சில தினங்களுக்கு முன் இங்கு திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் கிடைத்த “கீதைக் குறள்” நூலைப் பற்றி எழுதியிருந்தேன். முழு நூலையும் வெளியிட அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன். ஆனாலும் அதுவரை அந்நூலுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு அறிஞர் அதிலும் வைணவத்தின்பால் ஈடுபாடு உடைய ஒரு பெரியவர் அளித்துள்ள மதிப்புரையின் சுவை கருதி அதையும், நூன்முகமாக நூலாசிரியர் அளித்துள்ள குறிப்புரையையும் மட்டும் இங்கு மின் நூலாக இட்டிருக்கிறேன். மதிப்புரை அளித்துள்ள பெரியவர் திரு சுப்பு ரெட்டியார் அவர்கள். கீதைக்குறள் முழுவதையும் இங்கு எழுதக் கூடிய நாள் விரைவில் வரவேண்டும். அது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் கூட கீதையை அறிமுகப் படுத்த, அதனால் அவர்களுக்கு கீதையைக் கற்க ஆசையைத் தூண்டுவதாக அமையும். .இனி திரு சுப்பு ரெட்டியாரின் மதிப்புரை
Geethai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக