ஞாயிறு, 28 மார்ச், 2010

அன்னமாய் நூல் பயின்றார் ஏறி வரும் அன்ன வாகனம்

இன்று 7ம் திருநாள். நேற்றுதானே திருக்கல்யாணம் ஆயிற்று! அதனால் தினமும் காலையில் நடக்கும் புறப்பாட்டுக்கு இன்று ஒரு நாள் ரெஸ்ட்.

மாலையில் சூர்ணோத்ஸவம். ஸ்ரீதேவி பூதேவிகளுடன் பெருமாள் திருவீதிப் புறப்பாடு. அதன் பின்னே ஒரு அற்புதமான திருமஞ்சனம். பாஷ்யம் ஐயங்கார் என்று ஒரு ப்ருஹஸ்பதி இந்த ஊரில் இருந்தார். அவரது மண்டகப்படி. அவருக்குப் பின் அவர்கள் குடும்பத்தார் நடத்துவது. இந்த வருடம் 55வது ஆண்டு மண்டகப்படி. திருமஞ்சனம் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மெச்சும்படி அமைவது இந்த ஒரு நாள். மற்ற எல்லா நாட்களிலும் பெருமாளுக்கு மட்டுமே திருமஞ்சனம். 7ம் திருநாள் மட்டுமே உபய நாச்சிமாருடன் திருமஞ்சனம். இப்போது 2003க்குப் பிறகு விடாயத்தி உத்ஸவத்தில் பெருமாள் நாச்சிமாருடன் ஸ்ரீவானமாமலை மடம் எழுந்தருளி அங்கும் திருமஞ்சனம் நடக்கிறது. 4ம் திருநாள் திருமஞ்சனத்தைப் போலவே இதையும் உலகுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால், காமரா, Zi6 இரண்டுமே சார்ஜ் இல்லாமல் ஏமாற்றமாகி விட்டது. பெருமாளே என நினைத்தால் ஜெயா டிவி குழு வந்து நிற்கிறது. ஒரே இன்ப அதிர்ச்சி. அவர்களுடைய உயர் ரக காமராவில் பதிவாகியுள்ள இந்த திருமஞ்சனம், சூர்ணோத்ஸவம், பின் நடந்த திருவீதிப் புறப்பாடு எல்லாம் அனேகமாக இந்த வாரத்துக்குள்ளேயே ஒளிபரப்பாகும் என்று சொல்கிறார்கள். தவறாமல் பாருங்கள்.

ஆக மாலையில் சூர்ணோத்ஸவப் புறப்பாடு, அதன்பின் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் திருமஞ்சனம், அதன்பின் சாயரக்ஷை பூஜைகள், அதன்பின் சாத்துமுறை கோஷ்டி அப்புறம் திருவீதிப் புறப்பாடு என்பதாலே 7ம் திருநாள் மண்டகப்படி எப்போதுமே அர்த்த ராத்திரியில்தான். இப்போதாவது 11 மணிக்குள் புறப்பாடு ஆகிவிடுகிறது. அடியேன் சிறுவனாயிருக்கும் போதெல்லாம் இரவு 2மணிக்கு மேல்தான் புறப்பாடு ஆகும். நாங்கள் தூங்கி வழிவோம். ஆனால் பாவம் அந்த வாகனத்துக்கு நாங்கள் வைத்த பெயர் தூங்குமூஞ்சி வாகனம் என்று. அது என்ன வாகனம்? அதுதான் தலைப்பிலேயே சொல்லிவிட்டேனே!அது அம்சமான ஹம்ஸ வாகனம்.

தாவு தனிமத்தள முருகு தவில்பேரிகை
      சமுத்திரம் போல் முழங்கச்
சங்கீத ராகங்கள் கந்தருவர் பாடவே
      சாமரை யிரட்ட வெண்டிசைக்
காவலரு, நாவலரு, மூவுலக மாதருங்
     கைகுவித் தேத்தி வாழ்த்தக்
கொடியசுராதி யரிராக் கதர் கணங்கள்கெற்
    பங் கலங்கத் துலங்கு
பூவலருமான சப்பொய் கையுட் பழகிவரு
     புண்டரீகத் தயன் வரும்
பொற்சிறைச் செங்காற் பசிய கூட்டன்ன
    மொடு புணர்ச்சிபழகுதல் மருவிவாழ்
சேவலன்னத்தின் மேல் வீற்றிருந் தாயிரந்
    தினகரோ தய மென்னவே
தெரிதமிழ்ப் புல்லாணிவேதி வருசெக நாதா
    தெய்வச் சிலைக் கடவுளே.

P1010508

என்று வாகன மாலை போற்றும் அருமையான அன்ன வாகனத்தின் மீது அன்னமாய் நூல் பயின்றாரான P1010510பெருமாள் திரு வீதி கடாக்ஷித்தார்.

 

 

 

 

ஏழாம் நாள் உத்ஸவங்களை வலையேற்றிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எட்டாம் நாளில் குதிரை ஏறி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறார். அன்றே ஸ்ரீதேசிகன் பாடினாரே , திருச்சின்னமாலையில், யானை பரி தேரின்மீது அழகர் வந்தார் என்று ,

P1010511

அவ்வளவு சௌந்தர்யமாய் வீதி வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நேரத்தில் கள்ளன் பிடிபடப் போகிறார். P1010514 பிடிபட்டு வாடி வருந்தி நாரணா எனும் நலம் தரும் நாமத்தைக் கண்டுகொள்ளப் போகிறார். அங்கு போக வேண்டும். பட்டயம் வாசிக்கின்றவர் மிக மெல்லிய குரலில் வாசிப்பதைக் கேட்க வேண்டும். அதன்பின் பெருமாள் நாளைய தினத்துக்காக திருத்தேரைக் கடாக்ஷிப்பதைக் கண்டு ஆனந்தப் பட வேண்டும்.P1010516 எனவே ஒரு சின்ன பிரேக் . மீண்டும் ஏழாம் நாளில் மேலும் சிலவற்றையும், எட்டாம் நாளில் பாக்கியையும் பகிர்ந்து கொள்ள இன்றே வருவேன். (KRS ! I am sorry. கடைசி வரை நீங்கள் கேட்ட பட்டயத்தைப் பெறவே முடியவில்லை)

11 கருத்துகள்:

  1. பெயரில்லா11:22 PM

    திருமஞசனம் என்றால் என்ன?
    சூர்ணோத்ஸ்வம் என்றால் என்ன?
    சாயரக்‌ஷை பூஜைகள் என்றால் என்ன?
    சாத்துமுறை கோஷ்டி யார்? அவர்கள் என்ன செய்வார்கள்?
    கள்ளன் யார்? அவரை ஏன் பிடிக்கிறார்கள்? அவர் என்ன திருடினார்? யாரிடம்? எவ்வளவு?
    தேசிகன் என்பவர் யார்? எந்த வூர்? இப்போது இருக்கிறாரா? அவர் என்ன புத்தகம் எழுதினார்?
    திருக்க்லியாணம் யாருக்கு?
    திருப்புல்லாணி தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது?
    ஏன் கலியாணம் 10 நாட்களாக ந்டக்கிறது?

    இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமல் உங்கள் பதிவு என்னைப்போன்றோருக்கு உதவாது.

    யாருக்கு இது? ஒருவேளை என்போன்றோருக்கில்லயோ? அப்படியென்றால் வேணாம் சாமி. ஆளை விடுங்கள். நாங்கள் வேறு சாமியை கும்பிட்டுக்கொள்கிறோம்...!

    பதிலளிநீக்கு
  2. திருப்புல்லாணியில் இந்நேரம் இல்லயே என்ற என் மனைவியின் குறையை தங்களின் இந்த தொடர் பதிவுகள் போக்குகிறது.மிக அழகான புகைப்படங்களுடன் அருமையான வர்ணனைகளுடன்..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. உங்க கைங்கர்யம் சிறப்பானது ஐயா!
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. //மாலையில் சூர்ணோத்ஸவம்//

    சூர்ணோத்ஸவம் பற்றிய ஒரு சின்னக் குறிப்பு கொடுங்க-ண்ணா! சூர்ணம் என்னும் பொடி வேறு தருவாங்க இல்லையா?

    //(KRS ! I am sorry. கடைசி வரை நீங்கள் கேட்ட பட்டயத்தைப் பெறவே முடியவில்லை) //

    :)
    Not to worry!
    அதான் பந்தலில் திருப்புல்லாணி கருட சேவையை மையமா வைத்துப் பதிவு இட்டாகி விட்டதே!
    திருமங்கை மன்னனின் வேடுபறியை இடலாம் என்று தான் பட்டயத்தின் நகலைக் கேட்டு இருந்தேன்!

    அதை வாசிப்பவரிடம் அனுமதி பெற்று, முடிந்தால் அப்புறம் வலையேற்றி வையுங்கள் அண்ணா! பின்னாளையவருக்குப் பயன்படும்!

    பதிலளிநீக்கு
  5. //அந்த வாகனத்துக்கு நாங்கள் வைத்த பெயர் தூங்குமூஞ்சி வாகனம்//

    ஹா ஹா ஹா
    தூங்கினது நீங்க! திட்டு அன்னத்துக்கா? :)

    அன்னமாய் நூல் பயின்ற கதையைச் சுருக்கமாச் சொல்லலாமே!

    //ஸ்ரீதேசிகன் பாடினாரே , திருச்சின்னமாலையில், யானை பரி தேரின்மீது அழகர் வந்தார் என்று//

    அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
    ஆனைபரி மேல் அழகர் வந்தார் வந்தார்!
    கச்சி தன்னில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்!
    கருத வரும் தரும் வரதப் பெருமாள் வந்தர்!

    முக்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்!
    மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்!
    உத்திர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்!
    உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!

    பதிலளிநீக்கு
  6. //இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமல் உங்கள் பதிவு என்னைப்போன்றோருக்கு உதவாது.
    யாருக்கு இது? ஒருவேளை என்போன்றோருக்கில்லயோ? அப்படியென்றால் வேணாம் சாமி. ஆளை விடுங்கள். நாங்கள் வேறு சாமியை கும்பிட்டுக்கொள்கிறோம்...!//

    ஹா ஹா ஹா
    வாங்க நல்லன்பரே! நியாயமான ஆதங்கம் தான்!

    நண்பர்களோடு கூட்டமா கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போறோம்! கிரிக்கெட் பற்றி விளையாட்டு அளவில் மட்டுமே தெரியும், அம்புட்டுத் தான்! Roadside Cricket தானே நம்மள போல பசங்களுக்குச் சொர்க்கம்! :)

    ஆனா மேட்ச் நடக்கும் போது, வர்ணனையாளர்...
    backfoot, bouncer, googly, duck, legside, onside-ன்னு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருப்பாரு! சட்டு-னு புரியாது! ஆனா அதுக்காக ஆட்டத்தில் வைத்த கண்ணை அகற்றுவதில்லை இல்லையா? :)

    அதே போலத் தான்! இங்கு இந்த வர்ணனையாளர் சில பல பதங்களைப் பயன்படுத்துகிறார்-ன்னா, அதெல்லாம் ஒவ்வொன்னும் தெரியணும்-ன்னு அவசியம் இல்லாமலேயே கூட மேட்ச்சைப் பார்க்க முடியும்! :)
    * புகைப்பட அழகுகளைப் பார்க்க முடியும்!
    * அழகிய தமிழ்ப் பாடலைச் சுவைக்க முடியும் - தெரி தமிழ்ப் புல்லாணி தெய்வச் சிலைக் கடவுளே - ன்னு வருவதை ரசிக்கவும் முடியும்...
    //ஆளை விடுங்கள். நாங்கள் வேறு சாமியை கும்பிட்டுக்கொள்கிறோம்//-ன்னு எல்லாம் பேச வேண்டி வராது! :))

    ஆர்வ அளவைப் பொறுத்து இந்தக் கட்டுரையாளர்/வர்ணனையாளரிடம் இருந்து, தாங்கள் தனியே அறிந்து கொள்ளலாம் அல்லது விளக்கம் கேட்டுப் பெறலாம்! வாழ்த்துக்கள்!

    சாமி வேறா இருந்தாத் தானே வேறு சாமியைக் கும்பிட்டுக்க முடியும்!
    இங்கு சாமி எல்லாம் ஒன்னு தான்!
    அவிங்கவிங்க எதிர்பார்ப்பும் வர்ணனையும் தான் வேறு வேறு! :))

    பதிலளிநீக்கு
  7. சுவாமி ரகுவீர தயாள் அண்ணா,
    அனானி அன்பர் கேட்ட கேள்விகளுக்கு,
    தாங்கள் நேரம் இருக்கும் போது,
    சுருக்கமாக ஓரிரு வரிகளில்...
    அவர் ஆர்வத்துக்குப் பதில்களைத் தந்து உதவ வேணும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்!

    அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
    சடகோபன் தண் தமிழ்நூல் வாழ...
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    பதிலளிநீக்கு
  8. //நேற்றுதானே திருக்கல்யாணம் ஆயிற்று! அதனால் தினமும் காலையில் நடக்கும் புறப்பாட்டுக்கு இன்று ஒரு நாள் ரெஸ்ட்//

    ஓஹோ முதல்நாள் கல்யாணம் தான் மறுநாள் காலை ரெஸ்ட்டுக்கு காரணமா.. ஏன் மறுநாள் காலை எந்த நிகழ்ச்சியும் இல்லைன்னு யோசிச்சுருக்கேன்.. :)

    பதிலளிநீக்கு
  9. அண்ணா, இந்த Word verification கொஞ்சம் எடுத்துருங்களேன்.. இடைஞ்சலாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  10. குதிரைத்தம்பிரான் மீது அமர்ந்திருக்கும் அழகும்.. சாட்டையை சுழட்டும் கம்பீரமும் அழகோ அழகு.. மற்ற வாகனக்களை விட குதிரை தான் பெருமாளுக்கு கம்பீரத்தைத் தருகிறது.. கருட வாகனம் அவனை பரந்தாமன் என்று காட்டிக் கொடுத்து விடும்.. அனுமந்த வாகனத்தில் வரும்போது அழகு மிளிரும்.. ஆதிசேஷன் மீது வருகையில் மெளனமாக உபதேசம் செய்வது போன்று தெரியும்.

    பதிலளிநீக்கு
  11. பட்டயத்தைப் பெறவே முடியவில்லை:)))

    pattayam means .. i dont know

    பதிலளிநீக்கு