ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

சரணாகதிமாலை

சரணாகதிமாலை 6 தொடர்ச்சி

பகவச்சப்தத்தின் உண்மைப்பொருள் உணர்ந்த தென்சொற்கடந்து வட சொற்கலைக்கெல்லை தேர்ந்த ஸ்ரீவல்லபர் (தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்) தாம் இயற்றிய தமிழ் வேதமாகிய திருக்குறள் பாயிரம். முதல் அதிகாரம். கடவுள் வாழ்த்து முதற்குறளை.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
என அமைத்துப் பாடியுள்ளார். பரிமேலழகரும் "இப்பாட்டான் முதற் கடவுளதுண்மை கூறப்பட்டது" என்று நுண்ணிய உரை வகுத்துள்ளதும் நன்கு நோக்கற்பாலது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பில் இக்குறளின் கீழ் ஐசுவரியம், வீர்யம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறுக்கும் பகமென்னும் பெயருண்மையால் பகவனென்பதற்கு இவ்வாறு குணங்களையுமுடையோனென்பது பொருள் எனக்குறிப்பு எழுதியுள்ளார்கள். ஆதிபகவன் என்னு மிருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என உரையிட்டனர் பரிமேலழகியார். "அமலனாதிபிரான்" (திருப்பாணாழ்வார் அருளிச்செய்த பத்துப்பாட்டு) வியாக்கியானமான "முநிவாஹந போகம்" ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த இருபத்தெட்டாவது ரஹஸ்யம். இதில் "(ஆதி) 'ஏஷ கர்த்தாந க்ரியதே' இத்யாதிகளிற்படியே ஸர்வஜகதேக காரணபூதன் இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாகப் பற்றப்படுபவன் என்று பலிதம்: இக்காரணத்வமும் மோஷப்ரதத்வமும் சத்ரசாமரங்கள் போலே ஸர்வலோக சரண்யனுக்கு விசேஷசிஹ்நங்கள்" என்றுள்ளன காண்க. முழுதுணர் நீர்மையினோராகிய ஸ்ரீவல்லபர் பகவச்சப்தத்தால் பெறக்கூடிய நாராயணன் எனுந் திருநாமத்தை "வாலறிவன்" (2.ஸர்வஜ்ஞன்) "பொறிவாயில் ஐந்தவித்தான்". (6.ஹ்ருஷீகேசன்) "தனக்குவமையில்லாதான்" (7.அதுல:) "எண்குணத்தான்" (9) என்ற அகாரவாச்யனின் பெயர்களை எடுத்தோதி "அடியளந்தான்" (பொருட்பால் 610) என்று உலகளந்த திரிவிக்ரமன் பெயரைக்காட்டி இறுதிப்பாலில் "தாமரைக்கண்ணான்" (புணர்ச்சி மகிழதல் 1103) என்று செங்கண்மாலை ஸ்பஷ்டமாகப் பேசித்தலைக் கட்டியுள்ளது நன்கு நோக்கி இன்புறற்குரியது. "முதற்கடவுள்" யார் என்பது ஆழ்வார்களுள் ஆதியாகிய பொய்கையார் "உலகளந்த மூர்த்தி யுருவே முதல்" (முதல் திருவந்தாதி. 14) என்றும் "முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர்வண்ணன் - முதலாய நல்லான்" (முதல் திருவந்தாதி.15) என்றும் கண்டோக்தமாகக் காட்டியிருப்பதால் தெற்றென அறியலாம். திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை.
தேவீ -- பிராட்டிமார்கள்.
இப்படி அதிமநோஹரமான அநந்தபோக பர்யங்கத்திலே ரஜதகிரியின் மேலே மரதககிரி இருந்தாற்போலே 'ஏழுலகும் தனிக்கோல் செல்ல' வீற்றிருந்து 'விண்ணோர்தலைவ'னாய் குமாரயுவாவாய் 'சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு' என்னும் படி ஆதித்ய சதஸஹஸ்ர ஸமுதாயம் போலே அநவதிக தேஜஸ்ஸையுடையனாய் 'விச்வமாப்யாயந் காந்த்யா பூர்ணேந்து யுத துல்யயா' என்னும் படி அநவதிக லாவண்யத்தையுடையனாய் ஸர்வசேஷியான தன்னுடைய க்ருபையும் க்ஷமையும் வண்மையும் வடிவு கொண்டாற்போலே இருக்கிற நாச்சிமார்களில் ஸ்வாபிமத, நித்ய, நிரவத்ய, அநுரூபஸ்வரூபாதிகளை உடையனாய் ஸ்வவைச்வரூப்யத்தாலே ஸதாநுபவம் பண்ணாநின்றாலும் இன்று அநுபவிக்கத் தொடங்கினாற்போலே ஆச்சர்யரஸாவஹையாய், 'சாந்தாநந்த' இத்யாதிகளின்படியே ஸர்வப்ரகாரஸம்ச் லேஷத்தை உடையனாய் 'திருமார்வத்து மாலை நங்கை'யாய் அமுதில் வரும் பெண்ணமு'தாய் 'வேரிமாறாத பூமேலிருந்து வினைதீர்க்கு' மவளாய் தன் கடாக்ஷலேசத்தாலே கமலாஸநாதி வைபவத்தையும் கொடுக்குமவளாய் 'தேவதேவ திவ்யமஹிஷீ' என்னும் படியான மேன்மையும் 'கருணாஸ்ராநதமுகீ' என்னும் படியான நீர்மையும் உடையளான பெரிய பிராட்டியார் 'தாக்ஷிண்யஸீமா' என்று தோற்றும்படி தக்ஷிணபார்ச்வத்திலே நீலமேகத்தை அணைந்த நிலை மின்போலே ஸேவித்திருந்து தன்னுடைய சேஷித்வ போக்யத்வ கைங்கர்யப்ரதி ஸம்பந்தித்வங்களைப் பூரித்துக்கொண்டு அகிலபரிஜநங்களை அவஸரோசிதா சேஷவ்ருத்திகளிலும் ஆஜ்ஞாபிக்க 'ஏவம் பூதபூமி நீளாநாயக' என்கிறபடியே பெரிய பிராட்டியாருடைய ரூபாந்தரம் என்னலாம் படி அநவரத பஹுமாந விஷயையாய் 'பச்சைமாமலை போல் மேனி'க்கும் படிமாவான நிறத்தை உடையளான 'பார் என்னும் மடந்தை'யும் 'அல்லி மலர்மகள் போகமயக்குகள் அத்யல்பம் என்னும்படி நித்யப்ரபோதம் நின்றவிடம் தெரியாதே நீளாதுங்க ஸ்தநகிரிதடீஸுப்தம் என்னப் பண்ணுமவளாய் நீலோத்பவச்யாமளையான ஸ்ரீநீளைப் பிராட்டியும்; அடியார் இடத்திலே ஸேவித்திருக்கும்படி தாங்களும் இடத்திலே ஸேவித்திருக்க; 'ஸேவ்ய: ஸ்ரீபூமி நீளாபி:' உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்' இத்யாதிகளில் சொன்ன சேர்த்தியிலே அடிமை செய்யுமவர்களுக்கு 'ரஸம்' என்றும் 'ஆநந்தம்' என்றும் சொல்லும்படியான நிரதிசய யோக்யதையுடையனான நிருபாதிகசேஷியை நிருபாதிகஜ்ஞாத விகாஸத்தாலே 'அவாவறச் சூழ்ந்தாய்' என்னும்படி அனுபவித்து (ஸ்ரீபரமபத ஸோபாநம். பராப்திபர்வம்)
தேமா மலர்க்கயஞ்சூழ்
கோயின் மேவுந் திருவரங்கர்
தாமாத ரித்ததிருத்
தேவிமாரிற் றரங்கவுடைப்
பூமாது நாளும்
புரத்தே சுமந்து புரக்குமலர்
மாமாது செல்வங்
கொடுத்தே யுயிர்களை வாழ்விக்குமே.
(திருவரங்கத்துமாலை.80)
(தேனையுடைய பெரிய பூக்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற திருஅரங்கர் தாம் அன்புவைத்த திருமகள் நிலமகள் என்னும் உபயதேவியர்களுள் கடலை உடுக்கும் ஆடையாக உடைய நிலமகள் எந்நாளும் உயிர்களைத் தனது உடம்பின் மேலே தாங்கிக் காப்பாற்றுவாள். தாமரையில் தோன்றிய திருமகள் அவ்வுயிர்ட்கட்குச் செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள். எம்பெருமானது வலப்பக்கத்திலே ஸ்ரீதேவியும் இடப்பக்கத்தில் பூதேவியும் எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் உடன் உறைவர்.)
பூஷணஹேத்யாதி - ஸ்ரீவத்ஸ கௌஸ்துப கிரீட வநமால நூபுரஹாராதிகள், ஸ்ரீ சங்கு சக்ராதிகள், அநந்தகருட விஷ்வக்ஸாநாதிகள் திருவணுக்கன் முதலானவைகள்.
"அங்கே குமுதாதிகளான திவ்ய பார்ஷதேச்வரர்களும், சண்டாதிகளான திவ்யத்வாரபாலர்களும் ஸஸ்நேக பஹுமாந அவ லோக நம்பண்ண அநீகேச்வர நியுக்தரான ஆஸ்தான நிர்வாஹகர் அருளப்பாடிட அடிக்கடியும் தொழுவ தெழுவதாய்க்கொண்டு திருமாமணிமண்டபத்தின் முகப்பிலே சென்றேறி அங்கே சிறகுடைய மஹாமேருவைப்போலே சிறந்த திருமேனியுடையனாய் த்ரயீமயனாய் 'திருமகள்சேர்மார்ப'னுக்குத் திருக்கண்ணாடி போலே அபிமுகனாய் நிற்கிற 'காலார்ந்தகதிக்கருட'னைக்கண்டு கழல்பணிந்து 'பிணங்கி அமரர் பிதற்றும் குணம்' என்கிற படியே ஓரொரு ஸ்வாமி குணத்தைப்பற்றி வாதி ப்ரதிவாதிகளைப் போலே வாசி வகுப்பதும் அதிஸ்நேஹத்தாலே அஸ்தானேபய சங்கையுடையாரைப்போலே ஸம்ப்ரமம் பண்ணுவதுமாய்க் கொண்டு ரஸிக்கிற நித்ய ஸுரிகள் நிரையாக இருக்கின்ற அழகோலக்கத்தின் நடுவே சென்று: அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ' என்கிற ஆசை நிறைந்து திவ்யபரிஜந பரிச்சத ஆயுத ஆபரணாழ்வார்கள் ஸ்வாஸாதாரண லக்ஷண விசிஷ்ட விக்ரஹங்களோடே யதாஸ்தாநம் ஸேவித்து நிற்கிற நிலைகளைக்கண்டு ஸர்வவிதகைங்கர்ய மநோரதாதி ரூடனாய்க்கொண்டு கிட்டச்சென்று; பர்யங்க பரிஸரத்திலே முன்பு தங்களைக்கொண்டு எம்பெருமான் நடத்தின க்ருஷிபலித்தது என்று பூர்ண மநோரதரான பூர்வாசார்யர்களைக் கண்டு; 'அறியாதன அறிவித்து' 'என்னைத்தீமனம் கெடுத்து' 'நும் கால்கள் என் தலைமேல் கெழுமீர்' என்று க்ருதஜ்ஞதை தோற்றப்பணிந்து உபயவிபூதியும் தனிக்கோல் செல்ல வானிளவரசு மன்னிவீற்றிருக்கிற அமிதெளஜஸ் ஸான திவ்ய ஸிஹ்மாஸந ரூபதிவ்ய பர்யங்கத்தை அணுகி : விபூதித்வயாநுபந்திகளான ஆதாரதத்வங்களும் பர்யங்க வித்தையில் 'பூதபவிஷ்யத்தத்வங்கள்' என்றாற்போலவும் பகவச்சாஸ்திரங்களில் 'தர்மா தர்மாதிகள்' என்றாற்போலவும் பரக்கவும் சுருங்கவும் பலவகையாகச் சொல்லுகிற பாதம் முதலான அவயவங்களுமெல்லாம் அவ்வவ்வபிமாநிதேவதா விசேஷங்களாய் இருக்கும்படியைத் தெளியக்காணும்.*** 'சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்' 'நிவாஸஸய்யாஸந' என்கிறபடியே அவஸரோசித ரூபங்களைக் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்திகளைப் பண்ணுகையாலே சேஷன் என்றும், த்ரிவித பரிச்சேத ரஹிதனையும் தன் மடியில் ஏகதேசத்தில் வைக்கும்படியான வைபவத்தையுடையானாகையாலே 'அநந்தன்' என்றும் திரு நாமத்தையுடையவனாய், ஸர்வகந்த வஸ்துவுக்கும் வாஸனையுண்டாம்படியான திவ்யபரிமளத்தையுடையவனாய், 'வேரிமாறாத பூமேலிருப்பாளு'டனே புஷ்பஹாஸ ஸுகுமாரனானவன் மூவுலகும் தொழ வீற்றிருக்கும்படி ஸுகுமாரதமனாய், அம்ருத ப்ரவாஹம் சுழியாறு பட்டாற்போலே அவதாதசீதலமான போக வேஷ்ட நத்தையுடையனாய் சேதசத்ர பரம்பரை போலவும் பூர்ணேந்து மண்டல ஸஹஸ்ரங்களை நிரைத்தாற் போலவும் பரந்து உயர்ந்த பணாஸஹஸ்ரத்தின் மணிகிரண மண்டல பாலாதபத்தாலே 'புண்டரீகம்' என்னும் பேரையுடைத்தான பரமபதமெல்லாம் உல்லஸிதமாம்பாடி பண்ணக்கடவனான திருவநந்தாழ்வானைக் கண்டு; அவனோடொக்க ஒருமிடறாய் அநேக முகமாக போக ஸாம்யத்தை ஆசைப்பட்டு, அவனுடைய அம்ருதவர்ஷிகளான இரண்டாயிரம் திருக்கண்களுக்கும் தான் ஏகலக்ஷ்யமாய் அவன் மேலே அமர்ந்திருக்கிற 'மேலாத்தேவர்கள் மேவித்தொழும் மாலாரை'க் கண்டு, தானும் அநந்த த்ருஷ்டியாய் அத்யந்த ஸாமீப்யம் பெறும் (ஸ்ரீபரமபத ஸோபாநம். திவ்யதேசப்ராப்திபர்வம்.)
ஸ்ரீய: பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீகௌஸ்துபஸ்தாநீயனாய்க்கொண்டு ஹ்ருதயங்கமனாய், குமாரன் என்றும், புத்ரன் என்றும், சிஷ்யன் என்றும், ப்ரேஷ்யன் என்றும், சேஷபூதன் என்றும், தாசபூதன் என்றும், அவ்வோசாஸ்த்ரங்களிலே ப்ரதி பந்நனா யிருக்கும் ஜீவாத்மா, இவன் தனக்கு வகுத்த சேஷியாய், அயர்வறுமமரர்களதி பதியாய் உயர்வற வுயர்நலமுடையனாய், நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பினாய், ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன் 'வைகுண்டேது பரேலோகேச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்த்தே' என்றும் 'ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப' என்றும் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாரோடே கூடத்தெளிவிசும்பிலே 'யாயோத்யேத்ய பராஜிதேதி விதிதா நாகம்பரேண ஸ்திதா' என்கிறபடியே அயோத்யாதி சப்தவாச்யமான கலங்காப் பெருநகரிலே ஸஹஸ்ரஸ் தூணாதி வாக்யங்களாலே யோதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே கௌஷீதகீப்ராஹ்ம ணாதிகளிலே யோதப்படுகிற பரியங்க விசேஷத்திலே 'சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம்' என்றும் 'நிவாஸசய்யாஸந' என்றும் சொல்லுகிறபடியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்களையும், ஸர்வவித சரீரங்களாலே அநுபவித்து, சேஷத்வமே தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாம்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையிலே வானிளவர சாய்க்கொண்டுதான் வாழ்கிற வாழ்வை. (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். உபோத்காதாதிகாரம்)
இவற்றில் த்ரிகுணத்ரவ்யத்துக்கு ஸ்வரூபபேதம் குணத்யாச்ரயத்வம் ஸததபரிணாமசீலமான இத்திரவ்யத்துக்கு ஸத்வரஜ ஸ்தமஸ்ஸுக்கள் அந்யோந்யம் ஸமமானபோது மஹாப்ரளயம். விஷமமானபோது ஷ்ருஷ்டிஸ்திதிகள் குணவைஷம்யம் உள்ள ப்ரதேசத்திலே மஹதாதி விகாரங்கள். இதில் விக்ருத மல்லாத ப்ரதேசத்தையும் விக்ருதமான ப்ரதேசத்தையுங்கூட ப்ரக்ருதி மஹதஹங்கார தந்மாத்ர பூதேந்த்ரியங்கள் என்று இருபத்தினாலு தத்துவங்களாக சாஸ்த்ரங்கள் வகுத்துச் சொல்லும். சில விவக்ஷா விசேஷங்களாலே யோரொருவிடங்களிலே தத்வங்களை யேறவுஞ்சுருங்கவுஞ் சொல்லா நிற்கும். இத்தத்வங்களிலவாந்தர வகுப்புக்களுமவற்றி லபிமாநி தேவதைகளுமவ்வோ வுபாஸநாதிகாரிகளுக்கு அறிய வேணும். ஆத்மாவுக்கு அவற்றிற் காட்டில் வ்யாவ் ருத்தியறிகை இங்கு நமக்கு ப்ரதாநம். இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கு அஸ்த்ரபூஷணாதி ரூபங்களாய் நிற்கும் நிலையை
புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்
பிரகிருதி மறுவாக மான்றண்டாகத்
தெருள்மருள்வா ளுறையாக வாங்கா ரங்கள்
சார்ங்கஞ்சங் காகமனந் திகிரி யாக
விருடிகங்க ளீரைந்துஞ் சரங்க ளாக
விருபூத மாலைவன மாலை யாகக்
கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன்
கரிகரிமே னின்றனைத்துங் காக்கின் றானே.
என்கிற கட்டளையிலே யறிகை உசிதம் (ஸ்ரீ மத்ரஹஸ்யத்ரய ஸாரம் தத்வத்ரயசிந்தநாதிகாரம்)
நாராயண னென்றது நாரங்களுக்கு அயநம் என்றபடி. (95) நாரங்களாவன நித்ய வஸ்துக்களினுடைய திரள் (96) அவையாவன:- ஜ்ஞாநா நந்தாமலத்வாதிகளும் ஜ்ஞாநசக்த் யாதிகளும் வாத்ஸல்ய ஸௌசீல்யாதிகளும் திருமேனியும் காந்தி ஸௌகுமார்யாதிகளும் திவ்யபூஷணங்களும் திவ்யாயுதங்களும் பெரியபிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும் நித்யஸுரிகளும் சத்ரசாமராதிகளும் திருவாசல் காக்கும் முதலிகளும் கணாதிபரும் முக்தரும் பரமாகாசமும் ப்ரக்ருதியும் பத்தாத்மாக்களும் காலமும் மஹதாதி விகாரங்களும் அண்டங்களும் அண்டத்துக்கு உட்பட்ட தேவாதிபதார்த்தங்களும் (97) அயநம் என்றது - இவற்றுக்கு ஆச்ரயம் என்றபடி. (98) அங்ஙனன்றிக்கே இவை தன்னை ஆச்ரயமாகவுடையவன் என்னவுமாம். (99) (பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுஷப்படி)
நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு எக்காலத்தும் எவ்விதக்குற்றமும் இல்லாத கைங்கர்யங்களை
ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி
வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்
(திருவாய்மொழி 3-3-1)
(ஈடு முதற்பாட்டில் திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் எல்லாவடிமைகளும் செய்ய வேணும்) என்கிறார்.
(ஒழிவில் காலமெல்லாம்) முடிவில்லாத காலமெல்லாம் அநந்தமான காலமெல்லாம் என்றபடி 'ஒழிவில் காலமெல்லா'மென்று கீழே கழிந்த காலத்தையுங் கூட்டி அடிமை செய்யப்பாரிக்கிறார் என்று இங்ஙனே அதிப்ரஸங்கம் சொல்லுவாருமுண்டு. அதாகிறது கீழ்கழிந்த காலத்தை மீட்கை என்று ஒரு பொருளில்லையிறே. 'நோபஜநம் ஸ்மரந்' என்கிறபடியே கீழ்கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற் படாதபடி மறப்பிக்கையேயிறே உள்ளது 'நமேது: கம்' இத்யாதி ஆகையாலே இனிமேலுள்ள காலமெல்லாம் என்றபடி
(உடனாய்) காலமெல்லாம் வேண்டினவோபாதி தேசாநு பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு. இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வநவாஸத்திலும் அடிமை செய்தாற்போலே
(மன்னி) ஸர்வேச்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப்போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளைப் பண்ண வேணும். இத்தால், ஸர்வாவஸ்த்தைகளையும் நினைக்கிறது. 'ரமமாணாவநேத்ரய' என்னக் கடவதிறே. இருவருக்கு உண்டான அநுபவத்திலே மூவரைச் சொல்லுகிறதிறே, அவ்விருவருக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷத்தால் பிறக்கும் ரஸம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே.
(ஒழிவில் காலம் இத்யாதி) ஸர்வ காலத்தையும் ஸர்வ தேசத்தையும் ஸர்வாவஸ்த்தையையும் நினைக்கிறது. ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இத்திருவாய் மொழிபாடப் புக்கால் 'ஒழிவில்காலமெல்லாம் காலமெல்லாம் காலமெல்லாம்' என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி, மேல் போகமாட்டாதே அவ்வளவிலே தலைக்கட்டிப் போவராம்.


(வழுவிலா அடிமை செய்ய வேண்டும்) அடிமையிலொன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று. எல்லா வடிமையும் நான் செய்ய வேணும்: இளைய பெருமாள் பிரியாதே காட்டிலேயுங்கூடப் போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும் : ஸ்ரீ பரதாழ்வான் படைவீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும். ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி 'ராஜந்' என்ன அப்போது அந்த ஸ்வாதந்தர்யம் பொறுக்கமாட்டாமே படுகுலைப் பட்டாற்போலே 'விலலாப' என்று கூப்பிட்டானிறே; பாரதந்த்ர்யரஸம் அறிவார்க்கு ஸ்வாதந்த்ர்யம் 'அநர்த்தம்' என்று தோற்றுமிறே. 'ஏபிச்சஸசி வைஸ்ஸார்த்தம்' தன்னிற்காட்டிலும் கண்குழிவுடையார் இத்தனை பேருண்டாயிற்று. தன்னோடொத்த ஆற்றாமையுடையார் அநேகரைக் கூட்டிக்கொண்டு போந்தான். எனக்கன்றோ, இவன் தம்பி என்று ஸ்வாதந்த்ர்யம் பண்ணி அவர்க்குக் கண்ணழிக்கலாவது: இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்ய வேணுமே: இவர்கள் தாங்களே கார்யத்தை விசாரித்து அறுதியிட்டு நீர் இப்படி செய்யும் என்று அவர்கள் ஏவினால் அப்படி செய்ய வேண்டிவருமிறே அவர்க்கு. அவருடைய வ்யதிரேகத்தில் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில் தனியே போய் அறிவிக்கவுமாமிறே; இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு போனதுக்குக் கருத்தென்? என்னில் நம் ஒருவர் முகத்துக்கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர் தம்மைப்பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாதே கண்ணும் கண்ணீருமாயிருப்பார் இத்தனை பேரைக்கண்டால் மீளாரோ? என்னுங்கருத்தாலே பூசலுக்குப் போவாரைப்போலே யானை குதிரை யகப்படக்கொண்டு போகிறானிறே: அவற்றுக்கும் அவ்வாற்றாமை யுண்டாகையாலே 'சிரஸாயாசித:' என்பேற்றுக்குத் தாம் அபேக்ஷித்துத்தருமவர் நான் என் தலையாலே யிரந்தால் மறுப்பரோ? 'மயா' - அத்தலை யித்தலையானால் செய்யா தொழிவரோ? 'ப்ராது:' 'பஸ்மஸாத் குருதாம்சிகீ' என்னும் படி தம் பின் பிறந்தவனல்லனோ நான்? என் தம்பிமார்க்கு உதவாத என்னுடைமையை அக்நிக்கு விருந்திட்டேனென்றாரிறே. 'யத்விநா' இத்யாதி 'சிஷ்யஸ்ய' ப்ராதாவாகக் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? அசேஷரஹஸ்யமும் நம்மோடேயன்றோ அதிகரித்தது. 'தாஸஸ்ய' சிஷ்யனாய்க்ரய விக்ரயார்ஹனன்றிக்கே யிருந்தேனோ? ஆன பின்பு நான் அபேக்ஷித்தகாரியத்தை மறுப்பரோ? இதிறேகைங்கர்யத்தில் சாபல முடையார் இருக்கும்படி.
(வழுவிலா அடிமை) ஓரடிமை குறையிலும் உண்டது உருக்காட்டாதாயிற்று இவர்க்கு.
(செய்ய) முன்பும் உண்டிறே இக்கைங்கர்யமநோரதம் : இப்போது இவ்வளவால் போராது, அநுஷ்டாந பர்யந்தமாக வேணும்.
(அடிமை செய்ய வேண்டும்) கைங்கர்ய மநோரதமே பிடித்து உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு 'க்ஷூத்ர விஷயாநுபவம் பண்ண வேணும்' என்று புக்கால் இரண்டு தலைக்கு மொக்கரஸமான போகத்துக்கு ஒரு தலையிலே த்ரவ்யத்தை நியமித்து, போககாலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போககாலம் வந்தவாறே புறப்படத் தள்ளி விடுவார்கள். இனி 'ஸ்வர்க்காநுபவம் பண்ண வேணும்' என்று புக்கால் 'ஸ்வர்க்கே பிபாத பீதஸ்ய க்ஷயிஸ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி' என்கிறபடியே அருகே சிலர் நரகாநுபவம் பண்ணக்காண்கையாலே இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது. உருக்காட்டாதபடியாயிருக்கும்: இனித்தான் அவ்விருப்புக்கு அடியான புண்யமானது சாலிலெடுத்த நீர்போலே க்ஷயித்தவாறே 'த்வம்ஸ' என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள். இப்படி ஸ்வரூபத்துக்கு அநநுரூபமாய் அஹங்காரமமகாரங்களடியாக வரும் இவ்வநுபவங்கள் போலன்றிக்கே ஸ்வரூபத்தோடே சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும், நித்யனாய், அடிமை செய்கிறவனும், நித்யனாய், காலமும் நித்யமாய், தேசமும் நித்யமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்திலக்ஷண மோக்ஷமாய் க்ஷூத்ரவிஷயாநுபவம் போலேது : கமிச்ரமாயிருக்கையன்றிக்கே நிரதிசய ஸுகமாயிருப்பதொன்றிறே இது
(நாம்) தம் திருவுள்ளத்தையுங் கூட்டி நாம் என்கிறாராதல் : அன்றிக்கே, கேசவன் தமர்க்குப் பின்பு இவர் தாம் தனியரல்லாமையாலே, திருவுள்ளம் போலே யிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு நாம் என்கிறராதல்
(இப்பாட்டால் - ப்ராய்யப்ரதாநமான திருமந்த்ரத்திலர்த்தத்தை அருளிச் செய்கிறார். ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டுமென்கிற இத்தால் - சதுர்த்தியில் ப்ரார்த்தநையைச் சொல்லுகிறது; நாம் என்கிற இடம்-- ப்ரணவ ப்ரதிபாத்யனான இவனுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது சப்த ஸ்வபாவத்தைக் கொண்டு சொன்னோம்' என்று அருளிச் செய்தருளின வார்த்தை; 'தெழிகுரல்' இத்யாதியால் - நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்கிறார். ப்ராப்தவிஷயத்தில் பண்ணும் கைங்கர்யமிறே ப்ராப்யமாவது; இனி ஸௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்வமும் எல்லாம் நாராயண சப்தத்துக்கு அர்த்தமிறே.
("இவனுக்கு பகவான் போக்யமாகலாம். மற்றுமுள்ளவர்களுடைய கைங்கர்யம் போக்கியமாமோவென்ன கர்மபலமன்றிக்கே வருகையால் எல்லாம் போக்கியமாகக் குறையில்லை. பூஷணாதிகள் அசேதனங்களாகிலும் அதின் அதிஷ்டாந தேவதைகளைச் சொல்லும் நிரபராத என்றதால் அபராதங்கலசில் ரஸ்யமாகா தென்கை. நித்யம் என்றத்தால் ஒழிவில் காலத்திற்படியே ப்ரார்த்திக்கப்படுகிறது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக