ஞாயிறு, 19 ஜூலை, 2009
ந்யாஸதசகம்
( பகவந்: -- ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்ஸு என்கிற ஆறு குணங்கள் நிறைந்த எம்பெருமானே! தேவி: --ஸ்ரீபூமி நீளைகள், பிராட்டிமார்கள்: பூஷண -- திருவணிகலன்கள்: திருவாபரணங்கள்: ஹேதி -- திவ்யாயுதங்கள்: ஆதி - திருவணுக்கள் முதலானவைகளால்: ஜுஷ்டஸ்ய -- அடையப் பெற்ற: தவ -- தேவரீருடைய: நிரபராதேஷு -- குற்றமற்ற : கைங்கர்யேஷு --குற்றேவல்களில்: அடிமைகளில்: மாம் -- அடியேனை: நித்யம் -- ஒழிவில் காலம் எல்லாம், எல்லாக் காலத்திலும், நியுங்க்ஷ்வ -- நியமித்தருள வேண்டும், விநியோகித்துக் கொள்ளுக.
அகில விபூதிகளுடன் கூடிய தேவரீர் விஷயத்தில் அபராதம் இல்லாத கைங்கர்யத்தை அடியேன் செய்யும்படி நியமித்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்.
ஸ்ரீபூமி நீளைகளாகிற பிராட்டிமார்களாலும், திவ்யாபரணங்களாலும், திவ்யாயுதங்களாலும் அடையப் பெற்று அதனால் ஆநந்தம் அடையும் தேவரீரது, அபராத லேசமும் புகவொட்டாத கைங்கர்யங்களில் நித்யமாக அடியேனை இறுத்திக் கொள்ள வேணும்.
ஷாட்குண்யபரிபூரணனே! அகில ஜகத்தையும் ஆபரணமாகவும், ஆயுதமாகவும் கொண்டு ஸர்வ ஜகத் சரீரகனாய் தேவிமார்களுடனும் ஸகல கல்யாண குணங்களுடனும் கூடிய தேவரீர் விஷயத்தில் இங்குச் சரீரம் உள்ளதனையும், பின்னர் யாவதாத்மபாவியாகவும் எவ்விதக் குற்றமும் இல்லாத கைங்கர்யங்களைச் செய்யும்படி அடியேனை நியமித்தருள வேண்டும்.
[இனி பந்தல்குடியாரின் வியாக்கியானம் தொடர்கிறது. குறைந்தது 7 நாட்களாவது எழுத வேண்டி வரும். பொறுத்தருள்க]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக