திங்கள், 22 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

மன்னிக்க வேண்டுகிறேன். சுலோகம் 10 இடுவதற்கு விடுபட்டிருக்கிறது.

அபீதி ஸ்தவம்

சுலோக‌ம் 10


बिभेति भवभृत् प्रभो ! त्वदुपदेशतीव्रौषधात्
       कदध्वरसदुर्विषे बडिशभक्षवत् प्रीयते |
अपथ्यपरिहारधीविमुखं इत्थमाकस्मिकी
       तमप्यवसरे क्रमादवति वत्सला त्वद्दया ||

பிபேதி வப்ரு̆த் ப்ரபோ ! த்வதுபதேஶதீவ்ரௌஷதாத்
        
கதத்வரஸதுர்விஷே டிஶபக்ஷவத் ப்ரீயதே |
அபத்யபரிஹாரதீவிமுகம் இத்தமாகஸ்மிகீ
        
தமப்யவஸரே க்ரமாதவதி வத்ஸலா த்வத்யா ||

ப்ர‌போ -- ப்ர‌புவே, ப‌வ‌ப்ருத் -- ஸ‌ம்ஸார‌த்தையுடைய‌ சேத‌னன், த்வ‌த் உப‌தேச‌ தீவ்ர‌ ஔஷ‌தாத் -- உம்மால் உப‌தேசிக்க‌ப் ப‌டும‌ த‌ர்மம் என்னும் உக்ர‌மான‌ ம‌ருந்திலிருந்து, பிபேதி -- ப‌ய‌ப்ப‌டுகிறான். க‌தத்வ‌ ர‌ஸ‌ துர்விஷே -- கெட்ட‌ மார்க்க‌த்தில் ர‌ஸ‌ம் என்னும் கொடிய‌ விஷ‌த்தில், ப‌டிஶ‌ ப‌க்ஷ‌வ‌த் -- தூண்டிமுள்ளை ப‌க்ஷிப்ப‌தில் (மீன் ர‌ஸிப்ப‌துபோல‌), ப்ரீய‌தே -- ப்ரீதி ப‌ண்ணுகிறான்., இத்த‌ம் -- இப்ப‌டி, அப‌த்ய‌ ப‌ரிஹார‌ தீ விமுக‌ம் -- த‌ன‌க்குக‌ கெடுத‌லைப் ப‌ரிஹ‌ரிப்ப‌து என்னும் எண்ண‌த்தையே நோக்காத‌ப‌டி, த‌மபி -- அப்ப‌டிக் கெட்ட‌வ‌னையும், அவ‌ஸ‌ரே -- ஒரு கால‌ விசேஷ‌த்தில், ஆக‌ஸ்மீகி -- கார‌ண‌மின்ன‌து என்று அறிய‌க்கூடாத‌ (எங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ரையில் நிர்ஹேதுக‌ம் என்று நினைக்க‌ப்ப‌டும்), வ‌த்ஸ‌லா -- ஸ்நேஹ‌ம‌ய‌மான‌, த்வ‌த் த‌யா -- உம்முடைய‌ த‌யை, க்ர‌மாத் -- ப‌டிப்ப‌டியாக‌ (ச‌ன்ம‌ ச‌ன்மாந்த‌ர‌ம் காத்து), அவ‌தி -- ர‌க்ஷிக்கிற‌து.

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

பவக்கடலில் சுழன்றுழலும் மானுடவன் நீவழங்கும்
பரிந்துரையாம் கசப்பான மருந்துக்கு அஞ்சுகிறான்!
சுவையென்னும் கொடும்விஷத்தை சுரக்கின்ற கீழ்மையிலே
தூண்டிற்புழு நாடும்மீன் தனைப்போல நச்சுகிறான்!
இவைபோன்ற தீய்மைகளை ஒழித்திடவும் எண்ணிடாதே
இருக்கின்ற மனிதனையும் இரக்கமுடன் திருவரங்கா!
தவறாமல் உன்தயைதான் காரணமே ஏதுமின்றி
தருணத்தில் பாய்வதனால் நாளடைவில் காத்திடுமே! 10

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி

         அர‌ங்க‌த்தில் ப‌ஜித்தால் ப‌ல‌ன்க‌ளைக் கொடுத்துக் கைதூக்கிவிட‌ ப‌க‌வ‌த் குண‌ங்க‌ள் க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்டிருக்கின்ற‌ன‌ என்றார். இதில் நாம் ப‌ஜிப்ப‌த‌ற்குப் பிர‌தியாக‌ ந‌ம‌க்குத் தெரியாம‌லே நாம் ஸுக்ருத‌மென்று புத்தி பூர்வ‌மாக‌ இத‌ற்கென்று செய்யாம‌ லிருக்கையிலேயே ப‌க‌வ‌த் த‌யை தானாக‌ அதிஸ்நேஹ‌த்தால் ந‌ம்மை ஜாய‌மான‌ த‌ஶையில் க‌டாக்ஷித்து, ஸாத்விக‌னாக்கி, மோக்ஷ‌ப்பொருளைச் சிந்திப்ப‌வ‌னாக‌ச் செய்கிற‌து என்கிறார்.

         உம்முடைய‌ ஆக்ஞையாகிய‌ சுருதியால் உப‌தேசிக்க‌ப்ப‌டும் த‌ர்ம‌த்தை அநுஷ்டிக்க‌ ந‌டுங்கி, நிஷேதிக்க‌ப்ப‌டும் கெட்ட‌ மார்க்க‌த்தில் ப்ரீதி ப‌ண்ணுகிறோம். செய்த‌ பாப‌த்திற்குப் பிராய‌ச்சித்தத்தைத் தேடும் எண்ண‌த்தையே தூர‌ வில‌க்குகிறோம். இப்ப‌டி க்ருத்யாக‌ர‌ண‌ அக்ருத்யாக‌ர‌ண‌ தோஷ‌ங்க‌ளைப் ப‌ரிஹ‌ரிக்கக்கூடிய‌ அநுதாப‌ம் பிராய‌ச்சித்த‌ம் முத‌லிய‌ வ‌ழிக‌ளைக் க‌ண்ணெடுத்தும் பாராம‌லிருக்கிறோம்.

         இப்ப‌டியிருந்தும், அஜ்ஞாத‌ ப்ராஸ‌ங்கித‌ யாத்ருச்சிக‌ ஸுக்ருத‌ம் என்று சில‌வ‌ற்றை ஸுக்ருத‌க் க‌ண‌க்கில் வைத்துக்கொண்டு, எங்க‌ள் தோஷ‌ங்க‌ளைப் பாராட்டாம‌ல் உம் த‌யை எங்க‌ளை ர‌க்ஷிக்கிற‌து. இப்ப‌டித் தானாக‌ ர‌க்ஷிக்கும் உம்முடைய‌ த‌யை உம் திருமேனியை ர‌க்ஷித்து அர‌ங்க‌த்தில் நித்ய‌மாக‌ நீர் எழுந்த‌ருளியிருக்க‌ வேண்டும் என்ற‌ எங்க‌ள் ம‌னோ ர‌தத்தைப் பூர்த்தி செய்ய‌ வேண்டாமோ? கேட்காம‌லே ர‌க்ஷிக்கும் த‌யை க‌த‌றிக்கேட்டும் ர‌க்ஷிக்க‌ வேண்டாமோ?

         ப‌வ‌ப்ருத் -- ஸ‌ம்ஸார‌த்தை ம‌ங்க‌ள‌மென்று நினைத்து கிடையாதது கிடைத்ததென்று இருக்கிறான். "ப‌வ‌ம்" என்ப‌து ஸ‌ம்ஸார‌த்தையும் ம‌ங்க‌ள‌த்தையும் சொல்லும்.

         सत्य ज्ञानमुपतेश ச‌த்ய‌ ஞான‌ம் உப‌தேஶ‌: என்றார் ஜைமிநி. உப‌தேச‌ ப‌த‌ம் த‌ர்ம‌த்தைச் சொல்லுகிற‌து. ச்ருத்யுப‌தேச‌ம் -- சுருதி என்ப‌து உம்முடைய‌ ஆஜ்ஞை. அதை மீறின‌வ‌ன் உம‌க்குத் துரோஹி. "செய்யாத‌ன‌வ‌ற்றை" விரும்பிச் செய்கிறோம்.

         அப‌த்ய‌ ப‌ரிஹார‌ தீ விமுக‌ம் -- அப‌த்ய‌த்தை வில‌க்க‌ வேண்டும் என்று எண்ணுவ‌தில் ஆபிமுக்ய‌ம் இருந்தாலும் போதும், எண்ணுவ‌தில் கூட‌ விமுக‌ராயிருக்கிறோம்.

         இருப‌தாவ‌து இருப‌த்தொன்றாவ‌து சுலோக‌ங்க‌ளில் ச‌ர‌ணாக‌தி செய்ய‌ப் போகிற‌ப‌டியால் முன்புள்ள‌ த‌யா ப்ர‌ஸா க்ர‌ம‌ங்க‌ளை ஸூசிப்பிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக