இரண்டாம் பாசுரத்தின் தொடர்ச்சி
இவ்வித்யைக்கு பரிகரமாவது “ஆநுகூல்ய ஸங்கல்பமும், ப்ராதிகூல்ய வர்ஜனமும், கார்ப்பண்யமும், மஹாவிச்வாஸமும், கோப்த்ருத்வ வரணமும். இவ்விடத்தில் 'ஆநுகூல்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்ய வர்ஜநம், ரக்ஷிஷ்யதீதி மஹாவிச்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா. ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி' இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வத்யமும் அஷ்டாங்க யோகம் என்னுமாப்போலே அங்காங்கி ஸமுச்சயத்தாலே ஆக க் கடவது என்னும் இடமும், இவற்றில் இன்னதொன்றுமே அங்கி, இதரங்கள் அங்கங்கள் என்னும் இடமும் 'நிக்ஷே பாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்கஸம்யுத:, ஸந்யாஸஸ்த்யாக இத்யுக்தச் சரணாகதிரித்யபி' என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம். இவ்விடத்தில் 'சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்வீ பவாமி யத், புருஷம் பரமுத்திச்ய நமே ஸித்திரிதோந்யதா, இத்யங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ' என்று அஹிரிபுத்ந்யோக்தமான பலத்யாக ரூபாங்காந்தரம் மோக்ஷார்த்தமான ஆத்ம நிக்ஷேபத்திலே நியதம். பலஸங்க கர்த்ருத்வாதி த்யாகம் கர்மயோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாத்திலும் வருகையாலே இவ்வநுஸந்தாநம் முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம். இங்கு பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ப்ராதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தநம் ஸர்வசேஷியான ஸ்ரீய:பதியைப்பற்ற ப்ரவருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநு வர்த்தநம் பண்ண வேண்டும்படி இவனுக்குண்டான பாரார்த்யஜ்ஞாநம். இத்தாலே, 'ஆநுகூல்யேதராப்யாம்து விநிவ்ருத்திரபாயத:' என்கிறபடியாலே அபாய பரிஹாரம் ஸித்தம். கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தாநமாதல், அதடியாக வந்த கர்வஹாநியாதல், க்ருபாஜநக க்ருபணவ்ருத்தியாதலாய் நின்று சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய் , 'கர்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்தி ரிஹேரிதா' என்கிறபடியே பின்பு மநந்யோபாயதைக்கும் உபயுக்தமாய் இருக்கும். மஹாவிச்வாஸம் 'ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸா தபீஷ்டோபாய கல்பநம்' என்கிறபடி அணியிடாத அநுஷ்டாநஸித்யர்த்தமுமாய் பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாய் இருக்கும். ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்கமும் புருஷார்த்தமாம்போது அர்த்திக்கக்கொடுக்க வேண்டுகையாலே இங்கு கோப்த்ருத்வ வரணமும் அபேக்ஷிதம். நன்றாயிருப்பதொன்றையும் புருஷன் அர்த்திக்கக் கொடாதபோது புருஷார்த்தங் கொடுத்தான் ஆகானிறே. ஆகையாலேயிறே 'அப்ரார்த்திதோ நகோபாயேத்' என்றும், 'கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம்' என்றுஞ் சோல்லுகிறது. இப்படி இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்கள் ஆகையால் இவை இவ்வாத்ம நிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள். இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கோள் என்று ஸாத்விக ப்ரக்ருதியான த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்கியத்திலும் காணலாம். 'ததலம் க்ரூர வாக்யைர்வ:' என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது. 'ஸாந்த்வமே வாபிதீயதாம்' என்கையாலே மந:பூர்வமாக அல்லது வாக்ப்ரவ்ருத்து யில்லாமையாலே ஆநுகூல்ய !ங்கல்பம் ஆக்ருஷ்டம் ஆயிற்று. 'ராவாத்திபயம் கோரம் ராக்ஷஸாநா முபஸ்திதம்' என்று போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய அநுஸந்தாநமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதி ரூபமாய் அங்கமான கார்ப்பண்யமுஞ் சொல்லிற்றாயிற்று. 'அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோமஹதோபயாத்' என்கையாலும் இத்தை விவரித்துக் கொண்டு 'அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம்' என்று திருவடி அநுவதிக்கையாலும் பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும்அவர் சீற்றத்தை ஆற்றி இவள் ரக்ஷிக்கவல்லள் ஆகையாலே ரக்ஷிஸ்யதீதி விச்வாஸம் சொல்லப் பட்டது. 'அபியாசாம வைதேஹீ மேதத்தி மம ரோசதே', பர்த்ஸிதாமபி யாசத்வம் ராக்ஷஸ்ய:கிம்விவக்ஷயா' என்கையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று. இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்மநிக்ஷேபம் 'ப்ரணிபாத ப்ரஸந்நாஹி மைதிலீ ஜககாத்மஜா' என்று ப்ரஸாதகரண விசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத சப்தத்தாலே விவக்ஷிதம் ஆயிற்று. ஆகையால் 'ந்யாஸ:பஞ்சாங்க ஸம்யுத:' என்கிற சாஸ்த்ரம் இங்கே பூர்ணம். இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்காதமட்டே பற்றாகப் பிராட்டி தன் வாத்ஸல்யாதிசயத்தாலே 'பவேயம் சரணம் ஹிவ:' என்று அருளிச் செய்தாள். இப்பாசுரம் ஸஹ்ருதயமாய் பலபர்யந்தமானபடியை 'மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா' என்று அபியுக்தர் வெளியிட்டார்கள். இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே அவளுக்குப் பிறவித் துவக்காலே நம்மவர்கள் என்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள். அப்படியே ஸ்ரீவிபீஷணாழ்வானோடு கூடவந்த நாலு ராக்ஷஸர்களும் அவருடைய உபாயத்திலே அந்தர்பூதர்கள். அங்குற்ற அபயப்ரதாநப்ரகரணத்திலும் இவ்வங்காங்கி வர்க்கம் அடைக்கலம். எங்ஙனை என்னில் :-- ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனுக்குங்கூட 'ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ' 'ஸீதாஞ்ச ராமாய நிவேத்ய தேவீம்வஸேம ராஜந்நிஹ வீதசோகா:' என்று ஹிதஞ்சொல் லுகையாலே ஆநுகூல்ய ஸங்கல்பந் தோற்றிற்று. இந்த ஹிதவசநம் பித்தோபஹதனுக்குப் பால்கைக்குமாப்போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று. 'தீவாந்து திக்குல பாம்ஸநம்' என்று திக்காரம் பண்ணினபின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது, இவனோடு அநுபந்தித்த விபூதிகளும் ஆகாது, இவன் இருந்த இடத்தில் இருக்கவும் ஆகாது என்று அறுதியிட்டு 'த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச' பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச' என்கிற ஸ்வவாக்கியத்தின்படியே அங்கு துவக்கற்றுப் போருகையாலே ப்ராதிகூல்ய வர்ஜநாபிஸந்தி தோற்றிற்று. 'ராவணோ நாம துர்வ்ருத்த:' என்று தொடங்கி ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும், பின்பும் 'அநுஜே ராவணஸ்யாஹம் தேந சாஸ்ம்யவமா நித: பவந்தம் ஸர்வபூதாநாம் சரணம் சரணங்கத:' என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப் பட்டது. அஞ்சாதே வந்து கிட்டி 'ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே' என்று சொல்லும்படி பண்ணின மஹாவிச்வாஸம் 'விபூஷணோ மஹாப்ராஜ்ஞ:' என்று காரணமுகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச்சப்தத்தாலே விச்வாஸாதிசந்தானே விவக்ஷிதமாகவுமாம். 'ராகவம் சரணம் கத:' என்கையாலே உபாய வரணாந்தர் நீதமான கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று. உபாயவரண சப்தத்தாலே வ்யஞ்சிதமாகிற அளவு அன்றிக்கே 'நிவேதயமாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம்' என்கையாலே கடகபுரஸ்ஸரமான ஆத்மநிக்ஷேபம் சொல்லிற்று. இப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ரபரமானால் நிஷ்ப்ரயோஜநம். இப்படி மற்றும் உள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகீகத்ரவ்ய நிக்ஷேபங்களிலும் ஸங்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம். தான் ரக்ஷிக்க மாட்டாததொரு வஸ்துவை ரக்ஷிக்கவல்லன் ஒருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும்போதுதான் அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியைத் தவிர்ந்து, இவன் ரக்ஷிக்க வல்லன், அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதுஞ் செய்யும் என்று தேறி , தான் ரக்ஷித்துக் கொள்ளமாட்டாமையை அறிவித்து, நீ ரக்ஷிக்க வேணும் என்று, ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்து, தான் நிர்பரனாய் பயங்கெட்டு மாரிலே கைவைத்துக் கொண்டு உறங்கக்காணா நின்றோமிறே.' [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம், பரிகரவிபாகாதிகாரம்]
_________________தொடர்கிறது -------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக