ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஆரியராவது திராவிடராவது

இன்றைய தினமலர் செய்தி ! இனியாவது இந்த "கைபர் போலன் கணவாய்" கட்டுக் கதைகள் நிற்குமா?
ஆரியர் - திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல்
அக்டோபர் 04,2009,00:00  IST
ஐதராபாத்: "நமது அரசியல்வாதிகளின் பிரபல முழக்கமான ஆரியர் - திராவிடர் கொள்கை வெறும் கட்டுக் கதையே' என்று, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.இந்தியர்களின் மரபுவழி உண்மை குறித்து, செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் குமாரசாமி தங்கராஜன், லால்ஜி சிங் இருவரும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 132 பேர்களின் மரபணு சோதனை செய்யப் பட்டது.

ஆறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், 25 வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உயர்வகுப்பினரும், தாழ்த் தப்பட்டவரும், பழங்குடியினரும் அடங்குவர். இவர்களின் மரபணுக்களில், ஐந்து லட்சம் மரபணு மாற் றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்து இங்குள்ள மக்களுடன் கலந்தனர் என்பதை, இந்த மரபணு மாற்றங்கள் காட்டவில்லை. மாறாக, இந்தியச் சமூகத்துக் குள்ளேயே, கலப்பு ஏற்பட் டுள்ளது என்பதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.


மேலும், இன்றைய ஜாதிமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த பல்வேறு இனக் குழுக்களிலிருந்து வந்தவைதான் என்றும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து, விஞ்ஞானி லால்ஜிசிங் கூறுகையில்," இந்த ஆராய்ச்சி வரலாற்றை மாற்றி எழுதப் போகிறது. நமக்குள் வடக்கு - தெற்கு என்ற பிரிவினை இருந்ததில்லை என்பதை இது நிரூபித்துள்ளது,' என்றார்.விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜன் கூறியதாவது:


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இங்குள்ள திராவிடர் எனப்பட்ட மக்களுடன் கலந்தனர் என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் மாநிலங்களில் தான், மனித இனம் குடியேறி வாழ ஆரம்பித்தது. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடபகுதி மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக ஆரம்பித்தனர். ஒரு நிலையில், தென் மாநிலங்களில் இருந்தவர்களும், வடமாநிலங்களில் இருந்தவர்களும் ஒன்றாக கலக்க ஆரம்பித்தனர்.


 இதன் விளைவாக புதிய இனங்கள் உருவாகி, மக்கள் தொகை பெருகியது. இதனால் தான் இன்றைய மக்களிடையே மரபணு ரீதியில் எவ்வித வித்தியாசமும் காணப்படுவதில்லை. இந்தியச் சமூக உருவாக்கத்தின் போது, நிலவி வந்த பல்வேறு இனக் குழுக்களிடமிருந்துதான் ஜாதிகள் தோன்றின. ஜாதிகளுக் கும் பழங்குடியினருக்கும் இடை யே முறையான வேறுபாடுகள் இல்லாததால், அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்பது மிகவும் கடினமே. இவ்வாறு தங்கராஜன் தெரிவித்தார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி, பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி., ஆய்வு மையங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக