ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்



சுலோகம் 21

श्रिय परिबृढे  त्वयि श्रितजनस्य संरक्षके
            सदद्भुतगुणोददौ इति समर्पितोऽयं भरः
प्रतिक्षणमत परं प्रथय रङ्गधामादिषु
            प्रभुत्वमनुपाथिकं प्रथितहेतिभिर्हेतिभि

ஶ்ரிய பரிப³்ருடேத்வயி ஶ்ரிதஜநஸ்ய ஸம்ரக்ஷகே
         ஸத³த்³புதகு³ணோத³தௌ³ இதி ஸமர்பிதோ
யம் ப: |
ப்ரதிக்ஷணமத பரம் ப்ரத²ய ரங்க³தாமாதி³ஷு
         ப்ரபுத்வமநுபாதி²கம் ப்ரதி²தஹேதிபிர்ஹேதிபி⁴ ||

        ஶ்ரித ஜநஸ்ய  -- ஆச்ரித ஜனங்களுடைய; ஸம்ரக்ஷகே -- நன்றாய் ரக்ஷிப்பவனாயும்;   ஸத் -- ஸத்யமும் (நல்லதும்); அத்புதஆச்சர்யமுமான; குணோததௌ  -- குணக்கடலான; ஶ்ரிய பரிப்ருடே -- ஶ்ரிய:பதியான த்வயி -- உம்மிடம்; அயம் பரஇந்த (உம்  திருமேனியின் ரக்ஷண) பரம்; இதி -- இப்படி; ஸமர்ப்பிதஸமர்ப்பிக்கப் பட்டது; அத:பரம் -- இதுமுதல்; ப்ரதிக்ஷணம் -- ஒவ்வொரு க்ஷணமும்; ப்ரதிதமேல்மேல் கிளம்புகிற; ஹேதிபி -- ஜ்வாலைகளை உடைய; ஹேதிபி -- திருவாயுதங்களால்; அநுபாதிகம் -- ஸ்வயம் ஸித்தமான; ப்ரபுத்வம் -- வல்லமையை ; ரங்கதாமாதிமதஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்களில் ; ப்ரதயப்ரகாசப்படுத்தும்.

அன்பிர் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

திருமகளின் மணாளன்நீ! சரணடைந்த அடியார்க்கு
நல்காப்பை அளிக்கின்றாய்! நீசகுணம் அற்றவனாய்
அரும்நல்ல திருக்குணங்கள் அனைத்துக்கும் கடலாவாய்!
அதனாலே உன்னிடத்தே அர்ப்பணித்தோம் எம்பொறுப்பை !
ஒருசெயலே உனக்குளது! ஒளிமயமாய் விளங்கும்உன்
ஒப்பற்ற ஆயுதங்கள் உதவியுடன் உனக்கென்றே
உரித்தான ஆட்சிமையை கணந்தோறும் அரங்கம்போல்
உனக்குற்றத் தலங்களிலே ஊன்றியருள் பெருமானே! 21.

அன்பில் .வி.கோபாலாசாரியார்

          இதில் ஆழ்வார், எம்பெருமானார், வடக்குத் திருவீதிப்பிள்ளை லோக தேசிகன் எல்லாரும் ஏககண்டமாகஉபாய தசையில் ஒரு மிதுனமே உத்தேச்யம்என்று அறுதியிட்டதை அநுஸரித்து, ‘திருமேனி ரக்ஷணம்என்னும் மஹோரதத்தை ஸாதித்துக் கொடுக்கும் பரம் ஶ்ரிய:பதியான உம்மிடமே வைக்கப்படுகிறது' என்கிறார். முதல் சுலோகத்தில் रमासखमधीमहे என்றார். இரண்டாவதில் श्रियाध्युषित वक्षस என்று ஆழ்வார் சரணாகதி பண்ணின 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா' என்னும் பாசுரத்தை ஸூசிப்பித்தார். “மிதுநாயநர்" என்றல்லவோ இவர்களுக்கு ப்ரஸித்தி!
         ஶ்ரிய: பரப்ருடே -- ‘பரிப்ருடம்' என்பது பதியையும் பெருமையையும் சொல்லும். ब्रह्मपरिबृढं सर्वतः (ப்ரஹ்ம பரிப்ருடம் ஸர்வத:) என்பர். எல்லையற்ற பெருமையுள்ளது என்பதுதான் ப்ரஹ்மலக்ஷணம். ‘இந்த ப்ரஹ்மத்வமும் ஸ்ரீயின் அதிகமான கடாக்ஷங்கள் விழுவதால் கிடைப்பது' என்றார் பட்டர். अपाङगा भूयांसोयदुपरि परं ब्रह्मा तदभूत् (அபாங்கா பூயாம்ஸோயதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்) ‘ஶ்ரிய' என்று ஐந்தாம் வேற்றுமையாகக்கொண்டு ஸ்ரீயிடமிருந்து 'பரிப்ருடத்வம்' என்றும் 'ப்ரஹ்மத்வம்' கிடைத்தது.
         ஸம்ரக்ஷகே -- லக்ஷ்மீயுடன் சேர்ந்தே ஸஹ ரக்ஷகனான உம்மிடம், ஸர்வஸித்தாந்தங்களும் இதை ஏகரூபமாக உத்கோஷிக்கின்றன. “ஞானங்கனிந்த நலங்கொண்டு நாடோறும் நைபவர்க்கு வானங்கொடுப்பது மாதவன்" என்ற அந்தாதிப் பாசுரத்தின் உரையில் ஸ்ரீ பிள்ளை லோகஞ்ஜீயரும் 'லக்ஷ்ம்யா ஸஹ' என்ற சுலோகத்தை உதாஹரித்து, ஸர்வேச்வரன் சேதனரைக் கைக்கொள்ளும்போது பெரிய பிராட்டியாரோடே கூடியிருந்தே கைக்கொள்வது என்று ஸகல வேதாந்த ஸித்தமாகையாலே அவளுக்கு வல்லபனான ஸர்வேச்வரன்' என்று ஸாதித்தார்.
         அத:பரம் -- இது முதல்; இந்த க்ஷணம் முதல் என்றபடி.
         ரங்க தாமாதிஷு -- எல்லா திவ்ய தேசங்களும் இப்படியே ரக்ஷிக்கப்பட வேணும்.  


      சுலோகம்  22

कलिप्रणिधिलक्षणैः कलितशाक्यलोकायतैः
        
तुरुष्कयवनादिभिः जगति जृम्भमाणं भयं
प्रकृष्टनिजशक्तिभिः प्रसभमायुधैः पञ्चभिः
         क्षितित्रिदशरक्षकै क्षपय रङ्गनाथ क्षणात् 

கலிப்ரணிதிலக்ஷணை: கலிதஶாக்யலோகாயதை:
        
துருஷ்கயவநாதி³பி⁴: ஜக³தி ஜ்ரும்பமாணம் பயம் |
ப்ரக்ருஷ்டநிஜஶக்திபி⁴: ப்ரஸபமாயுதை⁴: பஞ்சபி⁴:
        
க்ஷிதித்ரித³ஶரக்ஷகை க்ஷபய ரங்க³நாத² க்ஷணாத் ||

ரங்கநாதரங்கநாதனேகலி ப்ரணிதி லக்ஷணை -- கலிக்குப் பிரதிநிதி போன்றவர்களால்; கலித ஶாக்ய லோகாயதை -- சாக்கியர், நாஸ்திகர் இவர்கள் கலந்த; துருஷ்க யவநாதிபி -- துருஷ்கர், யவனர் என்ற ஜாதி விசேஷங்களால்,; ஜகதி -- உலகத்தில்; ஜ்ரும்பமாணம் -- பெருகும்; பயம் -- பயத்தை; ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி -- உயர்ந்த தங்கள் சக்தியை உடையவையும்; க்ஷிதி த்ரிதஶ
ரக்ஷகை -- பூஸுரரை ரக்ஷிப்பவையுமான; பஞ்சபி ஆயுதை -- ஐந்து ஆயுதங்களால்; க்ஷணாத் -- ஓர் க்ஷணத்தில்; ப்ரஸபம் -- பலாத்காரமாக; க்ஷபயநீக்கவேணும்..

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

கொடுங்கலியின் ஏவலர்போல் கிளர்ந்தெழுந்த சாக்கியர்கள்
கடவுள்தனை மறுக்கின்ற சார்வாகர் இவர்களுக்கு
உடன்பிறப்பாம் துருக்கயவநர் ஆகியரால் விளைகின்ற
ஊறுகளால் மறையவர்கள் உற்றபெரும் அச்சத்தை
திடம்கொண்ட ஐவகையாம் திருவாயுத கணம்கொண்டு,
திருவரங்கில் எழுந்தருளி திகழ்ந்திடுமெம் பெருமானே!
சடக்கென்று ஒழித்திட்டு சத்துக்கள் தமைக்காப்பாய்!
தீங்கொன்றும் விளையாமல் துதித்துன்னை வணங்கிடவே! 22.

அன்பில் .வி. கோபாலாசாரியார்
          கலிப்ரணிதி லக்ஷணை -- ரங்கராஜனுக்குப் பயமுண்டாக்குகிறவர் யார்? வேத விப்ரரையும், ஆலயங்களில் திவ்யமங்கள விக்ரஹங்களையும் ஸஹியாத கலி மஹாராஜனுக்குப் பிரதிநிதிகளான சிலர்.
          ஜ்ரும்பமாணம் பயம் -- श्रीरङ्गश्रीश्च वर्धतां (ஸ்ரீரங்க ஸ்ரீஶ்ச வர்த்ததாம்) என்ற எங்கள் கோரிக்கைக்கு நேர் விரோதமாக அங்கேயே பயம் வ்ருத்தியடைந்து கொண்டேயிருப்பது உசிதமோ?

         க்ஷிதி த்ரிதா -- (பகவத் பக்தி மிகுந்த) ப்ராஹ்மணர்கள். பஞ்சபி: ஆயுதை -- சங்கம், சக்கரம், கதை, வில், கத்தி என்ற ஐந்து திவ்யாயுதங்கள். பாஞ்சஜன்யம், ஸுதர்ஶநம், கௌமோதகி, ஶார்ங்கம், நந்தகம் என்று முறையே அவைகளின்  பெயர்கள்க்ஷணாத் -- எங்கள் ப்ரபத்தி, ஆர்த்தப்பிரபத்தி, பலம் உடனே கிடைக்கவேணும். ஒரு க்ஷண விளம்பத்தையும்  ஸஹியோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக