இப்படிக் கீழ் சுலோகத்தில் இந்த ப்ரபந்தத்தில் ப்ரதிபாதிக்கப்படும் ப்ரதானதமமான அர்த்தவிசேஷம் ச்ரிய:பதியான எம்பெருமான் தன் திருவடிகளை அடைவதற்குத் தானே உபாயம் என்று அருளிச்செய்து, அது திருவாய்மொழியில் பத்து தசகங்கள், நூறு திருவாய்மொழிகள், ஆயிரம் பாட்டுக்கள், இவைகளால் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது. மேல் சுலோகத்தில் இந்த அர்த்தத்தையே அனுவதித்துக்கொண்டு, பத்துப் பத்துக்களினாலும் இவ்வர்த்தம் உபபாதிக்கப்படுகிறபடியை அனுஸந்தித்தருளுகிறார் – “ஸேவ்யத்வாத்” என்றாரம்பித்து.
सेव्यन्वात् भोग्यभावात् शुभतनुविभवात् सर्वभोग्याधिकत्वात्
श्रेयस्तद्धेनुदानात् श्रितविवशतया खाश्रितानिष्टहृत्तवात् ।
भक्तच्छन्दानुवृत्तेः निरुपधिकसुहृद्भावतः सत्पदव्यां
साहाय्याच्च स्वसिद्धेः स्वयमिह करणं श्रीधरः प्रत्यपादि ||
ஸேவ்யந்வாத் போ₄க்₃யபா₄வாத் ஶுப₄தநுவிப₄வாத் ஸர்வபோ₄க்₃யாதி₄கத்வாத்
ஶ்ரேயஸ்தத்₃தே₄நுதா₃நாத் ஶ்ரிதவிவஶதயா கா₂ஶ்ரிதாநிஷ்டஹ்ரு̆த்தவாத் ।
ப₄க்தச்ச₂ந்தா₃நுவ்ரு̆த்தே: நிருபதி₄கஸுஹ்ரு̆த்₃பா₄வத: ஸத்பத₃வ்யாம்
ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்₃தே₄: ஸ்வயமிஹ கரணம் ஶ்ரீத₄ர: ப்ரத்யபாதி₃ ।|
ஸேவ்யத்வாத் - பகவானே ஸேவிக்கப்படத் தகுந்தவனாயிருப்பதாலும், போக்யபாவாத் -- - அவனே அனுபவிப்பதற்கு ஏற்றவனாகையாலும், சுபதனுவிபவாத் – மங்களமான திருமேனியின் பெருமையினாலும், ஸர்வபோக்யாதிகத்வாத் - போக்யங்களான எல்லாவற்றிற்கும் மேற்பட்ட போக்யனாயிருப்பதினாலும், ச்ரேய: தத்ஹேதுதாநாத் - புருஷார்த்தத்திற்கும், அதன் உபாயத்துக்கும் காரணமாய் நிற்பதாலும், ச்ரிதவிவசதயா - - ஆச்ரிதர்களுக்குப் பரதந்த்ரனாய் இருப்பதினாலும், ஸ்வாச்ரிதாநிஷ்ட ஹ்ருத்த்வாத் - தன் அடியார்களின் அதிஷ்டங்களைப் போக்குமவ னாகையாலும்,பக்தச்சந்தானுவ்ருத்தே: -அடியார்களின் கருத்தைத்தான் தழுவி நடப்பதினாலும், நிருபதிக ஸுஹ்ருத்பாவத: - காரணம் இது என்று நம்மால் அறுதியிட முடியாதபடி தோழனாய் நிற்பதினாலும், ஸத்பதவ்யாம் ஸாஹாய்யாச்ச - சிறந்த (அர்ச்சிராதி) மார்க்கத்தில் துணை நிற்பதினாலும், இஹ -- திருவாய்மொழியாகிற இந்தப்ரபந்தத்தில், ஸ்ரீதர: - ச்ரிய:பதியான ஸர்வேசுவரன், ஸ்வஸித்தே: - தன்னைப் பெறுவதாகிற பலனுக்கு, ஸ்வயம் - தானே, கரணம் – ஸாதனம் என்று, ப்ரத்யபாதி - விளக்கப் பட்டுள்ளான்.
இந்தப் பத்துக் காரணங்களையும் (அர்த்தங்களையும்) முதல் பாட்டிலேயே ஸங்க்ரஹமாக நிரூபித்துள்ளார். எங்ஙனே என்னில் :
ஸேவ்யத்வாத்
அயர்வறும் அமரர்கள் அதிபதி,
அருளினன், அடிதொழுது
போக்யபாவாத்
உயர்வற உயர்நலம் உடையவன்
சுபதநுவிபவாத்
சுடர் அடி - திருவடிதிவ்யமங்கள விக்ரஹத்திற்கு உபலக்ஷணம்
ஸ்வரபோக்யாதிகத்வாத்
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்பதினால் பகவான் நித்யஸூரிகளும் முக்தர்களும் எப்பொழுதும் அனுபவித்துக்கொண்டிருப்பது ஏற்படுகிறபடியினால் அவனுடைய அதிபோக்யத்வம் கூறப்பட்டதாகிறது:
ச்ரேய:தத்ஹேதுதாநாத்
மதிநலம் அருளினன்
ச்ரிதவிவசதயா
அடிதொழுது எழும்படி அவன் அவதார தசைகளில் ஸேவை ஸாதிக்கிருன் என்றபடி
ஸ்வாச்ரிதா நிஷ்டஹ்ருத்த்வாத்
துயர் அறு
பக்தச்சந்தாதுவ்ருத்தே
அயர்வறும் அமரர்கள் அதிபதி – ஸூரிகளுடைய அதிபதியாயிருந்த போதிலும், பக்தன் இஷ்ட ப்ரகாரம் தான் நடந்து கொள்ளுகிறான் என்றபடி
நிருபதிகஸுஹ்ருத்பாவ
மதிநலம் அருளினன்
ஸத்பதவ்யாம் ஸாஹாய்யாச்ச
அயர்வறும் அமரர்கள் அதிபதி பகவான் நித்யஸூரிகளுக்கு நாதனாகையாலே அவனுடைய ஆஜ்ஞையை சிரஸா வஹித்து அர்ச்சிஸ் முதலிய ஸூரிகள் முக்தாத்மாவை அர்ச்சிராதி மார்க்கத்தில் எழுந்தருளப் பண்ணுகிருர்களே யாகிலும் பகவான் அக்காலத்தில் அவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து கூட வழி நடத்துகிறான் என்பதும்: வைகுண்ட லோகத்தை அடைந்ததும் ஸூரிகளுடைய பலவித ஸத்காரங்களான பிறகு, பெரிய பிராட்டியார் மூலமாகவும், அதுவும் போதாது என்றுகொண்டு “வந்து அவர் எதிர் கொள்ள” என்கிறபடியே பகவான்தானே வந்து எதிர்கொள்ளுகிறான் என்பதும் இங்கு விவக்ஷிதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக