இன்று 50 வயதைத் தாண்டி வாழ்பவர்களில் பலருக்கு மிகவும் பரிச்சயமான – இல்லை பேரைச் சொன்னாலே மயங்க வைக்கின்ற – ஒரு பெயர் “சில்பி”. கல்லூரி நாட்களிலே இராமேஸ்வரத்தில் அவருக்குத் தொண்டு செய்த பாக்யம் அடியேனுக்கு உண்டு. அந்த நாட்களிலே ஆனந்த விகடனில் அவரது சித்திர மேதமையைக் கொண்டு, அன்றே அழிந்துபடத் தொடங்கியிருந்த பல திருக்கோவில்களிலிருந்த அற்புதமான சிற்பங்களை வரையவைத்து அவற்றை “தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற தொடராக வெளி வந்தது இன்னும் பலருக்கு பசுமையான நினைவுகளாக இருக்கும். அந்தக் கட்டுரைகளை ஒரு புண்ணியவான் தொகுத்து வைத்திருக்கிறார். ஆனால் முறையான பராமரிப்பின்றி அதில் 111வது தொடர் முதல் சில அத்தியாயங்கள் அடியேனுக்குக் கிடைத்தன. அவற்றை முடியும்போதெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்வேன். தெய்வ உருவங்களை அந்தப் புனிதம் மாறாமல் திரு சில்பி அளித்திருப்பதைக் கீழே காணலாம்.
Wonderful. silpi is truly a divinely gifted artist. I have featured a few of his sketches in www.poetryinstone.in
பதிலளிநீக்குi would be glad if you could share your collections of his fantastic sketches.
pl do write to me
rgds
vj
www.poetryinstone.in