8 ஸேவ்ய ஸம்சோதனம்
த்யேயமாகிய பரமாத்ம
ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டும் அதாவது எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு
இருப்பிடமாயிருக்கும் என்கிற முதல் பாதத்தில் “உயர்வற” என்பதினால் இப்படிப் பட்ட
ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது என்று காட்டப்பட்ட தாயிற்று. அன்றிக்கே
கீதாசார்யன் “எந்தக் காரணத்தினால் நான் ப்ரக்ருதியையும், அத்துடன் சேர்ந்த பத்த ஜீவர்களைக் காட்டிலும்
வேறுபட்டவனோ, பரிசுத்த ஜீவாத்மாக்களையும்
விட வேறுபட்டவனோ, அதே காரணத்தினால் ச்ருதியிலும்
ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று ப்ரஸித்தி பெற்றவனாகிறேன்” என்று உத்கோஷித்த அம்சம்
சொல்லப்பட்டதாகவுமாம். ‘மயர்வற’ இத்யாதியால் ஜ்ஞானத்தைக் கொடுத்தருளியவன்
என்பதினாலும் ‘அயர்வறும்’ இத்யாதியால் நித்ய முக்தர்களுக்கு அதிபதி
என்றதனாலும் இந்த ஏற்றம் காட்டப்பட்டதாகிறது.
8 அர்த்த பஞ்சக நிரூபணம்
இதிஹாஸ புராணங்களுடன் கூடிய வேதங்கள் எல்லாம்
பரமாத்ம ஸ்வரூபத்தையும், ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், பகவானை அடைவதற்கு
உபாயத்தையும், தடங்கலாய் நிற்கும் ப்ராப்திவிரோதிகளையும், பலனையும் கூறுகின்றன என்பது
ப்ரஸித்தம். ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று பரமாத்ம ஸ்வரூபமும், ‘என்’ என்பதினாலே ஜீவாத்ம
ஸ்வரூபமும், துயர்’ என்று ப்ராப்தி விரோதியும், ‘நலம், தொழுது’ என்று உபாயத்தின் ஸ்வரூபமும், ‘எழு’ என்று பலனும் ப்ரதிபாதிக்கப்
பட்டிருக்கின்றன.
7. ப்ரணவார்த்த நிரூபணம்
எப்படி ப்ரணவமானது எல்லாவேதங்களிலும்
சொல்லப்பட்டிருக்கும் அர்த்த விசேஷங்களையும் உபபாதிக்கிறதோ, அதைப்போலவே
அந்த ப்ரணவத்தின் நடு அக்ஷரமாகிய உகாரத்தின் பொருளாகிய பகவானுக்கே சேஷபூதம்
என்கிற அந்யயோக வ்யவச்சேதம், அதாவது மற்வர்களுக்குச் சேஷபூதர்களல்ல
என்பது தன்னைவிட வேறுபட்ட மற்ற எல்லோர்க்கும் ஸ்வாமி என்று கூறுகிற முதலடியினாலும்,
மகாரத்தின் பொருளான ஜ்ஞானத்தைக் குணமாக உடையவன் ஜீவாத்மா என்பது, “மதி,
நலம்” என்பதினாலும், வேற்றுமையுடன் கூடிய அகாரத்தின் அர்த்தமான ஸர்வ
ரக்ஷகனான பரமாத்மாவிற்கே இந்த ஜீவாத்மா சேஷபூதன் என்பது “அயர்வறும்”
இத்யாதியாலும் வெளியிடப்பட்டது. “அருளினன், துயரறு” இத்யாதியால் பகவான்
தன்னுடைய பக்தர்களுக்கு இஷ்ட ப்ராப்தியையும் அநிஷ்ட நிவ்ருத்தியையும்
உண்டாக்குகிறான் என்பது ஏற்படுகிறபடியினால் அகாரார்த்தமாகிய ஸர்வ ரக்ஷகத்வம்
ப்ரதிபாதிக்கப் பட்டதாகிறது.
8. பரபக்ஷ ப்ரதிக்ஷேபம்
“உயர்வு” என்றாரம்பிக்கும் முதலடியினால்
எண்ணிறந்த கல்யாண குணங்களை உடையவன் எனச் சொல்லப்பட்டிருப்பதினாலும்,
காரணம் ஒன்றும் கூறப்படாமையினால் இவற்றை ஸ்வபாவத்திலேயே உடையவன் என்று
ஏற்படுகிறபடியினாலும் பகவானைத்தவிர வேறு ஒருவன் பரதேவதை, மும்மூர்த்திகளும்
ஸமம், மும்மூர்த்திகளையும் விட வேறுபட்டவன் பரதேவதை என்றிவை முதலியவற்றைக்
கூறுபவர்களும், ப்ரஹ்மத்தின் ஈச்வரத்வம் ப்ரதிபிம்பம் போன்றது என்று
கூறுமவர்களும் நிரஸிக்கப்பட்டார்கள். “எவன்” என்கிற பதம் ப்ரமாணங்களினால்
ஏற்பட்ட ப்ரஸித்தியைத் தெரிவிப்பதினால் பரமாத்மா இல்லை என்னுமவர்கள் நிரஸிக்கப்பட்டார்கள்.
இந்தக் குணங்களினால் ஆனந்தவல்லி ஜ்ஞாபகப்படுத்தப்பட்டு, அத்தால் ஸூர்ய
மண்டலத்தின் நடுவே இருக்கும் புருஷன் சொல்லப்படுகிறபடியினால் நாராயணனே
பரதேவதை என ளற்படுகிறது. ஆகையினால் பரதேவதை வேறு என்று நிரூபிக்கும் பக்ஷங்களெல்லாம்
நிரஸிக்கப்பட்டனவாயிற்று.
“நலம், மதி, தொழுது” என்கிற பதங்களினால் ஒர் உபாயத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று
ஏற்படுகிறபடியினாலே கேவலம் வாக்யார்த்த ஜ்ஞானத்தினால் மோக்ஷம் பெறலாம் என்கிற பக்ஷமும்
– “அருளினன்” என்பதினாலே கொடுப்பவன் வேறு வாங்குமவன் வேறு என்பதும், கொடுத்தது மதியும் நலமும்
என்பது ஸித்திக்கிறபடியினாலே ஜஞானம் மாத்திரம் ஆத்மா என்கிற பகடிமும் --- அயர்வறும்
அமரர்கள் எனப்பன்மையாகக் கூறியிருப்பதினாலே ஆத்மா ஒன்று என்கிற பக்ஷம் மோக்ஷத்தில்
பரமாத்மாவுடனே ஐக்யமடைகிறது என்னும் பக்ஷமும்,
ஆத்மா ஸ்வதந்த்ரன் எனும் பக்ஷமும் --- அடி என்பதினால் திவ்ய மங்கள விக்ரஹம்
ஸித்திக்கிற படியினாலே பகவானுக்கு ரூபமில்லை எனும் பக்ஷமும் --- லக்ஷ்மீ வாசகமான
உகாரத்தினால் இந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதினால் லக்ஷ்மீ விசிஷ்டத்வம்
ஸித்திக்கிறபடியினால் அதை அங்கீகரியாத பக்ஷங்களும் நிராகரிக்கப்பட்டனவாயிற்று.
9 பராரம்ப நிவாரணம்
பர ப்ரஹ்மம் நிர்க்குணமென்று
சொல்லுமவர்கள் அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன் என உபபாதிக்கும் இக்ரந்தத்தை ஆரம்பிக்கமுடியாதல்லவா
என்று கருத்து. எவன் என ப்ரஸித்தியைக் காட்டுகிற இந்த க்ரந்தத்தை ப்ரஹ்மம்
ஒன்றினாலும் அறியமுடியாத தென்றவர்களும், ப்ரஹ்மமே இல்லையென்பவர்களும்
ஆரம்பிக்கமுடியாதல்லவா ? ...
10 ஸ்வாரம்ப ஸமர்த்தனம்
பகவான்
எல்லாக் கல்யாண குணங்களையும் உடையவனாகையினால் அவனைப் பற்றிய ஜ்ஞானம் ஸார்வபெளமனான
பிதாவைப் பற்றிய ஜ்ஞானத்தைப் போல மிகவும் விரும்பத்தக்கதாகும். அப்படிப்பட்ட
ஜ்ஞானத்தினால் பகவானிடத்தில் ப்ரீதியுண்டாகி, அவனை அடைய வேண்டுமென்கிற
ஆசைபை உண்டாக்கி, அதற்கு உபாயமான பக்தியையோ ப்ரபத்தியையோ அனுஷ்டித்து, மோக்ஷத்தை அடையலாம் என்றும், பகவானுக்குத் திவ்ய
ரூபாதிகள் உண்டென்றும் நிரூபிக்கும் இக்ரந்தம் ஆரம்பணீயம் என்றதாயிற்று,
ஆக
இப்படி எல்லா வேதங்களும் சேர்ந்து செய்யும் பகவானுடைய ஸ்வபாவம் ஸ்வரூபம்
முதலியவைகளின் ப்ரகாசத்தை இத் திருவாய்மொழி விசதமாக நிரூபிக்கிறது என்கிற அம்சம்
ஒருவாறு உபபாதிக்கப்பட்டது. மற்றுமுள்ள விசேஷாம்சங்களை அவரவர்கள் தங்கள் தங்கள்
ஆசார்யர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கு இது ஒரு தூண்டுகோல்
மட்டும்.
இப்படி ஸகல வேதங்களினுடைய க்ருத்யங்களையும்
செய்கிறது என்று நிரூபித்தருளி, மேல் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அர்்த்தங்களை
ஸங்க்ரஹமாக அருளிச் செய்கிறார் – “ப்ராச்யே” என்றாரம்பித்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக