை உடையதும்; தம: ப்ரமதநம் -- தமோ குணத்தை (உள்ளிருட்டை)ப் போக்குவதும்; ஸ்வவ்ருத்தி வஶவ்ருத்தித த்ரிதஶ வ்ருத்தி -- தேவர்கள் வ்யாபாரமெல்லாம் தன் வசமாயுள்ளதுமான; தே சக்ரம் -- உம்முடைய சக்ரம்; தே -- உம்முடைய; மஹதி தாமநி -- உயர்ந்த இடமாகிய கோயிலில்; புந: -- மறுபடியும்; தர்ம சக்ர ஸ்திதிம் -- தர்மம் என்னும் உம்முடைய ஆக்ஞா சக்ரத்தின் பரிவ்ருத்தியை; ப்ரவர்த்தயது -- நடத்தி வைக்கவேணும்

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

அடியவரைத் துன்புறுத்தும் அரக்கர்தம் உடல்பிளக்கும்
ஆற்றலுடன் கதிர்மதியன் அக்கினியாம் மூவருமே
உடன்கூடி யதுபோல ஔiமயத்தைக் கொண்டதுவாய்
அகவிருளும் புறவிருளும் அகலும்படித் திறமுடைத்தாய்
கொடுவல்ல ஆயுதங்கள் கூட்டத்தின் இருப்பிடமாய்
தேவர்கள் வாழ்வுக்கோர் அரணாகி உன்றனது
திடக்கரத்தை அணிசெய்யும் சக்கரமே மறுபடியும்
திருவரங்கில் நல்லறமே தழைத்தோங்கச் செய்யட்டும் ! 23.

அன்பில் .வி. கோபாலாசாரியார்

       ஸ்ரீகாந்தனிடம் ப்ரபத்தியைச் செய்து இப்போது பஞ்சாயுதங்களின் உயர்ந்த சக்தியைக் கொண்டு எதிரிகளை அடக்கி ரக்ஷிக்க வேண்டும் என்கிறீர்; ஆயுதங்களின் ஸஹாயமில்லாமல் ஶ்ரிய:பதியால் ரக்ஷிக்க முடியாதோ என்று சங்கை வர அதைப் பரிஹரிக்கிறார்.
       நாங்கள் செய்யும் ப்ரபத்திக்கு தேவரீர் தத்க்ஷணமே எங்கள் பயத்தை நீக்கி எங்களுக்கு அபயம் அளிக்க ஸங்கல்பிக்க வேணும். தேவரீர் ரக்ஷண ஸங்கல்பம் என்னும் தத்வமே ஸ்ரீஸுதர்ஶநம் என்னும் சக்ரம். 'விஷ்ணுவின் ஸந்நாஹமும் ஸங்கல்பமும் முறையே பக்ஷீஸ்வரனும் ஸுதர்ஶனமும் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் ப்ரஸித்தம்' என்று ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதித்தார். ஆகையால் ஸுதர்ஶனம் என்பது ஈச்வர ஸங்கல்பம்; தர்மமென்பதும் ஈச்வரனுடைய ஆக்ஞாசக்ரமான ஶ்ருதி ஸ்ம்ருதிகள். ஸுதர்ஶனமாகிய உமது சக்ரம் ஆக்ஞையான தர்ம சக்ரத்தை சரியாக சுழன்று சுழன்று வரும்படி செய்யவேணும். இந்த ஸுதர்ஶனமே பதினாறு (ஷோடஶ) ஆயுத ரூபமாகவும் இருக்கிறார் என்பது ஷோடஶாயுத ஸ்தோத்ரத்தில் ஸ்வாமியால் காட்டப் பட்டது. தம் ஸங்கல்பத்தின் அம்ஶங்களான பதினாறு ஆயுதங்களோடு கூடின ஆயுதேஶ்வரரான பரமபுமான் உங்களை ரக்ஷிக்கட்டும்' என்று முதல் சுலோகம். 'எல்லா அஸ்த்ரங்களும் எந்த ஸுதர்ஶனத்திடமிருந்து கிளம்புகிறதோ அந்த ஷோடஶாயுதமயரான ஸுதர்ஶனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்று பதினேழாவது சுலோகம். இப்படி எல்லா ஆயுதங்களும் ஸுதர்ஶனத்தின் ரூபங்களாகையாலும், ஸுதர்ஶனமும் உம்முடைய ஸங்கல்பமானதாலும், 'ஆயுதங்கள் உமக்கு ஸஹாயம்' என்றதுவும் 'உம்முடைய ரக்ஷண ஸங்கல்பமே உமக்கு ஸஹாயம், உம்மைவிட வேறான ஒன்றை நாங்கள் உபாயமாக வேண்டவில்லை' என்று சொன்னதாகும். सङ्कल्प एव भवतो निपुणः सहायः (ஸங்கல்ப ஏவ பவதோ நிபுண: ஸஹாய) என்று வரதராஜ பஞ்சாசத்தில் சொன்னதும் இதை விளக்குகிறது.
       திதி ப்ரபவ தேஹபித் -- உம் திவ்யமான திருமேனியை பேதிக்க எண்ணும் அசுரர்களின் தேஹத்தைப் பிளப்பது உம் ஸுதர்ஶனம். (உம் ஸங்கல்பம்)
       அக்னி ஸோம ஸூர்யாத்மகம் -- அக்னி, சந்த்ரன், ஸூர்யன் என்னும் தேஜஸ்ஸுகளெல்லாம் ஸ்ரீஸுதர்ஶன தேஜஸ்ஸில் அடங்கியவை. सुदर्शन महाज्वाल कोटिसूर्यसमप्रभ (ஸுதர்ஶன மஹாஜ்வால கோடி ஸூர்ய ஸமப்ரப) ஆஸுரத்தைப் கொளுத்துகையிலும், அனுகூலர்க்கு சந்த்ரனைப்போல ஸௌம்யராயிருப்பவர். सोमवत् प्रियदर्शन (ஸோமவத் ப்ரியதர்ஶன) உள்ளிருட்டை நீக்குவது மற்ற தேஜஸ்ஸுக்களால் இயலாது. ஸுதர்ஶனம் அதையும் நீக்கும்.

       'மறுபடியும் கோயிலில் உம்முடைய ஆக்ஞையான தர்மசக்ரம் நடைபெற வேணும்' என்பதால் அப்பொழுது தர்மாநுஷ்டானத்திற்கு விக்னமிருந்தது காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக