செவ்வாய், 21 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

10. விசேஷாம்சங்கள்

இவருக்கு மற்ற ஆழ்வார்களைப்போலே சந்தமிகு தமிழ்மறைகளில் சில பாகங்களை ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய ஏற்றத்துடனே அவற்றையும் மற்றைய ஆழ்வார்கள் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களையும் மறுபடியும் ப்ரவர்த்தனம் செய்தருளினார் என்கிற ஏற்றமுண்டு. இத்தால் இவருக்கு ஆசார்யகோஷ்டியில் அனுஸந்திக்கப்படும் பெருமையுண்டு. மற்ற மூவாயிரம் பாசுரங்களைப்போலே இவருடைய திருவாய்மொழியை வீதிகளில் ஸேவிப்பதில்லை. ஸந்நிதிக்குள்ளோ, திருமாளிகைகளிலோ உட்கார்ந்துகொண்டே ஸேவிக்கும் ஏற்றம் பெற்றதாயிருக்கும்.

இவருடைய அவதாரத்தை ஸ்ரீபாகவதத்தில் 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்ஜனோபாக்யானம் கூறுகிறது. இவருடைய ப்ரபந்தத்தில் ஒரு விசேஷ மணம் வீசாநிற்கும் என்று ஆசார்யன் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

திருவாய்மொழி எல்லோராலும் அனுஸந்திக்கப்படும் என்பதை ஆழ்வார் தாமே 'பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்' என்றனுஸந்தித்திருக்கிறார். இதன் கருத்து :--

ஸ்ரீபாகவதத்தில் பகவானுடைய திருக்கல்யாண குணங்கள்

'निवृत्ततर्षैः उपगीयमानात् भवौषधात् सोत्रमनोभिरामात्

என்கிறபடியே ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாத நித்யர்களாலும் முக்தர்களினாலும் கானம் செய்யப்படும் என்றும், ஸம்ஸாரத்தைப் போக்கடித்துக் கொள்ளுவதற்கு மருந்தாயிருப்பதினால் முமுக்ஷுக்களினாலே அனுஸந்திக்கப்படும் என்றும், கேட்பவர்களின் மனதிற்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றும் இப்படிகளினால் எல்லோராலும் அனுஸந்திக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இத்திருவாய்மொழியும் என்பதை இதன் தனியனில்

भक्तामृतं विश्वजनानुमोदनं सर्वार्थदं

என்று கூறப்பட்டது. 'பக்தாம்ருதம்' என்றது ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் ஸ்வயம் போக்யமானது என்றபடி. 'விச்வஜனானுமோதனம்' என்றது ச்ராவ்யமாயிருப்பதினால் ஸம்சாரி சேதனர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றபடி. 'ஸர்வார்த்ததம்'என்றது கற்பவர்களுக்கு வேதாந்த ஜ்ஞானத்தை உண்டாக்குகிறபடியினால் ஸம்ஸாரத்தைப் போக்குகிற அருமருந்தாய் நிற்கும் என்றபடி. இந்த மூன்று விசேஷணங்களும் ஆழ்வாரிடமிருந்து அவருடைய செவிக்கினிய செஞ்சொறகளான பாட்டுக்களை நேரில் கேட்டு, அப்படியே அவற்றை லோகத்தில் பரவச் செய்தருளிய ஸ்ரீமதுரகவிகளைக் கூறுமென்றும் சொல்லலாம்.

இந்த மூன்று விசேஷணங்களினாலும் ஸ்ரீதேசிகனைத்தான் ஆழ்வார் குறிப்பிட்டார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். 'பாலேய் தமிழர்' என்றது தமிழ் பாஷை ஸம்ஸ்க்ருத பாஷையைப் போலவே ப்ரசஸ்தமானது, நித்யமானது என்றும், எல்லோரும் அதிகரிக்கலான பாஷை என்றும், சித்தரஞ்ஜனத்தோடு வேதாந்தார்த்தங்களைத் தெளிவிப்பதில் இவை ப்ரதானம் என்றும், அனுஸந்திக்கப் பட்டவுடனே எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் என்றும் நிரூபித்தது மாத்திரமன்றிக்கே, தம்மை,'சந்தமிகு தமிழ் மறையோன்' என்று த்ரமிட வேதாத்யாயீ என்று அனுஸந்தித்தருளிய ஏற்றம் ஸ்ரீதேசிகனுக்கு மாத்திரமுள்ள பெருமையல்லவா என்றபடி. 'இசைகாரர்' என்றது கீதி பகவத் விஷயமாகில் ப்ரசஸ்தம் என்று நிஷ்கர்ஷித்தது மாத்திரமன்றிக்கே பாடுமவர்கள் கோஷ்டியில் தாம் இடம் பெற்றவர் என்று அனுஸந்திக்கும்படியான பெருமை ஸ்ரீதேசிகனையே சேர்ந்ததல்லவா என்றபடி. 'பத்தர்' என்பதைப் பகவத் பக்தர்கள் என்றாலும் ஆழ்வாருடைய பக்தர் என்றாலும் அந்த இரண்டு அம்சங்களும் ஸ்ரீதேசிகனிடத்தில் பூர்ணமாயிருந்தமை ஸர்வஸம்ப்ரதிபன்னமானது. தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத் தம்மை நிரூபித்துக்கொண்டவர் வேறொருவரு மில்லையே!

நிறைவடைந்தது

திங்கள், 20 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

எம்பெருமானார் திருவாய்மொழிக்குத் தம் சிஷ்யர்களில் ப்ரதானமானவரும், தம்மால் ஜ்ஞான புத்திரரென்று அபிமானிக்கப்பட்டவரும், தமக்குப் பிறகு உபய வேதாந்த ஸிம்ஹாஸனத்தில் மூர்த்தாபிஷிக்தருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு திருவாறாயிரப்படி என்னும் வ்யாக்யானத்தை வெளியிட்டு, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்கு முதல் முதலிலே ப்ரவசனம் செய்தருளினார். சந்தமிகு தமிழ் மறைகளின் அனுஸந்தானத்தின் பரீவாஹமாய்ப் பெரிய முதலியார் அருளிச்செய்த ஸ்தோத்திரத்தைப் பல தடவை அனுஸந்தானம் செய்ததினால் ஸுப்ரதிஷ்டிதமான ஜ்ஞானத்தால் எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யத்தில் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களையே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யம் மங்கள சுலோகத்துக்கு மூலம்

'துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்

இன்பமில் வெந்நரகாகி இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்

இன்புறுமிவ் விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்ல லிலனே

என்னும் திருவாய்மொழிப்பாட்டு ( 3-10-7) இதின் திருவாறாயிரம் -- "நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்" என்று. "இன்புறும் இவ்விளையாட்டுடையான்" என்றதையே எம்பெருமானார்

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले

என்றருளிச் செய்திருப்பது. அப்படியே ஆழ்வார் முதல் திருவாய்மொழியில் 7ம் பாட்டில்

உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுர்மிகு சுருதியுள் என்றதையே

श्रुतिशिरअसि विदिप्ते ब्रह्माणि श्रीनिवासे என்றருளிச் செய்திருக்கிறார். உபக்ரமம் இப்படி. மேல் உபஸம்ஹாரம் எப்படி எனப் பராமர்சிப்போம். இறுதி ஸூத்திரம் 'இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்தவன் மறுபடியும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை -- அப்படியே ச்ருதிகளில் கூறப்பட்டிருப்பதினால்' என்பது. இதன் ஸ்ரீபாஷ்யத்தில் பகவத் ஸங்கல்பத்தினால் ஆத்மா முக்தி அடைகிறபடியினாலே பகவான் ஸ்வதந்த்ரன். அவன் திருப்பி அனுப்பாவிட்டால் என் செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் இந்த ஸூத்திரத்தில் கூறப்படுகிறது என அவதாரிகையை அருளிச் செய்து திருப்பி அனுப்பமாட்டான் என்பதற்கு ப்ரமாணம் வேதங்களே -- எப்படி எம்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ அப்படியே அவன் திருப்பி அனுப்பமாட்டான் என்பதையும் அந்த வேதங்களே கூறுகின்றன என்று அப்படிக் கூறும் வேதவாக்யங்களை உதாஹரித்து வேதங்களுக்குத் துல்ய ப்ரமாணமான ஸ்ரீகீதோபநிஷத் சுலோகத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஸூத்திரத்தில் சகாரம்கூட இல்லாமையினால் மேல் உபஸம்ஹாரம் செய்யவேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் "ந ச " என்று ஆரம்பித்து இப்படித் திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை மற்றொரு விதத்தில் உபபாதித்திருக்கிறார். இதற்கு மூலம் ஆழ்வாருடைய

"மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவனோ

என்கிற திருவாய்மொழி 1-7-4ம் பாட்டே. எப்படி வேதங்கள் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உபபாதிப்பதில் உத்தம ப்ரமாணங்களாக நிற்கின்றனவோ, அதைப்போலவே திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பகவானை உள்ளபடியே ப்ரத்யக்ஷீகரித்து தாம் அனுபவித்தபடியை வெளியிடுகிற திருவாய்மொழியும் உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாஹரிக்கப்பட்டதான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸூத்திரகாரரோ ராஜாஜ்ஞை போலே வேதங்கள் கூறா நிற்கும் என்றார். அகில த்ராமிட ப்ரஹ்மதர்சியாகிய ஆழ்வாரோ அந்தக் காரணத்தை மேலே நிரூபிக்கப்போகிறவராய் பகவான் முக்தனைத் திருப்பி அனுப்பமாட்டானேயாகிலும் முக்தனே திரும்பி வந்துவிட்டால் புனராவ்ருத்தியில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டதாகாதே என்பதற்காக இந்த அம்சத்தை மட்டும் விசேஷித்து உபபாதித்தருளினார் என்பதும், இதற்குக் கீழ்ப்பாட்டில், "என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே" என்பதை அனுவதிக்கிறார் என்பதும் இங்கு விவக்ஷிதமாகக் கடவது. ஸ்ரீபாஷ்ய பங்க்தியும், எம்பெருமானாருடைய காலக்ஷேபத்தின் ஸங்க்ரஹமான திருவாறாயிரப்படி பங்க்தியும் உதாஹரிக்கப்படுகின்றன.

नचउच्छिन्नकर्मबन्धस्य असंकुचितज्ञानस्यपरत्रह्मानुभवैकस्वभावस्य तदेकप्रेियस्य अनवधिकातिशयानन्दं व्रह्मानुभवतः अन्यापेक्षातदर्थीीरम्भाद्यसंभवात् पुन रावृत्तिशङ्का । न च परमपुरुषः•••

திருவாய்மொழிப்பாட்டின் திருவாறாயிரப்படி பங்க்தி

"இப்படி எம்பெருமானோடு ப்ரவ்ருத்தமான ஸம்ச்லேஷத்திற்கு ஒருபடியாலும் மேல் அழிவில்லை என்கிறார். தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞானமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களை அத்யந்த விசதமாம்படி எனக்குக் காட்டியருளித் தனக்கு ஸத்ருசரான அயர்வறும் அமரர்களோடு ஸம்ச்லேஷிக்குமாப்போலே என்னோடு ஸம்ச்லேஷித்தருளியவனை எங்ஙனே விடும்படி என்கிறார்" -- என்பது. இங்கு "ஒருபடியாலும் அழிவில்லை" என்பதற்கு இதற்கு வ்யாக்யானமான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தில் "என்னுடைய அஜ்ஞானமடியாகவும் விஷயாந்தர ஸங்கமடியாகவும் பகவத் ஸ்வாதந்த்ர்வமடியாகவும் என்னுடைய பாக்யஹானியடியாகவும் என்றபடி" என்று. கீழ் வேதவாக்யங்களுக்கு மேற்கோளாக ஸ்ரீகீதா ச்லோகத்தை உதாஹரித்தாற்போலே இந்த த்ரமிடோபநிஷத்துக்கும் மேற்கோளாக மற்றொரு கீதாச்லோகத்தை உதாஹரித்து உபஸம்ஹாரம் செய்தருளியிருக்கிறார் இப்படியே ஸ்ரீகீதாபாஷ்ய கத்யாதிகளிலும் பல ப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித்தருளியிருக்கிறார்.

ஸ்ரீதேசிகன் இந்த ஆழ்வாருடைய பெருமைகளைப் பேசியிருக்கும் ப்ரகாரங்களை நிரூபிப்பதானால் அது ஒரு தனிப் புஸ்தகமாகும். ஆகையினால் அவற்றின் ஸங்க்ரஹம் மட்டும் செய்யப்படுகிறது. நம்முடைய விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை இந்தக் கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தருளியவர் இவரே என்றும், இவற்றை மீண்டும் ஸ்ரீமந் நாதமுனிகளும் உபதேசித்தருளியவர் என்றும் ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தியில் ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் -- இவரை ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தநையாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்" இத்யாதியாக அனுஸந்தித்திருக்கிறார்.

நம்மாழ்வாருக்கும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் நடுவில் பல வருஷங்கள் கழிந்துவிட்டதே என்பதற்கு ஸமாதானத்தை ஸ்ரீஸ்தோத்ரபாஷ்யத்தில்

कालविप्रकर्षेपि परमपुरुषसंकल्पात् कदाचित् प्रादुर्भूय सास्त्रादपि सर्वोपनिषदुपदेष्टारं என்றருளிச் செய்திருக்கிறார். இவருடைய அருளினால் "திருமால் தாளில் தலைவைத்தோம்" என்று அருளிச் செய்திருப்பதினால் இவருடைய க்ருபையில்லாவிடில் பகவானுடைய திருவடிகள் நமக்குக் கிட்டாது என வெளியிட்டிருக்கிறார். இவருடைய ப்ரபாவத்தை द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्बुदं என்று வாசாமகோசரம் என நிரூபித்தருளினார். எம்பெருமான் நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழி 1000 பாட்டுக்கள் பாடிய பிறகே தன்னை உளனாக எண்ணி, அதற்கு ப்ரதியாகத் தானும் அவர் விஷயமாக 1000 பாட்டுக்களைப் பாடவேண்டும் என்ற அபிலாக்ஷையைத் தான் குருவரராய்த் தோன்றி ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்து தீர்த்துக்கொண்டான். இவ்வம்சத்தை ஸ்ரீதேசிகன் தாமே ஸமாக்யா பத்ததியில் நம்மாழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒன்று என்று நிரூபித்திருப்பதினாலும், நாதபத்ததியில் பாதுகைகளின் நாதம் திருவாய்மொழிப் பாசுரங்களின் அனுதாதம் என்று அனுஸந்தித்திருப்பதினாலும், க்ரந்தத்தை "ஸந்த:" என்று தொடக்கம் செய்து "ஸந்த:" என்று முடித்திருப்பதினாலும் ஸூசிப்பித்திருக்கிறார். இவருடைய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திற்கு ஸ்ரீஉபகார ஸங்க்ரஹம் என்னும் ரஹஸ்யத்தில் வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். திருவாய்மொழிப் பாசுரங்களின் அர்த்தத்தை ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம், ஸ்ரீநிகம பரிமளம் இவைகளில் வெளியிட்டுள்ளார். இவருடைய சில பாட்டுக்களின் உண்மையான அர்த்தங்களை ப்ரமாணோபபத்திகளுடன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய க்ரந்தத்தில் நிரூபித்தருளினார். இவர் நெடுமாற்கடிமையில் அனுஸந்தித்தருளிய அர்த்த விசேஷங்களையே புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் ஸங்க்ரஹித்திருத் தருளினார். இவருடைய திருவாக்கின் ப்ரபாவத்தை "அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன" என்றும் நிரூபித்திருக்கிறார்.

'ஒரு மதியன்பர் உளங்கவர்ந்தன', 'குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி' என்று இவருடைய ப்ரபாவத்தையும் பேசியுள்ளார். ஸ்ரீகீதாசார்யன் ஸாதுபரித்ராணார்த்தமாக அவதரிக்கிறேன் என்றது இவரையே ப்ரதானமாகக் குறிக்கும் என்று ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸூசிப்பித்தார். அதாவது,

"न हि अमिषां अन्नपानं ताम्बूलादि धारण पोषणादिकं, किं तु अहं कृष्ण एव"

இவர் 'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்' என்பதைப் பின்பற்றியதாகும். இப்படியே இவர் 'கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்' என்றனுஸந்தித்ததையே

कृष्णःतत्वं परं तत्परमापि च हितं तत्पदैकाश्रयत्वं'

என்று கீதையின் பொருளாக ஸங்க்ரஹித்துள்ளார். பகவானுடைய திருக்கண்களின் சோபையை இவர் 'தாமரைக்காடுகள்' என்றனுஸந்தித்திருப்பதைப் பின்பற்றி

पुण्डरीकवन्लुण्ठाकलोचन

என்றனுஸந்தித்தருளினார்.

ஸ்ரீப்ரபந்தஸாரத்தில் 'முன்னுரைத்த' என்று இவர் ப்ரபந்தங்கள் விஷயமாக ஒரு பாட்டு அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவருடைய த்ராக்ஷா மதுரம் போன்ற ஸ்ரீஸூக்திகளை அனுஸந்தித்ததினால் உத்கர்ஷம் பெற்ற தம் வாக்குகள் ப்ரஹ்மாதிகள் விரும்பியும் பெறாத ஓர் ஏற்றம் பெற்றவைகளாய் நிற்கும் என்றனுஸந்தித்திருக்கிறார். கீழ்ப் பல இடங்களில் இவரைக்கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

இவருடையவும் இவருடைய ப்ரபந்தங்களின் ஏற்றத்தையும் மற்றவர்கள் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் கீழ் முன்னுரையில் 42ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவி சக்கரவர்த்தியென இக்காலத்தில் விசேஷித்துக் கொண்டாடப்படும் கம்பனாலும் இவர் விஷயமாக சடகோபர் அந்தாதி என்னும் க்ரந்தத்தில் இவருடைய பெருமை நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

சனி, 18 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

6. விசேஷார்த்த நிரூபணம்.

மற்றைய திவ்ய ப்ரபந்தங்களிலும் பகவானுடைய குணங்கள் அனுஸந்திக்கப் பட்டிருந்தபோதிலும், திருவாய்மொழியிலே போலே ஒருக்ரமமாய்ச் சங்கிலித்துவக்குப்போலே அவை நிரூபிக்கப்படவில்லை. பகவானுக்கும் சேதனாசேதனங்களுக்குமுள்ள சரீராத்ம பாவத்தை விஸ்தரமாக உபபாதித்திருப்பதும் (திருவாய் 1-1-7) அர்ச்சிராதி மார்க்கத்தில் முக்தாத்மாவிற்கு நடக்கும் ஸத்கார விசேஷங்களை விவரமாக அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 10-9) பாகவத ப்ரபாவத்தை 2 திருவாய் மொழிகளில் பரக்கப் பேசியிருப்பதும் (திருவாய் 3-7, 8-10) வேதங்களும் பகவானை அறிவது அசக்யம் என்றே அறிந்தன என்று நிரூபித்திருப்பதும் (திருவாய் 9-3-3) பகவதனுபவத்தை இங்கே செய்வதை விட மோக்ஷானுபவம் உயர்ந்ததன்று என்று அனுஸந்தித் திருப்பதும் ஸம்ஸார துக்கத்தைப் போக்கிக்கொள்வதற்கு பகவானுடைய குணானுஸந்தானத்தை விட ஸாதநம் கிடையாது என்று நிஷ்கர்ஷித்திருப்பதும் (பெ.திரு 86) ஆசார்ய ஸார்வ பெளமனுடைய அவதாரத்தை ஸூசிப்பித்திருப்பதும் (திருவிரு 26) மார்க்கண்டேயனுக்கு ருத்திரன் சிரஞ்சீவியாய் இருக்கும்படி வரம் கொடுத்ததும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே என்று அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 4-10-8) பகவானுடைய திருக்கண்களின் சோபைனை தாமரைக் காடுகள் என வர்ணித்திருப்பதும் (திருவாசி 2, திருவாய் 8-9-1) சில விசேஷார்த்த நிரூபணங்களாகும்.

8. இவருடைய திருநாமங்கள்.

மாறன், சடகோபன், வழுதிவளநாடன் என்று தாமே தம்மை வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்திருநாமங்களுக்கு விசேஷணங்களாக குருகூர் நகரான், குருகூர், வழுதிநாடன் குருகைக் கோன், காரி, திருமாலால் அருளப்பட்ட என்றுஅனுஸந்தித்துக்கொண்டிருக்கிறார். காரி என்றது தகப்பனாரின் திருநாமம். மாறன் என்பது குடிப்பெயர். லோகத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் மாறான - வேறுபட்ட ஸ்வபாவத்தையுடையவர் என்றுமாம். சடகோபன் என்றது கெட்டவர்களைக் கோபித்துக்கொள்ளுமவர் என்றபடி. நம்மாழ்வார் என்பது இவரை உகந்து பெரியபெருமாள் அனுக்ரஹித்தருளிய திருநாமம். இத்திருநாமத்தாலேயே இவரை வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம்

குலபதி என்று ஸ்ரீஆளவந்தார் அனுஸந்தித்திருக்கிறார். ஸ்ரீதேசிகன் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி முதலியவற்றில் இவரை “சடரிபு:, சடஜித் சடமதநமுநி:, முநி: முநீந்த்ர யோகீ, சடாரி:, காரிஸூநு:, கேஸர ஸ்ரக் விபூஷ:, சடஜநமதந:, காரேஸ்தநூஜ:, காரேரபத்யம், காரிஜ:, : அகில த்ராமிட ப்ரஹ்ம தரிசி, சடகோப ஸூரி:, வகுளதர மஹர்ஷி, வகுளாபரண:, கூடஸ்த: என்றிவை முதலிய திருநாமங்களால் அனுஸந்திருக்கிறார்.

9. பூர்வர்கள் இவரைக் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் இவர் விஷயமான திருவழுதிநாடுஎன்றாரம்பிக்கும் தனியனையும், ஸ்ரீமந்நாதமுனிகள் ‘பக்தாம்ருதம்’ ‘மனத்தாலும்’ என்றாரம்பிக்கும் தனியன்களையும், ஸ்ரீஆளவந்தார் ‘மாதா பிதா’ என்கிற தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

எம்பெருமானார்,முந்துற்ற நெஞ்சே’ என்கிற பெரிய திருவந்தாதித் தனியனையும், திருக்குருகைப்பிரான், ‘வான் திகழும் சோலை’ ‘மிக்க இறைநிலையும்’, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்கிற திருவாய்மொழித் தனியன்களையும், கிடாம்பி ஆச்சான், ‘கருவிருத்தக்குழி’ என்கிற திருவிருத்தத் தனியனையும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ‘காசினியோர்’ என்கிற திருவாசிரியத் தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீமதுரகவியாழ்வார், இவ்வாழ்வார் தம்முடைய அனுபவ பரீவாகமாக வெளியிட்ட பாசுரங்களைப் பட்டோலை கொண்டு, அவற்றை நான்கு ப்ரபந்தங்களாக லோகத்தில் வெளியிட்டருளினது மாத்திரமன்றிக்கே ஆழ்வாரையே ஆசார்யனாகக்கொண்டு, அவருடைய திவ்யார்ச்சையை திருப்ரதிஷ்டை செய்தருளி அதற்கு உத்ஸவாதிகளை நடத்தி, அதற்கு உபரோதம் செய்தவர்களை நிரஸித்து உத்ஸவாதிகளை யதா க்ரமம் நடத்திவைத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதனுடைய நியமனப்படி இவரு டைய ப்ரபந்தமான திருவாய்மொழியை ப்ரதி ஸம்வத்ஸரமும் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கமாக ஒவ்வொரு நாளும் ஒரு பத்தைத் திருச்செவி சாற்றியருளும்படி ஏற்பாடு செய்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ரத்தில் பற்பல பாட்டுக்களின் கருத்தை வெளியிட்டருளியிருக்கிறார், உதாஹரணமாக

மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே " என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தருளியதை

न मृषा परमार्थमेव मे श्रृंणु विझापनमेकमग्रतः

तत् सत्यं मधुमथन ! विज्ञापनमिदम्

என்றும், உயர்வற உயர் நலமுடையவன் ’ என்றதை

स्वाभाविकानवधिकातिशयेशितृत्वं

என்றும், "யாருமோர் நிலைமையன் என நினைவரிய எம்பெருமான் யாருமோர் நிலைமையன்என அறிவெளிய எம்பெருமான்" என்றதை

'विधिशिवसनकाद्ये: ध्यानुमत्यन्तदूरं पश्यन्ति केचिदनिशं त्वदनन्यभावाः' என்றும், 'நன்றெழில் நாரணன் ' என்றதை * नारायण ! त्वयि न मृष्यति वैदिकः कः ‘ என்றும், நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்" என்றதையே * न धर्मनिष्ठेस्मि न चात्मवेदी ° என்றும் *

நாளு நின்றடு நம் பழமையங்கொடு வினையுடனே

மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி

நாளும் திருவடியடிகள்தம் நலங்கழல் வணங்கி

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

என்றனுஸந்தித்தருளியதை * त्वर्देधिमुद्वदिश्य कदापि केनचिन्' என்ருரம்பிக்கும் கலோகத்திலும் விவரணம் செய்தருளிஞர்

சனி, 11 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

நிகமனத்தில் ஆறு சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அதில் 128-ம் சுலோகத்தில் பத்துப் பத்துக்களினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணவிசேஷங்களைக் காட்டா நின்றுகொண்டு, திருவாய்மொழிக்கு ப்ரதானார்த்தமாய், கீழ் நிரூபித்த ச்ரிய:பதியாகிற பகவான் தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்பதை மறுபடியும் வற்புறுத்துகிறார், மேல் 128-ம் சுலோகத்தின் அர்த்தம் கீழே நம்மாழ்வாரின் வைபவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

127-ம் சுலோகத்தில் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பவர்களின் மனோபாவம் இருக்கும்படியை வெளியிட்டருளுகிறார்.

ச்ரிய:பதியாய் எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் முதலிய வைகளை யுடையவனாய் ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் இருக்கும் பகவான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்ட ரக்ஷண பரத்தையுடைய நமக்கு இனி முக்திபெறுவதற்குச் செய்ய வேண்டிய கார்யம் என்ன? நமக்கு கிட்டாதது என்ன? என்ன துக்கம் ஏற்படப்போகிறது? இனி யாருக்குக் கடவோம்? இவை ஒன்றுமில்லையென்றபடி. இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பெற்றவர்கள் ஸர்வோந்நதர் என்று திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் ப்ரபந்தங்கள் பல இருந்தபோதிலும் அவைகளுக்கு இத்திருவாய்மொழியின் பெருமையில்லை. இந்த ப்ரபந்தமொன்றுமே மற்ற சாஸ்திரங்களில் ஸாரமாக அறிய வேண்டும் என்று கூறப்பட்ட அர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் ஸாரதமமான அர்த்தத்தைக் கூறுகின்றது என்று இதன் ஸர்வோத்தமத்வத்தை வெளியிடுகிறார் 128-ம் சுலோகத்தில். இதன் தாத்பர்யம் முகவுரையில் 68-ம் பக்கம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் இரண்டு சுலோகங்களிலும் இந்த க்ரந்தத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்ட அர்த்தங்களே ப்ரமாணதமங்கள் என்றும், இப்ரபந்தத்தின் அவதார வைலக்ஷண்யத்தாலும் இது மற்ற ப்ரபந்தங்களை! விட உத்க்ருஷ்டமானது என்றும் நிரூபித்தருளுகிறார். அதாவது இத்த ஸங்க்ரஹமே எம்பெருமானும் அவனுடைய அடியார்களான பாகவதர்களும் உகப்பதாயிருக்கும் என்றபடி

இத்தம் - இவ்வாறு ஸத்ஸம்ப்ரதாயக்ரமஸமதிகத --எம்பெருமான் தொடக்கமாக ஸ்வாசார்யரான கிடாம்பி இராமானுசப் பிள்ளான் வரையிலான ஆசார்ய பரம்பரையினால் அடையப்பட்டதாய். அதாவது அவர்களுடைய க்ரந்தங்களினாலும் அவர்களுடைய உபதேசத்தினாலும் அவர்களுடைய அனுக்ரஹத்தினாலும் தாம் பெற்றதாய்

அசேஷ வர்ணார்ஹவேத -- எல்லா வர்ணத்தார்களும் அதிகரிக்கக் கூடிய வேதமாய் இருக்கும் திருவாய்மொழியில்

ச்ரத்தாசுத்தாசயாநாம் – ருசியையுடையவர்களாய் அத்தால் பரிசுத்த மான மனதுடன் கூடியவர்களான பாகவதோத்தமர்களுக்கு

அநகம் கெளதுகம் வேங்கடேச: அகடயத் - வென்றிப் புகழ் திருவேங்கடநாதனாய் அவதரித்தவர் எல்லையில்லாத சந்தோஷத்தை உண்டாக்கினார்.

தஸ்ய ஸம்யக்த்வே -- இது உண்மை என்பதைக்கூறும் விஷயத்தில் ஸாக்ஷாச்சடரிபு: அதவாஸர்வஸாக்ஷீஸ ஸாக்ஷீ - ஆழ்வார்தாமேயும் அன்றிக்கே எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருக்கும் ஸர்வேச்வரன் தானும் ஸாக்ஷியாக ஆவர்கள்,

ஸாவத்யத்வேபிபி பஜதாம் அப்ரகம்ப்யானுகம்ப ஸோடும் ப்ரபவதி ஸாவத்யத்வேபி என்று நைச்யானுஸந்தானம் செய்கிறபடி. இதில் யாதொரு தோஷமுமில்லை. அப்படி எங்காவது தோஷமிருந்தாலும் கூட ஆச்ரிதர்களிடத்தில் நிரவதிக ப்ரீதியையுடைய பகவான் அதைப் பொறுத்தருளுவன் என்றபடி. இங்கு தமிழ் மறைகளின் அனுபவ பரீவாஹமான ஸ்ரீஸ்தோத்திரத்திற்கு வ்யாக்யானமிட்டருளி அதன் இறுதியில்,

‘उपनिषदुपधेयस्तोत्रतात्पर्यमेतत् यतिपतिरवधत्ते यामुनार्य स्वय वा’

என்றனுஸந்தித்திருப்பது நினைக்கத்தக்கதாகும்,

இந்த க்ரந்த அவதரணத்தின் சீர்மையை வெளியிடாநின்று கொண்டும் இதன் வக்த்ரு வைலக்ஷண்யத்தை நிரூபித்துக் கொண்டும் க்ரந்தத்தை உபஸம்ஹாரம் செய்து, இது எம்பெருமான் திருவுள்ளமுகந்ததாயிருக்கும் என்று ஸாத்விகத்யாகம் செய்தருளுகிருர்,

சரணாகதிவேதம் என்று கொண்டாடப்படும் பெருமையை உடைய ஸ்ரீராமாயணம் சோகத்தின் பரீவாஹமாய் உண்டானது. ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருந்த இரண்டு க்ரெளஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற வேடனைப் பார்த்ததினால் உண்டான துக்கத்தின் மிகுதியினாலன்றோ ராமாயணம் உண்டாயிற்று,

அப்படியே அர்ஜுனனுடைய துக்கத்தைப் பொறுக்கமுடியாதவனாய்த் தன்னுடைய அபார காருண்யத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் கீதோபநிஷத்தை வெளியிட்டான். ஆழ்வார் திருவாய்மொழியோ பகவானுடைய எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை உள்ளபடியே அனுபவித்துத் தாம் அனுபவித்தபடியே பேசும் ப்ரபந்தமாகையினால் அவை இரண்டிலும் இதற்கு வாசி காட்டப்பட்டது.

சோகாச்லோகத்வம் அப்யாகதஇதி நயத - சோகத்தின் பரீவாஹத்தினால் ச்லோகம் உண்டாயிற்று என்கிற ந்யாயத்தினால்,

சுத்தபோதார்ணவோத்யந் நாதா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத: - ஆழ்வாருடைய மயர்வற்ற மதியான ஸமுத்திரத்தில் உண்டாகியதாய், அனேகம் விதங்களான பகவதனுபவ பரீவாஹமாகிய-அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களில் ஒன்றை அனுபவிக்கப்புக்கு, அது மற்றொரு குணானுபவத்தில் மூட்ட, இப்படியே மேன்மேலும் அவனுடைய கல்யாண குணங்க்ளைப் பல விதமாக அனுபவித்ததின் பரீவாஹமாக வெளிப்பட்டதன்றோ இத்திருவாய்ம்மொழி என்றபடி.

‘ச்ராவ்யவேதாத்’ என்பதினால் இது மிகவும் ச்ராவ்யமான வேதம். அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களையே ப்ரதி பாதிக்கிறபடியினாலே மனதிற்கு ஆஹ்லாதத்தை உண்டாக்குகிறபடியினால் கேட்கத்தக்கது என்பதும், இசையுடன் கானம் செய்யப்பட வேண்டியதாகையால் எல்லோருடைய மனதைக் கவரக்கூடியது என்பதும், எல்லா வர்ணத்தாராலும் கேட்கத்தக்கது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

வேதாந்தாசார்யக ஸ்ரீபஹுமதபஹுவித் வேங்கடேசோத்த்ருதா – வேங்கடேச: என்று அவதார ப்ரபாவமும், ‘வேதாந்தாசார்யக’ என்று பிறந்து படைத்த ப்ரபாவமும், பஹுமத பஹுவித் என்று ஆசார்யர்களின் அணுக்ரஹத்தினால் பெற்ற ஏற்றமும், அதடியாகத் தாம் பெற்ற பாகவதர்களின் பஹுமானமும் தெரிவிக்கப்படுகின்றன.

“ரம்யா " இத்யாதி - ச்ராவ்ய வேதமான திருவாய்மொழியிலிருந்து வேங்கடேசனால் கடைந்தெடுக்கப்பட்டு, மாலையாகக் கோக்கப்பட்ட இந்தத் தாத்பர்ய ரத்னாவளியானது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும் என்று ஸாத்விக த்யாகம் செய்தருளியபடி. ஸ்ரீசரணாகதி கத்யத்தில் “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ” என்பதற்கு ஸ்வாமிதேசிகன் தாமே ஸ்ரீரங்கம் என்றது மற்ற ஸத்வோத்தர க்ஷேத்திரங்களுக்கு உபலக்ஷணமாகக் கடவது என்று நிர்வஹித்தருளியதைப் பின்பற்றி, இங்கே ஸ்ரீரங்கநாதன் ப்ரீதி அடைவான் என்றதும் இத்திருவாய்மொழியைத் திருச்செவி சாற்றியருளுகிற மற்ற நூற்றேழு திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களும் ப்ரீதி அடைவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.

ஆக இப்படிக் கீழ் ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம் இவற்றைக் கொண்டு திருவாய்மொழியின் அர்த்தஸங்க்ரதாம் உபபாதிக்கப்பட்டது. ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதந குண ஸ்தோமகர்ப்பம் முநீந்த்ர:” என்கிறபடியே திருவாய்மொழியில் ஒவ்வொரு பாட்டும் பகவானுடைய குணங்களை உட்பொதிந்துக் கொண்டிருக்கும். ஆனாலும் சில பாட்டுக்களின் ஸங்க்ரஹ சுலோகத்தில் குணம் ஸ்பஷ்டமாகக் கூறப்படவில்லை, சில இடங்களில் ஆதி பதத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றை விவரிக்கவேண்டும் என்று சிலருக்கு அபிப்ராயம். ஆகிலும் ஸ்வாமிதாமே ஸ்ரீதத்துவமுக்தா கலாபத்தின் இறுதியில் அருளிச்செய்திருப்பதை அடியொற்றி அவற்றை விவரிக்க வில்லை. மேலும் ஸ்வாமியின் வாக்கைக்கொண்டே நிரூபிக்கப்படும் குணவிசேஷங்களுக்கு ஸத்ருசமாக மற்றெரு பதத்தைக் குறிப்பிடுவதும் அபசாரமாகுமன்றோ என்று அவை விவரிக்கப்படவில்லை,

பிற்பட்ட வ்யாக்யாதாக்களான ஒன்பதினாயிரப்படிக்காரருக்கும் பதினெண்ணாயிரப் படிக்காரருக்கும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி சுலோகத்தில் எந்தப் பதம் எந்தப் பாட்டின் அர்த்த ஸங்க்ரஹம் என்கிற விஷயத்தில் சிற்சில இடங்களில் அபிப்ராய பேதம் காணப்படுகிறது. கூடிய வரையில் இவர்களைப் பின்பற்றியே திருவாறாயிரப்படிக்கு அனுகுணமாக ப்ரதிபாதித்த குணங்கள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

செவ்வாய், 7 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

इच्छासारध्यसत्यापित गुणकमलाकान्तगीतान्तसिध्ध्य-

च्छुद्धान्ताचारशुद्धैरियमनघगुणग्रन्थिबन्धानुबद्धा |

तत्तादृक्ताम्रपर्णीतटगतशठजित् दृष्टसर्वीयशाखा

गाथातात्पर्यरत्नावलिरखिलभयोत्तारिणी धारणीया ||

இச்சா ஸார‌த்ய‌ ஸ‌த்யாபித‌குண‌ க‌ம‌லாகாந்த‌ கீதாந்த‌ ஸித்ய‌த் சுத்தாந்த‌ ஆசார‌ சுத்தை: --தானே விரும்பி ஆசையோடு செய்த‌ தேரோட்டும் தொழிலினால் உண்மையாகக் காட்ட‌ப்ப‌ட்ட‌ ஸௌல‌ப்ய‌ம் முத‌லிய‌ குண‌ங்க‌ளையுடைய‌ ச்ரிய‌:ப‌தியின் ச‌ர‌ம‌ சுலோக‌த்தால் (கீதை 18 – 56ம் சுலோக‌த்தால்) ஏற்ப‌ட்ட‌ அந்த‌:புர‌த்து ஒழுக்க‌த்தால் (வேறு உபாய‌த்தையும் ப‌ல‌னையும் நாடாத‌ த‌ன்மை முத‌லிய‌வ‌ற்றால்) மிக‌ ப்ர‌ஸித்த‌ர்க‌ளான‌ ப‌ர‌மைகாந்திக‌ளால்,

அந‌க‌ குண‌க்ர‌ந்தி ப‌ந்தானுப‌த்தா – குற்ற‌ம் க‌ல‌வாத‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ளின் குழுவின் தொட‌ர்புடைய‌தாயும், அகில‌ ப‌யோத்தாரிணீ : ஸ‌ம்ஸார‌ம் அனைத்தையும் போக்க‌வ‌ல்ல‌துமான‌, இய‌ம் -- இந்த‌, தத்தாத்ருக் – அள‌வ‌ற்ற‌ பெருமையையுடைய‌, தாம்ர‌ப‌ர்ணீ த‌ட‌க‌த‌ --தாம்ர‌ப‌ர்ணீ நதிக்க‌ரையில் திருவவ‌தார‌ம் செய்த‌ருளி, ச‌ட‌ஜித் – ந‌ம்மாழ்வாரால், த்ருஷ்ட‌ --காண‌ப்ப‌ட்ட‌, அதாவ‌து ப்ர‌த்ய‌க்ஷீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌, ஸ‌ர்வீய‌சாகா – எல்லோரும் க‌ற்க‌ உரிய‌ த‌மிழ்ம‌றையின், காதா தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ – பாசுர‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளாகிய‌ ர‌த்ன‌ங்க‌ளின் குவிய‌லை வெளியிடுகின்ற‌ இந்த‌ தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளி என்னும் ஸூக்தியான‌து, தார‌ணீயா –ஹ்ருத‌ய‌த்திலே த‌ரிக்க‌த்த‌க்க‌தாகும், அனுஸ‌ந்திக்க‌த்த‌க்க‌தாகும் என்ற‌ப‌டி.

இந்த‌ க்ர‌ந்தத்திற்கு அதிகாரிக‌ளை – “இச்சா” இத்யாதியால் அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரதானமான சரணாகதியை விதிக்கிற ஸ்ரீகீதை 18 - ம் அத்யாயம், 88-ம் சுலோகம் சரம சுலோகம் என்னப்படும். இது கீதையின் இறுதியில் கூறப்பட்டிருப்பதினால் 'கீதாந்த” என்னப்பட்டது. இதில் நிஷ்ட்டையுடைய பாகவதர்களின் அனுஷ்டானம் அந்த:புர ஒழுக்கம் எனப்படும். இவர்கள்தாம் பரமைகாந்திகள் என்னப்படுமவர்கள். அப்படிப்பட்ட பாகவதர்களினால், கீழ் இரண்டாம் சுலோகத்தில், *அநுபதிவிபுதை:அர்த்தித" என்பதை இங்கு இப்படிக் கூறியபடி. ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனான பகவானுடைய திருக்கல்யாண குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் ‘அநககுண’ என்னப்பட்டது. ‘க்ரந்தி பத்தானுபத்தா " என்றது அந்தக் குணங்களை ஒருமாலையாகக் கோத்துக் காட்டியபடி என்றபடி.

தத்தாத்ருக்" என்கிற விசேஷணம் தாம்ரபர்ணிக்கும், சடஜித்தான ஆழ்வாருக்கும் தாத்பர்ய ரத்னாவளி என்பதற்கும், ஸர்வீயசாகா என்பதற்கும் விசேஷணம், தத்தாத்ருக் தாம்ரபர்ணி தடகத என்றது கலியுகத்தில் நாராயண பராயணர்கள் பலர் அவதரிக்கப்போகிறார்கள் என்று ஸ்ரீபாகவதத்தில் கூறும்பொழுது முதல் முதலில் எடுக்கப்பட்ட ஏற்றம் பெற்ற தாம்ரபர்ணி என்றபடி,

தத்தாத்ருக் சடஜித் ’ என்று ஆழ்வாருடைய அவதார வைலக்ஷண்யம் தெரிவிக்கப்படுகிறது. ஸாமாந்ய குழந்தையைப் போலப் பிறந்தபோதிலும் பிறந்தபிறகு ஸ்தத்யபாநாதிகளுள் ஒன்றும் செய்யாமல் பகவதநுபவத் தினாலேயே வளர்ந்த ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. தத்தாத்ருக் தாத்பர்ய ரனாவளி: ' என்று வக்த்ரு வைலக்ஷண்யம் ஸூசிப்பிக்கப்படுகிறது.

தத்தாத்ருக்ஸர்வீயசாகா என்பதினால் த்ரைவர்ணிகர்களினால் மட்டும் அத்யயனாதிகள் செய்யப்படக் கூடிய ஸம்ஸ்க்ருத வேதம் போலன்றிக்கே ஸர்வரும் அதிகரிக்கலான உத்கர்ஷம் பெற்றிருப்பது கூறப்பட்டதாகும். இந்த ஏற்றம் வேறொரு முகமாக இறுதியில் ‘ச்ராவ்யவேதாத்" ன்ன்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்திரிகையின் இறுதியில் இதே விசேஷணத்தை தத்தாத்ருக் குருத்ருஷ்டிபாத மஹிம க்ரஸ்தேந யச் சேதஸா என்று அனுஸந்தித்திருப்பதைப் பார்த்தால் இது ஆழ்வாருக்கு விசேஷணம் என்றேற்படும். நம்மாழ்வாருக்கன்றோ இந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்தக் கலியுக ஆரம்பத்தில் ப்ரதமப்ரவர்த்தகராயும் பின்பு ஒரவஸரத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அதை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவராயும் இருக்கும் ஏற்றம்! அங்கு கீதோபநிஷத்தை வியாக்யானம் செய்வதற்கு ஆசார்யர்களின் அனுக்ரஹத்தின் பெருமையைக் குறிப்பிடுவதற்காக இதே பதம் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது என்றறியவும்.

காதா என்றது ச்ருணுகாதாம்புராகீதாம் என்றதற்கு ஸ்ரீஅபய ப்ரதான ஸாரத்தில் :’கண்டு என்பான் ஒரு மஹர்ஷி கண்டதொருகாதை கேளிர்" என்றருளிச் செய்திருப்பது நினைவூட்டப்பட்டு, ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஸ்ரீத்ரமிடோபநிஷத் எனப்படும் திருவாய்மொழியாகிற பாட்டுக்கள் குறிப்பிடப் படுகின்றன

அகில பயோத்தாரீணி என்னும் பதம் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பதினால் எல்லா பயங்களிலிருந்தும் விடுபடுவான் என்ப்தைக் கூறுகிறது

இப்படி உபோத்காத ரூபமாக ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பெருமையைப் பத்து சுலோகங்களினால் ப்ரதிபாதித்தபிறகு, பத்து பத்துக் குணங்களை நிரூபிக்கும் 100 சுலோகங்களும், இதில் அஞ்சிறைய மடநாராய் திருவாய்மொழியில் ஆசார்யகுணரூபமாக ஒரு சுலோகமும், சீலமில்லாச் சிறியனேலும் என்கிற பாட்டுக்கு அர்த்தாந்தரரூபமாக ஒரு சுலோகமும், நண்ணாதார் முறுவலிப்ப என்பதற்கு அர்த்தாந்தரமாக இரண்டு சுலோகமும், பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட ஒவ்வொரு பத்தில் உள்ள பத்துத் திருவாய்மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களைக் கூறும் 10 சுலோகங்களுமாக 114 சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. இவை மேலே அந்தந்தத் திருவாய்மொழிகளுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கின்றன.

சனி, 4 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்ப‌டி ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்னும் அர்த்தத்தைஇர‌ண்டு சுலோக‌ங்க‌ளினால் உபபாதித்த‌ருளி, அந்த‌ ஸேவ்ய‌த்வ‌ம் முத‌லிய‌ ப‌த்துக் குண‌ங்க‌ளையும் ப்ர‌திபாதிக்கும் க்ர‌ம‌த்தை நிரூபிக்கக்கோலி, அதை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ ஒரு ச்லோக‌த்தில் அருளிச் செய்கிறார் ---- “ப்ரூதே” என்றார‌ம்பித்து.

ब्रूते गाथा सहस्रं मुरमथनगुणस्तोमगर्भं मुनीन्द्र:

प्रत्येकम् चात्र गाथा: प्रथितविभुगुणा: स्पष्टमध्यक्षयाम: |

तत्रासंकीर्णतत्तद्शकगुणशतस्थापनौचित्ययुक्तान्

ऐदंपर्यावरुद्धानगणितगुणितान् तद्गुणान् उद्गृणीम: ||

ப்₃ரூதே கா₃தா₂ ஸஹஸ்ரம் முரமத₂நகு₃ணஸ்தோமக₃ர்ப₄ம் முநீந்த்₃ர:

ப்ரத்யேகம் சாத்ர கா₃தா₂: ப்ரதி₂தவிபு₄கு₃ணா: ஸ்பஷ்டமத்₄யக்ஷயாம: |

தத்ராஸங்கீர்ணதத்தத் த‌3ஶககு₃ணஶதஸ்தா₂பநௌசித்யயுக்தாந்

ஐத₃ம்பர்யாவருத்₃தா₄நக₃ணிதகு₃ணிதாந் தத்₃கு₃ணாந் உத்₃க்₃ரு̆ணீம: ||

முநீந்த்ர: - முனிவர்களுள் தலை சிறந்து நிற்கும் ந‌ம்மாழ்வார், காதாஸஹஸ்ரம் – ஆயிரம் பாசுரங்களையும், முரமதனகுண‌ ஸ்தோம கர்ப்பம் – எம்பெருமானுடைய திருக்கல்யாண‌ குண‌ங்களின் கூட்டங்களைத் தம்முள் பொதிந்து கொண்டிருக்குமாறு, ப்ரூதே - அருளிச் செய்கிறர். அத்ரச - இத்திருவாய்மொழியில், காதா-பாசுரங்களை, ப்ரத்யேகம் - ஒவ்வொன்றும், ப்ரதிதவிபுகுணா:- எம்பெருமானுடைய குணங்களை வெளிப்படுத்துவனவாக, ஸ்பஷ்டம் - தெளிவாக, அத்ய க்ஷ‌யாம- கண்கூடாகக் காண்கிறோம், தத்ர - அதில், அஸ‌ங்கீர்ண தத்தத் தசககுணசத ஸ்தாபந ஔசித்ய யுக்தாத் - கூறியது கூறாத அந்தந்தப் பதிகங்களின் நூறு குணங்களை ஸ்தாபிப்பதில் பொருத்தமுடையனவாய், ஐதம்பர்யாவ்ருத்தாத் - அக்கருத்தையே வற்புறுத்துதலில் நோக்கமுடையனவாய், அகணித குணிதாத் - மறுமுறை கூறப்பட்டன வாயினும், (ப்ரயோஜனமுடையதாகையினாலே குற்றமற்றனவான), தத் குணாந் - அந்தந்தப் பாசுரங்களில் விளக்கப்படும் குணங்களை, உ.த்க்ருணீம - எடுத்துக் கொள்ளுகிறோம்..

இந்த ப்ரதிஜ்ஞை மேல் பதினோராம் சுலோக்ம் முதல் ப்ரதிப்ாதிக்கப்பட்டிருக்கும் ப்ரகாரம் மேலே திருவாய்மொழிதோறும் காட்டப்பட்டிருக்கிறது. அதில் சிற்சில குணங்கள் மறுபடியும் கூறப் பட்டிருந்தபோதிலும் அந்தத் திருவாய்மொழி ப்ரகரணத்திற்கு ப்ரயோஜனமாயிருப்பதினால் அவைகள் ஸங்க்ரஹிக்கப்பட்டிருக்கின்றன என்று கருத்து. கீழ் இரண்டாம் சுலோகத்தில் உபபாதிக்கப் புட்டிருக்கிற‌படியே திருவாய்மொழியாகிற திருப்பாற்கடலை ஆசார்ய ஸார்வபெளமன் தம்முடைய அநிதரஸாதாரணமானதும் அத்யுத்க்ருஷ்டமென்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான ஜ்ஞானத்தை ம‌த்தாக நாட்டி, யதிவரனார் மடைப்பள்ளி வந்த மண‌மாகிற யதிராஜமஹாநஸ ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாக் கொண்டு கடைந் தருளின பொழுது உண்டான குண விசேஷம் ஒவ்வொன்றையும் ஒரு ரத்னமாகக்கொண்டு அவற்றை எடுத்து ஒரு மாலையாகச் சேர்க்கும்பொழுது அந்தந்த ப்ரதான குணங்களை ப்ரதிபாதிப்பதில் உபயோகமிருப்பதினால் புனருக்தமேயாகிலும் மறுபடியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுலோகத்தின் தாத்பர்யத்தை விளக்கும்பொழுது அஸ்மத் ஸ்வாமி “ஸ‌ர்வந்த்தர ஸ்வதந்த்ரராகையாலே தட்டானாயிருந்து ரத்னஹாரம் செய்தருளினபடி இது, எப்படி ஒரு தட்டான், ஒரு உத்தமமான ஹாரத்தைச் செய்யும்பொழுது, பல வகைகளான ரத்னங்களைச் சேகரித்து, அவற்றைப் பிரித்து, தன் முன் பல ரகங்களாக வைத்துக் கொண்டு, ஹாரத்திற்குப் பொருத்தமான பச்சை சிவப்பு வெள்ளை மஞ்சள் முதலிய கற்களைப் பொறுக்கி எடுத்துக் கட்டுவனோ, அதைப்போலவே திருவாய்மொழிப் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்ட குணங்கள் ஸ்வாமி தேசிகனுக்குத் முன்பே மானஸமாகத் தோன்ற, அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, ஒருமாலையாகக் கோக்கிருர் என்பது இங்கு விவக்ஷிதமாகும்" என்று நிர்வஹித்தருளும்படி இருந்தது.

இப்படித் திருவாய்மொழியினுடைய தாத்பர்யத்தை வெளியிடுகிற‌ இந்த ஸ்ரீத்ரமிடோப நிஷத் தாத்பர்யர‌த்னாவளியானது ஸந்த்வஸ்தர்கள் எல்லோராலும் தரிக்கப்பட வேண்டியது என்று அருளிச் செய்து உபோத்காதத்தை உபஸம்ஹாரம் செய்தருளுகிறார்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்ப‌டிக் கீழ் சுலோக‌த்தில் இந்த‌ ப்ர‌ப‌ந்தத்தில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் ப்ர‌தான‌த‌மமான‌ அர்த்த‌விசேஷ‌ம் ச்ரிய‌:ப‌தியான‌ எம்பெருமான் த‌ன் திருவ‌டிக‌ளை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்று அருளிச்செய்து, அது திருவாய்மொழியில் ப‌த்து த‌ச‌க‌ங்க‌ள், நூறு திருவாய்மொழிக‌ள், ஆயிர‌ம் பாட்டுக்க‌ள், இவைக‌ளால் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. மேல் சுலோக‌த்தில் இந்த‌ அர்த்தத்தையே அனுவ‌தித்துக்கொண்டு, ப‌த்துப் ப‌த்துக்க‌ளினாலும் இவ்வ‌ர்த்த‌ம் உபபாதிக்க‌ப்ப‌டுகிற‌ப‌டியை அனுஸ‌ந்தித்த‌ருளுகிறார் – “ஸேவ்ய‌த்வாத்” என்றார‌ம்பித்து.

सेव्यन्वात् भोग्यभावात् शुभतनुविभवात् सर्वभोग्याधिकत्वात्

श्रेयस्तद्धेनुदानात् श्रितविवशतया खाश्रितानिष्टहृत्तवात् ।

भक्तच्छन्दानुवृत्तेः निरुपधिकसुहृद्भावतः सत्पदव्यां

साहाय्याच्च स्वसिद्धेः स्वयमिह करणं श्रीधरः प्रत्यपादि ||

ஸேவ்யந்வாத் போ₄க்₃யபா₄வாத் ஶுப₄தநுவிப₄வாத் ஸர்வபோ₄க்₃யாதி₄கத்வாத்

ஶ்ரேயஸ்தத்₃தே₄நுதா₃நாத் ஶ்ரிதவிவஶதயா கா₂ஶ்ரிதாநிஷ்டஹ்ரு̆த்தவாத் ।

ப₄க்தச்ச₂ந்தா₃நுவ்ரு̆த்தே: நிருபதி₄கஸுஹ்ரு̆த்₃பா₄வத: ஸத்பத₃வ்யாம்

ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்₃தே₄: ஸ்வயமிஹ கரணம் ஶ்ரீத₄ர: ப்ரத்யபாதி₃ ।|

ஸேவ்யத்வாத் - பகவானே ஸேவிக்கப்படத் தகுந்தவனாயிருப்பதாலும், போக்யபாவாத் -- - அவ‌னே அனுபவிப்பதற்கு ஏற்றவனாகையாலும், சுபதனுவிபவாத் – மங்களமான திருமேனியின் பெருமையினாலும், ஸர்வபோக்யாதிகத்வாத் - போக்யங்களான எல்லாவற்றிற்கும் மேற்பட்ட போக்யனாயிருப்பதினாலும், ச்ரேய: தத்ஹேதுதாநாத் - புருஷார்த்தத்திற்கும், அதன் உபாயத்துக்கும் காரணமாய் நிற்பதாலும், ச்ரிதவிவசதயா - - ஆச்ரிதர்களுக்குப் பரதந்த்ரனாய் இருப்பதினாலும், ஸ்வாச்ரிதாநிஷ்ட ஹ்ருத்த்வாத் - தன் அடியார்களின் அதிஷ்டங்களைப் போக்குமவ னாகையாலும்,பக்தச்சந்தானுவ்ருத்தே: -அடியார்களின் கருத்தைத்தான் தழுவி நடப்பதினாலும், நிருபதிக ஸுஹ்ருத்பாவத: - காரணம் இது என்று நம்மால் அறுதியிட முடியாதபடி தோழனாய் நிற்பதினாலும், ஸத்பதவ்யாம் ஸாஹாய்யாச்ச - சிறந்த (அர்ச்சிராதி) மார்க்கத்தில் துணை நிற்பதினாலும், இஹ -- திருவாய்மொழியாகிற இந்தப்ரபந்தத்தில், ஸ்ரீதர: - ச்ரிய:ப‌தியான ஸர்வேசுவரன், ஸ்வஸித்தே: - தன்னைப் பெறுவதாகிற பலனுக்கு, ஸ்வயம் - தானே, கரண‌ம் – ஸாதனம் என்று, ப்ரத்யபாதி - விளக்கப் பட்டுள்ளான்.

இந்தப் பத்துக் காரணங்களையும் (அர்த்தங்களையும்) முதல் பாட்டிலேயே ஸ‌ங்க்ரஹமாக நிரூபித்துள்ளார். எங்ஙனே என்னில் :

ஸேவ்யத்வாத்

அயர்வறும் அமரர்கள் அதிபதி,

அருளினன், அடிதொழுது

போக்யபாவாத்

உயர்வற உயர்நலம் உடையவன்

சுபதநுவிபவாத்

சுடர் அடி - திருவடிதிவ்யமங்கள விக்ரஹத்திற்கு உப‌லக்ஷணம்

ஸ்வரபோக்யாதிகத்வாத்

அயர்வறும் அமரர்கள் அதிபதி என்பதினால் பகவான் நித்யஸூரிகளும் முக்தர்களும் எப்பொழுதும் அனுப‌வித்துக்கொண்டிருப்பது ஏற்படுகிற‌ப‌டியினால் அவனுடைய அதிபோக்யத்வம் கூறப்பட்டதாகிறது:

ச்ரேய:தத்ஹேதுதாநாத்

மதிநலம் அருளினன்

ச்ரிதவிவசதயா  

அடிதொழுது எழும்படி அவன் அவதார தசைகளில் ஸேவை ஸாதிக்கிருன் என்றபடி

ஸ்வாச்ரிதா நிஷ்டஹ்ருத்த்வாத்

துயர் அறு

பக்தச்சந்தாதுவ்ருத்தே

அயர்வறும் அமரர்கள் அதிபதி – ஸூரிக‌ளுடைய‌ அதிபதியாயிருந்த போதிலும், பக்தன் இஷ்ட ப்ரகாரம் தான் நடந்து கொள்ளுகிறான் என்றபடி

நிருபதிகஸுஹ்ருத்பாவ 

ம‌திநலம் அருளினன்

ஸ‌த்ப‌த‌வ்யாம் ஸாஹாய்யாச்ச

அயர்வறும் அமரர்கள் அதிபதி ப‌க‌வ‌ான் நித்யஸூரிகளுக்கு நாத‌னாகையாலே அவனுடைய ஆஜ்ஞையை சிரஸா வஹித்து அர்ச்சிஸ் முதலிய ஸூரிகள் முக்தாத்மாவை அர்ச்சிராதி மார்க்கத்தில் எழுந்தருள‌ப் பண்ணுகிருர்களே யாகிலும் ப‌க‌வ‌ான் அக்காலத்தில் அவர்க‌ளுக்கு அந்தர்யாமியாக இருந்து கூட‌ வழி நடத்துகிறான் என்பதும்: வைகுண்ட லோகத்தை அடைந்ததும் ஸூரிகளுடைய பலவித ஸ‌த்கார‌ங்களான பிறகு, பெரிய பிராட்டியார் மூலமாகவும், அதுவும் போதாது என்றுகொண்டு “வந்து அவர் எதிர் கொள்ள” என்கிறபடியே பகவான்தானே வந்து எதிர்கொள்ளுகிறான் என்பதும் இங்கு விவக்ஷிதம்.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

நம்மாழ்வார் வைபவம்

உபாய ப்ரதிபந்தகங்களான பாபங்களைப் பகவானைப் போலவே பிராட்டியும்போக்குகிறாள் என்பது வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே (4 - 5 - 11) என்று அருளிச் செய்யப்பட்டது. ‘இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸ்மஸ்த துக்கங்களையும் பகவதாச்ரித வாத்ஸல்யாதி கல்யாணகுணைகபோயான பெரியபிராட்டியார் போக்கும்’ எனத் திருவாறாயிரப்படியிலே வ்யாக்யாநம்.

ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பத்தாம்பாட்டில் ஆழ்வார் ஸ்வானுஷ்டான முகமாக சரணாகதி செய்யும் ப்ரகாரத்தை நிரூபித்தி ருக்கிறார். அது த்வய விவரணமென்பது ஸம்ப்ரதாயம்.

உலகமுண்ட பெருவாயா ( 8 - 10 ) திருவாறாயிரத்தின் அவதாரிகையில் ‘இப்படி திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைத்தும் அவனைக் காணப் பெறாமையாலே, இனி அவனைக்காண்கைக்கு உபாயம் இவன் திருவடிகளைச் சரணம் புகுகை போக்கி மற்றென்று மில்லை என்று பார்த்து, இவனுடைய காருண்ய வாத்ஸல்யாதி குணங்களைப் பற்றாசாகச் சொல்லிக் கொண்டு பிராட்டி புருஷகாரமாக ஸர்வலோக சரண்யனான திருவேங்கடமுடையான் திருவடிகளைச் சரணம் புகுகிறார்’ என்றும், அகலகில்லேன் பாட்டு அவதாரிகையில் " உன் திருவடிகளை அநந்ய சரணனான அடியேன் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாகச் சரணம்புகுந்தேன். இப்போதே நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகனாய் உன் திருவடிகளிலே ஸர்வ காலமும் ஸர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெறவேணும் " என்றும், இதனுடைய வ்யாக்யானமான 24000 படியில் ‘இங்கு பிராட்டிக்குப் புருஷகாரத்வம் சொன்னது இவளுடைய ஸித்தோபாய விசேஷண பாவத்திற்கும் உபலக்ஷணம் அல்லது அவ் விசேஷண பாவத்தை வ்யவச்சேதித்தபடியன்று. த்வயத்திலும் த்வய விவரணமான கத்யத்திலும் இப்பாட்டிலும் இவளுக்கு ஸித்தோபாய விசேஷணத்வம் சப்தஸ்வாரஸ்யத: ப்ராப்த மாயிருக்கையாலே அத்தை இங்கே வ்யவச்சேதிக்கக்கூடாதிறே. ஆகையால் இவ்விசேஷண பாவத்தை எடாதே புருஷகாரபாவத்தை எடுத்தது எம்பெருமானிற் காட்டில் இவளுக்குள்ள ஏற்றம் சொல்லுகைக்காகவத்தனை’ என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது,

இப்படிக் கொள்ளாவிட்டால் ‘பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ‘ஸமஸ்த துக்க’ என்றதுடன் விரோதிக்கும். ப்ரஹ்மசர்ய வேஷத்தைப் பூண்டு மஹாபலி யஜ்ஞவாடத்திற்குச் சென்ற காலத்திலும் அவனுடைய திருமார்வத்தை விட்டு அகலாதவள் இப்பொழுது தன்னுடைய தாஸபூதன் சரணாகதி செய்யும் ஸமயத்தில் எங்கு சென்றாள், ஏன்சென்றாள் என்றால் ஸமாதானம் சொல்லமுடியாதன்றோ?

இத்திருவாய்மொழியின் நாலாம் பாட்டிலும் ‘திருமாமகள் கேள்வா! தேவா’ என்று இவளுடைய ஸம்பந்தத்தால் அவன் ஏற்றம் பெற்றமை கூறப்பட்டிருக்கிறது,

இந்தத் திருவாய்மொழியின் நிகமனப்பாட்டிலும் ‘அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை’ என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே ‘தேவ: ஸ்ரீமாந்.........ஏகமர்த்தம்’ என்று ஸங்க்ரஹிக்கப் பட்டது.

இந்த ஒரு அர்த்தத்தை ஸ்தாபிப்பதற்காகப் பத்துப் பத்துக்களிலும் அவன் ஸேவ்யன், அதிபோக்யன் என்றிவை முதலாகப் பத்து அர்த்தங்களையும், அப்படியே அவன் ஸேவ்யன் என்பதை நிரூபிப்பதற்காக பரம், நிர்வைஷம்யம் என்னும் பத்துக்குணங்களையும், அந்தப் பரத்வத்தை ஸ்தாபிப்பதற்காக நிஸ்ஸீமோத்யத்குண‌த்வம், அமிதரஸத்வம் முதலிய பத்துக் குணங்களையும் அனுஸந்தித்தருளினார் என்றபடி. அதாவது திருவாய்மொழியில் பல ச்ருதியான நூறு பாட்டுக்களை விட்டு விட்டால் 1002 பாட்டுக்கள் உள. இவை ஒவ்வொன்றிலும் ஒரு குணமாக 1002 குண‌ங்களும், இவைகளில் பத்துப் பத்துக் குணங்களினால் 100 திருவாய்மொழிகளில் 100 குணங்களும், இந்த 100 குணங்களில் பத்துப் பத்துக் குணங்களாகப் பத்துப் பத்துக்களில் 10 குணங்களுமாக 1112 குணங்கள் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கின்றன. எப்படி எல்லா வேதங்களும் பகவானுடைய ப்ராப்ய‌த்வ‌த்தையே கூறுகின்றனவோ, அப்படியே ஸர்வீய சாகையான‌ ஸ்ரீத்ரமிடோபநிஷத்தில் அவன் ப்ராப்ய‌ன் மாத்திரமல்லன், ப்ராபகனும் அவனே என்றும், அப்படி ப்ராப்யனுமாய் ப்ராபகனுமாய் இருக்கும் ஆகாரம் திருமாமகளுடன் சேர்ந்து நிற்பவனுக்கே என்றும் ஆழ்வார் இத்திருவாய் மொழியில் உபபாதித்தருளினார் என்று ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய தமிழ்மறைகள் தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிந்தவரான சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு நிஷ்கர்ஷித்தருளினாராயிற்று.

இந்த ச்லோகத்திற்கு இப்படி அர்த்தம் என்று நிர்வஹித்தருளிய அஸ்மத் ஸ்வாமி, ஓருருவில் உபய வேதாந்தங்களைப் போலே ப்ரமாண‌ தம‌மாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகீதோபநிஷத்திலும் இவ்வர்த்தமே நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பது ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹத்தில் பரப்ரஹ்மமே ப்ராப்யமாகையால் அந்தப் பரப்ரஹ்ம‌ம் நாராயணனே என “நாராயண: பரம்ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே ஸமீரித” என்று அருளிச்செய்தார். இதின் மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய ஸ்ரீகீதார்த்த ஸ‌ங்க்ரஹப் பாட்டில் இந்த ச்லோகத்தின் கருத்தை “அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரம‌ம் திருமகளோடு வரும் திருமால் என்று தானுரைத்தான் தருமமுகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே ” என்று அருளிச் செய்திருப்ப‌தைப் பராமர்சித்தால் இவ்வர்த்தம், அதாவது ச்ரிய:பதியான பகவானே பரப்ரஹ்மம் என்னுமர்த்தம் தாம் கூறுவதொன்றன்று, இது ஸ்ரீகீதாசார்யனாலே சொல்லப்பட்டது என்றேற் படுகிறது. தத்துவார்த்தம் இப்படியிருக்க இந்த லோகத்தில் இப்பொழுது இதற்கு மாறாகப் பலர் பலபடிகளில் கூறிப் பரம பலத்தைத் தாங்களும் பெறாமல் போவதுடன் தங்களை ந‌ம்பியிருப்பவர் களுக்கும் அது கிட்டாமலிருக்ககும்ப‌டி செய்கிறார்க‌ளே, ஐயோ! க‌லியின் கொடுமை! “ என்று க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றும்ப‌டியாய் இருந்தது.

வியாழன், 19 அக்டோபர், 2017

நம்மாழ்வார் வைபவம்

प्राच्ये सेवानुगुण्यात् प्रभुमिह शतकेऽमंस्त मुक्तेरुपार्यं

मुक्तप्राप्यं द्वितीये मुनिरनुबुबुधे भोग्यता विस्तरेण |

प्राप्यत्वोपायभावौ शुभसुभगतनोरित्यवादीत् तृतीये

अनन्यप्राप्यश्चतुर्थे समभवदितरैरप्यनन्याद्युपाय: ||

ப்ராச்யே ஸேவாநுகு₃ண்யாத் ப்ரபு₄மிஹ ஶதகேsமம்ஸ்த முக்தேருபார்யம்

முக்தப்ராப்யம் த்₃விதீயே முநிரநுபு₃பு₃தே₄ போ₄க்₃யதா விஸ்தரேண |

ப்ராப்யத்வோபாயபா₄வௌ ஶுப₄ஸுப₄க₃தநோரித்யவாதீ₃த் த்ரு̆தீயே

அநந்யப்ராப்யஶ்சதுர்தே₂ ஸமப₄வதி₃தரைரப்யநந்யாத்₃யுபாய: ||

ஆழ்வார் இத்திருவாய்மொழியில் முத‌ல் ப‌த்தில் ப‌க‌வானை அடியார்க‌ள் வ‌ந்த‌டைய‌த் த‌குதியுள்ள‌மையால் மோக்ஷ‌த்திற்கு உபாய‌மென‌த் திருவுள்ள‌ம் ப‌ற்றினார். இர‌ண்டாம் ப‌த்தில் அவ‌னுடைய‌ போக்ய‌த்வ‌த்தின் மிகுதியாலே முக்த‌ர்க‌ளினாலே அடைய‌ப்ப‌டும‌வ‌னாக‌ நிர்ண‌யித்த‌ருளினார். மூன்றாம் ப‌த்தில் ப‌ல‌னாயும் அத‌ற்கு உபாய‌மாயும் இருக்கும் த‌ன்மைக‌ள் சுபாச்ர‌ய‌மான‌ திருமேனியுடைய‌ எம்பெருமானுக்கே என்று அருளிச் செய்தார். நான்காம் ப‌த்தில் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ப‌ல‌னைக் கொள்ளாத‌வ‌ராக‌வும், ம‌ற்ற‌ ஆறு ப‌த்துக்க‌ளினால் ப‌க‌வானைய‌ன்றி வேறொன்றை உபாய‌மாகக் கொள்ளாத‌வ‌ராக‌வும் ஆனார்.

திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் முக்ய‌மான‌ அர்த்தத்தை வெளியிடுகிறார் --- “தேவ‌:” என்றார‌ம்பித்து.

देव: श्रीमान् स्वसिद्धे: करणमिथि वदन्नेकमर्थं सहस्रे

सेव्यत्वादीन् दशार्थान् पृथगिह शतकै: वक्ति तत्स्थापनार्थान् |

ऐकैकश्यात् परत्वादिषु दशकगुणेष्वायतन्ते तथा ते

तत्तद्राथागुणानामविदधति तत्पंक्तय: पंक्तिसंख्या: ||

தே₃வ: ஶ்ரீமாந் ஸ்வஸித்₃தே₄: கரணமிதி₂ வத₃ந்நேகமர்த்த₂ம் ஸஹஸ்ரே

ஸேவ்யத்வாதீ₃ந் த₃ஶார்த்தா₂ந் ப்ரு̆த₂கி₃ஹ ஶதகை: வக்தி தத்ஸ்தா₂பநார்த்தா₂ந் |

ஐகைகஶ்யாத் பரத்வாதி₃ஷு த₃ஶககு₃ணேஷ்வாயதந்தே ததா₂ தே

தத்தத்₃ராதா₂கு₃ணாநாமவித₃த₄தி தத்பங்க்தய: பங்க்திஸங்க்₂யா: ||

ஆயிர‌ம் பாட்டுக்க‌ளையுடைய‌ இத்திருவாய்மொழியில் பெரிய‌ பிராட்டியை ஒரு க்ஷ‌ண‌கால‌ம்கூட‌ப் பிரியாத‌ எம்பெருமான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌மாவான் என்னும் ஒரே அர்த்தத்தை அருளிச் செய்கிற‌வ‌ராய், அதை ஸாதிக்கக்கூடிய‌ ஸேவ்ய‌ன் (அடைய‌த் த‌குந்த‌வ‌ன்) முத‌லிய‌ ப‌த்து அர்த்த‌ங்க‌ளைப் ப‌த்துப் ப‌த்துக்க‌ளிலும் த‌னித்த‌னியாக‌ அருளிச் செய்கிறார். அந்த‌ப் ப‌த்து அர்த்த‌ங்க‌ளும் எல்லோரிலும் எல்லாவ‌ற்றிலும் மேற்ப‌ட்டிருக்கும் த‌ன்மை முத‌லிய‌ நூறு குண‌ங்க‌ளில் ஒவ்வொன்றாக‌ விரிவ‌டைகின்ற‌ன‌. அவ்வாறே ப‌த்து எண்க‌ளை உடைய‌ ப‌த்தாகிய‌ நூறு ப‌திக‌ங்க‌ளால் வெளியிட‌ப்ப‌டும் நூறு குண‌ங்க‌ளும் ஆயிர‌ம் எண்ணுள்ள‌ அந்த‌ந்த‌ப் பாசுர‌ங்க‌ளின் குண‌ங்க‌ளைப் பின்ப‌ற்றுகின்ற‌ன‌.

தேவ‌:ஸ்ரீமாந் –பெரிய‌பிராட்டியாருட‌ன் கூடின‌வ‌னாகையால் தேவ‌னான‌வ‌ன் என்ற‌ப‌டி. “திருமாம‌க‌ள் கேள்வா தேவா” என்ற‌ப‌டியினால் திருமாம‌க‌ளுக்குக் கேள்வ‌னாகையாலே இவ‌னுக்கு தேவ‌த்வ‌ம் ஸித்தித்தது என்று திருவுள்ள‌ம். இவ‌ள் ஸ‌ம்ப‌ந்த‌ம் பெறாமையால் ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளைப் ப‌ர‌தேவ‌தை என்று கூற‌ ப்ர‌மாண‌ங்க‌ள் முன்வ‌ர‌வில்லை. இவ‌ளுடைய‌ ச‌ம்ப‌ந்தத்தைப் ப‌ல‌ இட‌ங்க‌ளில் திருவாய்மொழியில் கூறியிருந்த‌போதிலும் ப‌ர‌தத்துவ‌ ப்ர‌திபாத‌க‌மான‌ “ஒண்டொடியாள் திரும‌க‌ளும் நீயுமே நிலா நிற்ப‌, கோல‌த்திருமாம‌க‌ளோடு உன்னை, நின் திருவ‌ருளும் ப‌ங்க‌ய‌த்தாள் திருவ‌ருளும்”, “உன் தாம‌ரைம‌ங்கையும் நீயும்”, “அக‌ல‌கில்லேன் இறையும் என்ற‌ல‌ர்மேல் ம‌ங்கை உறைமார்பா” என்றிவை முத‌லிய‌வை இங்க‌னுஸ‌ந்தேய‌ங்க‌ள். இந்த‌ ஒரு அர்த்தத்தைத்தான் ஸ்வாமி தேசிக‌ன் த‌ம‌க்கும் த‌ம் சிஷ்ய‌ர்க‌ளுக்கும் த‌ஞ்ச‌மாகக் க‌ருதினார் என்ப‌தை அவ‌ருடைய‌ அனேக‌ ப்ர‌ப‌ந்த‌ங்க‌ளில் காண‌லாம். தேவ‌:ஸ்ரீமாந் என்ப‌த‌ன் க‌ருத்து இப்ப‌த‌ங்க‌ளினாலோ இவ‌ற்றுக்கு ஸ‌த்ருச‌மான‌ ப‌த‌ங்க‌ளினாலோ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. ஸ்ரீஹ‌ம்ஸஸ‌ந்தேச‌த்தில் “தேவ‌:ஸ்ரீமாந்” என்ற‌ ப‌த‌ங்க‌ளையே உப‌யோகித்த‌ருளினார். “ச்ரிய‌:ப‌தி புருஷோத்த‌ம‌ன்” என்று ஸாரார்த்த‌மாக‌ அருளிச் செய்ய‌ப் ப‌ட்டிருக்கிற‌து. “தேவ‌:ஸ‌ஹைவ‌ச்ரியா” என்று த‌சாவ‌தார‌ ஸ்தோத்திர‌த்திலும், “ஸ்ரீம‌த்நாராய‌ண‌:” என்று ஸ்ரீந்யாய‌ ஸித்தாஞ்ஜ‌ன‌த்திலும் ,”த‌ம்ப‌தீ ஜ‌க‌தாம்ப‌தீ”, “போத‌ம‌ரும் திருமாதுட‌ன் நின்ற‌ புராண‌னையே”, “ஸ‌ந்த‌:ஸ்ரீச‌ம் ஸ்வ‌த‌ந்த்ர‌ ப்ர‌ப‌த‌ன‌ விதிநாமுக்த‌யே நிர்விச‌ங்கா:” என்று ஸார‌ சாஸ்திர‌த்திலும், ஸ்ரீத‌யாச‌த‌க‌த்திலும், ஸ்ரீஸ‌ங்க‌ல்ப‌ ஸூர்யோத‌ய‌த் திலும் இந்த‌ ஆகார‌ம் ப‌ர‌க்க‌ப் பேச‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஸ்வ‌ஸித்தே:க‌ர‌ண‌ம் இதி வ‌த‌ந் ஏக‌ம‌ர்த்த‌ம் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்கிற‌ ஒரே அர்த்தத்தை நிரூபியா நிற்கும்.

ப்ர‌ப‌ந்தத்தின் ந‌டுவில் ப்ர‌ப‌ந்த‌ ஸாரார்த்தத்தை நிரூபிப்ப‌து என்ப‌து ஓர் வ‌ழ‌க்கு. ஸ்ரீகீதையில் ஒன்ப‌தாம் அத்யாய‌த்தின் இறுதி ச்லோக‌த்தில் உபாய‌மான‌ ப‌க்தி யோக‌ம் கூற‌ப்ப‌ட்ட‌து.

திருப்பாவையில் 15ம் பாட்டில் பாகவதர்களின் பெருமை பேசப்பட்டது. ஒரு காரணமுமின்றியே சில பாகவதர்கள் நம் விஷயத்தில் அந்யதாவாகத் திருவுள்ளம் பற்றினாலும் நாம் அதற்காக அபசாரக்ஷாமணம் செய்துகொள்ளவேண்டும் என்று.இப்பாட்டில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதைப்போல் திருவாய்மொழியிலும் ஐந்தாம் பத்தின் இறுதியில் ஆழ்வார் தாம் தஞ்சமாக நினைத்திருப்பதை வெளியிட்டிருக்கிறார்.

‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறும் ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்’ என்பது ஆழ்வாரின் அனுஸந்தானம். இதன் திருவாறாயிரப்படியில் 'எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குச் சரணம் என்று நாள் தோறும் இதொரு மனோரதமே உடைய ஆழ்வார் .......... இப்பத்தும் கற்றார் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் எம்பெருமானை நித்யானுபவம் பண்ணப் பெறுவர்’ என்று வ்யாக்யாநம். ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வதே உத்தமமான உபாயம் என்றும், அதை த்வயத்தினால் அனுஷ்டிக்கவேண்டும் என்றும் நம் பூர்வாசார்யர்கள் நிஷ்கர்ஷித்திருக்கிறார்கள். உபாயம் அனுஷ்டிப்பதற்கு முன் பெரியபிராட்டியாரிடம் புருஷகாரமாயிருக்கும்படி ப்ரார்த்திக்கவேண்டும். இது முதல்படி. அவளுடன் கூடிய பகவானுடைய திருவடிகளில் சரணாகதியைச் செய்வது இரண்டாவது படி. ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அர்ச்சிராதி கதியினால் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து திவ்ய தம்பதிகளான அவர்களுக்கே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்வது மூன்றாவது படி. புருஷகாரமாயிருக்கும் ஆகாரம் பெரிய பிராட்டியாருக்கு மட்டும் அஸாதாரணம். உபய தசையிலும் உபேய தசையிலும் அவர்கள் இருவருடைய சேர்த்தியே நமக்குத் தஞ்சம் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளமென அறிந்து ஆசார்யன் தம்முடைய பரம க்ருபையினாலே இங்கு இப்படி ஸங்க்ரஹித்தருளிச்செய்தாராயிற்று.

திங்கள், 16 அக்டோபர், 2017

நம்மாழ்வார் வைபவம்


8 ஸேவ்ய ஸம்சோதனம்


            த்யேயமாகிய பரமாத்ம ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டும் அதாவது எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கும் என்கிற முதல் பாதத்தில் உயர்வற என்பதினால் இப்படிப் பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது என்று காட்டப்பட்ட தாயிற்று. அன்றிக்கே கீதாசார்யன் எந்தக் காரணத்தினால் நான் ப்ரக்ருதியையும்,  அத்துடன் சேர்ந்த பத்த ஜீவர்களைக் காட்டிலும் வேறுபட்டவனோ,  பரிசுத்த ஜீவாத்மாக்களையும் விட வேறுபட்டவனோ,  அதே காரணத்தினால் ச்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று ப்ரஸித்தி பெற்றவனாகிறேன்என்று உத்கோஷித்த அம்சம் சொல்லப்பட்டதாகவுமாம். மயர்வற இத்யாதியால் ஜ்ஞானத்தைக் கொடுத்தருளியவன் என்பதினாலும் அயர்வறும் இத்யாதியால் நித்ய முக்தர்களுக்கு அதிபதி என்றதனாலும் இந்த ஏற்றம் காட்டப்பட்டதாகிறது.

8 அர்த்த பஞ்சக நிரூபணம்


         இதிஹாஸ புராணங்களுடன் கூடிய வேதங்கள் எல்லாம் பரமாத்ம ஸ்வரூபத்தையும், ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், பகவானை அடைவதற்கு உபாயத்தையும், தடங்கலாய் நிற்கும் ப்ராப்திவிரோதிகளையும், பலனையும் கூறுகின்றன என்பது ப்ரஸித்தம். ‘உயர்வற உயர்நல முடையவன் என்று பரமாத்ம ஸ்வரூபமும், ‘என்என்பதினாலே ஜீவாத்ம ஸ்வரூபமும், துயர்என்று ப்ராப்தி விரோதியும், ‘நலம், தொழுதுஎன்று உபாயத்தின் ஸ்வரூபமும், ‘எழுஎன்று பலனும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன.

7. ப்ரவார்த்த நிரூபம்


    

         எப்ப‌டி ப்ர‌ண‌வ‌மான‌து எல்லாவேத‌ங்க‌ளிலும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் அர்த்த‌ விசேஷ‌ங்க‌ளையும் உபபாதிக்கிற‌தோ, அதைப்போல‌வே அந்த‌ ப்ர‌ண‌வ‌த்தின் ந‌டு அக்ஷ‌ர‌மாகிய‌ உகார‌த்தின் பொருளாகிய‌ ப‌க‌வானுக்கே சேஷ‌பூத‌ம் என்கிற‌ அந்யயோக‌ வ்ய‌வ‌ச்சேத‌ம், அதாவ‌து ம‌ற்வ‌ர்க‌ளுக்குச் சேஷ‌பூத‌ர்க‌ள‌ல்ல‌ என்ப‌து த‌ன்னைவிட‌ வேறுப‌ட்ட‌ ம‌ற்ற‌ எல்லோர்க்கும் ஸ்வாமி என்று கூறுகிற‌ முத‌ல‌டியினாலும், ம‌கார‌த்தின் பொருளான‌ ஜ்ஞான‌த்தைக் குண‌மாக‌ உடைய‌வ‌ன் ஜீவாத்மா என்ப‌து, “ம‌தி, ந‌ல‌ம்” என்ப‌தினாலும், வேற்றுமையுட‌ன் கூடிய‌ அகார‌த்தின் அர்த்த‌மான‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌னான‌ ப‌ர‌மாத்மாவிற்கே இந்த‌ ஜீவாத்மா சேஷ‌பூத‌ன் என்ப‌து “அய‌ர்வ‌றும்” இத்யாதியாலும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. “அருளினன், துய‌ர‌று” இத்யாதியால் ப‌க‌வான் த‌ன்னுடைய‌ ப‌க்த‌ர்க‌ளுக்கு இஷ்ட‌ ப்ராப்தியையும் அநிஷ்ட‌ நிவ்ருத்தியையும் உண்டாக்குகிறான் என்ப‌து ஏற்ப‌டுகிற‌ப‌டியினால் அகாரார்த்த‌மாகிய‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌த்வ‌ம் ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்ட‌தாகிற‌து.

8. ப‌ர‌ப‌க்ஷ‌ ப்ர‌திக்ஷேப‌ம்




         உய‌ர்வு” என்றார‌ம்பிக்கும் முத‌ல‌டியினால் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளை உடைய‌வ‌ன் என‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், கார‌ண‌ம் ஒன்றும் கூற‌ப்ப‌டாமையினால் இவ‌ற்றை ஸ்வ‌பாவ‌த்திலேயே உடைய‌வ‌ன் என்று ஏற்ப‌டுகிற‌ப‌டியினாலும் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ஒருவ‌ன் ப‌ர‌தேவ‌தை, மும்மூர்த்திக‌ளும் ஸ‌மம், மும்மூர்த்திக‌ளையும் விட‌ வேறுப‌ட்ட‌வ‌ன் ப‌ர‌தேவ‌தை என்றிவை முத‌லிய‌வ‌ற்றைக் கூறுப‌வ‌ர்க‌ளும், ப்ர‌ஹ்ம‌த்தின் ஈச்வ‌ர‌த்வ‌ம் ப்ர‌திபிம்ப‌ம் போன்ற‌து என்று கூறும‌வ‌ர்க‌ளும் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “எவ‌ன்” என்கிற‌ ப‌த‌ம் ப்ர‌மாண‌ங்க‌ளினால் ஏற்ப‌ட்ட‌ ப்ர‌ஸித்தியைத் தெரிவிப்ப‌தினால் ப‌ர‌மாத்மா இல்லை என்னும‌வ‌ர்க‌ள் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌க் குண‌ங்க‌ளினால் ஆன‌ந்த‌வ‌ல்லி ஜ்ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, அத்தால் ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌த்தின் ந‌டுவே இருக்கும் புருஷ‌ன் சொல்ல‌ப்ப‌டுகிற‌ப‌டியினால் நாராய‌ண‌னே ப‌ர‌தேவ‌தை என‌ ள‌ற்ப‌டுகிற‌து. ஆகையினால் ப‌ர‌தேவ‌தை வேறு என்று நிரூபிக்கும் ப‌க்ஷ‌ங்க‌ளெல்லாம் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்ட‌ன‌வாயிற்று.

நலம், மதி, தொழுது” என்கிற பதங்களினால்  ஒர் உபாயத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஏற்படுகிறபடியினாலே கேவலம் வாக்யார்த்த ஜ்ஞானத்தினால் மோக்ஷ‌ம் பெறலாம் என்கிற பக்ஷ‌மும் – “அருளினன்” என்பதினாலே கொடுப்பவன் வேறு வாங்குமவன் வேறு என்பதும், கொடுத்தது மதியும் நலமும் என்பது ஸித்திக்கிறபடியினாலே ஜஞானம் மாத்திரம் ஆத்மா என்கிற பகடிமும் --- அயர்வறும் அமரர்கள் எனப்பன்மையாகக் கூறியிருப்பதினாலே ஆத்மா ஒன்று என்கிற பக்ஷம் மோக்ஷ‌த்தில் பரமாத்மாவுடனே  ஐக்யமடைகிறது என்னும் பக்ஷ‌மும், ஆத்மா ஸ்வதந்த்ரன் எனும் பக்ஷமும் --- அடி என்பதினால் திவ்ய மங்கள விக்ரஹம் ஸித்திக்கிற படியினாலே பகவானுக்கு ரூபமில்லை எனும் பக்ஷமும் --- லக்ஷ்மீ வாசகமான உகாரத்தினால் இந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதினால் ல‌க்ஷ்மீ விசிஷ்டத்வம் ஸித்திக்கிறபடியினால் அதை அங்கீகரியாத பக்ஷங்களும் நிராகரிக்கப்பட்டனவாயிற்று.

9 பராரம்ப நிவாரணம்

பர ப்ரஹ்மம் நிர்க்குணமென்று சொல்லுமவர்கள் அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன் என உபபாதிக்கும் இக்ரந்தத்தை ஆரம்பிக்கமுடியாதல்லவா என்று கருத்து. எவன் என ப்ரஸித்தியைக் காட்டுகிற இந்த க்ரந்தத்தை ப்ரஹ்மம் ஒன்றினாலும் அறியமுடியாத தென்ற‌வர்களும், ப்ரஹ்மமே இல்லையென்ப‌வ‌ர்க‌ளும் ஆரம்பிக்கமுடியாதல்லவா ? ...

10 ஸ்வாரம்ப‌ ஸ‌மர்த்தன‌ம்

பகவான் எல்லாக் கல்யாண‌ குணங்களையும் உடையவனாகையினால் அவனைப் பற்றிய ஜ்ஞானம் ஸார்வபெளமனான பிதாவைப் பற்றிய ஜ்ஞானத்தைப் போல மிகவும் விரும்பத்தக்கதாகும். அப்படிப்பட்ட ஜ்ஞானத்தினால் பகவானிடத்தில் ப்ரீதியுண்டாகி, அவனை அடைய வேண்டுமென்கிற ஆசைபை உண்டாக்கி, அதற்கு உபாயமான பக்தியையோ ப்ரபத்தியையோ அனுஷ்டித்து, மோக்ஷ‌த்தை அடையலாம் என்றும், பகவானுக்குத் திவ்ய ரூபாதிகள் உண்டென்றும் நிரூபிக்கும் இக்ரந்தம் ஆரம்பணீய‌ம் என்றதாயிற்று,

ஆக இப்படி எல்லா வேதங்களும் சேர்ந்து செய்யும் பகவானுடைய ஸ்வபாவம் ஸ்வரூபம் முதலியவைகளின் ப்ரகாசத்தை இத் திருவாய்மொழி விசதமாக நிரூபிக்கிறது என்கிற அம்சம் ஒருவாறு உபபாதிக்கப்பட்டது. மற்றுமுள்ள விசேஷாம்சங்களை அவரவர்கள் தங்கள் தங்கள் ஆசார்யர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கு இது ஒரு தூண்டுகோல் மட்டும்.

         இப்படி ஸ‌கல வேத‌ங்க‌ளினுடைய‌ க்ருத்ய‌ங்க‌ளையும் செய்கிறது என்று நிரூபித்த‌ருளி, மேல்  ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்டிருக்கும் அர்‌்த்த‌ங்க‌ளை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ அருளிச் செய்கிறார் – “ப்ராச்யே” என்றார‌ம்பித்து

புதன், 4 அக்டோபர், 2017

நம்மாழ்வார் வைபவம்

1 விஷயாதி நிரூபணம்.

இந்த ப்ரபந்தத்திற்கு விஷயம் ஸ்வபாவத்திலேயே வேறு ஒருவருக்கும் இல்லாதவையாய் எப்பொழுதும் உயர்ந்துகொண்டே யிருப்பவைகளான எண்ணிறந்த கல்யாண குணங்களையுடைய பகவானே என்பது ‘உயர்வற உயர் லமுடையவன் ’ என்னப்பட்டது. அப்படிப்பட்ட பகவானுக்கு நிருபாதிக தாஸபூதர்களான ஜீவாத்மாக்கள் மீட்சியில்லாத வாட்சியைப் பெறுதலே ப்ரயோஜனம் என்பது ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு’ என்று கூறப்பட்டது, அவனை அடைவது உண்மையான ஜ்ஞானத்தினாலே யாகையாலே அந்த ஜ்ஞானத்தை அடைவதும் அவனுடைய அனுக்ரஹத்தினாலே என்பது ‘மயர்வற மதி லம் அருளினன் ' என்னப்பட்டது, இப்படி ஸர்வஜ்ஞனான பகவானால் அஜ்ஞான கந்தமில்லாதபடி அருளப்பெற்றவர் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்ட ப்ரபந்தமாகையினாலே இப்ரபந்தம் எல்லோருக்கும் உபாதேயம் என்பதும் விச்வஸநீயம் என்பதும் விவக்ஷிதம். இப்படிப் பகவான் அனுக்ரஹிப்பதற்குக் காரணம் அவனுக்கும் தமக்குமுள்ள ஸ்வாமித்வ தாஸத்வமாகையால் ஸம்பந்தம் அர்த்தாத் நிரூபிக்கப் பட்டதாயிற்று. ஆக மதி, நலம், தொழுது என்கிற பதங்களினால் விவக்ஷிதமான பக்தி ப்ரபத்தி களாகிற உபாயங்களும், துயரறு என்பதினால் ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியும், எழு என்பதினால் பகவத் கைங்கர்யமாகிற அவாந்தர பலன்களும் என் மனனே என்று தம்முடைய மனதுபோலே அந்தரங்கர்களான சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை குறிப்பிடப்பட்டு அவர்கள் அதிகாரிகள் என்பதும், விஷயமாகிய பகவானுடன் விஷய விஷயிபாவமும், உத்பாத்ய உத்பாதக பாவமும் ப்ரதி பாதிக்கப்பட்டபடியினால் விஷய ப்ரயோஜன அதிகாரி ஸம்பந்தங்கள் என்னப்படும் அனுபத்தி சதுஷ்டயமும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.

2.மங்களாசரணம்

இந்த ப்ரபந்தத்திற்கு ப்ரதான தாத்பர்யமாய் மற்ற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்ததான பரமாத்மாவை முதலடியிலேயே நிரூபித்திருப்பதினால் வஸ்து நிர்த்தேச மங்களமும், ‘எழு’ என்பதினால் ஆசீர்வாதரூப மங்களமும், ‘நலம் தொழுது’ என்கிற பதங்களினால் நமஸ்காராதிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பக்தியாகிற உபாயமும் நமச்சப்தார்த்தமான ப்ரபத்தியாகிற உபாயமும் கூறப்பட்டபடியினால் நமஸ்கார ரூபமான மங்களமும் செய்யப்பட்டதாகிறது. இந்த ப்ரபந்தத்தை லக்ஷ்மீவாசகமென்று ச்ருதி ப்ரஸித்தமான உகாரத்தினால் ஆரம்பித்திருப்பதினால் ‘தேவதா விசேஷம் எதுவென்று தெரிந்து கொள்ளுவதற்கும், அவளுடைய பர்த்தாவாகிய பகவான் நம்மால் அடையப்படுவதற்கும் விசேஷமான மங்களங்களை அடைவதற்கும் இவ்விடத்தில் லக்ஷ்மீ முதலில் சொல்லப் பட்டாள் " என்று ஸ்ரீ கீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் அருளிச் செய்திருக்கும் விசேஷாம்சங்களும் இங்கு விவக்ஷிதங்கள்.

3 சாஸ்த்ரார்த்தானுக்ரமம்

இந்த ப்ரபத்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் மேலே 6 - ம் 8 - ம் சுலோகத்தின் விவரணத்தில் கண்டு கொள்வது.

4 ப்ரஹ்ம சப்தார்த்தநிரூபணம்

எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்கிற முதலாவது அடியில் உயர்வற என்பதினால் இப்படிப்பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது, ஒரு வித தபஸ்ஸு முதலியது செய்ததனுடைய பலனாகப் பெற்றதன்று என்று தெரிவிக்கிறபடியினாலே பகவானுடைய ஸ்வரூபம் ஹேயப்ரத் யகமாய் கல்யாணைகதாநமாய் இருக்கும் என்றதாயிற்று,

ப்ரஹ்ம என்னும் பதத்திற்கு மேன்மையையுடைய வஸ்து என்றர்த்தம், அயலாரையும் அப்படியே மேன்மையுடையவர்களாகச் செய்வதும் அதன் உட்பிரிவு ஆகையினால் எந்த வஸ்து மற்ற எல்லா வஸ்துக்களையும் விட உயர்ந்ததோ அது ‘ப்ரஹ்ம’ என்னும் பதத்தினால் சொல்லப்படும். இப்படியே யாஸ்கரும் நிருக்தி செய்திருக்கிறார் என்பது ப்ரஸித்தம். ஆகையினால் விசேஷமான தபஸ்ஸு முதலியவைகளைச் செய்து தங்கள் தங்கள் பதங்களைப் பெற்ற ப்ரஹ்மாதிகளைப் போலன்றிக்கே ஒரு விதமான ச்ரமமின்றியும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட உயர்வு இருக்கிற தென்று சொல்ல முடியாதபடியும் நிற்கும் எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்பதை முதல் பாதத்தில் ‘உயர்வற உயர் நலமுடையவன்’ என்று நிரூபித்திருப்பதனாலும், இரண்டாம் மூன்றாம் பாதங்களில் அப்படிப் பட்ட மேன்மையை மற்றவர்களுக்குக் கொடுப்பவன் என்று அருளிச் செய்திருப்பதினாலும் திருமாமகள் கேள்வனாகிய தேவனே ப்ரஹ்ம சப்தத்திற்கு முக்யார்த்தம் என்று உபபாதிக்கப்பட்டதாயிற்று.

தொடரும்--------------

சனி, 23 செப்டம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

ஸங்க்ஷேபோஸௌ விபாகம்’ - இப்படி நுனியுடன் கூடிய முதல் இருபது பாட்டுக்களில் சாரீரகார்த்த க்ரமம் விசதமாக ப்ரதிபாதிக்கப் படுகிறது என்று கூறியது சுருக்கமான நிரூபணம். விஸ்தரமோ என்னில்: -
கீழ் ஸ்ரீரத்னாவளி சுலோகத்தில் ச்ருதிகள் எல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ, அவற்றையெல்லாம் இத் திருவாய்மொழி செய்கிறது என்கிற அம்சம் ‘ப்ரதயதி’ என்றாரம்பித்து நிரூபிக்கப்படுகிறது – என்பது.
வேதங்கள் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தபோதிலும் அவை எல்லாவற்றிற்கும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை நிரூபிப்பதில் நோக்கு, அப்படிச் செய்யும் விஷயத்தில் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றியிருக்கும். அந்த நான்கு முறைகளையும் திருவாய்மொழியில் காணலாம்.
ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் --
அழகிய பாடக்ரமத்துடன் கூடிய ரிக் வேதத்தின் பிரிவைக் காட்டுகிறது. ரிக்வேதத்தின் விசேஷாம்சம் சந்தோபத்தமா யிருக்கையும் ஸ்தோத்ர ரூபமா யிருப்பதும். அதாவது யாப்புடன் கூடியிருப்பது மற்ற வேதங்களில் காணப்பட வில்லை. இந்த வேதத்தில் ரிக்குக்களெல்லாம் ஸ்தோத்திர ரூபமாயிருக்கும். ஒரு பலனோ, இதைச் செய் என்று விதிப்பதோ இதில் கிடையாது. திருவாய் மொழியும் யாப்புடன் கூடியதாயும் ஸ்தோத்திர ரூபமாயும் இருக்கும். ’ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதன குணஸ்தோம கர்ப்பம்’ என்றன்றோ மேலே கூறப் பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் அக்நி வருணன் முதலிய தேவதைகளை ஸ்தோத்ரம் செய்கிறது. திருவாய் மொழி பகவானைப் பற்றியதாயிருக்கும் என்பது விசேஷம். “ஸா க்ஷாதப்ய விரோதம் ஜைமினி " என்கிறபடியே அக்தி முதலிய பதங்கள் பகவானையே நேரில் சொல்லும் என்று ஸூத்ரகாரர் கூறியிருக்கிருர். அக்ரம் நயதீதி அக்நி: --- உத்தமமான பதத்திற்கு அழைத்துப் போவதினால் அக்நி என்னும் பதம் நேரிலேயே பகவானைக் கூறுகிறது என்றபடி. மேலே ’ தசகை:’ என்பதை இங்கு அந்வயித்துக் கொண்டால் ரிக்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறாப் போலே திருவாய்மொழியும் பத்துப் பத்துக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் என்கிற ஸாம்யமும் குறிக்கப்பட்டதாகும். ‘ ரிச:-ஸ்துதெள’ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் ரிக்.
திருவாய்மொழியில் பகவத் குணங்களே ப்ரதானமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், சிற்சில இடங்களில் ப்ரஹ்மா ருத்திரன் இவர்களைப் பற்றிக் கூறியிருப்பதற்குக் காரணம் பகவான் அவர்களுக்கு அந்தர்யாமியாகையால் என்பதை ஆழ்வார் தாமே “புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்” என்கிற பாசுரத்தில் அனுஸந்தித் திருக்கிறார்,
ஸம்யக் கீதானுபத்தம் ஸகலமனுகதம் ஸாமசாகா ஸஹஸ்ரம் --
ஸாமம் எனப்படும் கீதத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஸாமவேதம் பின்பற்றப் பட்டதாயிருக்கும், அதாவது கானத்துடன் கூடிய ஆயிரம் பாட்டுக்களையுடையதாகையினால் அதற்கு ஸமம் என்றபடி. ஸாமவேதம் யாகாதி காலங்களில் இசையுடன் பாடப்படுமாப் போலே, திருவாய்மொழியும் பகவதாரா தனத்திற்கு அங்கமாக ப்ரஹ்மோத்ஸவ காலாதிகளில் பகவான் திருமுன்பே அனுஸந்திக்கப்படுகிறது. ஸ்ரீமத் நாதமுனிகள் சந்தமிகு தமிழ் மறைகளுக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பதும் ப்ரஸித்தம். மேலும் ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட ப்ரஹ்ம வித்யைகள் முப்பத்திரண்டில் பல ஸாமவேதங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறாப் போலே இத்திருவாய்மொழியில் அவற்றில் ப்ரதானமென்றும் ஸர்வாதிகாரமென்றும் ப்ரஸித்தமான ஸ்ரீ ந்யாஸ வித்யையை விசேஷமாக உபபாதித்தருளி, கண்கள் சிவந்து இத்யாதிகளில் மற்றும் சில வித்யைகளை அனுஸந்தித்திருக்கிறார்.
சாந்தோக்யத்தில் பகவானுக்கு உத் என்கிற திருநாமம் கூறப்பட்டிருக்கிறது. இது உகாரத்தினால் ஆரம்பித்து தகாரத்தினால் முடிக்கிற திருவாய்மொழியிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி தசகை: பாதி --
ஸம்ஹிதைகள் ஏழு அஷ்டகங்களும், ப்ராஹ்மணம் மூன்று அஷ்டகங்களுமாகப் பத்து அஷ்டகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் யஜுர் வேதமும் கருத்துடன் கூடியதாய் ப்ரகாசிக்கிறது. யஜ-தேவ பூஜா யாம் என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமாய் தேவதாராதனமாகிற யஜ்ஞ யாகாதி கர்மங்களைக் கூறுவதில் யஜுர்வேதத்திற்கு நோக்கு. அதைப் போலவே பரம பலமாகிற மோக்ஷத்தைக் கொடுக்கும் பகவானுடைய ஆராதனத்தைப் பல இடங்களில் விதியா நிற்கும் திருவாய் மொழியும். ‘அவன் துயரறு சுடரடி தொழுதுஎழு’ என்று முதலில் ‘மனமே! நீ உஜ்ஜீவிக்க ஆசைப்பட்டாயேயாகில், பகவானுடைய திருவடிகளைத் தொழு' என்று விதிக்கப்பட்டிருக்கிறது. திருவாய்மொழி ஆழ்வாருடைய ஸ்வானுபவமேயாகிலும் பத்துக்கள் தோறும் பரோபதேசமான திருவாய்மொழிகள் இருக்கின்றன. ‘வீடுமின் முற்றவும்’ திருவாய்மொழி அவதாரிகையில் திருவாறாயிரப்படியில் ‘இவ்வாத்மாக்களைக் குறித்து பகவதேக போகத்வோபாயமான பக்தி யோகத்தை பகவத் வ்யதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார்’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே மேலும் கிளரொளியிளமை-2-10, சொன்னால் விரோதம்-3-9, ஒன்றும் தேவும்-4-10, பொலிக பொலிக-5-2, நல்குரவும் செல்வும்—6-3, இன்பம் பயக்க-7-10, எல்லியும்காலையும் - 8- 6, மாலைநண்ணி -9-10, கண்ணன்கழலிணை-10-5 முதலிய திருவாய்மொழிகளில் பரோபதேசம் விசேஷித்துச் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசியில் பலன் ப்ரதி பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் ‘ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை’ என்னும் பதங்கள் யஜுர் வேதம் சப்த ப்ரதானமாய் இருக்கும் என்பதைக்காட்டும். திருவாய்மொழி அபிதேயமான பொருளைக் கூறும். யஜுர்வேதோபநிஷத்தாகிய தைத்திரீயத்தில் உத்கோஷிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீந்யாஸவித்யை திருவாய்மொழியில் பரக்க ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிறது. அப்படியே பகவானுடைய அநந்த கல்யாண குணங்களை நிரூபிக்க ஆரம்பித்து, ஒரு குணத்தை வர்ணித்து பூர்ணமாக நிரூபிக்காமல் திரும்பிற்று ஆநந்தவல்லி. திருவாய்மொழியோ முதலடியிலேயே அவனுடைய குணங்கள் மற்றொருவருக்கும் இல்லாதவைகளாயும், ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டவை களாயும், இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பவைகளாயும் இருக்கு மென்றும், அவற்றில் ப்ரதானங்களான ஸெளலப்யம் ஸௌசீல்யம், அவதார ப்ரபாவம், அர்ச்சாவதாரச் சிறப்பு இவற்றை விசேஷித்தும் நிரூபிக்கிறது.
அதர்வா ரஸைச்ச பாதி
ப்ரதிபாதிக்கப்படும் ரஸங்களினால் அதர்வ வேதம் போல் இருக்கும் என்றபடி.
ரு கதௌ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் அதர்வ என்பது. அதர்வ வேதத்தில் ப்ராப்ய ப்ராபகங்கள் விசேஷித்துக் கூறப் பட்டிருக்கின்றன, ‘லோகோ பிந்ந ருசி:’ என்னும் ந்யாயத்தை அனுஸரித்துப் பல வித பலன்களுக்கு ( ரஸங்களுக்கு ) உபாயங்களைக் கூறும் அதர்வவேதம். திருவாய்மொழியில் நூறுவித பலன்கள் பகவானை ஆச்ரயிப்பவர்கள் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒன்பது ரஸங்கள் மட்டும் அதர்வ வேதத்தில் கூறப் பட்டிருக்கிறது என்றும், அவற்றில் ப்ரதானமான சாந்தி ரஸத்தைத் திருவாய் மொழி ப்ரதிபாதிக்கிறது என்றும் நியமிப்பதற்கு ப்ரமாணம் இல்லை.
மேலும் இத்திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிருபணம் முதலிய பத்து அர்த்தங்கள் ப்ரதிபாதிக்கப் படுகின்றன. அவை எவை என்னில்:-விஷய ப்ரயோஜன ஸம்பத்தாதிகாரிகளை நிரூபித்தல், மங்களாசரணம் செய்தல், சாஸ்த்ரார்த்தானுக்ரமம், பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம், ஸேவ்ய ஸம்சோதனம், அர்த்த பஞ்சக நிரூபணம், ப்ரணவார்த்த நிரூபணம், பரபக்ஷ ப்ரதிக்ஷேபம், பராரம்ப நிவாரணம், ஸ்வாரம்ப ஸமர்த்தனம் என்பவை. இவை மேலே உபபாதிக்கப்படுகின்றன.













சனி, 9 செப்டம்பர், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

பஹுபஜநபதம்”, “ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயம் மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் பக்தியோகத்தின் பிரிவுகளாகச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட திருநாம ஸங்கீர்த்தனம், புஷ்பாதி ஸமர்ப்பணம், நமஸ்காரம், த்யானம் இவைகளை ‘கண்ணன் கழலிணை’யில் காணலாம். ஆக இப்படிப் பத்தாம் பத்து நாலாம் ஐந்தாம் திருவாய்மொழிகளில் மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் நாலாம் பாதங்களின் க்ரமம் காட்டப்பட்டதாகிறது.

மேல் நாலாவது அத்யாயத்தில் ப்ரதிபாதிக்கப்படும் க்ரமமான ப2லானுபவம் மேல் திருவாய்மொழிகளில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். ப2லத்திற்குத் துல்யமாயிருப்பதினாலே ப2லாத்யாயத்தில் அங்கியான உபாஸனத்தின் ப்ரகாரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதே ரீதியில் ப்ரபன்னனுக்கு ப்ரபத்த்யனுஷ்டானத்திற்கு உத்தரக்ஷணம் முதல் வருகிற ஸாக்ஷாத்காராதிகளும் பலத்தில் சேர்ந்தவை என்பதை “அருள் பெறுவார்” என்கிற திருவாய்மொழி காட்டுகிறது. ப்ராரப்தகர்ம நாசத்தளவும் விளம்பத்தை (தாமதத்தை)ப் பொறுக்காமையினாலே ப்ரபன்னனுக்குப் பலன்கொடுப்பதில் எம்பெருமானுடைய தீவ்ரதமமான உத்யோகமும் அப்படிச் செய்யுமிடத்தில் இவனுடைய இஷ்டப்ரகாரம் செய்ய ஸித்தமாயிருப்பதும் விசேஷித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

“ பாபச்சித்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட நாலாவது அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம், பத்தாம்பத்து ஐந்தாம் திருவாய்மொழியில் “தீதொன்று மடையா”, “அமராவினைகளே” , “வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்” இத்யாதிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

’ப்ரஹ்மநாடீ கதிக்ருத்’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாவது பாதத்தின் க்ரமம் ஆறாம் திருவாய்மொழியில் ‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

‘செஞ்சொற் கவிகாள்’ திருவாய்மொழியில் பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடத்திலுள்ள ப்ரீத்யாதிக்யம் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதினால் இதன் காரணமாகப் பகவான் ஆச்ரிதர்களின் பூர்வோத்தர கர்மங்களை இவனுடைய அனுகூல ப்ரதிகூலர்கள் பக்கல் ஏறிடுகிறான் என்கிற க்ரமம் சொல்லப்பட்டதாகிறது. ‘ப்ராரப்த கர்மத்திற்குச் செலவு செய்த பிறகு நிர்யாணத்திற்கு விளம்பமில்லை என்பது "உடலுமுயிரும் மங்கவொட்டு” என்னப்பட்டது. ‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான்தானே அந்திம ப்ரத்யயத்தை உண்டாக்குகிறான் என்கிற விசேஷாகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

"அதிவஹந்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது பாதத்தில் அபிப்ரேதமான அர்ச்சிராதி கதியின் ப்ரகாரம் ’சூழ்விசும்பு’ என்கிற திருவாய்மொழியில் விசதமாக நிரூபிதம்,

‘ஸாம்யத’ என்று ஸங்கிரஹிக்கப்பட்ட நாலாம் பாத க்ரமம் ‘அந்தமில் பேரின்பத்து அடியா ரோடிருந்தமை’ என்கிற பாட்டில் காணலாம். ‘உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ’ ’ என்றதும் அபுநராவ்ருத்தியைக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாரத்தில் ‘யதந்த்யா மீமாம்ஸா ச்ருதி சிகர தத்வம் வ்யவ்ருணுத | ததாதௌ காதாபி: முநிரதிகவிம்சாபி: இஹ ந: க்ருதீ ஸாரக்ராஹம் வ்யதரதிஹ ஸங்க்ருஹ்ய க்ருபயா’ என்று அருளிச்செய்து இருப்பதைப் பார்த்து இங்கு செய்யப்பட்டிருக்கும் நிரூபணம் அத்துடன் முரண்படுமே என்று ஆபாத ப்ரதீதீயினால் ஸந்தேஹம் சிலர்க்கு உண்டாகலாம். ஸார ச்லோகத்தில் ‘ஸங்க்ருஹ்ய’ என்பதையும், ‘ச்ருதிசிகர தத்வம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும், ஸ்ரீரத்னாவளியில் ‘விசதம்’, ‘சாரீரகார்த்தக்ரமம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும் பராமர்சித்தால் இந்த ஸந்தேஹம் உசிதமன்று என்று ஏற்படும்.

இன்னம் சிலர் இப்படி 91 திருவாய்மொழிகள் ப்ராஸங்கிகமாகில் அவை அனுபாதேயங்க ளல்லவோ என்று ஸந்தேஹிக்கலாம். இதுவும் உசிதமன்று. ப்ராஸங்கிகமெல்லாம் அனுபா தேயங்கள் என்கிற நியமமில்லை. கீதையில் நாலாம் அத்யாயத்தில் ப்ராஸங்கிகமாக உபதேசிக்கப்பட்ட அவதார ரஹஸ்யம் எப்படி உபாதேயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்தத் திருவாய்மொழிகளும் சங்கிலித் துவக்குப் போல் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் இவைகள் உபாதேயங்கள் என்று கண்டு கொள்ளவும்,

இந்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ச்லோகத்திற்கு 9000படியிலும், 18000படியிலும், ஸ்ரீ வேங்கடாசார்யர் வ்யாக்யானத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தின் ஸங்க்ரஹம்:-

இப்ரபந்தம் வேதோபப்ரும்ஹணம் மாத்திரமன்று, வேதங்களுக்கெல்லாம் ஸத்ருசமாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்ரபந்தம் தானே ஸூசிப்பிக்கிறது என்று அருளிச்செய்கிறர் – ‘ஆதெள’ இத்யாதியால். அடியிலே இருபத்தொரு காதை வேதாந்த சாஸ்த்ர க்ரமத்தை விசதமாகச் சொல்லுகிறது. இந்த ஸங்க்ரஹம் தான் ஏக விம்சதி சாகைகளாகப் படிக்கப்படுகிற ரிக்குக்களுடைய பேதத்தை ப்ரகாசிப்பியா நிற்கிறது. இதில் காதாஸஹஸ்ரத்தாலே கீதத்தோடு கூடிய ஸமக்ரமான ஸாம சாகா ஸஹஸ்ரமும் பின் செல்லப்படுகிற‌து.. ப்ரதிபாத்யமான ஓர் அர்த்தத்தோடே கூடியிருக்கிற தசகங்களாலே ஏகசத சாகமான யஜுஸ்ஸும் காணப்படுகிறது. சாந்தி ப்ரதானமான இப்ரபந்தத்திலே அதற்கு உபயுக்தமாக இதர ரஸங்கள் எட்டும் ப்ரதிபாதிக்கப்படுகையாலே அஷ்ட சாகமான அதர்வண வேதமும் தோன்றுகிறது. இப்படியால் இது ஸர்வவேத ஸத்ருசமென்றபடி,

இதில் வேத ஸாம்யம் கேவலம் சில அம்சங்களிலுள்ள எண்ணிக்கையின் ஸாம்யத்தினாலே என்று நிரூபிக்கப்பட்டதாகிறது. மேலும் ‘ஸாக்ரா’ என்னும் பதம் நுனியோடுகூடிய என்பதைக் கூறும் மேல் பாட்டு என்பது க்லிஷ்டம். இருபத்தொருபாட்டுக்களில் உபாயமும் புருஷார்த்தமும் மிகவும் ஸங்க்ரஹமாகவே நிரூபிக்கப்படுகிறது என்று தான் சொல்லமுடியும். இது விசதம் என்பதுடன் சேராது. விசதம்' என்பதற்கு விரோதமில்லாமல் ஸங்க்ஷேபா " என்பதற்கு அர்த்தம் சொல்லப்படவில்லை. கீழில் உபபாதிக்கப்பட்டிருக்கிறபடியே பகவத்விஷயத்தை ப்ரவசனம் செய்யும்படி எம்பெருமானாரால் அநிதர ஸாதாரணமாய் நியமிக்கப் பட்ட ஏற்றம் பெற்ற திருக்குருகைப்பிரான்பிள்ளானுடைய உபபாதனத்துடன் சேரவில்லை. கீழ் ஸ்ரீரத்னாவளி ச்லோகத்தில் யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்' எனப் பன்மையாகக் கூறி, அந்த ச்ருதிகளெல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்ய முன் வந்தனவோ, அது ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதான த்ரமிடோபநிஷத்தாகிய திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உபபாதிப்பதற்காகவன்றோ இந்த ச்லோகம். எண்ணிக்கையின் ஸாம்யம் ஒரு க்ருத்யம் என்று சொல்ல ஒருநாளும் ஒருவரும் முன் வரமாட்டார்கள். இந்த அஸ்வாரஸ்யங்களெல்லா வற்றையும் ஒருவாறு நீக்கி இந்தச்லோகத்தின் முதல் பாதத்தின் கருத்தை உபய வேதாந்த ஐககண்ட்யம் என்னும் க்ரந்தத்தில் அடியேனுடைய ஆசார்யனாய், வேதாந்தாசார்ய ஸூக்தி ப்ரவசன சதுரர் என்றும், தேசிகப் பித்தர் என்றும் ப்ரஸித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் சேட்டலூர் ஸ்ரீ உப வே, நரஸிம்மாசார்யஸ்வாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது கிடைப்பது அரிதாகையால் அதன் ஸங்க்ரஹம் கீழே நிரூபிக்கப்பட்டது.

மேல் மூன்று பாதங்களுக்கும் அர்த்தம் யுக்தமாக இது வரையில் வெளியிடப்படவில்லை. ஸ்ரீ தேசிகன் திருவுள்ளக் கருத்தையே முற்றிலும் வெளியிடவேண்டும் என்கிற ஒரே அபிலாஷத்துடன் வெளியாகும் இப்பதிப்பை நிர்வஹித்தருளும் பண்டிதாக்ரேஸரர்களின் உதவியால் மேல் மூன்று பாதங்களுக்கும் அர்த்தம் கூறப்படுகிறது. இத்தைக் கேவலம் ஒரு தூண்டுகோலாகக் கருதி மற்றுமுள்ள பண்டிதாக்ரேஸரர்கள் தங்களுடைய யோஜனகளைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். அவை கிடைத்ததும் அந்தந்த ஸ்வாமிகளின் திருநாமங்களுடனே அவை வெளியிடப்படும்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்

நிர்தோஷத்வாதிரம்ய: என்னப்பட்ட இரண்டாம் பாதத்தின் க்ரமத்தை 'இல்லதுமுள்ளதும் எல்லையில்,அந்நலம் என்கிற நாலாம் பாட்டில் காண்க, பகவானை ஆச்ரயிக்குமவர்களுக்கு நடுவில் இடையூறாக உண்டாகக் கூடிய கைவல்யத்தைப் பரிஹரிக்கும் ப்ரகாரம் ஐந்தாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதாகிறது, அடுத்த உபய லிங்காதி கரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகவான் ஆச்ரயணீயன் என்பதற்காக அவனுடைய ஸர்வஸமத்வத்தையும் அவனுடைய ஸர்வஸுஹ்ருத் வத்தையும் கண்டு அவirக் கரணத்ரயத்தாலும் ஆச்ரயிக்கும் ப்ரகாரம் "பற்றிலன்" என்றாரம்பித்து மூன்று பாட்டுக்களில் உபதேசிக்கப் பட்டது. இப்படி ஸங்க்ரஹமாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட பக்தியின் பலானுபவத்தை ‘ஒடுங்க அவன்கண்‘ என்கிற பாட்டில் குறிப்பிட்டு ஆச்ரயணீய தேவதை நாராயணன் என்பதை ‘வண்புகழ்நாரணன்’ என்று பத்தாம் பாட்டில் உபபாதித்தார்.

பலத்தை விஸ்தரமாக ப்ரதிபாதிக்கும் இடம் நாலாம் அத்யாயமேயாயினும், பலத்தை விதிக்குச் சேஷமாக வேதங்களில் சொல்லியிருப்பதைப்போல உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதற்கு உபயுக்தம் என்பதினால் மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தின் இறுதியிலும் பலன் ப்ரஸ்தாவிக்கப் பட்டிருக்கிறது.

ஆக இப்படி இரண்டாம் திருவாய்மொழியில் பாட்டுக்களின் அர்த்த க்ரமம் மூன்றாவது அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களின் க்ரமமாகும். மூன்றாம் பாதத்தின் க்ரமம் ப்ரஸ்தாவிக்கப் பட்டு நிறுத்தப்பட்டது.

ஆகிலும் இப்படிப் பக்தி செய்வது ஸம்பாவிதமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக மூன்றாம் திருவாய்மொழியில் அவனுடைய ஸெளலப்யாதிகளை உபதேசிக்க உபக்ரமம் செய்யப் பட்டது. இதற்கு மேல் ப்ரஸ்க்தானு ப்ரஸக்தமாகப் பலவித அனுபவங்களைத்தாம் பெற்று பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற “சார்வே தவநெறி" யில் கீழ் ப்ரஸ்தாவித்த பலத்தை உபஸம்ஹாரம் செய்து, மேல் பக்தி யோகத்தின் ப்ரகாரங்களே ’கண்ணன் கழலிணை’ என்கிற திருவாய்மொழியில் ப்ரதிபாதித்திருக்கிருக்கிறார்..

இப்படிக்கீழ் முதல்பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் கூறப்பட்ட பக்தி யோகத்தின் ப்ரகாரங்களை விவரிக்க நடுவில் ஸந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதும் அது ஏற்பட்டதும் “சார்வே தவநெறி" தொடங்கி அது உபபாதிக்கப்படுகிறதென்பதும் இத்திருவாய்மொழியின் திருவாறாயிரப்படியில் "இப்படி ப்ராஸங்கிகத்தை முடித்து பத்துடையடியவரிலே ப்ராரப்தமான பக்தியோக ஸுலபத்வத்தை நிகமிக்கிறார்” என்றும், இதன் வ்யாக்யானமான இருபத்தி நாலாயிரப்படியில் “ப்ராஸங்கிகத்தை முடித்து ....... நிகமிக்கிறார் " என்கிற இவ்வசன வ்யக்தியாலே பத்துடையவர்க்கு மேல் இதுக்குக் கீழ் ப்ராஸங்கிகம் என்று தோற்றுகையால் “ இப்படி” என்றது ‘அஞ்சிறைய மட நாராய்’ தொடங்கி என்றபடி. ' ப்ராஸங்கிகத்தை’ என்றது ‘பத்துடையடியவரிலே’ பிறர்க்குத் தாம் அவனுடைய ஸுலபத்வத்தை உபதேசித்தவாறே இப்படி ஸுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு அபேக்ஷை பிறந்து அது கைவராமையாலே மிகவும் அவஸந்நராய் ‘அஞ்சிறைய மடநாரா’வில் தூது விடுகையும், ......... .உத்தரோத்தரம் ப்ரஸக்தரனுப்ரஸக்தமான நாநா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத்தை என்றபடி. பத்துடையடியவரிலே ஸாமாந்யேந உபக்ராந்தமாயிருந்த பக்தியோக ஸுலபத்வத்தை விசேஷித்துச் சொல்லுகைக்காக அவஸரம் லப்தமானவாறே அத்தைச் சொல்லுகிறார் என்று கட்டதாத்பர்யம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆகையினால் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னவளி ச்லோகத்தில் ‘ஸாக்ரா’ என்னும் பதம் கீழ்க்கூறியபடியே திருவாய் மொழியின் இறுதியிலுள்ள திருவாய்மொழிகளைக் குறிக்கிறது என்பதே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவுள்ளத்திற்கு ஒத்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள்

வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்தவிசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது" என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது" என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு' என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன்எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்கமுடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல்பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.