அபீதிஸ்தவம்
சுலோகம் 29.
प्रबुद्धगुरुवीक्षण
प्रथितवेङ्कटेशोद्भवां
इमां अभयसिद्धये पठत रङ्गभर्तुः स्तुतिम् ।
भयं त्यजत भद्रमित्यभिदधत् स वः केशवः
स्वयं घनघृणानिधिः गुणगणेन गोपायति ॥
इमां अभयसिद्धये पठत रङ्गभर्तुः स्तुतिम् ।
भयं त्यजत भद्रमित्यभिदधत् स वः केशवः
स्वयं घनघृणानिधिः गुणगणेन गोपायति ॥
ப்ரபு³த்³த⁴கு³ருவீக்ஷண ப்ரதி²தவேங்கடேஶோத்³ப⁴வாம்
இமாம் அப⁴யஸித்³த⁴யே பட²த ரங்க³ப⁴ர்து: ஸ்துதிம் |
ப⁴யம் த்யஜத ப⁴த்³ரமித்யபி⁴த³த⁴த் ஸ வ: கேஶவ:
ஸ்வயம் க⁴னக⁴்ருணாநிதி⁴: கு³ணக³ணேன கோ³பாயதி ||
இமாம் அப⁴யஸித்³த⁴யே பட²த ரங்க³ப⁴ர்து: ஸ்துதிம் |
ப⁴யம் த்யஜத ப⁴த்³ரமித்யபி⁴த³த⁴த் ஸ வ: கேஶவ:
ஸ்வயம் க⁴னக⁴்ருணாநிதி⁴: கு³ணக³ணேன கோ³பாயதி ||
ப்ரபுத்த --
சிறந்த ஞானமுள்ள; குரு -- ஆசார்யனுடைய; வீக்ஷண -- கடாக்ஷத்தால்; ப்ரதித -- யஶஸ்ஸைப்
பெற்ற; வேங்கடேச -- வேங்கடேசரிடமிருந்து; உத்பவாம் -- தோன்றிய; இமாம் -- இந்த; ஸ்துதிம்
-- ஸ்தோத்ரத்தை; ரங்கபர்த்து -- ரங்கப்பிரபுவின்; அபயஸித்தயே -- அபயம் ஸித்திப்பதற்காக;
(கோயில் நிர்பயமாயிருப்பதற்காக); படத -- படியுங்கோள்; பயம் -- பயத்தை; த்யஜத -- விட்டுவிடுங்கள்;
(அஞ்சல் ! அஞ்சல்!); வ -- உங்களுக்கு; பத்ரம் -- சுபம் (உண்டாகட்டும்); இதி -- என்று;
அபிததத் -- சொல்லிக்கொண்டு; கனக்ருணா நிதி -- கருணாநிதியான ; ஸ -- அந்த; கேஶவ -- (ப்ரஹ்ம,
ஈசாதிகளுக்குக் காரணமான) கேசவன்; குணகணேன -- தம் கல்யாண குணங்களால்; கோபாயதி -- ரக்ஷிப்பான்.
அன்பில் ஸ்ரீனிவாசன்
ஸ்வாமி
உயர்ஞான குருக்கள்தம் உளம்குளிரும் நோக்குதன்னால்
உறும்புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்!
விட்டகலும் பயமெல்லாம் விரைவாக உமையெல்லாம்!
பயந்தன்னை ஒழித்திடுவீர் பெரும்நலனே உறுவீரென
பரிந்துரைத்த மிகுங்கருணைப் பெருநிதியாம் கேசவனே
உயர்ந்தநல்ல பண்புகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தால்
உம்மையெலாம் எவ்விதத்தும் காத்தருள்வான் தானாவே! 29.
உறும்புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்!
விட்டகலும் பயமெல்லாம் விரைவாக உமையெல்லாம்!
பயந்தன்னை ஒழித்திடுவீர் பெரும்நலனே உறுவீரென
பரிந்துரைத்த மிகுங்கருணைப் பெருநிதியாம் கேசவனே
உயர்ந்தநல்ல பண்புகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தால்
உம்மையெலாம் எவ்விதத்தும் காத்தருள்வான் தானாவே! 29.
அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்
இந்த ஸ்துதி ஸ்ரீரங்கபர்த்தாவான ரங்கநாதன்
விஷயமென்றும், இதன் ப்ரயோஜனம் அரங்கத்திற்கும் ரங்க பர்த்தாவுக்கும் அபயஸித்தியே என்றும்
விஷயம் ப்ரயோஜனம் இரண்டிலும் வரவேண்டும் என்பதற்காக
"ரங்கபர்த்து" என்னும் பதம் 'அபயஸித்தயே', 'ஸ்துதிம்' என்ற இரண்டுக்கும்
நடுவில் இருக்கிறது. அவன் விஷயமான நமது அச்சம் தீருவதும் அவனைத் துதித்தைதான் ஸித்திக்க
வேணும்.
இந்தத்துதி தோன்றினது 'கவிஸிம்ஹம்', 'வேதாந்தாசார்யர்'
என்று ப்ரஸித்தி பெற்ற வேங்கடேசனிடமிருந்து. அந்த பிரஸித்திக்குக் காரணம் ப்ரபுத்தர்களான
(ஸர்வஜ்ஞர்களான) ஆசார்யர்களின் கடாக்ஷம்.
பயம் த்யஜத பத்ரம் -- அபய முத்ரை காட்டுவதோடு
மட்டும் நிற்காமல், அஞ்சல் என்று பேசுவார். பாலகாண்டத்தில் அஶ்வமேதத்தில் ப்ரஹ்மா முதலிய
தேவர்கள் துதிக்கையில், भयं त्यजत भद्रं वः (பயம் த்யஜத, பத்ரம் வ:) என்று அபயமளித்த வார்த்தையையே
இங்கே அமைக்கிறார்.
குணகணேன கோபாயதி -- அவருடைய கல்யாண குணங்களின்
கூட்டங்களின் அனுபவமே உங்களுக்கு ப்ரயோஜனம் . அந்த குணங்களை அனுபவிக்கத் தருவதே எங்களுக்கும்
ரக்ஷணம். सोऽश्नुते सर्वान् कामान् (ஸோ ஶ்நுதே ஸர்வாந் காமாந்) ஸ்வயம் அபிததத் -- யதிராஜனுடைய
திருநாமத்தையும் ஸரஸ்வதீரஸத்தையும் பேசவே, பெருமாளும் வாய்திறந்து பேசுவார். 'பேரருளாளர்'
போல் சோதி வாய்திறந்து பேசுவார் என்பதைக் காட்ட கனக்ருணாநிதி -- அருள்நிரம்பிய நிதி
என்கிறார். முதலில் துர்யம் மஹ என்று ஆரம்பித்ததுபோல் முடிவில் கைடபதமோரவி மதுபராகஜஞ்ஜாமருத்
என்று மத்ஸ ஹம்ஸ ஹயக்ரீவாவதாரங்களைப் பேசுகிறார். मत्स्याश्वकच्छप (மத்ஸ்ய அஶ்வ கச்சப) என்று சுகரும் மத்ஸ்யாவதாரத்தோடு
'அஶ்வ”அவதாரத்தையும் அனுஸந்தித்தார். "ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நாராயண கீதாசார்யாத்
யவதாரங்களாலே தானே வெளி நின்று தத்வ ஹிதங்களைப் பிரகாஶிப்பித்தும்" என்று ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம்
குருபரம்பராதிகாரம்.
கேஶவ -- அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம்
என்று முதல் சுலோகத்தில் விஸ்தரித்துக் கூறியதை இந்த ஒரு பதத்தால் சுருங்கக் காட்டுகிறார்.
न दैवं केशवात्
परं (ந தைவம் கேஶவாத் பரம்) என்று மஹரிஷிகளின் ஸபையில் வேதாசார்யன்
தம் கையைத் தூக்கி சபதம் செய்தது ஸூசிப்பிக்கப் படுகிறது. அப்படியே "க:"
என்ற ப்ரஹ்மாவின் பெயர், நான் ஸர்வதேஹீக்களுக்கும் ஈசன், நாங்கள் இருவரும் உம் திருமேனியிலிருந்து
பிறந்தவர்கள். ஆகையால் உமக்குக் "கேஶவன்" என்று திருநாமம் என்று எதிரிகையாலே
வீடு தீட்டானபடி அவர்கள் சொன்ன பாசுரங்களையே ஸூசிப்பித்து ஸ்திரப் படுத்துகிறார்.
அபீதி: என்று தொடங்கி ஓபாயதி என்று முடிப்பதால், அபயத்தை விரும்புவோருக்கு
இந்த ஸ்தோத்திரத்தால் த்ருப்தனான ஸர்வேஶ்வரன் அபய ப்ரதானம் செய்து ரக்ஷிக்கிறான் என்ற
ப்ரஸித்தி சொல்லப் படுகிறது.
कवितार्किकसिंहाय
कल्याणगुणशालिने ।
श्रीमते वेङ्कटेशाय वेदान्तगुरवे नमः ॥
श्रीमते वेङ्कटेशाय वेदान्तगुरवे नमः ॥
கவிதார்க்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ||
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ||
அபீதிஸ்தவம் நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக