கோயிற்கெழுந்தருளியது
விருத்தம்
வரம்பிலாப்புகழ்சிறந்துவளமேயோங்கு
வடதிருக்காவிரியினீராட்டஞ்செய்து
கரம்பனூருத்தமனைத்தொழுதுகண்டே
கனகமயகோபுரஞ்சூழ்கோயில்கொண்டே
நிரம்பியவானந்தவெள்ளம் பெருகக்கொண்டு
நிறையவேயாராதவருளன்றேத்திப்
பரம்பியவங்குளவரெதிர்கொண்டுகாணப்
பரிசிப்பார் பொன்னரங்கந் தரிசிப்பாரே.
தரு- இராகம்-- நாதநாமக்ரியை-- தாளம்-- ஆதி
பல்லவி
தெரிசனநிகமாந்ததேசிகன் செய்தார்
தென்னரங்கத்திற் றெரிசனம்
அனுபல்லவி
தெரிசனநிகமாந்த தேசிகபீடஞ்
செகத்திற்பவக்கடலுக் கொருவோடம்
பெரியதிருவடியின் மந்திரபாடம்
பிரபலர்திருவரங்கர் கருணைக்கோர்கூடம் (தெரிச)
சரணங்கள்
ஆதிகேசவனைப் போற்றி
வேதவசனங்கள் சாற்றி
மேதினியெங்கெங்குங் கீர்த்தி
யோதுதாமோதர னேர்த்தி
யடுத்தகோபுரத்தை நாடியே -- பணிந்துஞ்சூடிக்
கொடுத்தநாச்சியாரைப் பாடியே -- மன்னனாரையுந்
தொடுத்தபெரியாழ்வாரைத் தேடியே -- தொண்டரடிப்பொடியென்
றெடுத்தவாழ்வாரைக்கொண் டாடியே - பார்த்தசாரதியென்னு
மன்னவர்பொன்னடிமுன்னதமாய்ப்ப ணிசைந்து -- பாஷ்யகாரர்தம்
சன்னதிதன்னதின் முன்னதாகப்புகுந்து -- வந்தேதமியேனா
மென்னவேபன்னிய சொன்னயச்சுலோகம்பகர்ந்து -- காதாதாவென்
றின்னவைவன்னனையென்னெதிமன்னர்க்குயாந்து -- அனுசந்தித்தே
யரியதபோநிதிபுருஷகாரமாய்ப் பண்டு -- தென்னரங்கத்திற்
பெரியபெருமாளைத்திருவடிதொழுவராய்க்கொண்டு--கோபுரநைனார்களை
வரிசையாய்க்கிட்டித்திருவாழியாழ்வானைத்தொண்டு-- செய்வோமென்றசு
தரிசனாஷ்டகஞ்சமர்ப்பித்துத்துதிமிக விண்டு-- வந்தனஞ்செய்தே
ஆரெங்கும்புகழே சொன்ன
சீரங்கநாச்சியார் முன்னன்
ரேரங்கநகரின் மன்ன
னாரங்கருள்சேர்ப்ர சன்ன (தெரிச)
எடுத்தகையழகியநைனாரை யன்பாலே
தொடுத்தங்கேதொழுதுமத்திரு வாசலாலே
அடுத்தபின்னுள்ளேபுகுந்தும் பாவாறே
திடத்துடன்வலமாகவந்ததின் மேலே
யேற்றசந்திரபுஷ்கரணியிலே வேதி--யர்சிகாமணியிவர்
தீர்த்தஞ்சுவீகரித்திசைமந்ந்த்ர மோதி- அக்கரையில் விளங்கிய
தீர்த்தரக்ஷகர்களானகுமு தாதி--களையுமின்னஞ்
சூத்திரகாரவேதவியாசபகவா னாதி--யிவர்களையும் வணங்கி
யேகிருஷ்ணபதரிகாசிரமவாசிநாராயண ரான-- வைகுந்தநாதர்
பாகத்தினாழ்வார்கள் திருமழிசையாழ்வார்முதல் ஞான-- மிகுந்தவரை
யோகத்தினுடனிவர்திருவடிதொழுதுகொண்டே-- நல்லருளைபெற்று
மேகத்தர்பெரியதிருவடியைநோக்கியங் கான---- பிரணாமஞ்செய்தன்
பிருக்கவேண்டியுமங்குநின்றுயர்திருக்கொட்டாரந்-- தனிலேசென்று
பெருக்கமொங்குசெங்கமலநாச்சியாரை யந்நேரஞ்-- சுற்றிக்கொண்டன்பு
பருக்குமுதலாழ்வாரையுந்துதிசெய்து நமஸ்காரங் - கைக்கொண்டுமன
துருக்கமாகவே வரிசைசெய்தார் பிரகாரம் -- பரவாசுதேவனையு
மிலங்குதிருமங்கையாழ்வார் கோபுரஞ்சுற்றும்
துலங்கவேயாரியபட்டர்திரு வாசல்பெற்றும்
நலங்கோளணியரங்கர்திரு முற்றத்திலுற்றுந்
தலங்கள்புகழ்பாஷியகாரர் குறட்டைக்குறித்துந் (தெரிச)
பலிபீடத்துக்குத்தெற்கே சாஷ்டாங்கவந்தனம்
நலியாமனத்தினிற்பத்தி சேர்ந்தாங்கிசைந்தனஞ்
சொலியேபிரதக்ஷிணமாய்ப் பார்த்தாங்குயர்ந்தன
மலைநேர்கோபுரமதி லாஸ்தானபந்தனம்
பலபலமண்டபகோபுர நேர்த்தி-- யைப்பணிந்தேதிருச்சுற்றி
யிலுள்ளஞானப்பிரானையுந்தச மூர்த்தி-- லக்ஷ்மிநாராயணர்கள்
சொலுமிவர்களைமங்களாசாஸனஞ் சாத்தி-- அயக்ரீவரைக்கிட்டி
நலப்பிரசீத்துநிகமசதமென வேத்தி-- இன்னமுந்திருமடப்
பள்ளியரவிந்த நாச்சியார்சங்கநிதிபத்மநிதி மேலே -- கூடப்பாண்டிய
வள்ளல்கோபுரத்தைக்கிட்டித்துவாரபாலரனுமதியாலே -உட்சென்றுதூப்புல்
பிள்ளை கிழக்கேநாலடி நடந்துதண்டன்சமர்ப் பித்துயர்நூலே-
சொன்முறைகண்டு
விள்ளுவர்திருக்கருகூலநாச்சியாரைமிகு பரிவாலே-- வணங்கித்
திருமாலை
பலகையருகேதொண்டரடிப்பொடியாழ்வாரையுமுன்பு-- பரவாசுதேவனையும்
நலப்ரணவாகாரவேதசிருங்கவிமானத்தையும் பின்பு- விபீஷனாழ்வானை
வலமாகச்சேனாமுதலாழ்வானைத்தொழுததே யன்பு - உறையூர்நாச்சியா
தலமேவுகிருஷ்ணனையுஞ்சேவித்ததுவும்வெகுதென்பு-- அழகியமணவாளன்
பருமண்டபத்திலே பாங்காகவேறிக்
திருவணக்கந்திரு வாசன்மேற்றேறிப்
பெரியதிருவடிகை னாந்துதிமீறி
வரிசைத்துவாரபாலர் ஜயவிஜயரைக்கூறித் (தெரிச)
நயனத்தானந்த கருணாரசம்வைத்து
ஜயவிஜயர்களனு மதியுந்தான்பெற்று
வயனமாய்த்திரி வுடைமாளிகையுற்று
உயர்வுள்ளசேர்த்தியி லெழுந்தருளுங்கிரமத்து
நாபிநளினநாகசயனநர சிங்கர் - நாராயணர்களைச்சொல்
லாபமுடன்றொழுதுதிருமணத்தூணருகேயெங்க-- ளனந்தாரியகுல
தீபர்விளங்கிநின்றேழையெய்திலேனெனவேதுலங்க-- பாட்டனுசந்தனைப்
பிர
தாபமுடன்றிருவடிகளின்மிகுந்து வணங்க -- அமலனாதிப்பிரானை
நாட்டியிப்படிப்பாதாதிகேசமாகவரங்கத்தம்மான்றிருக்க -- மலபதமென்று
பாட்டுத்தொடங்கியாழ்வாரனுபவித்தார்போலிவரன்புபெருக்கத்--திருக்
கணைக்கால்களையும்
பூட்டுமுழந்தாடித்திருத்தொடையுந்தியுயர்மார்பு வலத்திருக்கை --
ஆசானுலம்பியாகக்
கூட்டிமற்றதிருக்கையுமுகமண்டலமுமணிநெருக்க--ஆதிராச்சியசூசகமாம்
நல்லாபிஷேகத்தையுந்தனித்தனியாகவனுபவித்தார்-- பாதாம்போஜமென்
சொல்லியிசைவடமொழிதனிற்றுதிபரவவுற்பவித்தார்-- வாசனாமௌலி
யெல்லையாகமீளவங்கேசேர்த்தனுபவித்துக்கைகுவித்தார்-- பாயுநீரரங்கம்
வல்லவர்தொடுத்துப்பின்னுங்காந்தோதாரையென்னுங்கவித்தார்--
அழகியமணவாளன்
அங்கநாதன்மேனியாகதிலக மென்றார்க்கு
மங்கேசேர்த்தியிலனுபவித்த துண்டாக்கு
மெங்கள்தீவினையாகியபாவங்கள் போக்கும்
பொங்குபுண்ணியர்திருவுள்ளத்திற் றேக்கும் (தெரிச)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக