வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அபீதி ஸ்தவம்

அபீதி ஸ்தவம்

சுலோகம் 13
न वक्तुमपि शक्यते नरकगर्भ वासादिकं
            वपुश्च बहुधातुकं निपुणचिन्तने तादृशम् |
त्रिविष्टपमुखं तथा *तव पदस्य देदीपत:
            किमत्र न भयास्पदं भवति रङ्गपृथ्वीपते ||
{ * दिवि पदस्य ते दीव्यत -- पा:   दिव्यत: --पा }
வக்துமபி ஶக்யதே நரககர்ப வாஸாதிகம்
        
வபுஶ்ச ஹுதாதுகம் நிபுணசிந்தநே தாத்ரு̆ஶம் |
த்ரிவிஷ்டபமுகம் ததா *தவ பதஸ்ய தேதீபத:
        
கிமத்ர யாஸ்பதம் வதி ரங்கப்ரு̆த்வீபதே ||
ர‌ங்க‌ப்ருத்வீப‌தே -- ர‌ங்க‌பூமிக்கு அர‌ச‌னே! ந‌ர‌க‌ க‌ர்ப்ப‌ வாஸாதிக‌ம் -- ந‌ர‌க‌ம் க‌ர்ப்ப‌வாஸ‌ம் முத‌லிய‌து, வ‌க்துமபி -- (இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மென்று) சொல்வ‌த‌ற்குக்கூட‌, ந‌ ஶ‌க்ய‌தே -- ச‌க்ய‌ம‌ல்லை: (ஸாத்ய‌மில்லை), வ‌பு:ச‌ -- தேஹ‌மும், நிபுண‌ சிந்த‌நே -- உன்னி ஆலோசித்தால், தாத்ருஶ‌ம் -- அப்ப‌டியே துஸ்ஸ‌ஹ‌மான‌து, த்ரிவிஷ்ட‌ப‌முக‌ம் -- ஸ்வ‌ர்க்க‌ம் முத‌லிய‌தும், தேதீப‌த‌ -- ஜ்யோதிர்ம‌ய‌மாய் ப்ர‌காசிக்கும், த‌வ‌ ப‌த‌ஸ்ய‌ -- உம் ஸ்தாநத்தை (உம் சுட‌ர‌டியை) (யிட்டுப் பார்த்தால்), ததா -- அப்ப‌டியே (ந‌ர‌க‌ துல்ய‌மாகும்), அத்ர‌ -- இங்கே (இப்புவியில்), கிம் -- எதுதான்,  ப‌யாஸ்ப‌த‌ம் ந‌ -- ப‌ய‌த்திற்கிட‌மாவ‌தில்லை?
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
நல்லவையே தருமென்றும் தீயவையே தருமென்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும்படி அமைந்தனவாய் அச்சத்தையே தருமென்றே
எல்லையிலா பயம்கொண்ட என்மீதே அரங்கா! நீ
இரக்கம்தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள்புரியும்
நல்லானும் வேறுளனோ? நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும்தகுதி நிறைந்தவனும் வேறுளனோ? 14.
அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார்
         தேஹ‌ ஸ‌ம்ப‌ந்திக‌ளான‌ சுற்ற‌த்தார் வேண்டாம், தேஹ‌த்தோடாவ‌து ஸுக‌மாயிருக்க‌ லாமோவென்னில், அதுவும் ஸாத்ய‌மில்லை.  विपद्गेहं देहं (விப‌த் கேஹ‌ம் தேஹ‌ம்) , விப‌த்துக்க‌ளுக் கெல்லாம் இல்லம‌ ச‌ரீர‌ம் என்று ப்ர‌போத‌ ச‌ந்த்ரோத‌ய‌ம். ந‌ர‌க‌ம் பெருந் துக்க‌ம‌ய‌மான‌து.  அதில் அடைப‌டுவ‌திலும் க‌ர்ப்பப் பைக்குள் அடைப‌டுவ‌து அதிகக் க‌ஷ்ட‌ம் என்ப‌தை அத‌ற்குப் பிற‌கு க‌ர்ப்ப‌வாஸ‌த்தைக் கூறுவ‌தால் ஸூசிப்பிக்கிறார்.
         ஆதிக‌ம் -- முத‌லிய‌து. உள்ளேயிருக்கும் துன்ப‌ம் ஒரு புற‌மிருக்க‌, வெளியே வ‌ருவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ம்.  योने शरीरं (யோநே: ஶ‌ரீர‌ம்) என்று ஸூத்ர‌காரர் வைராக்யபாதத்தை முடித்தார். அத‌ற்கு முன் ஸூத்ர‌த்தில் ரேத‌ஸ் ஸிக் யோக‌த்தைப் பேசினார். க‌ர்ப்பப்ப் பையின் யோக‌ம் கிடைக்க‌ ரேதோயோக‌ம் கிடைக்க‌வேண்டும் என்று ஜுகுப்ஸையைக் காட்டினார்.
          வ‌புஶ்ச‌ -- ந‌ர‌க‌த்திலும் கொடிய‌து தேஹ‌ம் என்றார் ப்ர‌ஹ்லாதாழ்வான். देहे चेत्प्रीतिमान् मूढो नरके भविता च स:   தேஹே சேத் ப்ரீதிமாந் மூட‌: ந‌ர‌கே ப‌விதா ச‌ ஸ‌) தேஹ‌மென்னும் ந‌ர‌கக் குழியில் ப்ரீதி வைப்பானாகில், அந்த‌ மூட‌னுக்கு ந‌ர‌க‌த்திலும் ப்ரீதியே ஏற்ப‌டும். தேஹ‌த்திலும் ந‌ர‌க‌ம் கொடிய‌தோ ? அவ‌னுக்கு ந‌ர‌க‌வாஸ‌ம் த‌ண்ட‌னை ஆகாது என்ப‌து க‌ருத்து.
          ப‌ஹுதாதுக‌ம் --सप्तधातुमयं त्रिमलं ஸ‌ப்த‌ தாதும‌ய‌ம் த்ரிம‌ல‌ம் என்ப‌ர்
          நிபுண‌ சிந்த‌நே -- ப்ர‌ஹ்லாத‌ன் நிரூபித்ததுபோல் அழ்ந்து யோசித்தால்,
          தாத்ருஶ‌ம் -- ந‌ர‌காதிக‌ள் போன்ற‌தே.
          த‌வ‌ ப‌த‌ஸ்ய‌ தேதீ ப‌த: அத்ய‌ர்க்காந‌ல‌தீப்த‌மாய் சுட‌ர்ச்சோதியான‌ ப‌ர‌மப‌த‌மென்னும் உம் ஸ்தான‌ம் ப்ர‌காசிக்கையில், அதை உத்தேசித்து உம் சுட‌ர‌டியின் இன்ப‌த்தை ஆலோசிக்குங்கால் என்று அர‌ங்க‌ன் விஷ‌ய‌முமாக‌லாம். அர‌ங்க‌மென்ப‌து ம‌ற்ற‌ திவ்ய‌தேச‌ங்க‌ளுக்கு உப‌ல‌க்ஷ‌ண‌ம்.
         த்ரிவிஷ்ட‌ப‌முக‌ம் ததா  ஸ்வ‌ர்க்க‌மும் ம‌ற்ற‌ ஸ‌த்ய‌லோக‌மும் அப்ப‌டியேயாகும்.  निरयो यस्त्वया विना (நிர‌யோ ய‌ஸ் த்வ‌யா விநா) உம்மை விட்டுப் பிரிவு ந‌ர‌க‌மே.
         அத்ர‌ கிம் ந‌ ப‌யாஸ்ப‌த‌ம்  -- இந்த‌ப் பூம‌ண்ட‌ல‌த்தில் எதுதான் ப‌ய‌த்திற்கு இட‌மில்லை?
         ர‌ங்க‌ப்ருத்வீப‌தே -- த‌ப்பிச் சொன்னேன். இந்த‌ப் பூம‌ண்ட‌ல‌த்தில் ர‌ங்க‌மென்னும் ப்ருத்வீ பாக‌ம் ஸுக‌த்தைத் த‌ருவ‌தே, ப‌ய‌ம‌ற்ற‌தே. இந்த‌ப் பூமியில் இருந்தாலும், அர‌ங்க‌மும் அர‌ங்க‌ம் போன்ற‌ திவ்ய‌ தேச‌ங்க‌ளும் அப‌ய‌த்தையும் ஸுக‌த்தையும் த‌ருப‌வையே. ஆகையால‌ ப்ருத்வீப‌தியான‌ நீர் அவ‌ற்றை ர‌க்ஷித்துத் த‌ர‌வேண்டும்.
         தேதீப‌த‌: என்ற‌ பாட‌ம் சுத்த‌ம்.     (13) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக