சனி, 24 ஏப்ரல், 2010
ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ஸ்ரீராமன்.
இன்றைய 4ம் நாள் உத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. காலை 10.30 மணிக்கு வீதிப் புறப்பாட்டிற்குப் பிறகு ஆச்ரமம் எழுந்தருளிய இராமன் அங்கு விசேஷ திருமஞ்சனம் கண்டருளி, மாலையில் சாற்றுமுறை கோஷ்டிக்குப் பின், கோவிலிலிருந்து வந்து இணைந்து கொண்ட பெருமாளுடன், ஆளுக்கொரு கருட வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் சென்றடைந்தார். ததீயாராதன கைங்கர்யங்களுடன் மண்டகப்படி வேலைகளும் சேர்ந்து இன்று பூரா பிஸி. இப்போதுதான் (11.30 ) முடிந்து வீட்டிற்குள் நுழைந்தேன். சோர்வு மிகுதியால் இரண்டே படங்கள் இப்போது. இரண்டாவது படம், கிட்டத்தட்ட இப்போதைய அடியேன் மனநிலையை பிரதிபலிக்கும். நாள் பூராவும் கூட இருந்தவர் இனி அடுத்த வருடம் தான் வரப்போகிறார். மீண்டும் அந்த பாக்யத்தை அடியேனுக்கு அளிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதனாலே மனதுக்குள் ஒரு வெறுமை.
திருப்புல்லாணி சித்திரை உத்ஸவம் 3ம் நாள்
மோகனரங்கரின் அந்தாதியில் மது உண்ட வண்டாய் மயங்கிக் கிடக்கும் ரவிசங்கர் எப்படியும் அருமையான பின்னூட்டங்கள் அளிக்கப் போகிறார். அப்புறம் நான் எதற்கு இன்றைய மூன்றாம் நாளில் காலைப் புறப்பாட்டையும், இரவில் அனும வாகனப் புறப்பாட்டையும் பற்றி சப்பென்று ஒரு முன்னோட்டம் தரவேண்டும்? இன்று படங்கள் மட்டுமே இங்கு.
லேபிள்கள்:
திருப்புல்லாணி உத்ஸவங்கள்
வியாழன், 22 ஏப்ரல், 2010
திருப்புல்லாணி சித்திரை உத்ஸவம் 2ம் நாள் இரவில்
பங்குனி மாதம்தான் விலாவாரியாக எழுதியாச்சே! அதையே சித்திரையிலும் எழுத வேண்டுமா என நினைத்து படங்களை மட்டும் இங்கு இடுவோம் என நினைத்தால், "அவன்" என்னைக் கொஞ்சமாவது எழுத வைக்கிறான். பாருங்களேன்! இன்று இரண்டாம் திருநாள்! சிவகங்கை சமஸ்தான மண்டகப்படிசமஸ்தானம் சார்பில் யாராவது ஒருவர் வருவார். மண்டகப்படிகளிலேயே மிகவும் சீக்கிரமாகப் புறப்பாடு ஆகிவிடும் மண்டகப்படி இது. ஏழரை மணிக்கெல்லாம் புறப்பாடு சாற்றுமுறைத் துவக்கத்துடன் ஆரம்பமாகி விட்டது. அப்படிப் புறப்பாடு ஆனவுடன்,,நடுவில் எங்கும் நிற்காமல், தேரடியில் ராஜ மரியாதை(அதாவது அவர்கள் பிரதிநிதியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு) ஆன பிறகே மற்றவர்கள் கண்டருளப் பண்ண முடியும். இது தொன்று தொட்டு வரும் மரபு. கோவிலுக்கும் தேரடிக்கும் நடுவில் தேசிகன் ஸந்நிதி, வானமாமலை மடம் ஆகியவை இருந்தாலும் பெருமாள் திரும்பி வரும்போதுதான் இங்கு ஒரு நிமிடம் நின்று கண்டருளப்பண்ணப் படும் உபகாரங்களை ஏற்றுக் கொண்டு செல்வார். ஆனால் இன்றோ, கோவிலை விட்டுக் கிளம்பி சரியாக தேசிகன் ஸந்நிதி வாயிலில் திடீரென ஜெனரேட்டர் பழுதாகி நின்று விட்டார். சுமார் 20 நிமிடங்கள் கழித்தே பழுது சரியானது. எங்களுக்கெல்லாம் ஒரு கற்பனை! ஒருவேளை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ ராமனுக்கு மட்டுமே கேட்கிற அளவில் தான் இயற்றிய "ரகுவீரகத்ய"த்தை ஸேவிக்க, அதைக் கேட்பதற்காகவே ராமனும் தாமதம் செய்தானோ என்று. வெளிக்கதவை மட்டும் பூட்டிவிட்டு ததியாராதன கைங்கர்யங்களை கவனிக்கச் சென்றிருந்த தேசிகன் ஸந்நிதி ஆராதகர் ஸந்நிதி வாயிலில் ராமன் நிற்பது தெரிந்து ஓடிவந்து கதவைத் திறந்த சில நிமிடங்களில் பழுதும் சரியானது. தன் சரிதத்தைப் பூராவும் கேட்டுவிட்டாரோ என்னவோ ராமனும் திருவீதிப் புறப்பாட்டைத் துவக்கி தொடர்ந்தார். சில படங்கள் இங்கு!
லேபிள்கள்:
திருப்புல்லாணி உத்ஸவங்கள்
சித்திரை உத்ஸவம் 2ம் நாள் காலை
அருளிச் செயலைத் தொடரும் ஸ்ரீராமன். ஸ்ரீமத் ஆண்டவன் நியமனத்தில் உத்ஸவ முழுமைக்கும் பாராயணத்துக்கு வந்திருக்கும் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகளுடன் பெரியநம்பி வம்சத்தாரின் பிரதிநிதி ஸ்ரீ ரகுபதி அய்யங்கார் ஸ்வாமி . இவரது ஏற்பாட்டில் ஆழ்வார்திருநகரியிலிருந்து இருவர் பிரபந்த பாராயண கைங்கர்யத்துக்கு வந்துள்ளனர்.
திருவீதிப் புறப்பாட்டில்
சித்திரத்தில் எழுதவொண்ணா எங்கள் பேரழகன்
திருமங்கை மயங்கியது ஏன் என்று புரிகிறதா!
வடமொழியாய் நின்றானைப் பின் தொடரும் வேதங்கள்
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகள்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதைப் புரிய வைத்தவர்
பார்வைக்கு வாமனர்
வேதம் ஓதுகையில் திரிவிக்கிரமன்
லேபிள்கள்:
திருப்புல்லாணி உத்ஸவங்கள்
"The Hindu" on Thiruppullani Chitthirai Brahmothsavam
Here is a report in "The Hindu" dated 22/4/2010 on the Chiththirai Brahmothsavam for Sri Pattabi Rama Swamy at Thiruppullani.
லேபிள்கள்:
படித்தேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)