சனி, 18 ஜூலை, 2009

பார்த்தேன் படித்தேன் பகிர்ந்தேன்



இரண்டு நாள் சென்னையில் இருந்தேன். வழக்கமான திருவல்லிக்கேணி நடைபாதை வியாபாரி இது கல்லூரி சீஸன் எனவே மற்ற புத்தகங்களை இரண்டு மாதங்கள் வெளியே எடுக்க மாட்டோம் என demand and supply theoryக்கு எளிய விளக்கம் அளித்தார். சற்று ஏமாற்றத்துடன் நண்பர் வீட்டிற்குச் சென்றேன். அங்கு ஒரு நல்ல நூல் கண்ணில் பட்டது. ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தார்கள் பலருக்கும் தெரிந்திருக்கக் கூடிய சுண்டப்பாளையம் ராம பத்ராச்சார்யார் எழுதிய சித்ர காவ்யம் என்னும் நூல் அது. ஸமஸ்க்ருத நூல். ஆகவே அடியேனுக்கு சுத்தமாக விளங்காத ஒன்று. இருந்தாலும் அதில் உள்ள சித்ர பந்தங்கள் மனதைக் கவர்ந்தன. நண்பரின் அனுமதியோடு சில பந்தங்களை வருடிக்(scan) கொண்டேன். அவை இங்கு உள்ளன. 1892ல் இயற்றப் பட்ட அந்த நூலை கையெழுத்துப் பிரதியாக இருந்ததை பி.கே.ஸ்ரீநிவாசன் மிகவும் சிரமப்பட்டு நூல் வடிவாக்கி ஸ்ரீ சம்பத் பதிப்பிக்க ஸ்ரீமத் ஆண்டவனின் அழகிய ஸ்ரீமுகத்துடன் 2000ல் வெளியாகியுள்ளது. ஸமஸ்க்ருதம் அறிந்தோர் அவஸ்யம் படிக்க வேண்டிய இந்நூல் Prof. K. Sampath, 3, Karthick Flats, 27/3, Nallappan Street, Mylapore, Chennai 600004 என்ற முகவரியில் கிடைக்கும். விலை குறிப்பிடப் படவில்லை. கிட்டத்தட்ட 100 பந்தங்கள் உள்ளன.




இன்று மின்வாரியத்தில் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் அவரது அதிகாரியுடன் ஏதோ முக்கியமான வேலையில் இருந்தார். அவருக்காக அங்கு காத்திருந்த போது நண்பரின் மேசை மேல் அவர் சென்று வந்த ஒரு பயிற்சிக் கையேடு இருந்தது. புரட்டிப் பார்த்தேன். அதில் கண்ணில் பட்டு ரசித்ததும் அனேகமாக நம் எல்லாருக்கும் தேவையானதும் ஆகிய ஒன்றைப் படித்தேன். நீங்களும் படியுங்களேன்.

TENSION

The moment you are in TENSION
You will loose your ATTENTION
Then you are in total CONFUSION
And you will feel IRRITATION
Then you spoil personal RELATION
Ultimately you won't get COOPERATION
Your BP may also raise CAUTION
And you have to take MEDICATION

Instead

Understand the SITUATION
And try to think about SOLUTION
Many problems will be solved by DISCUSSION
Which will work out better in your PROFESSION
Don't think it is our free SUGESSTION
It is for your PREVENTION
You will never come across TENSION

படித்தது, ரசித்தது எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் போன காரியம் ? அவர்கள் வாதங்களையே வைத்துக் கொண்டு எங்கள் நியாயங்களை பரிசீலிக்கக்கூடத் தயாராக இல்லாத அந்த அதிகாரிகள் போக்கினால் டென்ஷனுடன் வந்ததுதான் நிஜம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக