வியாழன், 15 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்


சுலோகம் 27

स कैटभतमोरविः मधुपरागजञ्झा मरुत्
            हिरण्यगिरिदारणः त्रुटितकालनेमिद्रुमः ।
किमत्र बहुना ‍ भजद्भवपयोधिमुष्टिंधयः
            त्रिविक्रम भवत्क्रमअः क्षिपतु  मङक्षु रङ्गद्विषः ॥

ஸ கைடபதமோரவி: மதுபராக³ஜஞ்ஜாமருத்
ஹிரண்யகி³ரிதா³ரண: த்ருடிதகாலநேமித்³ரும: |
கிமத்ர ப³ஹுநா பஜத்³வபயோதிமுஷ்டிம்ய:
த்ரிவிக்ரம பவத்க்ரமஅ: க்ஷிபது மஙக்ஷு ரங்க³த்³விஷ: ||

த்ரிவிக்ரம -- த்ரிவிக்ரமனே!; கைடப தமோ ரவி -- கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்; மது பராக ஜஞ்ஜா மருத் -- மது என்னும் அஸுரனான தூசிக்குப் பெருங்காற்றுப் போன்றதும்; ஹிரண்ய கிரி தாரண -- ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும்; த்ருடித காலநேமி என்னும் வ்ருக்ஷத்தையுடையதும்; அத்ர -- இவ்விஷயத்தில்;  கிம் பஹுநா -- அதிகம் சொல்லுவானேன் (சுருக்கமாக); பஜத் பவ பயோதி முஷ்டிம்தய -- ஆச்ரிதருடைய ஸம்சார ஸமுத்ரத்தை ஒரு சிறங்கை ஜலத்தைப் போல் உறிஞ்சி விடுவதுமான; ஸ: -- அந்த (அவ்விதமான); பவத் க்ரம -- உம் பராக்ரமம்; மங்க்ஷு -- சீக்கிரத்தில்; ரங்கத்விஷ -- ரங்க க்ஷேத்ரத்தின் விரோதிகளை; க்ஷிபது -- நிரஸநம் செய்யட்டும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

இருளன்ன கைடபனை இரவியைப்போல் அழித்திட்டாய்!
சுழற்காற்றில் புழுதியைப்போல் சிதைந்தழிந்தான் மதுவரக்கன்!
இரணியனை மலையைப்போல் பிளந்தழித்தாய் திருவரங்கா!
மரத்தைப்போல் முறித்திட்டாய் காலநேமி அரக்கன்தனை!
உரைக்கமேலும் வேண்டாவே உன்றனது வீரந்தனை!
உன்றனையே புகலாக உற்றவரின் துயர்க்கடலை
உறிஞ்சிவிடும் உன்வலிமை அரங்கத்தை நலிந்திடவே
உற்றபகை அனைவரையும் ஒழித்திடட்டும் விரைவினிலே! 27.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         ஸங்கல்ப ஸூர்யோதயம் இரண்டாம் அங்கத்திலும் இந்தச் சுலோகம் உளது. உம் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தவர் அத்திருவடியாலேயே அபயம் பெறுவது உசிதமாகையால், உம் உலகளந்த திருவடி பலத்தால் எங்கள் சத்ருக்கள் அடங்கி நாங்கள் அபயம் பெறவேணும். "லோகவிக்ராந்தமான உம் சரணங்களை ஶரணம் பற்றினோம்"
         முன்பு மருத் தரணி பாவக என்றார். இங்கு ஸூர்ய ஸூர்யனான நீர்தான் ஸூர்யன். காற்றுக்கும் சண்டமாருதமான நீர்தான் பெருங்காற்று என்கிறார். முன் இரண்டாம் சுலோகத்தில் ஜகத்தின் பாபங்களையெல்லாம் உண்ணும் பெருவாயன் என்றார். இங்கு பாபக்கடலை உளிஞ்சுபவன் என்கிறார். தொடங்கியதுபோல முடிக்கிறார். எங்கள் பாபக்கடலை உம் திருவடி யல்லால் மற்றொன்று கடக்கவல்லதல்ல. ஆயுதங்களும் வேண்டாம். யுத்தமும் வேண்டாம். உம் திருவடி பலமே போதும்.
         ஹிரண்ய கிரி தாரண -- மலையைக் கிழிக்க நகங்களே ஆயுதம். .27.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக