

இன்று கைக்கு வந்து சேர்ந்த "தாம்ப்ராஸ்" மாத இதழில் படித்து ரசித்தவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சரணாகதி மேன்மையை எடுத்துச் சொல்லும் நடாதூர் ஸ்வாமி கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று. படங்களின் மீது க்ளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.
அதே இதழில் வந்துள்ள வேத பாடசாலை விளம்பரத்தையும் இங்கு காணலாம். டெல்லியில் பல வருடங்கள் இயங்கி இப்போது நிர்வாக காரணங்களால் தஞ்சாவூர் களஞ்சே
ரியில் நடந்து வருகிற அப் பாடசாலைக்கு முடிந்தவர்கள் உதவலாம். சென்ற பல வருடங்களாக அடியேனுக்கு நல்ல பல உபயோகமான நூல்கள், வேதக் குறுந் தகடுகள் ஏன் நல்ல சாளக்ராமம்கூடப் பெற்றதுடன், வேதம் படிக்கும் சில குழந்தைகளுக்கு முடிந்த அளவு உதவியதால் பெற்று வரும் ஆத்ம சந்தோஷம் ஆகியவை இந்த வேண்டுகோளுக்கு அடிப்படை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக