அபீதிஸ்தவம்
சுலோகம் 11
अपार्थ इति निश्चित: प्रहरणादियोगस्तव
स्वयं वहसि निर्भयस्तदपि *रङ्गपृथ्वीपते |
स्वरक्षणमिवाभवत् प्रणतरक्षणं तावकं
यदात्थ परमात्मवित् नियतमन्तरात्मेति ते || 11
அபார்த₂ இதி நிஶ்சித: ப்ரஹரணாதி₃யோக₃ஸ்தவ
ஸ்வயம் வஹஸி நிர்ப₄யஸ்தத₃பி *ரங்க₃ப்ரு̆த்₂வீபதே |
ஸ்வரக்ஷணம் இவ அப₄வத் ப்ரணதரக்ஷணம் தாவகம்
யத₃ ஆத்த₂ பரமாத்மவித் நியதம் அந்தராத்மேதி தே || 11
*रङ्गपृथ्वीधर -- *ரங்க₃ப்ரு̆த்₂வீத₄ர -- என்று பாடபேதம்
ரங்கப்ருத்வீபதே -- ரங்கராஜனே! ப்ரஹரணாதியோக -- ஆயுதம் முதலியவை இருப்பது, அபார்த்த: -- அநாவச்யம் (வீண்), இதி -- என்று, நிஶ்சித -- நிச்சயிக்கப் பட்டிருக்கிறது, நிர்ப்பய -- பயமில்லாத நீர், ததபி -- ஆயினும் (அவற்றை), ஸ்வயம் வஹஸி -- நீரே தரிக்கிறீர் (சுமக்கிறீர்), ப்ரணதரக்ஷணம் -- ஆச்ரிதரக்ஷணம், ஸ்வரக்ஷணம் இவ -- உம் ரக்ஷணம்போல, தாவகம் -- உம் சொந்தப்பணியாக, அபவத் -- ஏற்பட்டது, யத் -- ஏனெனில், பரமாத்ம வித் -- பகவானே! தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி, தே அந்தராத்மா இதி -- உம்முடைய அந்தராத்மா , உமக்கும் ஆந்தரமான (உள்ளான) உயிர் என்று, ஆத்த -- நீர் (கீதையில்) சொன்னீரல்லவா?
அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி
படைக்கலன்கள் தாங்குவதால் பயனில்லை உன்றனுக்கே!
பயமற்று விளங்கும்நீ படைக்கலனேன் தரிக்கின்றாய்?
வடிவரங்கத் தலத்தரசே! மேம்பொருளை உணர்ந்தவராய்
விளங்கும்நல் ஞானியுன்றன் உயிரென்று விளம்பியுள்ளாய்!
அடியார்கள் அவர்போல்வார் அனைவரையும் காத்திடவே
ஆயுதங்கள் தமைத்தாங்கி ஆயத்தமாய் நிற்கின்றாய்!
அடியாரைக் காக்கின்ற அருஞ்செயல்கள் எல்லாமே
உன்னையேநீ காப்பனவாய் உண்மையிலே ஆயிற்றே! 11.
அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார் ஸ்வாமி
(ஆகையால் உம் ரக்ஷணத்தைப்போல உம்முடைய உயிரான ஞானியின் ரக்ஷணமும் உம் சொந்த ரக்ஷணமாய்விட்டது. உம் ஆத்ம ரக்ஷணம் உம்முயிரின் ரக்ஷணம் இரண்டும் உம் சொந்த ரக்ஷணம்தானே!)
ரங்கப்ருத்வீபதே -- ரங்கராஜ என்னாமல் ரங்கப்ருத்வீபதே என்பதால் ப்ருத்வீக்கெல்லாம் (பூமிக்கெல்லாம்) பதியாயிருந்தும், பூமியில் ஏகதேசமான ஸ்ரீரங்கநகரத்திற்கு மட்டும் பதியாயில்லாமல் இருக்க வேண்டுமோ? என்னும் அர்த்தம் த்வனிக்கிறது.
நிர்பய: உமக்கு உம் நிமித்தம் பயமில்லை. உம்மைக் காக்க உமக்கு ஆயுதமும் வேண்டாம். நரஸிம்ஹ தசையில் உமக்கு ஆயுதங்களே இல்லையே!
ததபி ஸ்வயம் வைஸி -- ஆயினும் ஆயுதங்களை நீரே எப்போதும் சுமக்கிறீர். सदा पञ्जायुधीं बिभ्रत् (ஸதா பஞ்சாயுதம் பிப்ரத்) இப்படிச் சும்ப்பது எங்களை ரக்ஷிக்கவல்லவோ? இல்லாவிடில் நிஷ்ப்ரயோஜனமாம்.
பரமாத்மவித் -- ज्ञानी त्वात्मैव मे मतम् ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -- ஞானியை பரமாத்மாவான உமக்கு அந்தராத்மா என்று நீர் சொல்லுவது உம்முடைய அபிமான மாத்ர ஸாரமான நினைப்பு (க்ருஷ்ண மதம்) என்று சந்த்ரிகை. ஆகையால் ஞானியை ரக்ஷிப்பதும் உம் ரக்ஷணம் போன்றது. ஆச்ரிதர் பயப்படாமலிருக்கவே நீர் ஆயுதம் தரிக்கிறீர். 11.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக