திங்கள், 12 செப்டம்பர், 2016

अभीतिस्तवम्

அபீதி ஸ்தவம்


சுலோகம் 24

मनुप्रभृति मानिते महति रङ्गधामादिके
           
दनुप्रभव दारुणैर्दरमुदीर्यमाणं परैः
प्रकृष्ट गुणक श्रिया वसुदया सन्दुक्षितः
           
प्रयुक्त करुणोदधे प्रशमय स्वशक्त्य स्वयम् 

மநுப்ரப்ருதி மாநிதே மஹதி ரங்க³தாமாதி³கே
         ³நுப்ரபவ தா³ருணைர்த³ரமுதீ³ர்யமாணம் பரை: |
ப்ரக்ருஷ்ட கு³ணக ஶ்ரியா வஸுத³யா ச ஸந்து³க்ஷித:
         ப்ரயுக்த கருணோத³தேப்ரஶமய ஸ்வஶக்த்ய ஸ்வயம் ||

ப்ரயுக்த கருணா உததே -- கருணை நிறைந்தவனே! ப்ரக்ருஷ்ட குணக -- சிறந்த குணங்களை உடையவனே! மநு பரப்ருதி -- மனு முதலியவர்களால்; மாநிதே -- கொண்டாடப்பட்ட; மஹதி -- சிறந்த; ரங்க தாம ஆதிகே -- ஸ்ரீரங்கம் முதலியவற்றில்; தநு ப்ரபவ --தநுவென்னும் அஸுரகுலத்தோரான அஸுரர்களைப்போல்; தாருணை -- குரூரர்களான, கொடியவர்களான, பரை: -- சத்ருக்களால்; உதீர்யமாணம் -- வளர்க்கப்பட்டு வரும், உண்டாகி வளரும்; தரம் -- பயத்தை; ச்ரியா -- பெரிய பிராட்டியாராலும், வஸுதயா ச -- க்ஷமாதத்வமாகிய பூமிப்பிராட்டியாலும், ஸந்துக்ஷித -- தூண்டப்பட்டு உத்ஸாகப்படுத்தப் பட்டவனாய்; ஸ்வ சக்த்யா -- தன் சக்தியினால்; ஸ்வயம் -- தானே; ப்ரசமய -- ஒழிப்பாயாக.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

உயர்ந்தோங்கும் குணங்களுக்கு உறைவிடமே! மனுவாதி
உத்தமர்கள் புகழ்ந்திட்ட உயர்வுடைய அரங்கம்போல்
பெயர்பெற்ற தலங்களிலே பொல்லாத அசுரரையும்
மிஞ்சிநிற்கும் கொடுமையுள பகைவர்களால் தோன்றியுள்ள
பயந்தன்னைத் திருமகளும் மண்மகளும் ஊக்குவிக்க
பெருங்கருணை எனவிளங்கும் உன்குணமாம் பெருங்கடலை
பயன்படுத்தி நீதானே பேர்வலிதாம் உன்திறத்தால்
போக்கியுன்றன் அடியாரைப் பாலித்து அருளிடுவாய்! 24

மதுராந்தகம் வீரராகவாசாரியார்

        
கருணை முதலிய சிறந்த குணங்களுடையோனே! மனு முதலியவர் கொண்டாடிவரும் ஸ்ரீரங்கம் முதலிய க்ஷேத்ரத்தில் அசுரர்போல் பயங்கரர்களான சத்ருக்கள் வளர்த்து வரும் பயத்தை ஸ்ரீ, பூமி தேவிகளின் ப்ரேரணத்தைக்கொண்டு, தன் சக்தியினாலே ஒழித்தருள வேணும்.

அன்பில் .வி. கோபாலாசாரியார்

        
ப்ரக்ருஷ்ட - குணம் --  உம்முடைய உயர்ந்த குணங்களோடு கூடியிருந்து நீர் ரக்ஷகராகிறீர். அதனால் உமக்கு எப்படி அத்விதீயத்வத்திற்குக் குறைவில்லையோ, அப்படியே தேவிமாரோடுகூடி ரக்ஷகரானாலும் பாஹ்ய ஸஹாயாபேக்ஷை அற்றவர் என்று சொல்லக் குறைவில்லை. ஸ்ரீதேவியே கருணாதத்வம். பூதேவி க்ஷமாதத்வம். இதெல்லாம் தயாசதகத்தில் கூறப்பட்டிருக்கிறது. உம் தேவிமார்தான் உம்முடைய தயை முதலிய கல்யாண குணங்களை ஸந்துக்ஷணம் செய்பவர். त्वत्करुणानिरीक्षण सुधासन्धुक्षणात् (த்வத் கருணா நிரீக்ஷணா ஸுதா ஸந்துக்ஷணாத்) என்பதைக் காட்ட 'ஸந்துக்ஷித' என்கிறார்.

         '
பிராட்டி உம்முடைய ப்ரபை, உம் ஶக்திபோல் உமக்கு அநந்யை' என்பதை ஸ்வஶக்த்யா என்று காட்டுகிறார். இந்த சேர்த்தியைத்தானே மனு முதலானோர் பூஜித்தனர். முதலில் மனுவும் பின்பு மைதிலீரமணனாக அக்குலத்தில் மனுஷ்யனாகவே அவதரித்து நீரும் உம்மையே பூஜித்தீர். ஆகையால் மனுஷ்யராகிய எங்களுக்கு நீர் ஸ்வந்தமான பெருமாள். 'மனுவிடமிருந்து பிறந்தவர் மனுஷ்யர், மாநவர்' என்றார் பாணிணி. பெருமாள் ஸூர்யனுக்கும், ஸூர்யன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தார்கள் என்று உபதேச பரம்பரை. இங்கு மனுப்ரப்ருதி என்பதால் அந்த ஆசார்ய பரம்பரையை ஸூசிப்பித்து, ஆழ்வார். நாதமுனிகள், ஆளவந்தார், பெரியநம்பிகள், எம்பெருமானார், ஆழ்வான், பட்டர் முதலிய பெரியோரையும் ஸூசிப்பிக்கிறார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக