प्राच्ये सेवानुगुण्यात् प्रभुमिह शतकेऽमंस्त मुक्तेरुपार्यं
मुक्तप्राप्यं द्वितीये मुनिरनुबुबुधे भोग्यता विस्तरेण |
प्राप्यत्वोपायभावौ शुभसुभगतनोरित्यवादीत् तृतीये
अनन्यप्राप्यश्चतुर्थे समभवदितरैरप्यनन्याद्युपाय: ||
ப்ராச்யே ஸேவாநுகு₃ண்யாத் ப்ரபு₄மிஹ ஶதகேsமம்ஸ்த முக்தேருபார்யம்
முக்தப்ராப்யம் த்₃விதீயே முநிரநுபு₃பு₃தே₄ போ₄க்₃யதா விஸ்தரேண |
ப்ராப்யத்வோபாயபா₄வௌ ஶுப₄ஸுப₄க₃தநோரித்யவாதீ₃த் த்ரு̆தீயே
அநந்யப்ராப்யஶ்சதுர்தே₂ ஸமப₄வதி₃தரைரப்யநந்யாத்₃யுபாய: ||
ஆழ்வார் இத்திருவாய்மொழியில் முதல் பத்தில் பகவானை அடியார்கள் வந்தடையத் தகுதியுள்ளமையால் மோக்ஷத்திற்கு உபாயமெனத் திருவுள்ளம் பற்றினார். இரண்டாம் பத்தில் அவனுடைய போக்யத்வத்தின் மிகுதியாலே முக்தர்களினாலே அடையப்படுமவனாக நிர்ணயித்தருளினார். மூன்றாம் பத்தில் பலனாயும் அதற்கு உபாயமாயும் இருக்கும் தன்மைகள் சுபாச்ரயமான திருமேனியுடைய எம்பெருமானுக்கே என்று அருளிச் செய்தார். நான்காம் பத்தில் பகவானைத்தவிர வேறு பலனைக் கொள்ளாதவராகவும், மற்ற ஆறு பத்துக்களினால் பகவானையன்றி வேறொன்றை உபாயமாகக் கொள்ளாதவராகவும் ஆனார்.
திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் முக்யமான அர்த்தத்தை வெளியிடுகிறார் --- “தேவ:” என்றாரம்பித்து.
देव: श्रीमान् स्वसिद्धे: करणमिथि वदन्नेकमर्थं सहस्रे
सेव्यत्वादीन् दशार्थान् पृथगिह शतकै: वक्ति तत्स्थापनार्थान् |
ऐकैकश्यात् परत्वादिषु दशकगुणेष्वायतन्ते तथा ते
तत्तद्राथागुणानामविदधति तत्पंक्तय: पंक्तिसंख्या: ||
தே₃வ: ஶ்ரீமாந் ஸ்வஸித்₃தே₄: கரணமிதி₂ வத₃ந்நேகமர்த்த₂ம் ஸஹஸ்ரே
ஸேவ்யத்வாதீ₃ந் த₃ஶார்த்தா₂ந் ப்ரு̆த₂கி₃ஹ ஶதகை: வக்தி தத்ஸ்தா₂பநார்த்தா₂ந் |
ஐகைகஶ்யாத் பரத்வாதி₃ஷு த₃ஶககு₃ணேஷ்வாயதந்தே ததா₂ தே
தத்தத்₃ராதா₂கு₃ணாநாமவித₃த₄தி தத்பங்க்தய: பங்க்திஸங்க்₂யா: ||
ஆயிரம் பாட்டுக்களையுடைய இத்திருவாய்மொழியில் பெரிய பிராட்டியை ஒரு க்ஷணகாலம்கூடப் பிரியாத எம்பெருமான் தன்னை அடைவதற்குத் தானே உபாயமாவான் என்னும் ஒரே அர்த்தத்தை அருளிச் செய்கிறவராய், அதை ஸாதிக்கக்கூடிய ஸேவ்யன் (அடையத் தகுந்தவன்) முதலிய பத்து அர்த்தங்களைப் பத்துப் பத்துக்களிலும் தனித்தனியாக அருளிச் செய்கிறார். அந்தப் பத்து அர்த்தங்களும் எல்லோரிலும் எல்லாவற்றிலும் மேற்பட்டிருக்கும் தன்மை முதலிய நூறு குணங்களில் ஒவ்வொன்றாக விரிவடைகின்றன. அவ்வாறே பத்து எண்களை உடைய பத்தாகிய நூறு பதிகங்களால் வெளியிடப்படும் நூறு குணங்களும் ஆயிரம் எண்ணுள்ள அந்தந்தப் பாசுரங்களின் குணங்களைப் பின்பற்றுகின்றன.
தேவ:ஸ்ரீமாந் –பெரியபிராட்டியாருடன் கூடினவனாகையால் தேவனானவன் என்றபடி. “திருமாமகள் கேள்வா தேவா” என்றபடியினால் திருமாமகளுக்குக் கேள்வனாகையாலே இவனுக்கு தேவத்வம் ஸித்தித்தது என்று திருவுள்ளம். இவள் ஸம்பந்தம் பெறாமையால் மற்ற தேவதைகளைப் பரதேவதை என்று கூற ப்ரமாணங்கள் முன்வரவில்லை. இவளுடைய சம்பந்தத்தைப் பல இடங்களில் திருவாய்மொழியில் கூறியிருந்தபோதிலும் பரதத்துவ ப்ரதிபாதகமான “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப, கோலத்திருமாமகளோடு உன்னை, நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்”, “உன் தாமரைமங்கையும் நீயும்”, “அகலகில்லேன் இறையும் என்றலர்மேல் மங்கை உறைமார்பா” என்றிவை முதலியவை இங்கனுஸந்தேயங்கள். இந்த ஒரு அர்த்தத்தைத்தான் ஸ்வாமி தேசிகன் தமக்கும் தம் சிஷ்யர்களுக்கும் தஞ்சமாகக் கருதினார் என்பதை அவருடைய அனேக ப்ரபந்தங்களில் காணலாம். தேவ:ஸ்ரீமாந் என்பதன் கருத்து இப்பதங்களினாலோ இவற்றுக்கு ஸத்ருசமான பதங்களினாலோ நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஸ்ரீஹம்ஸஸந்தேசத்தில் “தேவ:ஸ்ரீமாந்” என்ற பதங்களையே உபயோகித்தருளினார். “ச்ரிய:பதி புருஷோத்தமன்” என்று ஸாரார்த்தமாக அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. “தேவ:ஸஹைவச்ரியா” என்று தசாவதார ஸ்தோத்திரத்திலும், “ஸ்ரீமத்நாராயண:” என்று ஸ்ரீந்யாய ஸித்தாஞ்ஜனத்திலும் ,”தம்பதீ ஜகதாம்பதீ”, “போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே”, “ஸந்த:ஸ்ரீசம் ஸ்வதந்த்ர ப்ரபதன விதிநாமுக்தயே நிர்விசங்கா:” என்று ஸார சாஸ்திரத்திலும், ஸ்ரீதயாசதகத்திலும், ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதயத் திலும் இந்த ஆகாரம் பரக்கப் பேசப் பட்டிருக்கிறது.
ஸ்வஸித்தே:கரணம் இதி வதந் ஏகமர்த்தம் – தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்கிற ஒரே அர்த்தத்தை நிரூபியா நிற்கும்.
ப்ரபந்தத்தின் நடுவில் ப்ரபந்த ஸாரார்த்தத்தை நிரூபிப்பது என்பது ஓர் வழக்கு. ஸ்ரீகீதையில் ஒன்பதாம் அத்யாயத்தின் இறுதி ச்லோகத்தில் உபாயமான பக்தி யோகம் கூறப்பட்டது.
திருப்பாவையில் 15ம் பாட்டில் பாகவதர்களின் பெருமை பேசப்பட்டது. ஒரு காரணமுமின்றியே சில பாகவதர்கள் நம் விஷயத்தில் அந்யதாவாகத் திருவுள்ளம் பற்றினாலும் நாம் அதற்காக அபசாரக்ஷாமணம் செய்துகொள்ளவேண்டும் என்று.இப்பாட்டில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதைப்போல் திருவாய்மொழியிலும் ஐந்தாம் பத்தின் இறுதியில் ஆழ்வார் தாம் தஞ்சமாக நினைத்திருப்பதை வெளியிட்டிருக்கிறார்.
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறும் ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்’ என்பது ஆழ்வாரின் அனுஸந்தானம். இதன் திருவாறாயிரப்படியில் 'எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குச் சரணம் என்று நாள் தோறும் இதொரு மனோரதமே உடைய ஆழ்வார் .......... இப்பத்தும் கற்றார் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் எம்பெருமானை நித்யானுபவம் பண்ணப் பெறுவர்’ என்று வ்யாக்யாநம். ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வதே உத்தமமான உபாயம் என்றும், அதை த்வயத்தினால் அனுஷ்டிக்கவேண்டும் என்றும் நம் பூர்வாசார்யர்கள் நிஷ்கர்ஷித்திருக்கிறார்கள். உபாயம் அனுஷ்டிப்பதற்கு முன் பெரியபிராட்டியாரிடம் புருஷகாரமாயிருக்கும்படி ப்ரார்த்திக்கவேண்டும். இது முதல்படி. அவளுடன் கூடிய பகவானுடைய திருவடிகளில் சரணாகதியைச் செய்வது இரண்டாவது படி. ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அர்ச்சிராதி கதியினால் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து திவ்ய தம்பதிகளான அவர்களுக்கே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்வது மூன்றாவது படி. புருஷகாரமாயிருக்கும் ஆகாரம் பெரிய பிராட்டியாருக்கு மட்டும் அஸாதாரணம். உபய தசையிலும் உபேய தசையிலும் அவர்கள் இருவருடைய சேர்த்தியே நமக்குத் தஞ்சம் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளமென அறிந்து ஆசார்யன் தம்முடைய பரம க்ருபையினாலே இங்கு இப்படி ஸங்க்ரஹித்தருளிச்செய்தாராயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக