நேற்றைய தொடர்ச்சி
"பகவந்நாராயணாபிமதாநுரூப ஸ்வரூபரூப குணவிபவைச்வர்ய, சீலாத்யநவதிகாதிசயாஸங்யேயகல்யாணகுணகணாம் பத்மவநாலயாம் பகவதீம், ஸ்ரீயம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்யமஹிஷீம், அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்யசரண்யாம் அநந்யசரண:சரணமஹம் ப்ரபத்யே"
[பகவானான நாராயணனுக்கு இஷ்டமாகவும், தகுந்ததாகவும் உள்ள ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி, ஐச்வர்யம், சீலம் முதலான எல்லையற்ற மேன்மையையுடையவையும், கணக்கற்றவையுமான கல்யாண குணகணங்கள், இவற்றை உடையவளும், பத்மவனத்தை இருப்பிடமாக உடையவளும், பூஜிக்கத்தக்கவளும், எப்போதும் எம்பெருமானைவிட்டு அகலகில்லாதவளும், தோஷமற்றவளும், தேவதேவனான எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியும், எல்லாவுலகிற்கும் தாயாயிருப்பவளும், விசேஷமாக அடியேனுக்கு அன்னையாயிருப்பவளும்,கதியற்றவர்களுக்குக் கதியாயிருப்பவளுமான ஸ்ரீதேவியை, வேறொரு கதியற்ற அடியேன் சரணம் அடைகிறேன்.] என்பது சரணாகதி கத்யம் (1)
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் உள்ள சில பங்க்திகள் பின்வருமாறு:---
"62. த்ரிககுப்தாமா -- மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்ட ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களுக்கும் இடமாயிருப்பவர். இந்த ஆறு குணங்களிலும் இரண்டிரண்டு ஒவ்வொரு கூறாக வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றியே, 'த்ரியுகர் -- மூன்று இரட்டையுள்ளவர்' என்று திருநாமம். அல்து 'த்ரிககுத் + தாமர்' என்று இரண்டு நாமமுமாம். த்ரிககுத் -- மூன்று கொண்டைகளோடு கூடிய வராஹாவதாரத்தைச் செய்தவர். தாமா -- ஒளி உருவமானவர்."
"123. மஹாதபா:-- சிறந்த ஜ்ஞானமுள்ளவர். ஆறு குணங்களில் , ஞானம், பலம், என்னும் இரண்டு குணங்கள் ஸங்கர்ஷணன் கூறுகளாக வகுக்கப் பட்டுள்ளன. அவற்றில், ஞானமாவது -- ஜனனமரணங்களாகிய ஸம்ஸாரமார்க்கத்தில் அநாதிகாலமாக நடந்துகொண்டு வருந்தும் ஜீவராசிகளுக்கு ச்ரமபரிஹாரம் செய்வதற்காக அந்த அந்தக் கார்ய காரணங்களை அறிந்து கார்ய வர்க்கங்களைத் தம்தம் காரணங்களில் அடக்குவதற்குரிய ஸர்வஜ்ஞத்வம்.
"124. ஸர்வக:-- ஸம்ஹரிக்கப் பட்டனவற்றையெல்லாம் தாம் அடைந்து வஹிப்பவர்; இதனால் பலம் என்னும் இரண்டாம் குணம் குறிப்பிக்கப் பட்டது. பலமாவது -- அப்படி ஸம்ஹரிக்கப் பட்டவற்றையெல்லாம் தம்மிடத்தில் வைத்துத் தாங்குதற்குரிய வன்மை. இது மேற்சொல்லிய ஜ்ஞானத்திற்கு முக்யமான அங்கம்.
"125.ஸர்வவித்:-- ஸம்ஹரிக்கப் பட்டவற்றை யெல்லாம் திரும்பவும் படைத்துக் கார்யங்களான ப்ரபஞ்சங்கள் அனைத்தையும் அடைகிறவர். இங்கு ப்ரத்யும்நன் என்னும் வ்யூஹம் குறிப்பிக்கப்படுகிறது. ஐச்வர்யம் வீர்யம் என்னும் இரண்டு குணங்கள் ப்ரத்யும்ந வ்யூஹத்தின் கூறுகளாக வகுக்கப் படுகின்றன. அவற்றுள், ஐச்வர்யமென்பது -- விசித்ரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை வெளிப்படுவது. அதனை இந்த நாமம் தெரிவிக்கிறது.
"126. பானு:-- எல்லாவற்றையும் படைத்தும் தாம் விகாரமில்லாமல் விளங்குபவர். இது வீர்யம். வீர்யமாவது -- ஒரு விகாரமும் தன்னிடத்தில் சேராமலிருக்கும் ஸாமர்த்தியம்.
"127.விஷ்வக்ஸேந:-- எங்குமுள்ள ஜனங்கள் தம்மை ரக்ஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி செய்பவர். இது ரக்ஷிப்பதைத் தொழிலாகவுடைய அநிருத்த வ்யூஹம். சக்தி, தேஷஸ் என்னும் இரண்டு குணங்கள் அநிருத்த வ்யூஹத்திற்குச் சிறந்தவைகளாக வகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் சக்தியாவது -- எதையும் காப்பாற்றும் ஸாமர்த்தியம். அதனை இந்த நாமம் குறிப்பிக்கிறது.
"128. ஜனார்த்தன:-- தமது ரக்ஷணத்திற்கு விரோதம் செய்யும் சத்ருஜனங்களை உதவிதேடாமல் அழிப்பவர். இங்கு இரண்டாவது குணமாகிய தேஜஸ் குறிப்பிக்கப்படுகிறது. தேஜஸ் என்பது -- தனக்கு ஓர் உதவியைத் தேடாது கார்யத்தை முடிக்கும் திறமை.
பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் ப்ரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப் பட்டிருந்தாலும் அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்துரைத்தது.
"பரஸ்வரூபம் அகில ஹேயப்ரத்யநீகத்வத்தாலும் கல்யாணைகதாநத்வத்தாலும் ஸ்வேதரஸமஸ்த வஸ்துவிலக்ஷணமாய், விபுத்வாத்தேசத: பரிச்சேதரஹிதமாய் நித்யத்வாத் காலத:பரிச்சேதரஹிதமாய் ஸர்வமும் தனக்கு ப்ரகாரமாகத்தான் ப்ரகாரியாய்த் தனக்கு ஒரு ப்ரகார்யாந்தர மில்லாமையாலே வஸ்துபரிச்சேத ரஹிதமுமாய் ஜ்ஞாநாநந்தமயமாய் ஜ்ஞாநபலைச்வர்ய சீலாத்யநந்த கல்யாணகுண கண மஹோததியாய் ஸ்ரீய:பதியாய் ஸ்வேதரஸமஸ்தத்தையும் வ்யாபிக்குமிடத்தில் அப்ராக்ருதமாய் சுத்த ஸத்வமயமாய் ஸ்வாஸாதாரணமாய் புஷ்பஹாஸ ஸுகுமாரமாய் புண்யகந்த வாஸிதாநந்ததிகந்தராளமாய் ஸர்வாபாச்ரயமாயிருந்துள்ள திவ்யவிக்ரஹம்போலே வ்யாபித்து தரித்து நியமித்து இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகமாய்க்கொண்டு சேஷியாயிருக்கும்" [ஈடு. முதல் ஸ்ரீய:பதி]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக