அபீதி ஸ்தவம்
சுலோகம் 12
लघिष्ठसुखसङ्गदै: स्वकृतकर्मनिर्वर्तितै:
कलत्रसुतसोदरानुचरबन्धुसंबन्धिभि: |
धनप्रभृतिकैरपि प्रचुरभीतिभेदोत्तरै
न बिभ्रति धृतिं प्रभो ! त्वदनुभूतिभोगर्थिन: ||

லகி₄ஷ்ட₂ஸுக₂ஸங்க₃தை₃: ஸ்வக்ரு̆தகர்மநிர்வர்த்திதை:
கலத்ரஸுதஸோத₃ராநுசரப₃ந்து₄ஸம்ப₃ந்தி₄பி₄: |
த₄நப்ரப்₄ரு̆திகைரபி ப்ரசுரபீ₄திபே₄தோ₃த்தரை
ந பி₃ப்₄ரதி த்₄ரு̆திம் ப்ரபோ₄ ! த்வத₃நுபூ₄திபோ₄க₃ர்த்தி₂ந: ||

அன்பில்
ஸ்ரீனிவாசன் ஸ்வாமி
நின்னையே அகலாது நுகர்கின்ற போகத்தை
நண்ணுகின்ற மனமுடைய நல்லோர்கள் யாவருமே
மின்னனைய அற்பசார மகிழ்வினையே தருகின்ற
முன்னாளில் தாம்செய்த கருமத்தால் விளைந்தனவாய்
எண்ணரிய பல்வகையாம் அச்சத்தையே தருவனவாம்
இல்லாளும் மக்களாலும் உடன்பிறந்தார் பணியாளர்
இன்னுமுள்ள உற்றத்தார் இவராலும் தனத்தாலும்
ஏற்படுமாம் இன்பத்தில் உளம்கொள்ள மாட்டாரே!

ப்ரபோ --ஸர்வாந்தர்யாமியான ப்ரபுவே! த்வத்
அநுபூதி போக அர்த்திந: உம்மை அநுபவிப்பது என்னும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள்,
லகிஷ்ட ஸுக ஸங்கதை -- மிகவும் அற்பமான ஸுகத்தின் ஸ்பர்சத்தைக் (ஸங்கத்தைக்)
கொடுப்பதும், ப்ரசுர பீதி பேதோத்தரை -- பெரிதான பலவித பயங்களை மேல்மேல்
விளைவிப்பதும், ஸ்வ க்ருத கர்ம நிர்வர்த்திதை --தான் சிரமப்பட்டுச் செய்த
(புண்ய) கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்டதுமான, களத்ர ஸுத ஸோதர அநுசர பந்து சம்பந்திபி -- கொண்ட
பெண்டிர், மக்கள், உடன்பிறந்தார், வேலைக்காரர், பந்துக்கள் என்று நன்றாய் நம்மை
பந்தப் படுத்தும் இவர்களாலும், தந ப்ரப்ருதிகை: அபி -- செல்வம், ஆயுள்,
ஆரோக்யம் முதலியவற்றாலும், த்ருதிம் -- சந்தோஷத்தை, ந பிப்ரதி -- பெறுகிறதில்லை.
அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி
"நான் ஞானிக்கு அத்யந்தம் ப்ரியன். அவனும்
எனக்கு அத்யந்தம் ப்ரியன். ஞானி எனக்கு அந்தராத்மா என்று நான் அவனை
அபிமானிக்கிறேன்" என்ற கீதா ச்லோகத்தைக் காட்டி நின்றார் கீழ். அப்படியே
நீரே எங்களுக்கு அத்யந்தம் ப்ரியமான வஸ்து. மற்றவை எதுவும் பிரியமானதல்ல,
ஸுகத்தைக் கொடுப்பதுமல்ல, அவை மேன்மேலும் பயத்தையே தருவன என்கிறார்.
அல்லது,
"முன்பே நீர் செய்த சரணாகதிக்குப் பலமாக இத்தேஹத்தின் முடிவில் உமக்கு
மோக்ஷம் நிச்சயம். ஆகையால் இங்கே உள்ளவரையில் கொண்டபெண்டிர் மக்கள்
உற்றார் சுற்றத்தவர் பிறரோடு ஸுகமாயிருமே என்றால், இவையெல்லாம் துக்கமும் பயமுமே"
என்று விவரிக்கிறார் என்னவுமாம்.
ப்ரபோ
-- நீர் ஞானியை அந்தராத்மாவாகக் கருதினாலும், நாங்கள் நீரே ஸர்வாந்தர்யாமி,
எங்கள் ப்ரபு என்று அறிவோம்.
லகிஷ்ட
ஸுக ஸங்கதை -- உம்மை அனுபவிப்பதே பேரின்பம் மற்றவை சிற்றின்பம் என்பர்.
ஆனால் இவற்றை -- லகிஷ்டம் -- மிகவும் அல்பமான (அதைக்காட்டிலும் சிறியதில்லாத)
இன்பம் என்ன வேண்டும். அதிலும் ஸுகத்தையும் கொடுப்பதில்லை. அத்ருப்தியை, மேல்
மேல் அனுபவிக்க ஆசை என்னும் ஸங்கத்தையே கொடுக்கிறது. सुखसङ्गेन बध्नाति (ஸுகஸங்கேன பத்நாதி) என்ற கீதா சுலோகத்தை
ஸூசிப்பிக்கிறார். "ஸுகத்தில் ஆசையைக் கொடுத்து (பாசங்களால்) கட்டுகிறது.
இங்கு மேன்மேலும் பந்தம் உண்டாகிறது என்பதைக் காட்ட "பந்து"
"சம்பந்தி" என்கிற பதங்களைச் சேர்க்கிறார்.
ஸ்வக்ருத
கர்ம நிர்வர்த்திதை -- இப்படி அத்யல்பமான போலி இன்பத்தை அடைய எவ்வளவு
பாடுபட்டு புண்ய கர்மம் செய்திருக்க வேண்டும்? ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரகும்
நீர் இருக்கையில், ஓர் சரண நினைப்புக்கு சாச்வதமான பேரின்பத்தை தாயக்கிரமமாக
அளிக்க நீர் காத்துக் கொண்டிருக்கையில், அல்பால்ப ஸுகத்தைத் தேடுகிறோம்.
களத்ர
-- இது நிதம்பத்திற்கும் இல்லாளுக்கும் பெயர். பெரிய நிதம்பத்தையிட்டு
ஸ்திரீயைக் கூறும். ஊன்றிப் பார்த்தால் இந்தப் பெயரே வெறுப்பைக் கொடுக்க
வேண்டுமே? ("சந்த்ரமூர்த்தியைப் போல அழகிய விலாஸத்தால் கவரும் குருகளத்ரத்தை
யுடையவன்" என்று காதம்பரியில் வர்ணனம். இங்கு குருகளத்ரம் என்பதற்கு
பெரும் நிதம்பம் என்றும் குருபத்னியான தாரை என்றும் பொருள்.)
ஸுத
-- கர்ப்பத்திலிருந்து வெளியே நழுவவிடப்பட்ட சிசு, எத்தனை ஸோம ஸுதங்களான
கர்மங்கள் செய்யவேண்டும் ஒரு ஸுதனைப் பெற. "தாரமென்னும் சுழல், மக்கள்
ஸயுஜர் என்னும் முதலைகள், இவற்றோடு கூடிய ஸம்ஸாரம் என்னும் பயங்கரமான
கடல்" என்று முகுந்தமாலை.
ஸோதர
-- பங்காளிகள். "ஞாதியிருந்தால் நெருப்பு வேறு வேண்டுமோ?"
அநுசர
-- உமக்கு நாங்கள் அடிமை செய்ய வேண்டியிருக்க, அடிமையான எங்களுக்கு அடிமைகளா?
कुरुष्व मामनुचरं (குருஷ்வ மாமநுசரம்)
என்பதன்றோ எங்கள் நிலை?
பந்து
-- பாசங்களால் கட்டுகிறவர்கள். ஸம்பந்திகள் என்பதால் இவர்கள்
எல்லாருமே நன்றாய்க் கட்டுகிறவர்கள்.
தந ப்ரப்ருதிகைரபி -- தனம் முதலியவற்றாலும்,
புத்ரனைக் காட்டிலும் ப்ரியம், வித்தத்தைக் காட்டிலும் ப்ரியம் என்றது உபநிஷத்.
புத்ரனைக் காட்டிலும் பணத்தில் ப்ரீதி வைப்பர். அது ஆபத்தே. कहदपि धनं भूरि निधनं (மஹதபி தநம்
பூரி நிதநம்) என்று ப்ரபோத சந்த்ரோதயம் ऐश्वर्यं शत्रुशालिता (ஐஶ்வர்யம் ஶத்ரு
ஶாலிதா) என்று பாரதம்.
ப்ரசுர
-- கொஞ்சம் ஸுகம் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பயமே அதிகம்.
பீதிபேதோத்தரை
-- பலவகையான பயங்களில் மிகவும் அதிகமான பயங்கள். மேலும் பயத்தை
விளைவிப்பன.
த்வத்
அநுபூதி போக அர்த்திந -- अभयं प्रतिष्ठां विन्दते (அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே) என்று உம்மிதமே
அபயத்திற்கு நிஷ்டையை விரும்புமவர்கள்.
த்ருதிம்
-- ஸந்தோஷத்தை, அபயத்தை, தரிப்பை

ந பிப்ரதி -- தரிக்கிறதில்லை, ஸந்தோஷமில்லை
யென்பது மட்டுமில்லை, மரிப்பதே அஸாத்யமாகிறது. (12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக