மரபில் நகைச்சுவை -- நம் "சிங்காரச் சென்னை" பற்றி
in reference to:"சென்னைச் சிறப்பு <>* திரிவிக் கிரமன் திரும்பக் குறளாய்த் திரிந்ததுபோல் செம்மைத் தமிழ்தன் - உருமாறி 'இன்னாப்பா, இஸ்துகினு' என்பனபோல் ஆனவிதம் சென்னைக்கே ஆன சிறப்பு. 1 காலையில் கேட்கும் ‘கசுமாலம், எந்திரி!' சாலையில் ‘சாவுக் கிராக்கியிது' -மாலையில் 'துன்றான்பார் சோமாரி' இன்னபல சொல்லழகு சென்னைக்கே ஆன சிறப்பு. 2 'நாஷ்டாவை முட்ச்சுகினு' நாமேறும் ஆட்டோக்கள் கோஷ்டியாய்ச் சேர்ந்து குரலெழுப்ப - 'ராஷ்டா'வில் மின்னல் எனவிரையும் விந்தைக்கண் காட்சியெங்கள் சென்னைக்கே ஆன சிறப்பு. 3 (கோஷ்டி=கோட்டி, கூட்டம்; ஒருவரோடு ஒருவர் கூடியிருத்தல்; ராஷ்டா=ரஸ்தா: வீதிக்கான பெயரின் மரூஉ) செல்லுகின்ற ஊர்தி சிறிதும்அலுங் காதிருந்தால் நல்லதல்ல நம்முடலுக் கென்பதனால் - கொல்வதுபோல் சென்றுகுழி யுள்புகுந்து சிந்திக்க வைத்தல்நம் சென்னைக்கே ஆன சிறப்பு. 4 கையிலே காசுடன் காய்கறி வாங்கையில்நாம் செய்கின்ற பேரம் பிடிக்காமல் - வைபவரின் கன்னாபின் னாமொழியைக் காதுகுளி ரக்கேட்டல் சென்னைக்கே ஆன சிறப்பு. 5 கற்றபின் நிற்கக் கடற்கரையில் கல்லாக நிற்கின்ற வள்ளுவர்தம் நீதிகளைச் - சுற்றிஇரை தின்னவரும் காக்கைக்குச் செப்புகின்ற சீர்மையிந்தச் சென்னைக்கே ஆன சிறப்பு. 6 மல்லிகைப் பூமணத்தில் மாட்டின் இடுகையொடு பொல்லாப்பே ருந்தின் புகைகலந்து - நில்லாமல் என்றுமுள கூவமணம் ஏற்றுநமை ஊக்குவித்தல் சென்னைக்கே ஆன சிறப்பு. 7 வெய்யிலின் சூட்டில் மெழுகாகும் சாலையிலே ஐயய்யோ என்றலரும் ஆட்களெல்லாம் - தையலாள் சென்றதிசை நோக்கித் திரும்பித் துயர்மறத்தல் சென்னைக்கே ஆன சிறப்பு. 84 மழைத்திவலை கண்டவுடன் மாநகர்ச் சாலை குழைசேற்றுக் குட்டையாய்த் தம்மை - விழவைத்தும் என்றுமதைச் சீர்செய்ய எண்ணா மதியுடையோர் சென்னைக்கே ஆன சிறப்பு. 9 சூரியனோ ஈரிலையோ இங்குநமைத் துன்புறுத்த யாரிருந்தால் தானென்(று) அடுத்தடுத்துத் - தேர்தலிலே என்ன முடிவெனினும் ஏற்கும் பெருந்தன்மை சென்னைக்கே ஆன சிறப்பு. 10"
- Marabil nagaiccuvai-34; மரபில் நகைச்சுவை - 34 - சந்தவசந்தம் | Google Groups (view on Google Sidewiki)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக