திங்கள், 29 மார்ச், 2010

எட்டாம் நாள்

எட்டாம் நாள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதற்கு முன் திருக்கல்யாண நிகழ்ச்சிகளின் ஒரு சிறு வீடியோவை இங்கு பார்த்து விட்டு வாருங்களேன்P1010495
P1010494 
ந்திராவிலிருந்து வந்திருக்கும் ஸேவார்த்திகள் 7ம் நாள் காலை ஆண்டவன் ஆச்ரமத்தில் பிரபந்தம் ஸேவிக்கிறார்கள்.  இங்கு வந்து ஒருநாள்கூட ஸேவிக்கவில்லையே என்ற அவர்கள் குறை ஓரளவு நீங்கியது.
மிக்க நவரத்தினமணி தங்கத் தகட்டின்மேல்
          விளங்கவோ ரமிச மிட்டு
விளங்கு பொற்கல்லணை திருத்தி முத்துக்
       குச்சு சிறு காதுபுற மசையவே
பக்கம் வச்சிரமணிப் பாவடி பதித்து வெண்
     பாற்றிரைக் கவரி நேற்றிப்
பளபளென வொளிர் பற்பராக முகவேட்டிலகு
     பரிபுர கிண்கிணி முழங்கச்
சக்கிர வானக்கிரிக் கப்புறந் தாவியே
    தமனியக் குன்றி லேறித்
தளதளெனும் வெள்ளியங்கிரி யிலொரு சாரி
    போய்ச் சந்திரசூரிய ரையிடறித்
திக்கயத்துச்சி முழியப் பாய்ந்து சூழ்ந்தன்பர்
    சிந்தையி லுலாவி நிற்குஞ்
செகநாதர் தெய்வச்சிலைக் கடவுளே றிவரும்
அழகான குதிரை வாகனம் இது. பல ஆண்டுகள் வரை இP1010511து சுழலும் குதிரையாக இருந்திருக்கிறது. பின்னாளில் வந்த அர்ச்சகர்கள் சுழலும் குதிரை வாகனத்தில் கைங்கர்யம் செய்ய சிரமப்பட்டதால் அது இப்போது சுழலா குதிரை. இந்தக் குதிரை வாகனத்தில் வீதி வலம் வந்து திருமங்கையாரை நாரண நாமம் உணர்த்த வைத்து அதன் பின் தேர் கடாக்ஷம் ஆகி ஆஸ்தானம் திரும்பினார்.
தேர் கடாக்ஷக் காட்சி இங்கே.
P1010518
 




இன்று நடந்த பாரிவேட்டை, திருமங்கையார் வைபவங்கள், இன்றைய தேரோட்டம் ஆகியவை அடுத்த பதிவில் வீடியோக்களாக வரும். நேற்று போன கரண்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் அரை கரண்ட் என்று நாங்கள் சொல்லும் low voltageல். வாழ்க ஆற்காட்டார்! சென்னைக்கு மட்டும் தடையில்லா மின்சாரம். அங்கு மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். நாங்களெல்லாம் அந்தக் காலம் போல் 7 மணிக்கெல்லாம் உறங்கப் போய்விட வேண்டும் போல!

2 கருத்துகள்:

  1. //ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ஸேவார்த்திகள் 7ம் நாள் காலை ஆண்டவன் ஆச்ரமத்தில் பிரபந்தம் ஸேவிக்கிறார்கள்//

    ஆகா! அருமை! அவர்கள் தமிழா? தெலுங்கா?
    தமிழ் அருளிச் செயல்களை எப்படிச் சிரத்தையாகச் சொல்ல முடிந்தது? தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டு சொன்னார்களா என்ன?

    //பல ஆண்டுகள் வரை இP1010511து சுழலும் குதிரையாக இருந்திருக்கிறது. பின்னாளில் வந்த அர்ச்சகர்கள் சுழலும் குதிரை வாகனத்தில் கைங்கர்யம் செய்ய சிரமப்பட்டதால் அது இப்போது சுழலா குதிரை//

    ஆகா! என்ன இருந்தாலும் சுழலும் குதிரையின் அழகு வருமா?

    எங்கூருல வாய் பிளந்து வேடிக்கை பார்த்து இருக்கேன் குதிரை உலாவின் போது! சும்மா அரை வளைவாக அப்படியும் இப்படியும் சுழலும் போது, Gallop செய்வது போலவே இருக்கும்!

    மற்ற நாட்களில், மண்டபத்தில் நிறுத்தி வைத்திருப்பார்கள்! அப்போது சுழலாது! நானும் அதன் மேல் ஏறி ஏறிப் பார்ப்பேன்! சுழலாது! :)

    பெரியவங்க, "டேய், அது பெருமாள் ஏறினாத் தான்டா சுழலும்...உன்னையப் போல அரை டவுசர் போட்ட பசங்களுக்கெல்லாம் சுழலாது! பெரியவங்களுக்குத் தான் ஓட்டத் தெரியும்"-ன்னு சொல்லி வைக்க...அதுக்காகவே முழு Pant போட்டுக் கொண்டு, சுழலுமா-ன்னு முயன்று பார்த்த காலம் எல்லாம் உண்டு! :))

    பதிலளிநீக்கு